Tamil Star |
- இஸ்லாம் ஒரு நாடு, யூதர்கள் ஏசுவை வழிபட்டனர்! பேட்டியில் உளறிய பெண்
- இளவரசர் சார்ள்ஸின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகின்றனர்
- சர்ச்சைக்குரிய தொழிற்சாலையினை இடமாற்ற உத்தரவு
- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம்.
- காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியை ராஜபட்ச ஏற்பதற்கு வைகோ எதிர்ப்பு
- இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் (வீடியோ இணைப்பு)
- பள்ளிவாசல் பதாதையை அகற்ற முயற்சி; பொலிஸார் – பொதுமக்கள் முறுகல்
- ராஜபக்ச ஒரு திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி; சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ
- இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க விசேட குழு
- “மஹிந்த அரசு பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை தர தொடர்ந்தும் பின்னடிக்குமானால் போராடுவோம்
| இஸ்லாம் ஒரு நாடு, யூதர்கள் ஏசுவை வழிபட்டனர்! பேட்டியில் உளறிய பெண் Posted: 12 Aug 2013 06:28 PM PDT இஸ்லாம் ஒரு நாடு, யூதர்கள் ஏசுவை வழிபட்டனர் என தொலைக்காட்சி பேட்டியில் உளறிய பெண் வேட்பாளரால் பரபரப்பு ஏற்பட்டது. அவுஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற செப்டம்பர் மாதம் 7ம் திகதி நடைபெற உள்ளது. இதில் குவின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ள தொகுதி ஒன்றில் ஒன் நேஷன் கட்சி சார்பில் ஸ்டெபானி பானிஸ்டர்(வயது 27) என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்நிலையில் அவரிடம் தொலைக்காட்சி சேனல் ஒன்று பேட்டி கண்டது. அதில், இஸ்லாம் ஒரு நாடு என்ற முறையில் அதை நான் […] |
| இளவரசர் சார்ள்ஸின் பாதுகாப்பு அதிகாரிகள் இலங்கை வருகின்றனர் Posted: 12 Aug 2013 06:22 PM PDT இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளில் தலைவர்கள் கலந்து கொள்ளும் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ள பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் உட்பட ஏனைய பிரதிநிதிகளின் பாதுகாப்பு தொடர்பாக ஆராய அந்த நாட்டின் விசேட குழுவொன்று இலங்கை வரவுள்ளது. பிரித்தானிய மகாராணி எலிசபெத் சார்பில் இளவரசர் சார்ள்ஸ் மாநாட்டில் கலந்து கொள்கிறார். அவர் இலங்கையில் தங்கியிருக்கும் இடத்தின் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு பிரதிநிதிகள் ஆய்வுக்கு உட்படுத்த உள்ளனர். அதேவேளை மாநாட்டில் கலந்து கொள்ளும் ஏனைய […] |
| சர்ச்சைக்குரிய தொழிற்சாலையினை இடமாற்ற உத்தரவு Posted: 12 Aug 2013 06:18 PM PDT வெலிவேரிய பிரதேசத்திலுள்ள சர்ச்சைக்குரிய தொழிற்சாலையினை இடமாற்றுமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்திலேயே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். அத்துடன் புதிதாக அமைக்கப்படும் அனைத்து தொழிற்சாலைகளும் முதலீட்டு சபையின் வலயத்திற்குள்ளேயே அமைக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார். |
| பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம். Posted: 12 Aug 2013 06:16 PM PDT எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுப்போம் என்று மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி தெரிவித்தார். உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள, ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி, கொச்சியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஏ.கே.அந்தோனியிடம் எல்லையில் நிலவும் சூழ்நிலை குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில், அவ்வப்போது ஏற்படும் நிலைமைகளுக்கு ஏற்ப, எதிர்த் தரப்புக்கு தகுந்த பதிலடி கொடுக்க, பாதுகாப்பு படையினருக்கு சுதந்திரம் […] |
| காமன்வெல்த் நாடுகளின் தலைமைப் பதவியை ராஜபட்ச ஏற்பதற்கு வைகோ எதிர்ப்பு Posted: 12 Aug 2013 06:13 PM PDT இனப் படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்ச காமன்வெல்த் நாடுகளின் தலைவர் பதவியை ஏற்பதற்கு மதிமுக பொதுச் செயலர் வைகோ எதிர்ப்பு தெரிவித்தார். திருச்செங்கோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் தேர்தல் நிதியளிப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியது: சில நேரங்களில் எதிர்பார்ப்பது நடப்பதில்லை. சில சமயங்களில் எதிர்பாராதது நடந்து விடுகிறது. இவ்வளவு நிதி நான் எதிர்பாராதது. பொதுமக்களிடம் இருந்து திரட்டப்பட்ட இந்த நிதியை நேர்மைக்கும், பொது வா ழ்வில் தூய்மைக்கும் நமக்குக் கிடைத்த அங்கீகாரம் […] |
| இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கி கப்பல் (வீடியோ இணைப்பு) Posted: 12 Aug 2013 07:22 AM PDT இந்தியாவின் முதல் உள்நாட்டு விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ் விக்ரந்த் என்ற போர்க் கப்பல், இன்று கொச்சி கடற்படைத் தளத்தில் முறைப்படி இணைக்கப்பட்டு செயல்பட தொடங்கியது. முதன் முதலாக இந்திய நிபுணர்களால் ஐ.என்.எஸ்.விக்ரந்த் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்திய கடற்படை இயக்குனரகம் வடிவமைத்த இந்த போர்க்கப்பலை கட்டும் பணி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கப்பல் கட்டுமான தளத்தில் கடந்த 2006–ம் ஆண்டு தொடங்கியது. 260 மீற்றர் நீளமும், 60 மீற்றர் அகலமும் […] |
| பள்ளிவாசல் பதாதையை அகற்ற முயற்சி; பொலிஸார் – பொதுமக்கள் முறுகல் Posted: 12 Aug 2013 07:18 AM PDT கண்டி – குருநாகல் பிரதான வீதியின் மாவத்தகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள இரு பள்ளிவாசல்களுக்கு முன்னால் 'அமைதியாகச் செல்லவும்' என்று போடப்பட்டுள்ள விளம்பரப் பதாஇயை பொலிஸார் இன்று முற்பகல் அகற்ற முற்பட்டதை அடுத்து கிராமவாசிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. பொது பல சேனாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டமொன்று குருநாகல் நகரில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்த ஞானசார தேரர் கண்டி – குருநாகல் […] |
| ராஜபக்ச ஒரு திருத்தவே முடியாத சிங்களத் தீவிரவாதி; சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூ Posted: 12 Aug 2013 06:48 AM PDT சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச ஒரு சிங்களத் தீவிரவாதி, அவரை திருத்தவே முடியாது என சிங்கப்பூரின் முதல் பிரதமரும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ தெரிவித்துள்ளார்."லீ குவான் யூ உடனான உரையாடல்கள்" என்ற தலைப்பில், லொஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த பேராசிரியர் ரொம் பிளேட், லீயிடம் செவ்வி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். முன்னணி பத்திரிகையாளரான பேராசிரியர் ரொம் பிளேட், எழுதியுள்ள இந்த நூலில்தான் மகிந்த ராஜபக்ச குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். […] |
| இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தரத்தைப் பரிசோதிக்க விசேட குழு Posted: 12 Aug 2013 06:46 AM PDT வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உணவு மற்றும் மருந்து பொருட்களின் தன்மை குறித்து ஆய்வு விசேட குழு அமைப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால்மா வகைகள் பல தற்காலிகமாக சுகாதார அமைச்சு தடை விதித்துள்ளது. எவ்வாறாயினும் வெளிநாடுகளிலிருந்து உணவுப் பொருட்கள் மட்டும் இறக்குமதி செய்யப்படவில்லை எனவும் ஏனைய பொருட்களின் தன்மை குறித்தும் கவனம் செலுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இந் நடவடிக்கையில் சுகாதார அமைச்சு, சந்தை மற்றும் நுகர்வோர், சுற்றாடல்,விவசாய அமைச்சு […] |
| “மஹிந்த அரசு பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை தர தொடர்ந்தும் பின்னடிக்குமானால் போராடுவோம் Posted: 12 Aug 2013 06:35 AM PDT மஹிந்த அரசு 'எமது பிரச்சினைக்கு சுமூகமான தீர்வொன்றை தர தொடர்ந்தும் பின்னடிக்குமானால் போராடுவதை தவிர வேறு வழியில்லை' என கூட்டமைப்பின் வடமாகாண சபைக்கான முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசருமான சீ.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று கிளிநொச்சியில் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிடும் கூட்டமைப்பு வேடபாளர்களிற்காக நடத்தப்பட்ட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு அவர் தெரிவித்தார். 'முதலில் மஹிந்த அரசுடன் பேசிப்பார்ப்போம். அது சரிப்பட்டு வரவில்லையானால் சர்வதேசத்திடம் இந்தியாவிடம் முறைப்பாடு செய்வோம். அவர்களுடாக தீர்வை பெற முற்படுவோம். […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |