Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பார்லிமென்டின் இரு சபைகளிலும் எம்.பி.,க்கள் ரகளை: முதல் நாளிலேயே மோதல் முற்றியதால் சபை ஒத்திவைப்பு

Posted:

பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் நேற்று கூடிய முதல் நாளிலேயே, தெலுங்கானா மற்றும் பிற தனி மாநில கோரிக்கைகளால், இரு சபைகளிலும் கடும் அமளி ஏற்பட்டது. இதனால், சபைகள், நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டன.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், திட்டமிட்டபடி நேற்று துவங்கியது. காலையில், லோக்சபா கூடியது முதலே, கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. ஆந்திராவைச் சேர்ந்த, காங்கிரஸ் எம்.பி.,க்களான, லகடபதி ராஜகோபால், பாப்பி ராஜு, மாகுந்த சீனிவாச ரெட்டி ஆகியோர், சபையின் நடுப்பகுதிக்கு வந்து, "ஆந்திராவை பிரிக்கக் கூடாது... தெலுங்கானாவை ஏற்க முடியாது...' என, கோஷமிட்டனர். ...

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் தேவையில்லை: சமாஜ்வாதி அறிவிப்பு

Posted:

புதுடில்லி: ஐ.ஏ.எஸ்., பெண் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து, விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசு உத்தரவிட்டதால், உ.பி., மாநில ஆளும் கட்சியான சமாஜ்வாதி, எரிச்சலடைந்துள்ளது.
"உ.பி.,யில் உள்ள, அனைத்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளையும், மத்திய அரசு வாபஸ் பெறலாம். ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சேவை, எங்களுக்கு தேவையில்லை. நாங்களாகவே, தனியாக அதிகாரிகளை நியமித்துக் கொள்வோம்' என, சமாஜ்வாதி கட்சி, மிரட்டல் விடுத்துள்ளது.
மாவட்ட பெண் துணை கலெக்டர்:
உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்கு, கிரேட்டர் நொய்டா மாவட்ட, துணை ...

24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: ராமதாஸ், அன்புமணிக்கு தேவையில்லை

Posted:

சென்னை: "பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணிக்கு, 24 மணி நேர, போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை; அவர்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை' என, சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., தலைவர் கோ.க.மணி, தாக்கல் செய்த மனுவில், "எங்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், இளைஞர் அணி தலைவர் அன்புமணிக்கு, போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அவர்களுக்கு, போதிய பாதுகாப்பு வழங்க உத்தரவிட வேண்டும்' என, கூறியுள்ளார். இம்மனுவை, நீதிபதி சசிதரன் விசாரித்தார். மனுவுக்கு, போலீஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: கடந்த, 2011, மே மாதம், மாநில ...

கொள்ளிடம் ஆற்றில் விடப்படும் தண்ணீர்: கடலில் வீணாகும் என விவசாயிகள் கண்ணீர்

Posted:

திருச்சி: "கொள்ளிடம் ஆற்றில் அதிகளவு திறந்து விடப்பட்டுள்ள தண்ணீரால், விவசாயத்துக்கு எவ்வித பயனும் இல்லாமல், கடலில் கலந்து வீணாகும்' என, விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
மேட்டூர் அணை பாதுகாப்பு கருதி, 1.20 லட்சம் கன அடி நீர், காவிரியில் வெளியேற்றப்படுகிறது. நேற்று மாலை, நிலவரப்படி, திருச்சி முக்கொம்பு அணைக்கு, 50 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக நீர்வரத்து உள்ளது. இதுகுறித்து பொதுப்பணித் துறையினரிடம் கேட்டபோது, "முக்கொம்பு அணையிலிருந்து காவிரி ஆற்றில், வினாடிக்கு, 25 ஆயிரம் கன அடி நீரும், எட்டாண்டுகளுக்கு பின், கொள்ளிடம் ஆற்றில், வினாடிக்கு, 27 ஆயிரம் கன அடி ...

மக்களுக்கு செய்யும் துரோகம் தி.மு.க.,: முதல்வர் ஜெ., ஆவேசம்

Posted:

சென்னை: ""தமிழக மக்களுக்கு எதிரான, தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை, தி.மு.க., ஆதரிப்பது, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கு இழைக்கும் துரோகம்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இரட்டை நிலைப்பாடு:
இதுகுறித்து அவரது அறிக்கை: தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை மத்திய அரசு, லோக்சபாவில் அறிமுகப்படுத்திய போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., தற்போது தன் நிலையை மாற்றிக் கொண்டு, இந்த தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை ஆதரிக்கப் போவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் கருணாநிதியின் இரட்டை நிலைப்பாடு நிரூபணமாகியுள்ளது. "இலங்கை தமிழர்களுக்கு ...

அன்னிய நேரடி முதலீடு ஆபத்தின் ஆரம்ப கட்டம்: கருணாநிதி

Posted:

சென்னை: "அன்னிய நேரடி முதலீடு, ஆபத்தின் ஆரம்பக் கட்டம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்தியாவில் அங்காடிகளைத் திறக்க வரும் அன்னிய வர்த்தகக் கம்பெனிகள், தங்களது முதலீட்டில், 30 சதவீதத்தை, அந்த குறிப்பிட்ட சில்லரை வர்த்தகத்தின் இறுதிக் கட்டப் பணிகளுக்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்ய வேண்டும் என்பது ஒரு முக்கியமான நிபந்தனை. அடுத்து, அன்னிய சில்லரை வர்த்தக கம்பெனிகள் விற்பனை செய்கிற பொருட்களில், 30 சதவீதம் உள்நாட்டு, சிறு, குறு தொழிற்சாலைகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டதாக ...

"ஆல்கஹால் கலக்காத "பெர்பியூம்' பயன்படுத்துகிறேன்!': விஜயகாந்த் பேச்சு

Posted:

சென்னை: ""எனக்கும் மெக்காவிற்கும் நிறைய தொடர்பு உண்டு; அங்கிருந்து வாங்கி வரப்பட்ட, ஆல்கஹால் கலக்காத, "பெர்பியூம்' தான் பயன்படுத்துகிறேன்; பேரீச்சம் பழம் சாப்பிடுகிறேன்,'' என, இப்தார் நோன்பு திறப்பு விழாவில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பேசினார்.
சென்னை கோயம்பேடு தே.மு.தி.க., தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்த, இப்தார் நோன்பு திறப்பு விழாவில் பங்கேற்று, விஜயகாந்த் பேசியதாவது: இப்தார் நோன்பு பற்றி நிறைய பேசவேண்டும். இஸ்லாமியர்களுக்கு, ஐந்து விதமான விஷயங்கள் உண்டு. அதில் நோன்பு திறப்பது, ஒரு முக்கியமான விஷயம். சிறு வயதாக இருக்கும்போது, மதுரையில் ...

ஆறுகளில் மணல் அள்ளக்கூடாது: பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு

Posted:

புதுடில்லி: "முறையான உரிமம் பெறாமல் அல்லது சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், எந்த ஆற்றிலும் மணல் அள்ளக் கூடாது. இந்த உத்தரவு, நாடு முழுவதற்கும் பொருந்தும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம், அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேசிய பசுமை தீர்ப்பாய வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு: ஆற்றுப் படுகைகளில், முறையான உரிமம் பெறாமல், சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறாமல், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகின்றன. மணல் கடத்தல்காரர்கள் மீது, நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அச்சுறுத்தல்களுக்கு ஆளாகின்றனர். உ.பி.,யில், ...

ராணுவ செலவை இந்தியா குறைக்க வேண்டும்: நவாஸ் ஷெரீப் வேண்டுகோள்

Posted:

ஜெட்டா: ""ஆயுதப் போட்டியைத் தவிர்க்க, இந்தியாவும், பாகிஸ்தானும் ராணுவ செலவை குறைக்க வேண்டும்,''என, பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.சவுதி அரேபியாவில் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் பிரதமர், நவாஸ் ஷெரீப், நிருபர்களிடம் கூறியதாவது: ஆயுதப் போட்டி இருக்கும் வரை, அமைதிக்கு வழியில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். எனவே, இந்தியாவும், பாகிஸ்தானும், ராணுவ செலவை கணிசமாகக் குறைக்க வேண்டும். போரினால், பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான். காஷ்மீர் விவகாரத்தில், அனைத்து கட்சிகளின் விரிவான ஆலோசனைக்கு பிறகு தான், ஒரு முடிவு ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™