Tamil News | Online Tamil News |
- அளவு கடந்த உபரி நீர் வருகையால் மேட்டூர் அணை நிரம்பியது: 8 ஆண்டுகளுக்கு பின் வெள்ள பாதிப்பு அதிகம்
- புது மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேறுமா?
- பெண் அதிகாரிக்கு சோனியா ஆதரவு: மத்திய அரசுக்கு பதிலடி தர சமாஜ்வாதி தயார்
- மகளின் காதலன் சந்துரு நடத்தை சரியில்லை: இயக்குனர் சேரன் குமுறல்
- வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக கனவு: குடலை வெளியே எடுத்த நேபாள இளைஞர்
- ஜூலையில் பீர் விற்பனையில் "தள்ளாட்டம்': மேட்டூர் அணை திறந்ததால் இனி சீராகும்
- தமிழக டி.ஜி.பி.,யை தடுத்தது அநாகரிக செயல்: விசாரணை கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம்
- ஊதிய உயர்வு; உண்மை என்ன: கருணாநிதி கேள்வி
- அ.தி.மு.க., பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள்
- மாநிலங்களை பிரிக்கும்படி கோரிக்கை வலுக்கிறது: நிஜமானால், மாநிலங்கள் எண்ணிக்கை 50 ஆகும்
| அளவு கடந்த உபரி நீர் வருகையால் மேட்டூர் அணை நிரம்பியது: 8 ஆண்டுகளுக்கு பின் வெள்ள பாதிப்பு அதிகம் Posted: மேட்டூர் அணை, 40வது முறையாக நேற்று, அதன் முழு கொள்ளளவும் நிரம்பியது. அணையில் இருந்து, வினாடிக்கு, 70 ஆயிரம் கன அடி உபரி நீர், காவிரியில் வெளியேற்றப்பட்டது.தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததால், கர்நாடகாவின் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பின. அதனால், கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அணைகள் வழிந்தன. வெள்ளம்: அங்கிருந்து உபரி நீர், தொடர்ச்சியாக, மேட்டூர் அணைக்கு வந்தது; வறட்சியின் கோரப்பிடியில் இருந்த மேட்டூர் அணை, பொங்கிப் பெருகும் வெள்ளமாக மாறியுள்ளது. மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று காலை, 118 அடியாகவும், நீர் இருப்பு இரவு, 90 டி.எம்.சி.,யாகவும் ... |
| புது மசோதாக்கள் பார்லிமென்டில் நிறைவேறுமா? Posted: புதுடில்லி: பரபரப்பான சூழ்நிலையில், பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர், இன்று துவங்குகிறது. தெலுங்கானா தனி மாநில விவகாரம், உணவு பாதுகாப்பு மசோதா உள்ளிட்ட பிரச்னைகளால், கூட்டத்தொடரில் அனல் பறக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அமைச்சர்கள் ராஜினாமா: கடந்த மே மாதம், 10ம் தேதி நிறைவடைந்த பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான சி.பி.ஐ., விசாரணையில், மத்திய சட்ட அமைச்சராக இருந்த, அஸ்வனி குமாரும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் தலையிட்டது குறித்த விவகாரத்தால், புயல் வீசியது. ரயில்வே வாரிய ... |
| பெண் அதிகாரிக்கு சோனியா ஆதரவு: மத்திய அரசுக்கு பதிலடி தர சமாஜ்வாதி தயார் Posted: புதுடில்லி: உத்தர பிரதேசத்தில், மணல் மாபியாக்களுக்கு எதிராக, நடவடிக்கை எடுத்த, பெண், ஐ.ஏ.எஸ்., அதிகாரி, "சஸ்பெண்ட்' செய்யப்பட்ட விவகாரத்தால், உணவு பாதுகாப்பு மசோதாவுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியா, பிரதமருக்கு கடிதம் எழுதியதால், சமாஜ்வாதி கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. இதனால், "உணவு பாதுகாப்பு மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற ஆதரவு தர மாட்டோம்' என, அந்த கட்சி அறிவித்துள்ளது. சமாஜ்வாதி கட்சி ஆட்சி: உ.பி.,யில், அகிலேஷ் யாதவ் தலைமையிலான, சமாஜ்வாதி கட்சி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ... |
| மகளின் காதலன் சந்துரு நடத்தை சரியில்லை: இயக்குனர் சேரன் குமுறல் Posted: சென்னை: ""என் மகளின் காதலன் என சொல்பவன், நடத்தையில் மோசமானவன்; பெண்களுடன் தகாத தொடர்பு வைத்துள்ளான். காதலை வைத்து, என்னிடம் பணம் பறிக்க பார்க்கின்றனர்,'' என, இயக்குனர் சேரன் தெரிவித்தார். திரைப்பட இயக்குனர் சேரனின் இளைய மகள், தாமினி. உதவி இயக்குனர் சந்துரு (எ) சந்திரசேகரனை காதலித்ததால் பிரச்னை ஏற்பட்டது. மிரட்டல்: கடந்த, 2ம் தேதி, திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து, புகார் அளித்த தாமினி, ""தந்தை சேரன், அடியாட்களை வைத்து என் காதலனை மிரட்டுகிறார்; என் காதலை தடுக்கிறார். போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்,'' என்றார். ... |
| வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக கனவு: குடலை வெளியே எடுத்த நேபாள இளைஞர் Posted: புதுடில்லி: டில்லியைச் சேர்ந்த இளைஞர் கனவில், வயிற்றில் குழந்தைகள் உள்ளதாகவும், அவை பசியால் துடிப்பதாகவும் தெரிந்ததை அடுத்து, தன் வயிற்றையே வெட்டி, குடலை வெளியே உருவியவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தூக்கத்தில் கனவு: கிழக்கு டில்லி பகுதியில், ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார், நேபாளத்தைச் சேர்ந்த, 27 வயது நபர். இரண்டு நாட்களுக்கு முன், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கனவு வந்துள்ளது. அதில், அந்த நபரின் வயிற்றில், மூன்று குழந்தைகளை யாரோ, கம்ப்யூட்டர் மூலம், வலி தெரியாமல், வைத்து விட்டதாகவும், அந்தக் ... |
| ஜூலையில் பீர் விற்பனையில் "தள்ளாட்டம்': மேட்டூர் அணை திறந்ததால் இனி சீராகும் Posted: டெல்டா மாவட்டங்களில் ஏற்பட்ட வறட்சியால், "டாஸ்மாக்' கடைகளில், சென்ற ஜூலை மாதத்தில், பீர் விற்பனை கணிசமாக குறைந்துள்ளது. தினமும் ரூ.67 கோடிக்கு விற்பனை: தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில், நாள்தோறும் சராசரியாக, 67 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்பனையாகின்றன. டாஸ்மாக் கடைகளில், உள்நாட்டில் தயாரிக்கப்படும் அயல்நாட்டு மது வகைகள் (ஐ.எம்.எப்.எல்.,) மற்றும் பீர் வகைகள், அரசு நிர்ணயம் செய்துள்ள விலையில் விற்கப்படுகின்றன. தஞ்சை, திருவாரூர், நாகை, திருச்சி உள்ளிட்ட, எட்டு மாவட்டங்களை உள்ளடக்கிய, காவிரி ... |
| தமிழக டி.ஜி.பி.,யை தடுத்தது அநாகரிக செயல்: விசாரணை கோரி பிரதமருக்கு ஜெ., கடிதம் Posted: சென்னை: திருச்சியில் பிரதமர் வந்த போது, வரவேற்கச் சென்ற தமிழக டி.ஜி.பி., தடுத்து நிறுத்தப்பட்டது குறித்து, விசாரணை நடத்த வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். திருமயம் விழா: இதுகுறித்த, அவரது கடிதம்: புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில், பெல் நிறுவனத்தின், "பவர் பிளான்ட் பைப்பிங்' பிரிவு மற்றும் பெல் உயர் அழுத்த கொதிகலன் ஆலையை துவக்கி வைக்க, இம்மாதம், 2ம் தேதி, திருச்சிக்கு வருகை தந்தீர். தமிழக, நிதி, போக்குவரத்து, காதி மற்றும் கிராம கைத்தொழில் துறை அமைச்சர்கள் மற்றும் தமிழக ... |
| ஊதிய உயர்வு; உண்மை என்ன: கருணாநிதி கேள்வி Posted: சென்னை: "ஊதிய உயர்வு விவகாரத்தில் பாராட்டிய சங்கங்கள், உண்மை நிலை தெரிந்ததும், அதிருப்தியடைந்து போராட்டத்தை அறிவித்து உள்ளன. தி.மு.க., ஆட்சி தான், அரசு அலுவலர்களுக்கு பொற்காலம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி தெரிவித்து உள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: கடந்த, 1989ல், தி.மு.க., மூன்றாவது முறையாக பொறுப்பேற்றதும், அரசு ஊழியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் மாற்றியமைக்கப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சியில், 2012ல், கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு பரிந்துரைப்படி, ஒரு சில அரசு ... |
| அ.தி.மு.க., பாசறை கூட்டத்தில் சீருடையுடன் பள்ளி மாணவர்கள் Posted: புதுக்கோட்டை: கல்வித் துறை அமைச்சர் பங்கேற்ற, அ.தி.மு.க., பாசறை ஆலோசனை கூட்டத்தில், அரசு பள்ளி மாணவ, மாணவியரை அழைத்து வந்து பங்கேற்க செய்த சம்பவம், பெற்றோரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டையில், அ.தி.மு.க., இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் ஆலோசனைக் கூட்டம், நேற்று நடந்தது. இதற்காக, நகர்மன்ற வளாகத்தில், பிரம்மாண்டமான பந்தல் போடப்பட்டுஇருந்தது. கூட்டத்துக்கு, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வைகைச் செல்வன் தலைமை தாங்கியதால், புதுக்கோட்டை சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியர், சீருடையுடன் ... |
| மாநிலங்களை பிரிக்கும்படி கோரிக்கை வலுக்கிறது: நிஜமானால், மாநிலங்கள் எண்ணிக்கை 50 ஆகும் Posted: புதுடில்லி: தனி தெலுங்கானா மாநிலம் அறிவிப்பை தொடர்ந்து, பல மாநிலங்களைப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றும் பட்சத்தில், எதிர்காலத்தில் இந்தியாவில் மாநிலங்களின் எண்ணிக்கை, 50 ஆக உயர்ந்துவிடும்.தனி தெலுங்கானா மாநிலம்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்குவதாக, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதன் காரணமாக, உ.பி., அசாம் உட்பட பல மாநிலங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. தெலுங்கானா பிரிப்பையே அமல்படுத்த முடியுமா என சந்தேகம் கொள்ளும் அளவுக்கு, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 05,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |