மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- பஸ்கள் ஓடாததால் திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் தவிப்பு
- இலவசங்களுக்கு வாக்காளர்கள் இரையாகி விடக்கூடாது: அரவிந்த் கெஜ்ரிவால்
- தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20–ந்தேதி முதல் சாலை மறியல்: ஆந்திரா போராட்டக்காரர்கள் முடிவு
- போலீசாரால் தேடப்பட்ட லஷ்கர் தீவிரவாதி நேபாள எல்லையில் கைது
- மத்திய ரிசர்வ் படை போலீஸ் டி.ஜி.பி.யாக திலிப் திரிவேதி நியமனம்
- நரேந்திரமோடிக்கு ஆஸ்திரேலியா அழைப்பு
- மும்பையில் தீப்பிடித்து எரிந்த நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து 5 வீரர்கள் உடல் மீட்பு
- ரூபாய் மதிப்பு, பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: பிரதமருடன் ப.சிதம்பரம் ஆலோசனை
- அத்வானி-நரேந்திர மோடி இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை: வெங்கையா நாயுடு
- பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதிகள் கதறல்: ‘எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்’
- பெல்லாரியில் குழிதோண்டி புதைத்து வைத்து இருந்த ரூ.25 கோடி இரும்புத்தாது பறிமுதல்
- தரமான சத்துணவு வழங்கப்படுகிறதா? - தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
- உயர் அதிகாரியின் எதிர்ப்பால் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்குவதில் சிக்கல்
- கார்கில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி
- மோடியின் அதிகாரப் பசிக்கு எல்லையே இல்லை: திக்விஜய் சிங் விளாசல்
- டெல்லியை மிரட்டிய கனமழை: முக்கிய சாலைகள் மூழ்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது
- பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்தது
- ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடி கொடியேற்ற முடியாது: ஜனதா தளம் தலைவர் சாபம்
- ஜனாதிபதி முடிவு அறிவிப்பு: 2 தூக்கு கைதிகளின் கருணை மனு நிராகரிப்பு
- நீர் மூழ்கிக் கப்பலுக்குள் வெங்கடராஜ் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது: மாமனார் நம்பிக்கை
| பஸ்கள் ஓடாததால் திருப்பதியில் 2 லட்சம் பக்தர்கள் தவிப்பு Posted: 16 Aug 2013 10:52 PM PDT தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் பல மாவட்டங்களில் பஸ்கள் ஓட வில்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு கடந்த 12–ந் தேதி பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. 24 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் தற்போது குறைந்த அளவில் பஸ்கள் விடப்படுகிறது. என்றாலும் பக்தர்கள் |
| இலவசங்களுக்கு வாக்காளர்கள் இரையாகி விடக்கூடாது: அரவிந்த் கெஜ்ரிவால் Posted: 16 Aug 2013 10:43 PM PDT தேர்தல் காலங்களில் அரசியல் கட்சிகள் தரும் இலவச வாக்குறுதிக்கு வாக்காளர்கள் இரையாகி விடக்கூடாது என ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியின் சத்தர்பூர் தொகுதிக்குட்பட்ட அயாநகரில் நேற்று நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சி பொதுக் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் பேசியதாவது:- |
| தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 20–ந்தேதி முதல் சாலை மறியல்: ஆந்திரா போராட்டக்காரர்கள் முடிவு Posted: 16 Aug 2013 10:25 PM PDT ஆந்திராவில் இருந்து தெலுங்கானா பகுதிகளை பிரித்து தனி மாநிலம் உருவாக்கக் கூடாது என்று கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களும் போராட்டத்தில் குதித்துள்ளதால் நிர்வாகப் பணிகள் முடங்கி உள்ளன. இந்த நிலையில் போராட்டத்தை தீவிரப்படுத்த ஆந்திரா போராட்டக்காரர்கள் முடிவு செய்துள்ளனர். இதுபற்றி ஆலோசனை |
| போலீசாரால் தேடப்பட்ட லஷ்கர் தீவிரவாதி நேபாள எல்லையில் கைது Posted: 16 Aug 2013 10:21 PM PDT இந்தியாவின் வடமாநிலங்களில் 1996-98 ஆண்டுகளுக்கு இடையே நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் மூளையாக செயல்பட்டவன், லஷ்கர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தின் தளபதி அப்துல் கரீம். 'தண்டா' எனவும் அழைக்கப்படும் இவன் நவீன வெடிகுண்டு தயாரிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்றவன் என்பது குறிப்பிடத்தக்கது. |
| மத்திய ரிசர்வ் படை போலீஸ் டி.ஜி.பி.யாக திலிப் திரிவேதி நியமனம் Posted: 16 Aug 2013 10:07 PM PDT இந்தியாவின் பெரிய படையாக கருதப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படையில் சுமார் 3 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். சி.ஆர்.பி.எப். எனவும் அழைக்கப்படும் இந்த படையின் டி.ஜி.பி.யாக பொறுப்பு வகித்த பிரணய் சஹே கடந்த மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றதையடுத்து தேசிய பாதுகாப்பு படையின் தலைவரான அரவிந்த் ரஞ்சன் கூடுதலாக சி.ஆர்.பி.எப். படையின் டி.ஜி.பி.யாகவும் நியமிக்கப்பட்டார். |
| நரேந்திரமோடிக்கு ஆஸ்திரேலியா அழைப்பு Posted: 16 Aug 2013 09:56 PM PDT இங்கிலாந்தை தொடர்ந்து ஆஸ்திரேலிய தூதர் நரேந்திரமோடியை சந்தித்து தங்கள் நாட்டுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். குஜராத் கலவரம் காரணமாக முதல்–மந்திரி நரேந்திரமோடிக்கு அமெரிக்க அரசு விசா வழங்க மறுத்து விட்டது. இதனால் நரேந்திரமோடி அமெரிக்காவில் உள்ள இந்திய தொழில் அதிபர்களுடன் |
| மும்பையில் தீப்பிடித்து எரிந்த நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து 5 வீரர்கள் உடல் மீட்பு Posted: 16 Aug 2013 09:42 PM PDT மும்பை கொலபாவில் உள்ள கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான 'ஐ.என்.எஸ். சிந்து ரக்ஷக்' நீர்மூழ்கி போர்க்கப்பல் கடந்த புதன்கிழமை அதிகாலை 1 மணிக்கு திடீரென தீப்பிடித்து வெடித்து சிதறியது |
| ரூபாய் மதிப்பு, பங்கு சந்தை வீழ்ச்சி எதிரொலி: பிரதமருடன் ப.சிதம்பரம் ஆலோசனை Posted: 16 Aug 2013 08:49 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் ஏற்பட்ட வீழ்ச்சி, பங்கு சந்தை வீழ்ச்சி ஆகியவை குறித்து பிரதமருடன் ப.சிதம்பரம் ஆலோசனை நடத்தினார். டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு சமீப காலமாக குறைந்து ஊசலாட்டம் கண்டு வந்தது. இந்த நிலையில் நேற்று வரலாறு காணாத அளவாக, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.62.03 என்ற அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது. பின்னர், மாலையில் இது ரூ.61.65 ஆக ஆனது. இந்த வீழ்ச்சி, மும்பை பங்கு |
| அத்வானி-நரேந்திர மோடி இடையே எந்த கருத்துவேறுபாடும் இல்லை: வெங்கையா நாயுடு Posted: 16 Aug 2013 08:15 PM PDT எல்.கே.அத்வானிக்கும், நரேந்திர மோடிக்கும் எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று வெங்கையா நாயுடு கூறினார். சுதந்திர தினவிழாவில் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு சவால் விடுத்து பேசினார். அதே சமயம் பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, சுதந்திரதின விழாவில் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கி பேசக்கூடாது என்று கருத்து தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நரேந்திர மோடிக்கு ஆதரவாக கட்சியின் மற்றொரு முன்னணி தலைவர் |
| பாகிஸ்தான் சிறையில் இந்திய கைதிகள் கதறல்: ‘எங்களை சுட்டுக் கொன்று விடுங்கள்’ Posted: 16 Aug 2013 05:22 PM PDT பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள கோட் லக்பத் சிறையில் இந்தியாவை சேர்ந்த கைதிகள் ஏராளமானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் கிர்பால்சிங் உள்பட 11 கைதிகள் பா.ஜனதா எம்.பி. அவினாஷ்ராய் |
| பெல்லாரியில் குழிதோண்டி புதைத்து வைத்து இருந்த ரூ.25 கோடி இரும்புத்தாது பறிமுதல் Posted: 16 Aug 2013 04:25 PM PDT கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இரும்புத்தாது சுரங்கங்கள் அதிகளவில் உள்ளது. சட்டவிரோதமாக இரும்புத்தாதுக்கள் வெட்டி எடுக்கப்படுவதாக எழுந்த புகாரை தொடர்ந்து சி.பி.ஐ. நடத்திய அதிரடி சோதனையில் பலர் சிக்கினார்கள். |
| தரமான சத்துணவு வழங்கப்படுகிறதா? - தமிழ்நாடு உள்ளிட்ட 11 மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் Posted: 16 Aug 2013 07:58 AM PDT பீகார் மாநிலத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 22 குழந்தைகள் இறந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின்னர், சத்துணவு வழங்கும் பணியை அரசு தீவிரமாக கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறது. இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் சஞ்சய் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், பீகார் மாநிலத்தில் |
| உயர் அதிகாரியின் எதிர்ப்பால் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா வழங்குவதில் சிக்கல் Posted: 16 Aug 2013 06:44 AM PDT குஜராத்தில் 2002-ம் ஆண்டு ஏற்பட்ட கலவரம் காரணமாக, முதல்வர் நரேந்திர மோடிக்கு அமெரிக்கா விசா கொடுக்க மறுத்து வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பா.ஜனதா தலைவர் ராஜ்நாத்சிங், மோடிக்கு விசா வழங்க விதிக்கப்பட்டுள்ள தடை உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதேசமயம், மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம் என்ற சூழ்நிலை ஏற்பட்டு |
| கார்கில் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்: இந்தியா பதிலடி Posted: 16 Aug 2013 05:53 AM PDT இந்தியாவுடன் தொடர்ந்து விரோத போக்கை கடைப்பிடித்து வரும் பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி எல்லையில் தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில் 5 இந்திய வீரர்களை கொன்ற பாகிஸ்தான், தொடர்ந்து இந்திய ராணுவத்தை அச்சுறுத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதில் தாக்குதலில் ஈடுபட்டு வருவதால் எல்லையில் பதட்டம் நீடிக்கிறது. |
| மோடியின் அதிகாரப் பசிக்கு எல்லையே இல்லை: திக்விஜய் சிங் விளாசல் Posted: 16 Aug 2013 04:27 AM PDT குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையருகே குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். எல்லை பாதுகாப்பு படையினருக்கு குஜராத் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து சுதந்திர தின உரையாற்றிய மோடி, அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது |
| டெல்லியை மிரட்டிய கனமழை: முக்கிய சாலைகள் மூழ்கியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது Posted: 16 Aug 2013 04:26 AM PDT தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது. இன்று பரபரப்பான காலை நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. முக்கிய சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. ஆனால், மழைநீர் வெளியேறாததால் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். |
| பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி: சென்செக்ஸ் 769 புள்ளிகள் சரிந்தது Posted: 16 Aug 2013 02:39 AM PDT முன் எப்போதும் இல்லாத வகையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று 62 ஆக சரிந்தது. இது இந்திய பங்குச்சந்தைகளில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியது. முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்க ஆர்வம் காட்டவில்லை. |
| ஏழு பிறவி எடுத்தாலும் டெல்லி செங்கோட்டையில் மோடி கொடியேற்ற முடியாது: ஜனதா தளம் தலைவர் சாபம் Posted: 16 Aug 2013 02:34 AM PDT குஜராத் மாநிலத்தில் உள்ள பாகிஸ்தான் எல்லையருகே குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி நேற்று தேசிய கொடியை ஏற்றி வைத்தார். எல்லை பாதுகாப்பு படையினருக்கு குஜராத் மாநில அரசு சார்பில் அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டியை திறந்து வைத்து சுதந்திர தின உரையாற்றிய மோடி, அடுத்த ஆண்டு சுதந்திர தின விழாவின் போது |
| ஜனாதிபதி முடிவு அறிவிப்பு: 2 தூக்கு கைதிகளின் கருணை மனு நிராகரிப்பு Posted: 16 Aug 2013 02:17 AM PDT கர்நாடகத்தை சேர்ந்த 2 தூக்கு கைதிகளின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தார். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் தூக்கு தண்டனை பெற்ற கைதிகள் தண்டனையில் இருந்து தப்பும் இறுதிக்கட்ட முயற்சியாக ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பும் நடைமுறை உள்ளது. |
| நீர் மூழ்கிக் கப்பலுக்குள் வெங்கடராஜ் உயிருடன் இருக்க வாய்ப்பு உள்ளது: மாமனார் நம்பிக்கை Posted: 16 Aug 2013 12:48 AM PDT நீர்மூழ்கி கப்பல் வெடி விபத்தில் சிக்கிய வெங்கடராஜ் தேனி மாவட்டம், பெரியகுளத்தை சேர்ந்த கிருஷ்ணா நந்தன் என்பவரின் மருமகன் ஆவார். கிருஷ்ணாநந்தன் மதுரை மாவட்டம் உசிலம் பட்டி நகராட்சியில் ஆணையாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தற்போது கிருஷ்ணா நந்தன் தனது குடும்பத்தினருடன் மும்பைக்கு சென்றுள்ளார். அவரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் கூறியதாவது:– |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |