Tamil Star |
- கனடா தெரு ஒன்றிற்கு இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயர்
- தியாகங்களும் சிந்திய குருதிகளும் வீண் போகாது – அனந்தி
- நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி திருட்டு : வெனிசுலாவில் சம்பவம்
- நடிகர் விஜய் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படமாட்டாது
- இறுதிக் கட்ட யுத்தத்தில் மக்கள் காணாமல் போகவில்லை: கெஹெலிய
- அவுஸ்திரேலியாவில் மேலும் கடுமையாகும் புதிய குடிவரவுக் கொள்கைகள்
- இந்தோனேசிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்கள்
- நிர்வாண கோலத்தில் குழந்தைக்குப் பால் கொடுத்த பெண்
- பேய் என்றால் அம்புட்டு பயமா இவர்களுக்கு…. (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை)
- வாகனம் ஓட்டும்போது இப்படியும் நடக்கலாம் கவனம்…..
| கனடா தெரு ஒன்றிற்கு இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பெயர் Posted: 16 Aug 2013 07:52 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| தியாகங்களும் சிந்திய குருதிகளும் வீண் போகாது – அனந்தி Posted: 16 Aug 2013 07:45 PM PDT யுத்தக்காலத்தில் சரணடைந்து காணாமல் போன உறவுகளின் நலனிற்காகவே வடமாகாண சபைத் தேர்தலில் நான் போட்டியிடுகின்றேன் என்று நடைபெறவுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் எழிலனின் மனைவி அனந்தி தெரிவித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்த காலத்தில் பலர் காணமல் போயுள்ளனர். அவர்களுக்காகவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் விடுதலையையும் கருத்திக்கொண்டே நான் போட்டியிடுகி;றேன். பாதிக்கப்பட்டவர்கள் எனக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்வார்கள் […] |
| நீளக் கூந்தல் உள்ள பெண்களின் முடி திருட்டு : வெனிசுலாவில் சம்பவம் Posted: 16 Aug 2013 07:35 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| நடிகர் விஜய் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி கொடுக்கப்படமாட்டாது Posted: 16 Aug 2013 07:24 PM PDT
This posting includes an audio/video/photo media file: Download Now |
| இறுதிக் கட்ட யுத்தத்தில் மக்கள் காணாமல் போகவில்லை: கெஹெலிய Posted: 16 Aug 2013 07:11 PM PDT
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அமைச்சர் மேற்கண்ட விடயங்களை குறிப்பிட்டார். அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்தக் குழுவில் பராக்கிரம பரன்னகம மனோ ராமநாதன் மற்றும் பிரியந்தி சுரஞ்னா வித்தயாரத்ன ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். மாறாக இந்த நியமனத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளையின் இலங்கை விஜயத்துக்கும் அல்லது பொதுநலவாய அரச தலைவர்களின் மாநாடு இலங்கயில் நடைபெறுகின்ற விடயத்துக்கும் எந்தத் தொடர்புமில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்தக் குழுவானது நியமிக்க்பபட்ட தினத்திலிருந்து ஆறு மாத காலத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கவேண்டியது அவசியமாகும். விசாரணை நடத்தும் முறைமை மற்றும் சாட்சிகளை பெறும் விதங்கள் குறித்து இந்தக்குழு தீர்மானிக்கும். அதாவது கற்றறிந்த பாடங்களும் நல்லிணக்கமும் தொடர்பான ஆணைக்குழுவின் செயற்பாடுகளை போன்று இதன் செயற்பாடுகள் அமையலாம். விரிவான அறிக்கை ஜனாதிபதிக்கு வழங்கப்படும். யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் பொது மக்கள் காணாமல் போனதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை இலங்கை அரசாங்கம் முற்றாக மறுக்கின்றது. காரணம் அக்காலப் பகுதியில் அங்கு சட்டம் இருக்கவில்லை. மாறாக பயங்கரவாதமே இருந்தது. ஆனால் இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்து சில குழுக்களினால் முன்வைக்கப்பட்டுவருகின்றன. எனவே அது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மூவர் கொண்ட ஆணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற காணாமல் போன சம்பவங்கள் குறித்தே விசாரரணை செய்யப்படும். குறிப்பாக யுத்தத்தின் இறுதிக்காலப்பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் சமப்வங்கள் குறித்தே விசாரணை நடத்தப்படும் என அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| அவுஸ்திரேலியாவில் மேலும் கடுமையாகும் புதிய குடிவரவுக் கொள்கைகள் Posted: 16 Aug 2013 06:53 PM PDT
அந்நாட்டில் அடுத்த மாதம் பொதுத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தற்போது தஞ்சக் கோரிக்கை நிலுவையில் உள்ளவர்களுக்கு வேலை பார்க்க கட்டுப்பாடுகளை ஏற்படுத்தும் விதமான தற்காலிக வதிவிட உரிமை மட்டுமே வழங்குவது என்றும், நிரந்தர வதிவிட உரிமை வழங்குவதில்லை என்றும், இன்னோரன்ன மாற்றத்தை இத்தேர்தலில் தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஏற்படுத்தும் என அப்பாட் கூறினார். தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்டவர்களுக்கு அம்முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய இருந்துவரும் உரிமை ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியாவில் தஞ்சக் கோரிக்கையாளர்கள் விவகாரம் தேர்தல் வெற்றிக்கு உதவும் என்று இரண்டு முக்கியக் கட்சிகளும் நம்புவதால், இந்த விவகாரத்தில் யார் மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் அவற்றின் தலைவர்கள் போட்டிபோடும் ஒரு சூழல் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தோனேசிய படகு விபத்தில் உயிரிழந்த இலங்கையர்களின் விபரங்கள் Posted: 16 Aug 2013 06:48 PM PDT
இவ்விபத்தில் உயிரிழந்த யாழ்ப்பாணம் சுன்னாகத்தைச் சேர்ந்த அல்பிரட் பன்ங் அன் செலானின் சடலம் அவரின் உறவினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது. திவ்யா ஒன்றரை வயது பெண் குழந்தை, ரொனால்ட் 33 வயது ஆண், இன்ஜா 7வயது பெண் குழந்தை, டனிசன் 5 வயது ஆண் குழந்தை இவர்களது சடலங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதுடன், இவர்களது உறவினர்கள் உடனடியாக வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். 20 வயதுடைய பெண் ஒருவரின் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படவில்லையென வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு கொன்சியூலர் பிரிவு இல, 14 சார் பாரன் ஜயதிலக மாவத்தை கொழும்பு 1 என்ற முகவரிக்கோ அல்லது 0112437635 என்ற தொலைபேசி இலக்கத்துடனோ அல்லது 0112473899 என்ற தொலைநகல் இலக்கத்துடனோ அல்லது consular@sltnet.lk என்ற மின்னஞ்சல் ஊடாகவோ விபரங்களை அறிந்துகொள்ள முடியுமென்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு ஜவாகி சியான்ஜர் கடற்பரப்பில் கடந்த ஜூலை 23ம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் உயிரிழந்தவர்களுள் இலங்கையர் என்று சந்தேகிக்கப்படுபவர்களின் விபரங்களையே வெளிவிவகார அமைச்சு இவ்வாறு வெளியிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நிர்வாண கோலத்தில் குழந்தைக்குப் பால் கொடுத்த பெண் Posted: 16 Aug 2013 12:15 PM PDT
அவரது பெயர் அமி உட்ரப். இவர் ஹவாய் தீவில் தனது குடும்பத்துடன் வசிக்கிறார். ஹவாய் தீவில் ஆடைகளின்றியும் சுதந்திரமாக வசிக்கலாம்.அமி ஒரு யோகாசனப் பிரியை ஆவார். யோகாசனம் செய்யாமல் அவரது எந்த நாளும் தொடங்காது, முடியாது. இந்த நிலையில் கடந்த 2011ம் ஆண்டு இவர் தனது தோட்டத்தில் நிர்வாண நிலையில் யோகாசனம் செய்தார். உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நின்ற நிலையில் தனது பெண் குழந்தை நையாவுக்கும் பாலூட்டினார். இதை அவரது கணவர் புகைப்படம் எடுத்தார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வலம் வர ஆரம்பித்துள்ளது. இதுகுறித்து அமி கூறுகையில், எனக்கு யோகாசனம் முக்கியம். அதேசமயம், எனது குழந்தைக்குப் பாலூட்டுவதும் முக்கியம். நான் யோகா செய்து கொண்டிருந்தபோது என் குழந்தை பசியெடுத்து என் மார்பருகே வந்தபோது அப்படியே அதற்குப் பாலூட்டினேன். இதில் தவறேதும் இல்லை என்றார். மேலும் அவர் கூறுகையில், பெரும்பாலும் நையா இப்படித்தான் பால் குடிக்கிறாள். நான் புல்வெளியில் நிர்வாண கோலத்தில் யோகா செய்வதும், அவள் தவழ்ந்து வந்து பாலருந்துவதும் எங்கள் வீட்டில் சகஜம் என்கிறார் அமி. ஆனால் அமியின் செயலுக்கு எதிர்ப்புகளும், ஆட்சேபனைகளும் வராமல் இல்லை. பலர் இது தாய்மையை இழிவுபடுத்துவது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அமி பொருட்படுத்தவில்லையாம். This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேய் என்றால் அம்புட்டு பயமா இவர்களுக்கு…. (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை) Posted: 16 Aug 2013 06:18 AM PDT பேய் என்றால் அம்புட்டு பயமா இவர்களுக்கு…. (பலவீனமானவர்கள் பார்க்கத் தடை) This posting includes an audio/video/photo media file: Download Now |
| வாகனம் ஓட்டும்போது இப்படியும் நடக்கலாம் கவனம்….. Posted: 16 Aug 2013 05:51 AM PDT வாகனம் ஓட்டும்போது இப்படியும் நடக்கலாம் கவனம்….. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |









