puthiyathalaimurai.tv online |
- தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1024 அதிகரிப்பு
- சொந்தவீடு வாங்க வங்கிக்கடன் வாங்குவதே நல்லது….
- அனைவருக்கும் தாராளமாக சிலிண்டர் கிடைக்க வாய்ப்பு
- நீர்மூழ்கிக் கப்பல் வெடிவிபத்தில் சிக்கிய 2 பேரது உடல்கள் மீட்பு
- விரைவுச் செய்திகள்: இந்தியா…
- சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரி நாளை திறப்பு: ஜெயலலிதா
- விரைவுச் செய்திகள்… தமிழகம்
- விரைவில் மொபைல் ஃபோன் கட்டணம் 50 சதவீதம் வரை உயரும்
- கச்சத்தீவை மீட்க கோரிக்கை: 50 பேர் கைதாகி விடுதலை
- சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரம்: நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல்
| தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1024 அதிகரிப்பு Posted: 15 Aug 2013 10:51 PM PDT தங்கம் விலை கடுமையாக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 1024 உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஒரு கிராம் தங்கம் ரூபாய் 2,904க்கு விற்கப்படுகிறது. 22 கேரட் ஒரு சவரன் விலை ரூ 23,232 ஆக இருக்கிறது. 24 கேரட் ஒரு கிராம் தங்கம் விலை ரூபாய் 3106. வெள்ளியில் விலையும் அதிகரித்துள்ளது. சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளி ரூபாய் 55க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ. 51,385க்கு விற்கப்படுகிறது. |
| சொந்தவீடு வாங்க வங்கிக்கடன் வாங்குவதே நல்லது…. Posted: 15 Aug 2013 10:51 PM PDT சொந்த வீடு கட்ட, கையிருப்புப் பணத்தைச் செலவழிப்பதைவிட, வங்கிக் கடன் வாங்கி பயன்படுத்துவதுதான், சிறுதொழில் மற்றும் சிறு வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு சிக்கனமாகும். காரணம், கடன்தொகை மற்றும் அதன் கால அளவைப் பொறுத்து, வீட்டுக்கடனுக்கான வட்டி 9 சதவீதத்தில் இருந்தே கிடைக்கிறது. ஆனால் இது எல்லா தொழிலதிபர்களுக்கும் பொறுத்தமானதல்ல எனக்கூறப்படுகிறது. உற்பத்தி தொழில் துறையில் ஈடுபட்டுள்ள நபர்களின் தொழில் விரிவாக்கம் என்பது, அவர்களது முடிவு. விருப்பம் போன்றவற்றை மட்டும் சார்ந்ததல்ல. அவர்கள் செய்து முடிக்கும் பொருட்களை, யாருக்கு சப்ளை செய்கிறார்கள், அந்த நபர்கள் எவ்வளவு விரைவாகவும், ஒழுங்காகவும் தொகையை திருப்பித் தருகிறார்கள் என்பதும்கூட முக்கியம். அதை உறுதி செய்து கொள்ளாமல், செய்யப்படும் விரிவாக்கம், உற்பத்தி தொழிலானாலும், வினியோக வர்த்தகமானாலும் சிககலில் போய் முடியும் வாய்ப்புள்ளது. இது ஒருபுறமிருக்க, நுட்பம் சார்ந்த சுய தொழில் செய்யும் ஓவியர், மருத்துவர், வழக்கறிஞர், பொறியாளர், கட்டடக் கலை நிபுணர், திரைப்பட துறையினர் போன்றோரின் வருவாய் பொதுவாக ஒரு நிலையான கால இடைவெளிக்கு உட்பட்டதல்ல. திடீரென பெருந்தொகை கையில் புரளும் இவர்கள், ஓராண்டின் சில வேளைகளில் பணப்புழக்கம் குறைந்தே காணப்படுவர். இவ்விதமானோர், தங்களது பிற நிதி ஆதாரங்களையும் கருத்தில் கொண்டு, முடிவு எடுப்பது நல்லது. அதனால், இவர்களுக்கும் சொந்த வீடுதான் சரியான தேர்வு என்றே சொல்ல வேண்டியிருக்கிறது. இருப்பினும், நிதி புழக்கத்தையும், அது சார்ந்த கூடுதல் ரிஸ்க்கையுமே தனது தொழிலாக கொண்டிருக்கும் நபர்கள், உதாரணமாக, வட்டித் தொழிலில் ஈடுபடுவோர். திரைப்படத் தொழில் போன்ற அதிக ரிஸ்க் உள்ள தொழிலுக்கு அதிக வட்டியில் நிதியுதவி செய்பவர்கள். பங்குசந்தை மற்றும் அது தொடர்புடைய ஊக வணிகத்தில் அதிக ஈடுபாடு காட்டுவோர் என இன்னும் பட்டியலிடக் கூடிய சில தரப்பினர், சொந்த வீட்டுக்கு தேவையான பெருந்தொகையை முடக்க விரும்புவதில்லை. அதை தங்களது தொழிலில் ஈடுபடுத்தி, அதன் மூலம் கிடைக்கும் கூடுதல் வருவாயில், வசதியான வீடு ஒன்றுக்கு வாடகை கொடுத்துவிட முடியும் என நம்புகிறார்கள். பலரது விஷயத்தில் இது உண்மை என்பதை பார்க்க முடிகிறது. ஒப்புக் கொள்ளவும் வேண்டியுள்ளது. இந்த தரப்பினருக்கு மட்டும், சொந்த வீடு என்பதில் இருந்து விலகி, வாடகை வீடுதான் சிக்கனம் என சொல்ல வேண்டியிருக்கிறது. ஆனால், இந்த தரப்பினரும் கூட, ரிஸ்க் எடுப்பதில் சற்றே கவனமாக நடந்து கொள்வது நல்லது என்பதை மறந்துவிடக் கூடாது. மென்பொருள் துறையின் வீச்சு அதிகமிருந்த சில ஆண்டுகளுக்குமுன், தமிழகத்தின் பல பகுதிகளில், குறிப்பாக, நகரங்களில், வீட்டு வாடகை இன்றிருப்பதை விட, கூடுதலாக இருந்தது. ஆனால், அந்த நாட்களில் மக்களுக்கு ஏற்படாத இனம்புரியாத விரக்தியும், கோபமும் இன்று பரவலாக காணப்படுகிறது. இதற்கு காரணம் – அண்மைக்காலமாக, எல்லாப் பொருட்களின் விலையும் அதிகரித்து, குடும்ப பட்ஜெட்டில் ஒவ்வொரு குடும்பத் தலைவியும் தொடர்ந்து சந்திக்கும் நெருக்கடிதான். இன்று வீட்டுக்கடன் வட்டி, அவர்களது மாதாந்திர வருவாயில் பெருந்தொகையை உறிஞ்சி விடுவதால், பலரது கவனமும், சொந்த வீட்டின் அவசியம் மற்றும் அவசரம் குறித்து யோசிக்கத் திரும்பியுள்ளது. |
| அனைவருக்கும் தாராளமாக சிலிண்டர் கிடைக்க வாய்ப்பு Posted: 15 Aug 2013 10:43 PM PDT அனைவருக்கும் தாராளமாக சிலிண்டர் கிடைக்கும் வகையில், புதிய அறிவிப்பு ஒன்றை அரசு வெளியிட்டுள்ளது. சிலிண்டர் வினியோகம் குறைவாக உள்ள பகுதிகளில், அனுமதிக்கப்பட்டதை விட, 10 சதவீத கூடுதல் சிலிண்டர்களை விற்பனை செய்ய, அனுமதி தர முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் புதிதாக 2,794 சிலிண்டர் வினியோகஸ்தர்களை நியமிக்கவும் பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால், விரைவில் சிலிண்டர் தட்டுப்பாடு தீரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இப்போதைய நிலையில் இந்தியன் ஆயில் கார்ப், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் இணைந்து 13 ஆயிரம் வினியோகஸ்தர்கள் மூலம் சிலிண்டர்களை வழங்கி வருகின்றன. |
| நீர்மூழ்கிக் கப்பல் வெடிவிபத்தில் சிக்கிய 2 பேரது உடல்கள் மீட்பு Posted: 15 Aug 2013 10:29 PM PDT மும்பையில் நீர்மூழ்கிக் கப்பல் வெடிவிபத்தில் சிக்கிய 18 வீரர்களில் 2 பேரது உடல்கள் மீட்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மீட்கப்பட்ட சடலங்கள் பற்றிய விவரம் எதையும் கடற்படையினர் வெளியிடவில்லை. விபத்து நிகழ்ந்து 3 நாட்கள் ஆகியுள்ள நிலையில், கப்பலில் சிக்கிய வீரர்களைத் தேடும்பணி தொடர்ந்து நடைபெறுகிறது. விபத்துக்குள்ளான ஐஎன்எஸ் சிந்து ரக்ஷக் நீர்மூழ்கிக் கப்பல், உருக்குலைந்து இருப்பதால், அதன் அறைகளுக்குள் நுழைந்து தேடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், மற்ற கடற்படை வீரர்களின் நிலை குறித்து எதுவும் தெரியவில்லை. நீர்மூழ்கிக் கப்பலின் உள்பகுதியில் பெருமளவு கடல் நீர் புகுந்திருப்பதாகவும், அதை வெளியேற்றும் முயற்சி நடைபெற்று வருவதாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கிடையே கப்பலில் சிக்கிய வீரர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், அவர்களின் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். |
| Posted: 15 Aug 2013 10:29 PM PDT
|
| சென்னை மாநகர குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரி நாளை திறப்பு: ஜெயலலிதா Posted: 15 Aug 2013 10:06 PM PDT சென்னை மாநகரின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து நாளைமுதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூரிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் வீராணம் ஏரியில் பெறப்பட்டு, அப்பகுதியின் பாசனத்திற்கு பயன்படுவதோடு மட்டுமல்லாமல், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் வழங்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார். தற்போது மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டதன் காரணமாக வீராணம் ஏரியில் 935 மில்லியன் கன அடி நீர் உள்ளதால், சென்னை மாநகர மக்களின் குடிநீர் தேவைக்காக வீராணம் ஏரியிலிருந்து நாளைமுதல் 180 மில்லியன் லிட்டர் தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். |
| Posted: 15 Aug 2013 10:00 PM PDT இன்று விடுதலை? : இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்கள் 114 பேரும் இன்று மீண்டும் அந்நாட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் மத்திய அரசு இலங்கைக்கு கொடுத்துள்ள கடும் அழுத்தம் காரணமாக இன்று விடுவிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மீனவர்கள் வேலை நிறுத்தம்: கனிம மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களைக் கைது செய்ய வலியுறுத்தி நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மீனவர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். மணல் அள்ளப்படுவதால் இயற்கை வளம் பாதிக்கப்படுவதுடன், தங்களின் வாழ்வாதாரமும் பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். வைகோ வேண்டுகோள்: சட்டவிரோதமாக மணலைக் கொள்ளையடிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து ஆய்வு நடத்தத் தமிழக அரசு முன் வந்திருப்பதற்கு அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். கொடியேற்ற முயன்றவர்கள் கைது: கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தேசிய கொடியை ஏற்றுவதற்காக சென்ற பாரத் மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள், பின்னர் கச்சத்தீவு நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை கண்டித்தும், தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார், திருமண மண்டபம் ஒன்றில் அவர்களை தங்க வைத்தனர். பின்னர் நேற்று மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அடிப்படை வசதிகோரிப் போராட்டம்: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கடந்த 40 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள், வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டம் நடத்தினர். இந்த பகுதியில் போதிய சாலை வசதி செய்து கொடுக்காததால், மாணவர்கள் பள்ளிக்கு செல்வதிலும், நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு போவதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி வீணாகியுள்ளன.கல்குளம் பகுதியில் பிரதான தொழிலாக உள்ள விவசாயம், கடந்த ஆண்டில் நிலவிய கடும் வறட்சியால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருப்பினும் கிணற்றுநீர் பாசனம் வாயிலாக விவசாயம் நடைபெற்றது. இந்த பயிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால், 200 ஏக்கரில் பயிரிடப்பட்டிந்த நெற்பயிர்கள் வெள்ளநீரில் மூழ்கின. இதனால் பயிர்கள் முழுமையாக அழுகியுள்ளதால், விவசாயிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். யானைகளை விரட்ட முயற்சி: திருவண்ணாமலை மாவட்டத்தில் காட்டு யானைகளை விரட்ட வனத்துறை முயற்சி மேற்கொண்டுள்ளனர். காட்டு யானகளை விரட்ட பல்வேறு யுக்திகளையும் முயன்று வருகின்றனர் வனத்துறையினர். மின்னுற்பத்திக்கு அனுமதி : கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் அணு உலையில், 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்ய அனுமதி வழஙக்கப்பட்டுள்ளதாக அணுமின் நிலைய வளாக இயக்குனர் சுந்தர் தெரிவித்துள்ளார்.இதற்கான அனுமதியை அணுசக்தி ஒழுங்கு முறை ஆணையம் வழங்கியிருப்பதாக அவர் கூறியுள்ளார். இந்த மாத இறுதிக்குள் 400 முதல் 500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்த அவர், டிசம்பர் இறுதிக்குள் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திறன் எட்டப்படும் என்றும் கூறினார். மாணவர்களுக்கு பயிற்சி : மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 18 பேர், வனத்துறையில் சேவை ஆற்றுவதற்காக தன்னார்வ வேட்டை தடுப்பு காவல் பணியில் இணைந்துள்ளனர். இதையடுத்து இவர்களுக்கு மலையேறும் பயிற்சி, வனத்தில் உள்ள மிருகங்களை பாதுகாக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. வனங்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் பணியில் ஈடுபட்டுள்ள மாணவர்களை வனத்துறை அதிகாரிகள் பாராட்டினர். 2 பேர் பலி : வேலூர் மாவட்டம் காவலூரில் இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி மோதியதில் இளைஞர்கள் இரண்டுபேர் உயிரிழந்தனர். சுதந்திர தின விடுமுறையை முன்னிட்டு, ஆனந்தன் என்பவரும் இந்திரா என்ற மாணவியும் இருசக்கர வாகனத்தில் சுற்றுலா சென்றுவிட்டு திரும்பும்போது பின்னே வந்த லாரி அவர்கள் மீது மோதியது. அதில் பலத்த காயமடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காணொளி:விரைவுச் செய்திகள்:தமிழகம் |
| விரைவில் மொபைல் ஃபோன் கட்டணம் 50 சதவீதம் வரை உயரும் Posted: 15 Aug 2013 08:45 PM PDT விரைவில் செல் ஃபோன் சேவைக்கான கட்டணங்கள் 50 சதவீதம் வரை உயரக் கூடும் என தொலைபேசி சேவை நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. பார்தி ஏர்டெல், வோடாஃபோன், லூப் மொபைல் போன்ற சில நிறுவனங்களின் உரிமம் அடுத்த ஆண்டுடன் காலாவதி ஆகிறது. தற்போது அவை வைத்துள்ள அலைகற்றை, அடுத்த ஆண்டுக்கு ஏலத்துக்கு வரும் நிலை உள்ளது. அப்போது, இதற்கான ஏலத்தின் அடிப்படை விலை, 2008ல் இருந்தது போல, 11 மடங்கு கூடுதலாக நிர்ணயிக்கப்பட வேண்டும் என தொலைத் தொடர்பு வழிகாட்டு ஆணையமான ட்ராய், அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. இதனால், செல்ஃபோன் கட்டணங்கள் நிமிடத்துக்கு 26 காசு வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. |
| கச்சத்தீவை மீட்க கோரிக்கை: 50 பேர் கைதாகி விடுதலை Posted: 15 Aug 2013 08:28 PM PDT கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி தேசிய கொடியை ஏற்றுவதற்காக சென்ற பாரத் மக்கள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய இவர்கள், பின்னர் கச்சத்தீவு நோக்கி ஊர்வலமாக புறப்பட்டனர். அப்போது இலங்கை கடற்படையினரின் அத்துமீறல்களை கண்டித்தும், தமிழக மீனவர்களின் நலன்களை பாதுகாக்க வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். இதனைத்தொடர்ந்து 50-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்த போலீசார், திருமண மண்டபம் ஒன்றில் அவர்களை தங்க வைத்தனர். பின்னர் நேற்று மாலை அனைவரும் விடுவிக்கப்பட்டனர். |
| சட்டவிரோதமாக மணல் அள்ளும் விவகாரம்: நடவடிக்கை எடுக்க வைகோ வலியுறுத்தல் Posted: 15 Aug 2013 08:19 PM PDT சட்டவிரோதமாக மணலைக் கொள்ளையடிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தமிழக அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் இல்மனைட், ரூட்டைல், கார்னட் ஆகிய கனிமங்கள் அடங்கிய மணல் சட்டத்துக்குப் புறம்பாக அள்ளப்பட்டு வருவதால், இயற்கை வளம் அழிந்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். தற்போது இது குறித்து ஆய்வு நடத்தத் தமிழக அரசு முன் வந்திருப்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், தமிழ்நாடு கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தடை விதித்திருப்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மணலைக் கொள்ளையடிப்போர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
மீனவர்கள் வேலை நிறுத்தம்:
நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: