Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சுற்றுலா வந்த இடத்தில் சோகம்: தந்தையின் தோளில் இருந்த 1½ வயது குழந்தை ஆற்றில் தவறி விழுந்து பலி

Posted: 15 Aug 2013 11:26 PM PDT

ஐதராபாத் தில்சுக் நகரைச் சேர்ந்தவர் மேதசியாம் ரெட்டி. இவரது மனைவி பிரதீபா. மேதசியாம் ரெட்டி லண்டனில் டாக்டராக உள்ளார். இவர்களுக்கு பிரேமத் ரெட்டி (10), சான்வி (5), மான்வி (1½ வயது) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். விடுமுறைக்காக குடும்பத்துடன் ஐதராபாத் வந்த இவர்கள் மன்சுரபாத் சகரா எஸ்டேட்டில் தங்கி பல்வேறு இடங்களுக்கு சுற்றுலா சென்றனர். நேற்று

தெலுங்கானாவை பிரித்ததில் எந்த மாற்றமும் இல்லை: ஆந்திர மந்திரிகளிடம் காங்கிரஸ் மேலிடம் உறுதி

Posted: 15 Aug 2013 11:12 PM PDT

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியைச் சேர்ந்தவர்கள் கடந்த 16 நாட்களாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். வியாபாரிகள், வக்கீல்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள், பஸ் ஊழியர்கள் என அனைத்து தரப்பு மக்களும் வேலை நிறுத்தம் செய்து வருவதால் இந்த பகுதியில் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி போய் உள்ளது. இந்த நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த மத்திய

நீர் மூழ்கி கப்பல் விபத்து: தமிழக கடற்படை அதிகாரி பலி?- 2 பேர் உடல்கள் மீட்பு

Posted: 15 Aug 2013 10:58 PM PDT

மும்பை கடற்படைத்தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த "சிந்துரக்ஷக்'' என்ற நீர் மூழ்கிக் கப்பல் நேற்று முன்தினம் காலை திடீரென தீ பிடித்து வெடித்தது. சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவுக்கு நீர் மூழ்கிக் கப்பல் வெடித்த சத்தம் கேட்டது. நீர் மூழ்கிக் கப்பலுக்குள் நவீன ஆயுதங்களும், வெடிபொருட்களும் இருந்ததால் அவை அனைத்தும் தீ பிடித்து எரிந்தன. சுமார் 3 மணி நேரத்துக்கு யாரும் அருகில் செல்ல முடியாதபடி அந்த

பூஞ்ச் எல்லைப் பகுதியில் இந்தியா-பாக். வீரர்கள் விடியவிடிய துப்பாக்கி சண்டை

Posted: 15 Aug 2013 10:17 PM PDT

இந்திய எல்லைக்குள் ஊடுருவி 5 இந்திய வீரர்களை பாகிஸ்தான் படையினர் சுட்டுக் கொன்றதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பூஞ்ச் எல்லைக் கோட்டுப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. கடந்த வாரத்திலிருந்து தொடர்ந்து 10-வது முறையாக பாகிஸ்தான் படையினர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள இந்திய முகாம்களின் மீது மீண்டும் துப்பாக்கியால் சுட்டனர்.

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டத்தால் திருப்பதி கோவில் வருமானம் குறைந்தது

Posted: 15 Aug 2013 10:10 PM PDT

ஆந்திராவை 2 ஆக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த பகுதியில் உள்ள 13 மாவட்டங்களில் கடந்த மாதம் 31–ந்தேதி முதல் பஸ்கள் ஓடவில்லை. திருப்பதியில் போராட்டம் தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 13–ந்தேதி திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தப்பட்டது.

25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை தமிழகத்தில் தீவிரவாத எதிர்ப்பு வாரம்: பாரதீய ஜனதா அறிவிப்பு

Posted: 15 Aug 2013 09:03 PM PDT

தமிழகத்தில் வருகிற 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை ஒரு வாரம் தீவிரவாத எதிர்ப்பு வாரமாக பா.ஜனதா கடைபிடிக்கிறது. இந்த ஒரு வாரமும் அனைத்து தொகுதிகளிலும் பொதுக்கூட்டங்கள், தெருமுனை கூட்டங்கள் நடத்தும் படி கட்சியினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டங்களில் நாடு எதிர்நோக்கி இருக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்கள், தமிழகத்தில் தீவிரவாதத்துக்கு எதிரான விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவது பற்றி பொதுமக்களிடம் விளக்க இருக்கிறார்கள். இதற்கிடையில் நாளை (சனிக்கிழமை) அனைத்து மாநில பா.ஜனதா

வெடித்து சிதறிய நீர்மூழ்கி கப்பலில் பலியான அதிகாரிகளின் பெயர்கள் வெளியீடு

Posted: 15 Aug 2013 05:45 PM PDT

மும்பை கப்பற்படை தளத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஐ.என்.எஸ். சிந்துரக்சக் கடந்த புதன்கிழமை அதிகாலை வெடித்து சிதறியது. பின்னர் அந்த கப்பலில் இருந்த 3 அதிகாரிகள் மற்றும் 15 மாலுமிகளும் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தொடங்கும் இந்தியா-சீனா பேச்சுவார்த்தை

Posted: 15 Aug 2013 05:30 PM PDT

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வரும் அக்டோபர் மாதம் அரசு முறைப் பயணமாக சீனா செல்லவிருக்கின்றார். அப்போது எல்லைப் பிரச்சினைகள், வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு, ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற உலக பிரச்சினைகள் குறித்த ஐந்தாவது

தெரு முனைக் கூட்ட பேச்சை போன்று பேசக்கூடாது: மோடிக்கு டி.ராஜா கண்டனம்

Posted: 15 Aug 2013 02:36 PM PDT

சுதந்திர தினத்தன்று குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, பிரதமர் மன்மோகன் சிங்கை தாக்கி பேசியதற்கு இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி. ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். அதுகுறித்து அவர் கூறியதாவது:-

சுதந்திர தின விழாவில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது: அத்வானி கருத்து

Posted: 15 Aug 2013 02:32 PM PDT

பாரதீய ஜனதா மூத்த தலைவர் அத்வானியின் இல்லத்தில் நேற்று காலை சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவர் பேசுகையில், "இன்று சுதந்திர தின நாள். இந்த நாளில் தனிப்பட்ட முறையில் யாரையும் தாக்கிப் பேசக்கூடாது" என்றார்

உத்தரகாண்டில் கனமழை: ஆற்றங்கரையில் இருந்த மடம் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டது

Posted: 15 Aug 2013 01:32 PM PDT

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழைக்கு சமோலி மாவட்டத்தில் உள்ள வீடுகள், பாலங்கள் நீரில் அடித்து செல்லப்பட்டன. இதனால் பத்ரிநாத் நெடுஞ்சாலை பகுதி மூடப்பட்டு உள்ளது

ஆந்திராவில் மின்னல் தாக்கி 5 பேர் உடல் கருகி பலி

Posted: 15 Aug 2013 01:24 PM PDT

ஆந்திரப்பிரதேச மாநில கம்மம் மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய கடும் மழை கொட்டியது. அப்போது ஜுலுருபாடு மண்டல் என்ற இடத்தில் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் மீது மின்னல் தாக்கியது.

பூஞ்ச் எல்லையில் பாகிஸ்தான் கடும் தாக்கு: இந்திய வீரர்கள் மூவர் படுகாயம்

Posted: 15 Aug 2013 10:42 AM PDT

இந்தியாவின் 67-வது சுதந்திர தினம் இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஷ்மீர் பூஞ்ச் எல்லை மெந்தர் செக்டரில் இன்று காலை முதலே பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. கடந்த 5 நாட்களில் 11-வது முறையாக

பிரதமரை விமர்சித்து கீழ்தரமான அரசியல் நடத்துகிறார் மோடி: சல்மான் குர்ஷித்

Posted: 15 Aug 2013 06:05 AM PDT

குஜராத் முதல்-அமைச்சர் மோடி, சுதந்திர தின உரையில் மத்திய அரசையும், பிரதமர் மன்மோகன்சிங்கையும் தாக்கி பேசினார். இதற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சுதந்திர தின நாளில் நாட்டின் பெருமையையும், ஒற்றுமையயும் பற்றி பேசுவது தான் அரசியல் தலைவருக்கு நல்லது. தனிப்பட்ட முறையில் பிரதமர‌ை பற்றி விமர்சிப்பது சரியல்ல என்று கூறியுள்ளார்.

சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை திறப்பு

Posted: 15 Aug 2013 02:47 AM PDT

பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக நாளை (16–ந்தேதி) நடை திறக்கப்படுகிறது. நாளை மாலை 5.30 மணிக்கு கோவில் நடையை சபரிமலை அய்யப்பன்

உ.பி.யில் மணல் கடத்தலை தடுத்த துர்க்காவின் கணவரும் அதிரடி மாற்றம்

Posted: 15 Aug 2013 02:41 AM PDT

உத்தரபிரதேசத்தில் மணல் கடத்தலை தடுத்த பெண் அதிகாரி துர்க்காவின் கணவரும் இடமாற்றம் செய்யப்பட்டார். உத்தரபிரதேச மாநிலம் நொய்டா கலெக்டராக இருந்த துர்க்கா சக்தி நாக்பால் யமுனை ஆற்றில் சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் கலெக்டர் துர்க்கா நொய்டாவில் மசூதியையொட்டி இருந்த ஆக்கிரமிப்பு சுவரை அகற்ற உத்தரவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க காத்துக்கொண்டு இருந்த மாநில அரசு மத ரீதியாக பதட்டத்தை உருவாக்கியதாக குற்றம்சாட்டி துர்க்காவை சஸ்பெணட் செய்தது. மாநில அரசின் இந்த நடவடிக்கையை அடுத்து துர்க்காவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவுக்கரம் அளித்து வருகிறார்கள்.

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஜெகன்மோகன் ரெட்டி தாயார் 19–ந்தேதி உண்ணாவிரதம்

Posted: 15 Aug 2013 02:35 AM PDT

ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படுவதற்கு ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. மாநிலத்தை பிரிக்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு முன்பே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் 2 எம்.பிக்கள், 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜீனாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பினர். மத்திய அரசு அறிவிப்புக்கு பிறகு கட்சி தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது எம்.பி.பதவியையும், அவரது தாயாரும் கவுரவ தலைவருமான விஜயலட்சுமி தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். ராஜினாமா செய்த எம்.பி.க்கள் பாராளுமன்றம் செல்வதையும் தவிர்த்தனர்.

ஆந்திராவில் உதவி கலெக்டர்களும் நாளை முதல் வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள்

Posted: 15 Aug 2013 02:30 AM PDT

ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிப்பு தெரிவித்து அரசு ஊழியர்கள் கடந்த 13–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியில் உள்ள 4 1/2 லட்சம் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதித்து இருப்பதால் அரசு அலுவலகம் எதுவும் இயங்கவில்லை. தாலுகா அலுவலக ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தை இழுத்து மூடி சாவியை உதவி கலெக்டர் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். அரசு போக்குவரத்து கழக ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பஸ்களும் ஓடவில்லை.

கருணை மனுவை மறுபரிசீலனை செய்ய சுப்ரீம்கோர்ட் மறுப்பு: தீவிரவாதி புல்லருக்கு தூக்கு தண்டனை உறுதி

Posted: 15 Aug 2013 01:52 AM PDT

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த காலிஸ்தான் தீவிரவாதி தேவேந்தர்சிங் புல்லர். 1991–ம் ஆண்டு பஞ்சாப் போலீஸ் சூப்பிரண்டு சுமேத் சிங் சைனி கொலை மற்றும் 1993–ம் ஆண்டு டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் புல்லருக்கு கடந்த 2001–ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25–ந்தேதி தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 1993–ல் டெல்லியில் இளைஞர் காங்கிரஸ் தலைவர் பிட்டாவை கொலை செய்யும் நோக்கத்தில் குண்டு வைக்கப்பட்டது. இதில் அவர் காயங்களுடன் உயிர் தப்பினார். 9 போலீசார் பலியானார்கள். தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்ட மனுவை கடந்த 2002–ம் ஆண்டு மார்ச் மாதம் 26–ந்தேதி தள்ளுபடி செய்தது. அதன் பிறகு அவர்

மும்பை கடலில் மூழ்கிய நீர்மூழ்கி கப்பலின் உடைந்த பாகங்களை கண்டுபிடித்தனர்: 18 வீரர்கள் உடல்கள் மீட்கப்படுமா?

Posted: 15 Aug 2013 01:20 AM PDT

மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நீர் மூழ்கி கப்பலான ஐ.என்.எஸ். சிந்து ரக்சக் நேற்று அதிகாலை வெடித்து சிதறியது. அதில் இருந்த 18 கடற்படை வீரர்கள் பலியாகி விட்டனர். அவர்களது உடலை தேடும் பணி நடந்து வருகிறது. நீர் மூழ்கிக் கப்பலில் எப்படி வெடி விபத்து ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுபற்றி ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணையை தொடங்கி உள்ளனர். போர்க் கருவிகள் இருந்த அறையில் வெடி விபத்து


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™