Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


மும்பையில் ஆன்லைன் மோசடி: பெண் டாக்டரின் வங்கி கணக்கில் ரூ.1.2 லட்சம் நூதன கொள்ளை

Posted: 12 Aug 2013 11:00 PM PDT

மும்பையில் 'ஆன் லைன்' மூலம் பெண் டாக்டரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.1.2 லட்சம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. மும்பையில் போலி ஏ.டி.எம்.கார்டுகளை பயன்படுத்தி ஏ.டி.எம். மையங்களில் போலீஸ்காரர்களின் சம்பளப் பணமும், வாடிக்கையாளர்களின் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது 'ஆன்லைன்' மூலம் வங்கிக்கணக்கில் இருந்து நூதன முறையில் பணம் திருடப்பட்டு உள்ளது.

தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு

Posted: 12 Aug 2013 10:11 PM PDT

இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் நாளை மறுநாள் டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். டெல்லியில் நடக்கும் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ–தொய்பா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலை தாக்குதலில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது.

ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை: கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டி அறிவிப்பு

Posted: 12 Aug 2013 09:23 PM PDT

கேரளாவில் நடந்த சோலார் பேனல் மெகா மோசடியில் முதல்–மந்திரி உம்மன் சாண்டிக்கு தொடர்பு இருப்பதாகவும், எனவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தின் உச்சக்கட்டமாக நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள தலைமை செயலகத்தை ஒரு லட்சம் கம்யூனிஸ்டு தொண்டர்கள் முற்றுகையிட்டனர். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் பிரகாஷ் காரத், முன்னாள் பிரதமர் தேவகவுடா, எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன்

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்

Posted: 12 Aug 2013 08:55 PM PDT

இந்திய எல்லையில் ரோந்துசென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுட்டுக் கொன்றதையடுத்து ஜம்மு காஷ்மீர் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. நேற்று இரவு பூஞ்ச் மாவட்டத்தில் இந்திய ராணுவ வீரர்களை குறிவைத்து 11 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ராக்கெட் வெடிகுண்டுகளையும் வீசி பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவமும் எதிர்தாக்குதல் நடத்தியது. ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற

நீதிமன்ற விசாரணையை இந்தியில் நடத்த திகார் கைதிகள் வேண்டுகோள்

Posted: 12 Aug 2013 08:47 PM PDT

டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடத்தப்படும் விசாரணைகள் ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியில் இருக்க வேண்டும் என திகார் சிறைக் கைதிகள் சார்பாக சிறை நிர்வாகம் தலைமை நீதிபதியிடம் மனு அளித்துள்ளது. இந்த வேண்டுகோள் தேசிய மனித உரிமைக் கழகத்தின் பொதுச்செயலரின் கவனத்திற்கும் அனுப்பப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த கோரிக்கை நீண்ட காலமாக திகார் சிறைக் கைதிகளிடம், குறிப்பாக இளைஞர்களிடம் இருந்து வருவதாகத் தெரிகின்றது. ஆங்கிலத்தில்

தங்கம்-வெள்ளி இறக்குமதி வரி உயர்த்தப்படும்: சிதம்பரம் தகவல்

Posted: 12 Aug 2013 08:22 PM PDT

அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு குறைவதால் பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுக்கவும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை கட்டுப்படுத்தும் வகையிலும் நடப்பு கணக்கு பற்றாக்குறை உயர்வை சமாளிக்க மத்திய அரசு எடுக்கும் உறுதியான நடவடிக்கைகளை விளக்கி மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் நேற்று பாராளுமன்றத்தில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:- டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு குறைவதால், இந்திய பொருளாதார

காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சிக்கு உத்தரவிட மாயாவதி கோரிக்கை

Posted: 12 Aug 2013 08:10 PM PDT

காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் கடந்த 9-ந்தேதி ரம்ஜான் தொழுகைக்கு பின் இருதரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் பின் வன்முறையாக மாறியது. இதைத்தொடர்ந்து ராணுவ வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வன்முறையை அடக்கியதோடு, அங்கு ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி பாராளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் கூறும்போது, '' கிஸ்த்வார் வன்முறை கடும் கண்டனத்துக்குரியது. அங்கு மாநில அரசு முதல் நாளே

ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்ற அரியானா முதல் மந்திரி மகன் இடைக்கால ஜாமினில் விடுதலை

Posted: 12 Aug 2013 03:36 PM PDT

அரியானா மாநிலத்தில் லோக் தளம் கட்சி தலைவர் ஓம்பிரகாஷ் சவுதாலா முதல்-மந்திரியாக இருந்த போது கடந்த 2000-ம் ஆண்டில் 3 ஆயிரத்து 206 தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். போலி ஆவணங்கள் தயாரித்து, லட்சக்கணக்கில் பணம் பெற்றுக் கொண்டு 3 ஆயிரத்து 206 ஆசிரியர்களும் நியமனம்

குற்றவாளி என்று கண்டறியப்பட்டால் ராபர்ட் வதேராவை தண்டிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி. சொல்கிறார்

Posted: 12 Aug 2013 02:24 PM PDT

அரியானா மாநிலம் குர்கான் அருகே ஷிகோபுர் என்ற இடத்தில் அரியானா மாநில அரசுக்கு சொந்தமான 3 1/2 ஏக்கர் நிலம், டி.எல்.எப். என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்துக்கு விற்கப்பட்டது. ரூ.250 கோடி மதிப்புள்ள அந்த நிலம், ரூ.7 1/2 கோடிக்கு விற்கப்பட்டது

உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி விவாதிக்க முதல் மந்திரிகள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்: பிரதமருக்கு மோடி கடிதம்

Posted: 12 Aug 2013 01:28 PM PDT

உணவு பாதுகாப்பு சட்டம் பற்றி விவாதிக்க அனைத்து மாநில முதல் மந்திரிகள் கூட்டத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஏற்பாடு செய்ய வேண்டும் என குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார். இதுதொடர்பாக பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் மோடி தெரிவித்துள்ளதாவது

டெல்லியில் இன்று அனைத்து கட்சி கூட்டம்: உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு ஏற்பாடு

Posted: 12 Aug 2013 01:10 PM PDT

உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றுவதற்காக, டெல்லியில் இன்று அனைத்து கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்துகிறது. தற்போது, பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. மொத்தம் 16 வேலை நாட்கள் மட்டுமே இது இயங்கும். ஆனால், இந்த தொடரில் 44 மசோதாக்களை

வேலைக்கார சிறுவனுடன் ஓரினச் சேர்க்கை : கைதான ம.பி. முன்னாள் மந்திரி ஜாமினில் விடுதலை

Posted: 12 Aug 2013 12:54 PM PDT

மத்திய பிரதேச மாநில நிதி அமைச்சராக தொடர்ந்து 9 ஆண்டு காலம் பதவி வகித்தவர் ராகவ்ஜி (79). ஆண் பணியாளருடன் பாலியல் ரீதியாக தவறான தொடர்பு வைத்திருந்ததாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மத்திய பிரதேச நிதி மந்திரி ராகவ்ஜி தனது பதவியை

ஜம்முவில் இருந்து நாளை முதல் மீண்டும் அமர்நாத் யாத்திரை தொடக்கம்

Posted: 12 Aug 2013 10:18 AM PDT

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, கலவரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்முவில் இருந்து தெற்கு காஷ்மீர் பகுதியில் உள்ள இமயமலை

கேரள மீனவர்களை கொன்ற இத்தாலிய கடற்படை வீரர்கள் வாக்குமூலம் அளிக்க மறுப்பு

Posted: 12 Aug 2013 09:24 AM PDT

கடந்த 2012-ம் ஆண்டு அரபிக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அஜெஷ் பிங்கி, ஜெலெஸ்டின் என்ற இரு கேரள மீனவர்களை சிங்கப்பூரிலிருந்து வந்த இத்தாலிய கப்பலின் கடற்படை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

பதட்டமான சூழ்நிலையில் இந்தியா-பாகிஸ்தான் எல்லை பேச்சுவார்த்தை

Posted: 12 Aug 2013 08:54 AM PDT

இந்திய எல்லையில் ரோந்துசென்ற 5 வீரர்களை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து எல்லையில் தொடர்ந்து இரு தரப்பு ராணுவமும் துப்பாக்கி சூடு நடத்தி வருகிறது. போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடிக்கடி மீறும் பாகிஸ்தான் படையினர், இந்திய நிலைகளை தாக்கி வருவதால் அமைதி பேச்சுவார்த்தையை தொடரக்கூடாது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த பதட்டமான

எல்லையில் அத்துமீறும் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: அந்தோணி

Posted: 12 Aug 2013 06:56 AM PDT

கேரள மாநிலம் கொச்சியில் இன்று பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, சொந்தமாக நமது நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விக்ராந்த் என்ற முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து பேசினார்.

வரும் பாராளுமன்ற தேர்தலில் நாட்டின் பெருமை, கவுரவத்தை பாதுகாக்கவேண்டும்: வருண் காந்தி

Posted: 12 Aug 2013 05:39 AM PDT

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் வருண் காந்தி மேற்கு வங்கக்த்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தலைநகர் கொல்கத்தாவில் கட்சியின் தொண்டர்களிடையே இன்று வருண் காந்தி பேசினார்.

1990-ம் ஆண்டு காஷ்மீர் பண்டிட்டுகள் வெளியேறியதைப்போல் இப்போது நடக்க விடமாட்டோம்: சிதம்பரம்

Posted: 12 Aug 2013 03:47 AM PDT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக இரு பிரிவினரிடையே இன மோதல்கள் நடந்து வருகின்றன. அங்குள்ள 6 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடரும்

பஞ்சாபில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: 6 பேர் பலி-31 பேர் காயம்

Posted: 12 Aug 2013 03:35 AM PDT

பஞ்சாப் மாநிலம் லூதியானா-மோகா தேசிய நெடுஞ்சாலையில் மோகா நகரம் நோக்கி இன்று காலை ஒரு பயணிகள் பஸ் சென்றுகொண்டிருந்தது. அதேசமயம் எதிரே சாக்குமூட்டைகள் ஏற்றிகொண்டு ஒரு லாரி வந்தது. இந்த இரு வாகனங்களும் ஒன்றையொன்று கடந்தபோது, நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. மோதிய வேகத்தில் நிலைகுலைந்த பஸ், மற்றொரு மினி லாரி மீது பயங்கரமாக மோதியது.

இஷ்ரத் என்கவுண்டர் வழக்கு: பாண்டே முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்தது

Posted: 12 Aug 2013 03:13 AM PDT

குஜராத் மாநிலத்தில் 2004-ம் ஆண்டு கல்லூரி மாணவி இஷ்ரத் ஜகான் உள்ளிட்ட 4 பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டது தொடர்பாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இஷ்ரத் ஜகான் போலி என்கவுண்டரில் கொல்லப்பட்டதாக கூறியிருந்தது. சம்பவம் நடந்த போது அகமதாபாத் இணை கமிஷனராக இருந்த மூத்த


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™