Tamil Star |
- இங்கிலாந்து கவுன்டி அணியில் காம்பிர்
- போர்க்குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்ற அறிக்கை தயாரிக்கவே நவிபிள்ளை வருகிறார்!- வீரவன்ஸ
- பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட போது சீட்டு விளையாடிய ஒபாமா
- பேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக்
- Samsung அறிமுகப்படுத்தும் Ativ S Neo ஸ்மார்ட் செல்பேசி
- நீங்கள் பேஸ்புக்கிற்கு அடிமையானவரா? இதோ உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல்
- கபில்தேவின் சிறந்த இந்திய அணியின் தலைவராக டோனி தெரிவு
- கூண்டுக்குள் அடைக்கப்பட் சிங்கம் திடீரென குரைத்தது.
- கிராமவாசிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ காரின் சாரதி
- அட்டையால் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம்: ஜப்பானிய கட்டிடக்கலைஞர் அபாரம்
| இங்கிலாந்து கவுன்டி அணியில் காம்பிர் Posted: 15 Aug 2013 11:19 PM PDT இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில், எசக்ஸ் அணிக்காக விளையாட இந்திய வீரர் கவுதம் காம்பிர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் காம்பிர், 31. இதுவரை 54 டெஸ்ட் (4021 ஓட்டங்கள்), 147 ஒருநாள் (5238 ஓட்டங்கள்), 37 சர்வதேச “டுவென்டி-20′ (932 ஓட்டங்கள்) போட்டிகளில் விளையாடி உள்ளார். சமீபகாலமாக மோசமான “பார்ம்’ காரணமாக இந்திய அணியில் இடம் கிடைக்காமல் தவிக்கிறார். இந்நிலையில் இவர், இங்கிலாந்தில் நடக்கும் கவுன்டி சாம்பியன்ஷிப் தொடரில் விளையாட […] |
| போர்க்குற்றங்களுக்கு ஜனாதிபதியே பொறுப்பு என்ற அறிக்கை தயாரிக்கவே நவிபிள்ளை வருகிறார்!- வீரவன்ஸ Posted: 15 Aug 2013 11:05 PM PDT நாட்டில் இறுதி யுத்தத்தின் போது இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்களுக்கு மஹிந்த ராஜபக்சவே பொறுப்பேற்க வேண்டும் என்ற அறிக்கையை தயாரிக்கவே நவநீதம்பிள்ளை இலங்கைக்கு வருகை தரவுள்ளார் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். மத்திய மாகாணசபைத் தேர்தலை முன்னிட்டு மாத்தளை மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், நாட்டில் வாழும் மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்தி, கலவரங்களை உருவாக்கி, நாட்டின் பொருளாதாரத்தை […] |
| பாகிஸ்தானில் பின்லேடன் கொல்லப்பட்ட போது சீட்டு விளையாடிய ஒபாமா Posted: 15 Aug 2013 10:55 PM PDT
தாக்குதல் நடத்தி பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட போது, அக்காட்சியை அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் உள்ள கண்காணிப்பு அறையில் இருந்து அதிபர் ஒபாமா வீடியோ கான்பரன்ஸ்சிங் மூலம் பார்த்ததாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் அப்போது, அவர் மேலும் 2 பேருடன் சேர்ந்து ஜாலியாக சீட்டு விளையாடிக் கொண்டிருந்ததாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை ஒபாமாவின் முன்னாள் பாதுகாவலர் மேன்றக்கி லவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, பாகிஸ்தான் அபோதாபாத்தில் பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட போது கண்காணிப்பு அறையின் மேல் மாடியில் சீட்டு விளையாடி கொண்டிருந்தார். அப்போது, நான் ஒபாமாவுடன் தான் இருந்தேன். எனவே, பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்ட காட்சியை என்னால் முழுமையாக பார்க்க முடியவில்லை. பின்லேடனுடன் அமெரிக்க ராணுவம் சுமார் 150 நிமிடங்கள் அதாவது 1½ மணி நேரம் துப்பாக்கி சண்டை நடத்தியது என்றும் அவர் கூறினார். இந்த தகவலை அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பேபாலுக்கு நிகராக சேவையை அறிமுகப்படுத்தும் முயற்சியில் பேஸ்புக் Posted: 15 Aug 2013 10:48 PM PDT பல மில்லியன் கணக்கான பயனர்களை தன்னகத்தே கட்டிப்போட்டிருக்கும் பேஸ்புக் சமூகவலைத்தளமானது பாரிய விளம்பர சேவைகளையும் வழங்கிவருகின்றது. இதனால் பணக்கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள புதிய சேவை ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதாவது ஒன்லைன் மூலமான பணக் கொடுக்கல் வாங்கல்களுக்கு தற்போது பிரபல்யமாகக் காணப்படும் பேபால் நிறுவனத்தின சேவைக்கு நிகராக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மொபைல் சாதனங்களிலும் இச்சேவையை பயன்படுத்தக்கூடிய வசதி கிடைக்கப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| Samsung அறிமுகப்படுத்தும் Ativ S Neo ஸ்மார்ட் செல்பேசி Posted: 15 Aug 2013 10:46 PM PDT சம்சுங் நிறுவனம் தனது புதிய உற்பத்தியான Samsung Ativ S Neo எனும் ஸ்மார்ட் கைப்பேசியினை இன்றைய தினம் அறிமுகப்படுத்தவிருக்கின்றது. 149 டொலர்களே பெறுமதியான இக்கைப்பேசி 4.8 அங்குல அளவுடைய தொடுதிரை, 1.4GHz வேகத்தில் செயலாற்றவல்ல Processor, பிரதான நினைவகமாக 1GB RAM ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவற்றுடன் 8 மெகாபிக்சல்கள் உடைய பிரதான கமெரா மற்றும் வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கென 1.9 மெகாபிக்சல்களை உடைய துணையான கமெரா, 2,000 mAh மின்கலம் போன்றனவும் தரப்பட்டுள்ளன. இவற்றின் சேமிப்பு […] |
| நீங்கள் பேஸ்புக்கிற்கு அடிமையானவரா? இதோ உங்களுக்கு ஓர் அதிர்ச்சி தரும் தகவல் Posted: 15 Aug 2013 10:42 PM PDT தொடர்ச்சியாக பேஸ்புக் தளத்தினை பயன்படுத்திவருபவர்கள் தமது வாழ்வில் துக்கம் நிறைந்தவர்களாக வரக்கூடிய சாத்தியம் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. Michigan பல்கலைக்கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போதே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆய்விற்காக வயது வந்த 82 பேர் சிறு குழுவாக சேர்த்து பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை நாள் ஒன்றிற்கு 5 தடைவைகள் வீதம் 2 வாரங்களாக அவதானித்த பின்னர் கிடைத்த தகவல்களை ஒன்று திரட்டிய போது, பேஸ்புக் பயன்படுத்துகின்ற சந்தர்ப்பங்களில் பெரும்பாண்மையானவர்கள் தனிமையில் இருப்பதாகவும், பேஸ்புக் […] |
| கபில்தேவின் சிறந்த இந்திய அணியின் தலைவராக டோனி தெரிவு Posted: 15 Aug 2013 09:29 PM PDT கபில்தேவின் சிறந்த இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக, தோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதில் 1983ல் உலக கோப்பை வென்ற அணியில் இடம் பெற்ற ஒருவர் கூட இல்லாதது வியப்பு தான். இந்தியாவுக்கு முதல் உலக கோப்பை (1983) பெற்றுத்தந்தவர் கபில்தேவ், 54. நொய்டாவில் நடந்த விளம்பர நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, இவர், அனைத்து நேரங்களிலும் சிறந்து விளங்கும் இந்திய ஒருநாள் அணியை தேர்வு செய்தார். கடந்த 2007ல் “டுவென்டி-20′, 2011ல் உலக கோப்பை, 2013ல் சாம்பியன்ஸ் […] |
| கூண்டுக்குள் அடைக்கப்பட் சிங்கம் திடீரென குரைத்தது. Posted: 15 Aug 2013 09:23 PM PDT சீனாவில் மிருககாட்சி சாலையொன்றில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஆப்ரிக்க சிங்கமொன்று திடீரென குரைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சீனாவில் மிருககாட்சி சாலையொன்றில் ஆப்ரிக்க சிங்கமொன்று அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்த சிங்கம் பார்வையாளர்கள் முன்பு திடீரென குரைத்ததால் போலி என வெட்ட வெளிச்சமானது. உண்மையான சிங்கத்துக்கு பதிலாக திபெத்தில் வளரும் மஸ்டிஃப் வகை நாயை அடைத்து வைத்திருந்ததாக சீன ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து மிருககாட்சி சாலையின் அதிகாரி ஒருவர் கூறுகையில், உடல் முழுதும் ரோமம் வளரும் திபெத்திய மாஸ்டிஃப் நாய் தூரத்தில் […] |
| கிராமவாசிகளால் சிறைப்பிடிக்கப்பட்ட கூகுள் ஸ்ட்ரீட் வியூ காரின் சாரதி Posted: 15 Aug 2013 09:19 PM PDT கூகுள் நிறுவனம் வழங்கிவரும் பல்வேறு சேவைகளுள் கூகுள் ஸ்ட்ரீட் வியூ (Google Street View) சேவையும் ஒன்றாகும். உலகின் பல்வேறு இடங்களையும் இருந்த இடத்திலிருந்தே பார்த்து மகிழக்கூடியதும் பயன்பெறக்கூடியதுமான இச்சேவையை வழங்குவதற்காக கூகுள் நிறுவனம் விசேட கார்களை பயன்படுத்துகின்றது. இதன்மூலம் பயணிப்பவர்கள் ஒவ்வொரு பிரதேசங்களிலும் உள்ள வீடுகள், கட்டிடங்கள், ஏனைய முக்கியத்துவம் வாய்ந்த அம்சங்களை புகைப்படம் எடுப்பார்கள். இவ்வாறு தாய்வானில் உள்ள Sa-eab எனும் கிராமத்தினை புகைப்படம் எடுக்க சென்றபோது கூகுள் ஸ்ட்ரீட் வியூ காரின் சாரதியை […] |
| அட்டையால் நிர்மாணிக்கப்பட்ட தேவாலயம்: ஜப்பானிய கட்டிடக்கலைஞர் அபாரம் Posted: 15 Aug 2013 09:14 PM PDT நியூசிலாந்து நாட்டின் தலைநகர் கிறிஸ்ட் சர்ச்சில் இருந்த கிறிஸ்துவத் தேவாலயம் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும். கடந்த 2011ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி 6.3 ரிக்டர் அளவில் தோன்றிய நிலநடுக்கம் 185 பேரைப் பலி வாங்கியது. பல கட்டிடங்கள் சிதிலமடைந்தன. அதில் இந்தத் தேவாலயமும் ஒன்றாகும். கடந்த மார்ச் மாதம் சிதிலமடைந்த தேவாலயத்தை ஆய்வு செய்த அதிகாரிகள் இதனை செப்பனிடமுடியாது என்றும், இடித்துத் தரைமட்டமாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தனர். ஆயினும், ஜப்பானிய கட்டிடக்கலை வல்லுநரான […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
