மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு
- உத்தரபிரதேசத்தில் விசுவ இந்து பரிஷத் அயோத்தி யாத்திரைக்கு தடை: அகிலேஷ் யாதவ் உத்தரவு
- டெல்லியில் உணவு பாதுகாப்பு திட்டம் இன்று அமல்: சோனியா தொடங்கி வைத்தார்
- பீகாரில் ரெயில் மோதி 37 பேர் பலி: ரெயில் பெட்டிகள் எரிப்பால் ரூ.90 கோடி இழப்பு
- இன்று 69–வது பிறந்த நாள்: ராஜீவ்காந்தி சமாதியில் சோனியா–மன்மோகன் மரியாதை
- வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல்
- கார்களில் சிவப்பு விளக்குகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
- மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு
- இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மந்திரியிடம் பிரதமர் வலியுறுத்தல்
- முலாயம் சிங்குடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு: உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவு கேட்டனர்
- பிரதமர் மன்மோகன் சிங்குடன் ராணுவத் தளபதி திடீர் சந்திப்பு
- பத்தனம்திட்டை அருகே வெளிநாட்டு பணம் மாற்றி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி
- குஜராத்தில் கணவன் காணாமல் போனது பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் கொடுத்த பெண்
- உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தயார்: கமல் நாத்
- பீகார் ரெயில் விபத்து: தீவிர விசாரணை நடத்த பா.ஜனதா வலியுறுத்தல்
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 63.22ஐ எட்டியது
- மோடியை சந்தித்து பேசிய லல்லுவின் மைத்துனர் சாது யாதவ் காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம்
- எரிபொருள் கசிவு காரணமாக ‘ஜி.எஸ்.எல்.வி. டி-5’ ராக்கெட் ஏவுவது நிறுத்தம்
- நாசிக் மொத்த சந்தையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி
- பீகார் ரெயில் விபத்தில் 30 பெண்கள் உள்பட 37 பேர் பலி: தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க நிதிஷ் குமார் உத்தரவு
| அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் சரிவு Posted: 19 Aug 2013 10:37 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.64.30 ஆக வீழ்ச்சி அடைந்தது. அமெரிக்காவின் பொருளாதார முன்னேற்றத்தால் அந்நாட்டு டாலரின் மதிப்பு சர்வதேச அளிவில் அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களும் |
| உத்தரபிரதேசத்தில் விசுவ இந்து பரிஷத் அயோத்தி யாத்திரைக்கு தடை: அகிலேஷ் யாதவ் உத்தரவு Posted: 19 Aug 2013 10:32 PM PDT பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2014) தேர்தல் நடத்தப்படும் முன்பு அயோத்தி விவகாரத்தை கையில் எடுத்து, மீண்டும் ஒரு எழுச்சியை ஏற்படுத்த விசுவ இந்து பரிஷத் திட்டமிட்டுள்ளது. அதன்படி ''84 கோசி பரிகிராமா' எனும் யாத்திரையை வரும் 25–ந் தேதி தொடங்கி நடத்த விசுவ இந்து பரிஷத் தலைவர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த யாத்திரை பைசாபாத், அம்பேத்கர் நகர், கோண்டா, பஸ்தி, பக்ரைச் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக நடத்தப்படுகிறது. சுமார் 300 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடத்தபடும் இந்த யாத்திரை அயோத்தியில் அடுத்த மாதம் (செப்டம்பர்) 13–ந் தேதி முடிவடையும். |
| டெல்லியில் உணவு பாதுகாப்பு திட்டம் இன்று அமல்: சோனியா தொடங்கி வைத்தார் Posted: 19 Aug 2013 10:27 PM PDT டெல்லியில் உணவு பாதுகாப்பு திட்டத்தை சோனியா காந்தி இன்று தொடங்கி வைத்தார். நாட்டில் ஏழைகள் யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக மத்திய அரசு உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வந்துள்ளது. பாராளுமன்றத்தில் இந்த மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடத்தப்பட உள்ளது. உணவு பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்தால் பொது விநியோக திட்டம் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு உள்பட சில மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. எனவே உணவு பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| பீகாரில் ரெயில் மோதி 37 பேர் பலி: ரெயில் பெட்டிகள் எரிப்பால் ரூ.90 கோடி இழப்பு Posted: 19 Aug 2013 10:13 PM PDT பீகார் மாநிலம் ககரியா மாவட்டத்தில் உள்ள தமாரா காட் ரெயில் நிலையத்தில் ராஜ்யராணி எக்ஸ்பிரஸ் ரெயில் மோதியதில் 37 பயணிகள் பலியானார்கள். இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் ரெயிலுக்கு தீ வைத்தனர். இதில் 15 ரெயில் பெட்டிகள் தீயில் எரிந்து நாசமானது. ரெயில் பெட்டிகளை நாசமாக்கிய பொதுமக்கள் அதன் பிறகும் ஆத்திரம் தணியாமல் தமாராகாட் ரெயில் நிலையத்தை சூறையாடினார்கள். ரெயில்வே தொலை தொடர்பு சாதனங்களையும் அடித்து உடைத்தனர். ரெயில் தண்டவாளங்களும் பெயர்க்கப்பட்டது. |
| இன்று 69–வது பிறந்த நாள்: ராஜீவ்காந்தி சமாதியில் சோனியா–மன்மோகன் மரியாதை Posted: 19 Aug 2013 10:11 PM PDT முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 69–வது பிறந்த நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் ராஜீவ் காந்தி சமாதி அமைந்துள்ள வீர்பூமியில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் மலர் தூவி மரியாதை செய்தனர் |
| வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்த வேண்டும்: 26-ந் தேதி முதல் அமல் Posted: 19 Aug 2013 08:23 PM PDT வெளிநாட்டில் இருந்து டெலிவிஷன் கொண்டு வந்தால் வரி செலுத்தும் புதிய நடைமுறை வருகிற 26-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ரூபாயின் மதிப்பு குறைவதை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருகிறது. டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.63.13 ஆக இருந்தது. எனவே தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் ரூபாயின் மதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை |
| கார்களில் சிவப்பு விளக்குகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு Posted: 19 Aug 2013 05:19 PM PDT கார்களில் சிவப்பு விளக்குகளை தவறாக பயன்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், முக்கிய பிரமுகர்களின் கார்களில் உள்ள சைரன்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது. மந்திரிகள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் சிவப்பு எச்சரிக்கை விளக்கு பொருத்தப்பட்ட கார்களை பயன்படுத்தும் பிரச்சினை தொடர்பாக |
| மும்பையில் வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் இருந்து 7-வது உடல் மீட்பு Posted: 19 Aug 2013 04:18 PM PDT மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஐ.என்.எஸ். சிந்து ரக்ஷக் கடந்த புதன் கிழமை அதிகாலை வெடித்து சிதறியது. அந்த கப்பலில் இருந்த தமிழக லெப்டினண்ட் கமாண்டர் வெங்கட் ராஜூ உள்பட 18 வீரர்கள் விபத்தில் சிக்கி கடலுக்குள் மூழ்கினர். |
| இந்திய மீனவர்களை விடுதலை செய்ய இலங்கை மந்திரியிடம் பிரதமர் வலியுறுத்தல் Posted: 19 Aug 2013 11:35 AM PDT இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்து, உடனே திருப்பி அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மன்மோகன்சிங் இலங்கை மந்திரியிடம் வலியுறுத்தினார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த நூற்றுக்கணக்கான மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறைகளில் |
| முலாயம் சிங்குடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு: உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவு கேட்டனர் Posted: 19 Aug 2013 09:15 AM PDT பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள உணவு பாதுகாப்பு மசோதாவை நாளை நிறைவேற்ற மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக முக்கிய கட்சிகளின் ஆதரவை காங்கிரஸ் கட்சி திரட்டி வருகிறது. இந்நிலையில், உணவுத்துறை மந்திரி கே.வி.தாமஸ், பாராளுமன்ற விவகாரத்துறை |
| பிரதமர் மன்மோகன் சிங்குடன் ராணுவத் தளபதி திடீர் சந்திப்பு Posted: 19 Aug 2013 08:57 AM PDT எல்லையில் தொடர்ந்து வாலாட்டி வரும் பாகிஸ்தான் ராணுவம், அதன் உச்சகட்டமாக கடந்த 6-ம் தேதி 5 இந்திய வீரர்களை சுட்டுக்கொன்றனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பதட்டம் நீடித்து வருகிறது. போர் நிறுத்த உடன்பாட்டை மீறி பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடுநடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. |
| பத்தனம்திட்டை அருகே வெளிநாட்டு பணம் மாற்றி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி Posted: 19 Aug 2013 08:56 AM PDT கேரள மாநிலம் பத்தனம்திட்டை அருகே உள்ள திருவல்லா என்ற இடத்தைச் சேர்ந்தவர் புன்னூஸ், (வயது 68). இவர் அந்த பகுதியில் கிராம பஞ்சாயத்து தலைவராக உள்ளார். நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்தவர் விமல்நாத், (32). இவர் புன்னூசிடம் உதவியாளராக பணியாற்றி வந்தார். புன்னூஸ் வெளிநாட்டு பணங்களை இந்திய பணமாக மாற்றித் தரும் தொழிலும் செய்து வந்தார். இவரிடம் ஏராளமானோர் வெளிநாட்டு பணத்தை கொடுத்து உள்நாட்டு பணமாக மாற்றி வந்தனர். இதனால் கோடிக்கணக்கான ரூபாய் இவரிடம் புழங்க தொடங்கியது. |
| குஜராத்தில் கணவன் காணாமல் போனது பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு புகார் கொடுத்த பெண் Posted: 19 Aug 2013 08:04 AM PDT குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தன் கணவன் காணாமல் போனது பற்றி 18 ஆண்டுகளுக்குப் பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வல்சாத் மாவட்டம் பிலாத் காவல் சரகத்திற்குட்பட்ட ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஜனக்சின் பார்மர், 1995-ம் ஆண்டு ஜனவரி மாதம், தனது குடும்பத்தினருக்கு |
| உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தயார்: கமல் நாத் Posted: 19 Aug 2013 07:35 AM PDT பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் உணவு பாதுகாப்பு மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏராளமான திருத்தங்களை செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதிக கட்சிகளின் ஆதரவைப் பெற்று, ராஜீவ்காந்தியின் பிறந்ததினத்தன்று, அதாவது நாளை இந்த மசோதாவை நிறைவேற்ற மத்திய |
| பீகார் ரெயில் விபத்து: தீவிர விசாரணை நடத்த பா.ஜனதா வலியுறுத்தல் Posted: 19 Aug 2013 05:43 AM PDT பீகார் மாநிலம், டாமரா காத் ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சிவ பக்தர்கள் மீது அதிவேக ரெயில் மோதியது. இதில் 37 பேர் பரிதாபமாக பலியாகினர். பலர் காயம் அடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ரெயில் டிரைவரை அடித்து உதைத்ததுடன், ரெயிலுக்கும் தீ வைத்தனர். மாநிலத்தையே |
| டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து 63.22ஐ எட்டியது Posted: 19 Aug 2013 05:00 AM PDT அமெரிக்காவில் பொருளாதார சீர்திருத்தம் காரணமாக அந்நாட்டின் டாலர் மதிப்பு அதிகரித்து வருகிறது. அதே சமயம் இந்தியாவில் பண வீக்கம், பங்கு சந்தை வீழ்ச்சி, காரணமாக டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பில் இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு |
| மோடியை சந்தித்து பேசிய லல்லுவின் மைத்துனர் சாது யாதவ் காங்கிரஸில் இருந்து அதிரடி நீக்கம் Posted: 19 Aug 2013 04:25 AM PDT ராஷ்டீரிய ஜனதாதள கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்–மந்திரியுமான லல்லுபிரசாத் யாதவின் மைத்துனர் சாது யாதவ். முன்னாள் எம்.பி.யான இவர் 2009–ம் ஆண்டு ராஷ்டீரிய ஜனதாதள கட்சியில் இருந்து விலகி காங்கிரசில் சேர்ந்தார். சில தினங்களுக்கு முன்பு சாது யாதவ் குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடியை சந்தித்தார். இந்த சந்திப்புக்கு மறுநாள் அவர் ராகுல் |
| எரிபொருள் கசிவு காரணமாக ‘ஜி.எஸ்.எல்.வி. டி-5’ ராக்கெட் ஏவுவது நிறுத்தம் Posted: 19 Aug 2013 04:18 AM PDT இந்திய விண்வெளி ஆய்வு அமைப்பான 'இஸ்ரோ' பல்வேறு செயற்கை கோள்களை ராக்கெட்டுகள் மூலம் விண்வெளிக்கு அனுப்பி வருகிறது. இந்த நிலையில், ரூ.200 கோடி செலவில் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜின் பொருத்தப்பட்ட ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட்டை விண்ணில் செலுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான 29 மணிநேர, 'கவுன்ட்டவுன்' நேற்று பகல் |
| நாசிக் மொத்த சந்தையில் வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி Posted: 19 Aug 2013 04:05 AM PDT நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே போகும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து 7 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய தனியாருக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இந்தியர்களின் சமையல் அறையில் உப்புக்கு அடுத்தபடியாக முக்கிய இடத்தை பிடித்துள்ள வெங்காயத்தின் விலை அசுரகதியில் உயர்ந்துக்கொண்டே வருகிறது. |
| Posted: 19 Aug 2013 03:22 AM PDT பீகார் மாநிலம், பாமரா ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 37 பேர் மீது அதிவேக ரெயில் மோதி பரிதாபமாக பலியாகினர். பாட்னா-சஹஸ்ரா ரெயில் நிலையங்களுக்கு இடையே ஓடும் ராஜ்ராணி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று காலை பாமரா ரெயில் நிலையம் அருகே வந்துக்கொண்டிருந்தது. இதில் ரெயில் சக்கரங்களில் சிக்கியும், தூக்கி |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |