Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு: அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Posted: 05 Aug 2013 02:25 PM PDT

சென்னை

வடசென்னையில் நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

குழாய்களில் கசிவு

வடசென்னை பகுதியில் சில இடங்களில் நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு காணப்பட்டது. இதுகுறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த வி.பி.கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார்.

டி.ஜி.பி. விவகாரம்: காவல் துறைக்கு இழைக்கப்பட்ட அவமானம்; கருணாநிதி

Posted: 05 Aug 2013 02:20 PM PDT

சென்னை

திருச்சி வந்த பிரதமர் மன்மோகன்சிங்கை வரவேற்க போலீஸ் டி.ஜி.பி.க்கு அனுமதி மறுக்கப்பட்டது, தமிழகத்திற்கும், காவல் துறைக்கும் இழைக்கப்பட்ட அவமானம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி–பதில் வடிவிலான அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

நிபந்தனை கிடையாது

கேள்வி:–இந்தியாவில் கடை திறக்கும் அன்னியருக்கு எந்த நிபந்தனையும் கிடையாது என்று இந்திய அரசு உறுதி அளித்திருப்பது சரியா?.

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் 3–வது டெஸ்ட் டிராவில் முடிந்தது

Posted: 05 Aug 2013 02:01 PM PDT

மான்செஸ்டர்

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான ஆஷஸ் போட்டி தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.

3–வது டெஸ்ட்

இங்கிலாந்து–ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையிலான ஆஷஸ் தொடரின் 3–வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் நடந்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 527 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 4–வது நாளில் முதல் இன்னிங்சில் 368 ரன்கள் சேர்த்து ஆல்–அவுட் ஆனது.

உலக நீச்சல் போட்டி: அமெரிக்க வீராங்கனை மிஸ்சி பிராங்ளின் 6 தங்கம் வென்று உலக சாதனை

Posted: 05 Aug 2013 01:59 PM PDT

பார்சிலோனா

உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை மிஸ்சி பிராங்ளின் 6 தங்கப்பதக்கம் வென்று புதிய உலக சாதனை படைத்தார்.

உலக நீச்சல் போட்டி

உலக பேட்மிண்டன் போட்டி தொடக்க ஆட்டத்தில் அஜய் ஜெயராம், காஷ்யாப் வெற்றி

Posted: 05 Aug 2013 01:56 PM PDT

குவாங்சவ்

உலக பேட்மிண்டன் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் இந்திய வீரர் அஜய் ஜெயராம், காஷ்யாப் ஆகியோர் வெற்றி கண்டனர்.

உலக பேட்மிண்டன்

20–வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் குவாங்சவ் நகரில் நேற்று தொடங்கியது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்று ஆட்டத்தில் உலகின் 14–ம் நிலை வீரர் அஜய் ஜெயராம் (இந்தியா), 12–ம் நிலை விரர் விங் கி வாங்கை (ஹாங்காங்) எதிர்கொண்டார்.

அமெரிக்க டென்னிஸ் அஸரென்காவை வீழ்த்தி ஸ்டோசுர் ‘சாம்பியன்’

Posted: 05 Aug 2013 01:51 PM PDT

கலிபோர்னியா

கார்ல்ஸ்பாத் ஓபன் டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது.

இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் உலகின் 2–ம் நிலை வீராங்கனை விக்டோரியா அஸரென்கா (பெலாரஸ்), 5–ம் நிலை வீராங்கனை சமந்தா ஸ்டோசுரை (ஆஸ்திரேலியா) சந்தித்தார்.

எனக்கு வந்தது போல் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது அஜித் சண்டிலா வேதனை

Posted: 05 Aug 2013 01:41 PM PDT

பரிதாபாத்

எனக்கு வந்தது போல் யாருக்கும் பாதிப்பு வரக்கூடாது என்று ஐ.பி.எல்.சூதாட்டத்தில் சிக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் அஜித் சண்டிலா கூறினார்.

அஜித் சண்டிலா வேதனை

6–வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

மாணவர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் நீதிபதி சிங்காரவேலு உத்தரவு

Posted: 05 Aug 2013 01:24 PM PDT

சென்னை,

பள்ளிகளுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை அந்த பள்ளிக்கூடங்களில் பெற்றோர் மாணவர்கள் அறியும் வண்ணம் வெளிப்படையாக போர்டில் ஒட்டவேண்டும் என்று நீதிபதி சிங்காவேலு தெரிவித்தார்.

ஐ.பி.எல். சூதாட்ட விசாரணை கமிஷன் விவகாரம்: மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து கிரிக்கெட் வாரியம் அப்பீல்

Posted: 05 Aug 2013 01:05 PM PDT

புதுடெல்லி

ஐ.பி.எல். சூதாட்டம் குறித்து விசாரித்த விசாரணை கமிஷன் அளித்த அறிக்கை செல்லாது என்று மும்பை ஐகோர்ட்டு அறிவித்த தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளது.

ஐ.பி.எல். சூதாட்ட விசாரணை கமிஷன்

பள்ளி விளையாட்டு விழா

Posted: 05 Aug 2013 01:00 PM PDT

சென்னை



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™