Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மின் உற்பத்தியில் தன்னிறைவை எட்டாத தமிழகம்: 55 ஆண்டுகளாகியும் பின்தங்கிய மின் வாரியம்

Posted:

தமிழக மின் வாரியம் துவங்கி, 55 ஆண்டுகள் ஆகிய நிலையில், மின் உற்பத்தியில், இன்னமும் தன்னிறைவு எட்டவில்லை; அதே நேரம், தமிழகத்தின் தனிநபர் மின் நுகர்வு ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே செல்வது, அதிகாரிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யவும், புதிய மின் திட்டங்களை உருவாக்கி, மின் உற்பத்தியில் தன்னிறைவு அடையவும், தமிழகத்தில், 1957ல், மின் வாரியம் அமைக்கப்பட்டது. அப்போது, தமிழகத்தின் மொத்த மின் உற்பத்தி நிறுவுதிறன், 256 மெகா வாட் ஆக இருந்தது.மாநிலம் முழுவதும், 89 துணை மின் நிலையங்கள், 3,773 டிரான்ஸ்பார்மர் இருந்தன. 4.30 லட்சம் மின் ...

உரத்த சிந்தனை: இது தான் இந்திய வீரமா?- ஆர்.நடராஜன் -

Posted:

இப்போது, அந்த மனிதர் அங்கே இருக்கிறாரா என்று தெரியவில்லை. முன்பு, சென்னை, வி.ஜி.பி., தங்க கடற்கரைக்குச் சென்றவர்களுக்கு, அவரை தெரிந்திருக்கும். 6 அடி உயரம்; நல்ல உடல் வாகு; பார்வையாளர்கள் அவரைத் தொட்டு பேசினாலும், கிள்ளினாலும், கிச்சுகிச்சு மூட்டினாலும் கொஞ்சமும் அசைய மாட்டார்; சிலை போல் அசையாமல் நிற்பார்.அவர் பணி ஓய்வு பெற்றிருந்தால், அந்த இடத்தில், நம் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோணியை நிறுத்தலாம். பகைநாடு, நம் வீரர்களைக் கொன்றிருக்கிறது; நாடே கொந்தளிக்கிறது. செத்தவன் கையில் வெற்றிலை பாக்கைக் கொடுத்தது போல், யாரோ எழுதிக் கொடுத்த நான்கைந்து ...

செய்யூர் அனல் மின் நிலையம் முடங்கும் அபாயம்: அனுமதி தராமல் இழுத்தடிப்பு

Posted:

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி கிடைக்காததால், செய்யூர் அனல் மின் நிலைய பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மத்திய அரசு,"அல்ட்ரா மெகா பவர் புராஜக்ட்' என்ற திட்டத்தின் கீழ், தனியார் பங்களிப்புடன், தமிழகம் - செய்யூர், குஜராத் - முந்த்ரா, ஆந்திரா - கிருஷ்ணாபட்டினம், மத்திய பிரதேசம் - சாசன், ஜார்க்கண்ட் - திலையா ஆகிய இடங்களில், மிக பெரிய அனல் மின் நிலையங்கள் அமைக்க முன் வந்தது.18 ஆயிரம் கோடி:தமிழகத்தில், காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூரில், 18 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 1,650 ஏக்கரில், 4,000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட, அனல் மின் ...

திருச்சியில் மோடி பொதுக்கூட்டம்: ஆன்-லைனில் பதிவு செய்யலாம்

Posted:

திருச்சியில் இம்மாதம், 26ம் தேதி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், பங்கேற்க, ஆன்-லைனில் முன் பதிவு செய்யும் முறையை, திங்கள்கிழமை, தமிழக பா.ஜ., அறிமுகம் செய்கிறது.குஜராத் முதல்வரும், லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ., பிரசார குழு தலைவருமான மோடி, தேர்தல் பிரசாரத்தை, ஐதராபாத்தில் கடந்த மாதம் துவங்கினார். அவரது பொதுக் கூட்டத்துக்கு, நுழைவு கட்டணமாக, ஐந்து ரூபாய் வசூலிக்கப்பட்டது. தமிழகத்தில் பிரசாரத்தை துவங்கும் வகையில், திருச்சியில் அவர் பங்கேற்கும் பொதுக்கூட்டம், இம்மாதம், 26ம் தேதி நடக்கிறது. இதற்கு நுழைவு கட்டணமாக, 10 ...

தி.மு.க., கூட்டணியில் முதலில் இடம் பெற பா.ம.க., துண்டு விரிப்பு?

Posted:

தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., முதலில் இடம் பெற, துண்டு விரித்துள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை, மணிமேகலையுடன் ஒப்பிட்டு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பேசியது மூலம், மீண்டும் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியை புதுப்பிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இருப்பினும், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தரப்பில், தே.மு.தி.க., வுடன் கூட்டணி அமைக்க விரும்புவதால், தி.மு.க., கூட்டணியில் இன்னும் இறுதி வடிவம் முழுமை அடையாமல், இழுபறியாக உள்ளது. அதேசமயம், தி.மு.க., - தே.மு.தி.க., காங்கிரஸ் என, "மெகா' கூட்டணி அமைய வேண்டும் என, சில தலைவர்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆந்திர பவனில் ...

"தமிழக நலனுக்கு எதிராக செயல்படும் காங்கிரசுக்கு வெண் சாமரம் வீசுகிறார்': முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனம்

Posted:

சென்னை:""தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரித்ததன் மூலம், கருணாநிதி, இரட்டை வேடம் போடுவதில், தெளிவாக இருப்பது, வெட்ட வெளிச்சமாகி விட்டது. அவரது, இரட்டை வேடத்திற்கும், தமிழகத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும், மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்,'' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து உள்ளார்.அவரது அறிக்கை:தற்போது, தமிழக மக்களின் எதிர்ப்பையும் தாண்டி, தமிழகத்தின் உரிமையை பறிக்கக் கூடிய, தமிழகத்திற்கு நிதிச்சுமை தரக்கூடிய, தேசிய உணவு பாதுகாப்பு மசோதாவிற்கு ஆதரவாக, தி.மு.க., - எம்.பி.,க்களை, ஓட்டு போட வைத்து, துரோகம் இழைத்துள்ளார்.மத்திய அரசு, தேசிய உணவு ...

மருத்துவ மாணவி பலாத்கார வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டுசிறை

Posted:

புதுடில்லி:டில்லியில், கடந்த ஆண்டு நிகழ்ந்த, மருத்துவ மாணவி பாலியல் பலாத்கார வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு, மூன்றாண்டு சிறைத் தண்டனை விதித்து, சிறார் நீதி வாரியம் உத்தரவிட்டு உள்ளது.6 பேர் கும்பல்:டில்லியில், கடந்த ஆண்டு டிச., 16ம் தேதி இரவு, ஓடும் பேருந்தில், 23 வயது மருத்துவ மாணவி, ஆறு பேர் கும்பலால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, பின் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டு, சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். தலைநகர் டில்லியையே, இந்தச் சம்பவம் உலுக்கியது. குற்றவாளிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் ...

இலங்கையில் தமிழர்களின் சோகம் தொடர்கிறது: நவநீதம் பிள்ளை குற்றச்சாட்டு

Posted:

கொழும்பு:""இலங்கையில், நான்கு ஆண்டுகளுக்கு முன் உள்நாட்டுப் போர் முடிந்திருந்தாலும், தமிழர்களின் சோகம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது,'' என, ஐக்கிய நாடுகள் சபையின், மனித உரிமைகள் ஆணைய தலைவர் நவநீதம் பிள்ளை தெரிவித்து உள்ளார்.இலங்கையில், போரால் பாதித்த பகுதிகளில் நடக்கும், மறுவாழ்வு பணிகள் மற்றும் மனித உரிமைகள் சூழ்நிலையை பார்வையிட, கடந்த வாரம், நவநீதம் பிள்ளை அங்கு வந்தார். ஒரு வார சுற்றுப் பயணத்திற்குப் பின், கொழும்பில், நேற்று அவர் அளித்த பேட்டி: இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த போர், முடிந்து நான்கு ...

காஸ் சிலிண்டர் விலை ரூ.50 வரை உயர்த்தயோசனை : பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு

Posted:

புதுடில்லி : "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, 2 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படலாம். அதனால், டீசல் விலையை லிட்டருக்கு, 5 ரூபாய் வரையும், மண்ணெண்ணெய் விலையை, லிட்டருக்கு, 2 ரூபாயும், சமையல் காஸ் விலையை, சிலிண்டருக்கு, 50 ரூபாயும் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், நேற்று அதிரடியாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டது. பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 2.35 ரூபாயும், டீசல் விலை, லிட்டருக்கு, 50 காசுகளும் ...

வங்கி கணக்கில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது அரசு கொடுத்த, "செக்'

Posted:

ரிஷிகேஷ்: கேதார்நாத் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவரின் குடும்பத்திற்கு, அம்மாநில அரசு வழங்கிய நிவாரண தொகைக்கான காசோலை, வங்கிக் கணக்கில் பணமில்லாததால், திரும்பி வந்தது. உத்தரகண்ட் மாநிலம், பவுரி மாவட்டத்திலுள்ள கிராமத்தை சேர்ந்தவர், ஹரேந்திர சிங், 32. சுற்றுலா வழிகாட்டி. ஜூன், 16ம் தேதி, ரிஷிகேஷிலிருந்து, கேதார்நாத்துக்கு, சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்றார். அப்போது பெய்த பேய் மழை மற்றும் பெருவெள்ளத்தில், ஏராளமான சுற்றுலா பயணிகளுடன், ஹரேந்திர சிங்கும் அடித்துச் செல்லப்பட்டார். அதன்பின், அவரைப் பற்றி தகவல் இல்லை.அதனால், ஹரேந்திர சிங், இறந்து ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™