ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை?
- இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா?
- EEGARAI FLASH NEWS
- கணித அறிமுகம்
- மூளையைத் தூங்க விடாதீர்கள்!
- உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும்
- பாலகுமாரன் -நிலாவே வா
- முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு)
- ஈ மெயில் கதை ,,,,,,,,,
- இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி
- தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
- 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக
- மலர்கள்
- கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red )
- ஜனவரி - 26
- திருநங்கை
- சுதந்திரதினம்
- எழுதுகோல்
- பயணம்
- விழி
- பாலாடை
- வீதி பிச்சைக்கரான்
- பல்கலைக்காதல்
- ஏக்கம்
- பலிக்கிடா
- காவுவாங்கிய காதல்
- ஒருதலை ..............?
- மலேசியா - 56 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!
- திரிவல்லிக்கேணி ரத்தினா கபே
- டாக்ஸி டிரைவராக மாறிய பிரதமர்!
- மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள்
- தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1)
- ஈகரை தேவதைக்கு பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க
- இணையதளப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள சிறுவயதினருக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு
| வைகை நதி ஏன் கடலில் போய் சேரவில்லை? Posted: 31 Aug 2013 12:20 PM PDT வைகை நதி கடலில் போய் சேராதது ஏன் என்று ஒரு விவாதம் நடந்தது குலோத்துங்க சோழன் அவையிலே. அவையில் ஒட்டக்கூத்தர் புலவர் பேரரசாக வீற்றிருக்கிறார். அருகில் வெண்பா வீறுடையவராக புகழேந்தி அமர்ந்திருக்கிறார். ஒட்டக்கூத்தர் சோழ நாட்டில் பிறந்தவர். புகழேந்தி களந்தையில் பிறந்தவர். பாண்டிய நாட்டின் பால் பற்றுடையவர். இருவரும் பெரும் புலவர்கள். ஒட்டக்கூத்தர் சொன்னார், "எங்க சோழ நாட்டு காவிரி மாதிரி உங்க பாண்டிய நாட்டு வைகை வருமா? வைகை கடலில் கலக்காத நதி" அந்தந்த நாட்டுக்கு உரியவர்கட்கு அந்தந்த நாட்டின் ... |
| இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? Posted: 31 Aug 2013 11:46 AM PDT இந்திய ரூபாய் நோட்டுகள் நாசிக் நகரத்தில் அச்சிடப்படுகிறது என்பது தெரியும். இந்திய நாணயங்கள் எங்கே தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியுமா? டெல்லி, மும்பாய், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றன. எந்தக் காசு எந்த நகரத்தில் தயாரிக்கப்பட்டது என்பதற்கும் ஒரு குறி இடப்படுகிறது. நாணயங்களின் அடியில் தயாரிக்கப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டிருக்கும். அதனைப் பார்த்திருப்பீர்கள். அத்துடன் ஒரு குறியும் இடம் பெற்றிருக்கும். அந்தக் குறியை வைத்து அந்த நாணயம் எந்த ஊரில் தயாரிக்கப்பட்டது ... |
| Posted: 31 Aug 2013 10:39 AM PDT சிவகாசியில் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து 56 பேர் பலி |
| Posted: 31 Aug 2013 10:35 AM PDT எண்ணைஎனில் லிட்டர் கணக்கு அரிசிஎனில் எடை கணக்கு துணிஎனில் மீட்டர் கணக்கு பெற்ற அன்னையிடம் குழவி நாடுவது அன்பு கணக்கு வகுப்பறை வசம் மாணாக்கர் சேட்டை கணக்கு முதுமைக் காலத்தில் நரை தோன்றுவது இயற்கை கணக்கு ஓசோனில் ஓட்டை விழுந்தது செயற்கை கணக்கு விளையாட்டு எனில் யாவரும் விரும்புவது வெற்றி கணக்கு மாமியார் மருமகளிடம் வளர்வது வம்பு கணக்கு ஐந்தாண்டுக்கு ஒரு முறை யோக்கியன் என அயோக்கியன் தேர்ந்தெடுப்பது தப்பு கணக்கு . இளையகவி |
| Posted: 31 Aug 2013 10:13 AM PDT மூளையைத் தூங்க விடாதீர்கள்! பொதுவாக நினைவாற்றல் என்பது அனைவருக்கும் மாபெரும் தேவை. நினைவாற்றல் சுமாராக இருப்பவர்கள் கூட நினைவாற்றலை வளர்த்துக் கொள்ள மூன்று முக்கியமான வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். 1. கவனமான பார்வை 2. ஆர்வம், அக்கறை 3. புதிதாகச் சிந்தித்தல் இந்த மூன்றிற்குமே சிறப்பான பயிற்சி தேவை. அந்தப் பயிற்சிக்காக எந்தப் பயிற்சிக் கூடத்திற்கும் செல்ல வேண்டியதில்லை. நமக்கு நாமே பயிற்சி அளித்துக் கொள்ளலாம். அதற்கான சில பயிற்சி முறைகளைப் பார்ப்போம். முதலாவதாக ஒரு பயிற்சி. ... |
| உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும் Posted: 31 Aug 2013 10:09 AM PDT உங்கள் நகத்தின் உருவமைப்பும் - அதன் இரகசியங்களும் - The secret of your nail shape. [ இவை உண்மையா - பொய்யா என்பதை நீங்களே உங்களோடு ஒப்பிட்டு அறிந்துகொள்ளுங்கள்] 1. Short nails. Hardwork, curious, independent. குறுகிய நகம்- கடுமையான உழைப்பு, அறிந்துகொள்வதில் ஆர்வமுள்ளவர், தனித்து இயங்கும் ஆற்றல் 2. Short nails, sloping wide. Love to criticize and irritating. குறுகிய ஆனால் அகன்ற நகம்:- எரிச்சலூட்டுவதிலும் விமர்சிப்பதிலும் அதீத விருப்பம் 3. Nail width, length, rounded at the tip. ... |
| Posted: 31 Aug 2013 09:47 AM PDT பாலகுமாரன் -நிலாவே வா பாலகுமாரன் -நிலாவே வா நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . http://www.mediafire.com/download/10v9ddozpswt91o/NILAVEVAA.pdf |
| முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது?(பானு) Posted: 31 Aug 2013 09:00 AM PDT முடுகினன் என்ற சொல்லுக்கு ஏற்ற எதிர்ச்சொல் எது? 1.செலுத்தினான் 2.நிறுத்தினான் 3.வளைத்தான் 4. முரித்தான் |
| Posted: 31 Aug 2013 07:43 AM PDT ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தரை துடைக்கும் வேலைக்கு ஒருவன் விண்ணப்பித்திருந்தான். தரை துடைத்துக் காட்டச் சொன்னார்கள். நன்றாகத் துடைத்தான். அடுத்து சின்னதாய் ஒரு இண்டர்வியூ. கடைசியில் அவனிடம் தகவல் சொல்வதற்காக ஈமெயில் முகவரி கேட்டார்கள். 'ஈ மெயிலா? எனகக்கு ஈ மெயில் இண்டர்நெட்டெல்லாம் தெரியாதே' என்றான் துடைக்க வந்தவன். 'கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்க்க விரும்புகிறவனுக்கு ஈமெயில் முகவரி இல்லயா? ச்சே!' என்று அவனை அனுப்பி விட்டார்கள். வேலை இல்லை என்றதும் அவனுக்கு என்ன செய்வதென்று ... |
| இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி Posted: 31 Aug 2013 07:35 AM PDT மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று ஆனந்த யாழை மீட்டுகிறாய் அடி நெஞ்சில் வண்ணம் தீட்டுகிறாய் அன்பெனும் குடையை நீட்டுகிறாய் அதில் ஆயிரம் மழை துளி கூட்டுகிறாய் இரு நெஞ்சம் இணைந்து பேசிட உலகில் பாஷைகள் எதுவும் தேவையில்லை சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை இன்னும் வேண்டுமடி இந்த மண்ணில் இதுபோல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி. ஆனந்த ... |
| தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . Posted: 31 Aug 2013 06:10 AM PDT தங்க மீன்கள் ! இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ராம் ! திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நல்ல திரைப்படம் பார்த்து அதிக நாட்கள் ஆகி விட்டன .அந்த ஏக்கத்தை தீர்க்க வந்த திரைப்படம் .குடும்பத்துடன் தைரியமாக செல்லும் படம் .கதையே இல்லாமல் நடிகையின் சதையை நம்பி மட்டும் மசாலாப் படம் எடுக்கும் இயக்குனர்கள் பார்த்து திருந்த வேண்டிய மிக நல்ல படம் . ஆசிரியர்கள் இரண்டு வகை வல்லினம் மெல்லினம் . வல்லினமாக உள்ள ஆசிரியர்கள் மெல்லினமாக மாற வேண்டும் என்பதுதான் கதை . இயக்கம் கற்றது தமிழ் இயக்குனர் ... |
| 2013 - AUGUST/SEPTEMBER ஆங்கில இதழ்கள் இலவசமாக Posted: 31 Aug 2013 06:01 AM PDT 2-9-2013-INDIA TODAY MAGAZINE இலவசமாக டவுன்லோட் செய்ய http://www65.zippyshare.com/v/10104561/file.html SEP-2013-SMART PHOTOGRAPHY (INDIA) MAGAZINE http://www62.zippyshare.com/v/18461183/file.html SEP-2013-STUFF INDIA MAGAZINE இலவசமாக டவுன்லோட் செய்ய http://www12.zippyshare.com/v/22868893/file.html JULY-2013-CINEMA SPICE MAGAZINE இலவசமாக டவுன்லோட் செய்ய http://www66.zippyshare.com/v/75578248/file.html JULY-2013-FHM INDIA MAGAZINE http://www39.zippyshare.com/v/50209119/file.html JUNE ... |
| Posted: 31 Aug 2013 05:39 AM PDT ஓரறிவு வண்டிற்கும் வாயார உணவளிக்கும் அட்சையப்பாத்திரம் முற்காலத்தில் முப்பொழுது அறிய இயங்கா கைகடிகாரம் . உமது பெயரை பிரித்துபார்த்தேன் சூரிய+காந்தி பகலைக் கொணரும் -சூரியன் இருள் மாய்ந்த மாக்களை வாழ் வெளிசம்மாக்கிய -காந்தி உன்பெயர் பொருத்தமானதுதான் . தலையில் பாரம் சுமக்க மறுக்கும் நங்கை அந்திப்பொழுது மலரும் அல்லியே-உன்னை அள்ளி சுமப்பதேனோ ? தாமரை இலை மீது ஓட்ட நிரைப்போல் நி நிலத்தை ஒட்டாது நீரை ஒட்டி உள்ளதால் உன்னை பறிப்போரும்,பழிப்போரும் ... |
| கண்ணீர் அஞ்சலி...!!! (Mano Red ) Posted: 31 Aug 2013 05:22 AM PDT கனக்கிறது இதயம், கொதிக்கிறது இரத்தம், உதவி என்றதும் உதறி விட்டு போகிற போக்கில் போகும் மாமனிதர்களை பார்க்கும் போதெல்லாம் நெஞ்சு பொறுக்குதில்லையே...!! பசியில் துடிப்பவன் சாலையில் தவிப்பவன் உதவிக்கு அலைபவன் இவர்களை கோமாளியாக்கி பேருந்து வரும் வரை நேரம் போக ரசிக்கும் (அ)நியாய மனிதர்களுக்கே முதலில் என் கண்ணீர் அஞ்சலி..!! எவனுக்கு என்ன நடந்தாலும் தனக்கு தன் வேலையென, மானம் கெட்ட பிறவிகள் ஈனம் கெட்டுப் போய் வேடிக்கை பார்க்கும் போது மனம் வலித்து சொல்கிறது இந்த பிணங்களுக்கே வேண்டும் ... |
| Posted: 31 Aug 2013 04:19 AM PDT சுதந்திரமெனது பிறப்புரிமை அடைந்தே தீருவோம் என்றீரே ....... நித்தம் உமது சிந்தையில் சுகமாய் கற்பித்தாய் சுதந்திரத்தை . இன்பத்தை துலைத்தாய் இன்னுயிர் துறந்தாய் மனையாளுக்கா ? அன்புடை புதல்வருக்கா ? தியாகம் செய்தாய் அல்ல ! தாய் மண்ணை தமிழ் மண்ணை தமிழர் தன்னைகாக்க அன்னியரின் அதிகாரத்தை இடிக்க முற்பட்ட உமது எண்ணங்களை கைவிடா ஒட்டுண்ணியாய் ............ அன்பே கடவுளென்று ஆயுதமேந்தும் மார்க்கம் ஒன்றே குலமென்று ஒன்றுக்கொன்று இடித்துக்கொள்கிறார்கள் சுதந்திரமாய் ................... கத்தியின்றி ... |
| Posted: 31 Aug 2013 04:18 AM PDT பெயரில் மட்டும் சிறப்பு சேர்த்தால் போலும் திரு -மேன்மை நங்கை -பெண்ணென்று உனக்கென வீடு தனி உண்டா? குழந்தை பிராயத்தில் கொஞ்சி மகிழ்ந்த பெற்றோரும் குறித்த பிராயத்தில் உன்னை பிரித்து விட்டார் பேடிஎன்று... இளையகவி |
| Posted: 31 Aug 2013 04:17 AM PDT அன்பே கடவுள் என்று ஆயுதமேந்தும் மார்க்கம் ஒன்றே குலமென்று ஒன்றுக்கொண்டு இடித்துக்கொள்கிறார்கள் சுதந்திரமாய் கத்தியின்றி ரத்தமின்றி பெற்ற சுதந்திரத்தை இரத்தத்தால் விவசாயம் விளைசயென மனித உயிரை விரையம் செய்து மனித பிணங்களை குவிக்கிறாய் மனித குண்டுகளாய் மாறி நள்ளிரவு பெற்ற சுதந்திரம் விடிவதற்குதாமதம் ஏனோ தேசியக்கொடிக்காய் இன்னுயிர் நித்த மண்ணில் பிறக்கொடி காக்க போர்க்கொடி ஏந்துகிறார் . விண்ணில் தோன்றும் வின்மின்கலாய் பல்லாயிர கொடிகளுக்கு மத்தியில் தேசியக்கொடி ... |
| Posted: 31 Aug 2013 04:14 AM PDT எண்ணிலா எண்ணங்களை ஏக்கங்களை எழுத்துக்களாய் படைக்கும் படைப்பாளி மாணாக்கரின் விடைத்தாளில் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் நீதிபதி. நாணமாய் நடைபயின்ற அழகான அன்பினை எழுத்துக்களாய் இணைத்து பதமாய் உருவெடுத்து அச்சத்திக்கு ஆடைபூண்டு ஒருதலையாசையை அள்ளி செல்லலும் தபால்காரன் . அன்புண்டோருக்கு அன்பை வெளிக்கொணர அன்பளிப்பும் அவனே . கத்தி முனையை காட்டிலும் திறமிக்க எம்மை உருவமமென உவமைஎன உயர் தமிழுக்கு உயர்வான செந்தமிழுக்கு செம்மை சேர்த்து சிறப்பு சேர்த்தவனும் நானே ... |
| Posted: 31 Aug 2013 04:13 AM PDT கள்வர் களவுபுரியும் உற்ற தருணமது........... காதல் கன்னிமார்கள் கண் துயிலா காலமது ஆழ்கிணற்றில் அம்புலி அழகு பிம்பத்தை அடகு வைத்து அணிசேர்க்கும் நேரம் இது அவ்வொடியே........... பட்டாம் பூச்சிகளுடன் பயணம் எனதருகே கணித மேதை இராமனுஜத்தின் நெருங்கிய நண்பர் பக்தி பாடலுடன் ஆமை வேகத்தில் பயணம் இசை மறுத்து செவிசாய்க்க பந்தய க்குதிரையாய் பயணப்பட்டது விடாது நோக்கும் விழி அன்றும் விடவில்லை என்னை பேருந்து இடை நிறுத்தத்தில் இறுக்கை மாற்றம் தூரத்தில் துரத்திய விழி எமது முன் துருவத்தில் ... |
| Posted: 31 Aug 2013 04:13 AM PDT வாயிலா பாவை ஈரிதழ் அவிழ்ந்தால் தேனுண்ணும் வண்டு பருகி விடுமோயென ? கரத்தால் காவலிடுகிறாள். விலக நினைத்தாலும் விடாது தள்ள நினைத்தாலும் அவ்நெடிய தகர்த்தெரியும் அதற்கேன் அவளது சக்தி பொம்மைகாரன் பின்னால் நாடும் சிறார் போல் எனது அகப்போராட்டம். உமது விழிப்பேசும் வார்த்தைகள் விடை தெரியாத மாணாட்கனாய்....... மனப்போராட்டம் என்னுள் என் சிறுநகைப்பிற்கு ஏன் இத்தகைய தண்டனை நிலவை மறைக்கும் கார் மேகமாய் உமது கரம் கரத்தை விலக்கு நிலவைக்காணும் பாக்கியமாவது கிட்டட்டும். உமது ... |
| Posted: 31 Aug 2013 04:11 AM PDT ஆடையைநீக்கி பார்வையோடு நில்லாது ருசிபார்க்கும் துரியோதனன் வெண்ணிற ஆடைபூண்டமையால் சமாதானம் என்று எண்ணினானோ ? வெண்ணிற ஆடைக்கே இந்தபாடுஎன்றால் வண்ண ஆடைஎன்றால் வம்பே வேண்டாம் நானும் அரைகுறை ஆடையோடு அலையபோய்கிறேன் நடிகைபோல் .................... இளையகவி |
| Posted: 31 Aug 2013 04:10 AM PDT தான் உண்ணஉணவில்லா தருணத்திலும் தாராளமனத்துடன் அம்புலிக்காட்டி அரவணைப்புடன் குழந்தைக்கு ஈயும் தாய்மை உள்ளம் பூண்டு உண்டிஈயும் தர்மன் சுவரொட்டி மங்கைக்கு வீதிப்பிசைக்காரன் உணவு உபசரிப்பு ஏற்க மறுக்கிறாள் பிச்சைக்காரன் என்பதால் சுவரொட்டியில் இருந்தாலும் பெண்தானே ! இளையகவி |
| Posted: 31 Aug 2013 04:06 AM PDT ஒலிப்பு மணி கனிவான குரலில் ஒரு நிமிடமென அவ்நொடி இயங்க மறுத்தது இதயம் அடுத்த நிமிடமே ஓய்யார ஆடைபூண்டு ஒப்பனை மூலம் மெருகேறியது என்றும் காணாத பிரகாசமாய் முகம் இன்பக்களிப்பில் அகம் பற்பல எண்ணச்சுவடுகளோடு நடைபயின்றேன் கடைவீதி இருக்கையில் கண்ணியமாய் (அவள் ) எதற்கு அழைத்தாள் ? ஏக்கம் என்னுள் திருவிழாவில் அன்னையை பிரிந்த குழந்தைப்போல் வாயில் வார்த்தை தடுமாறியது திக்குவாயாய் ........... கோலை வாயை தடை செய்து துணிச்சலுடன் பேசியது கண்கள் மட்டும் அமருங்கள்என்றாள் ... |
| Posted: 31 Aug 2013 04:05 AM PDT நண்பனது நங்கைத்திருமணம் அதிகாலையில் கைபேசியில் அவசரமாய் உம்மை நோக்கவேண்டுமென ஒன்றும் படிக்காத மாணவன் தேர்வறையில் திருதிருவென என்னுள் அச்சம் அடியோடு மறந்தேன் அத்திருமணத்தை திக்கற்று திரிந்த மனம் திகைப்புறும் வண்ணம் உமது இல்லம் நோக்கி எனது பயணம் என்றாள் என்மனம் பயணப்பட்டது இன்பக்களிப்பில் தினக்கூலிகாரனுக்கு இலட்சம் லாட்டரி அடித்தாற்போல் எமது வாசலில் அவள் ( எனது தூக்கமும் களைந்தது ) இளையகவி |
| Posted: 31 Aug 2013 04:04 AM PDT பசுமையை உணவாக உட்கொண்டு உறவுகளோடு உலவாடி மகிழ்கையில் விழாவிற்கும்................ விருந்திற்கும் ................. பண்டிகைக்கும் ............... நாங்களே நாயகர்கள் ! சிறுவன் என்பதால் என்னை புறக்கணித்து எமது அன்னையை ,தந்தையை உற்று நோக்கியது கண்கள் . உடல் வளர்ச்சியை மட்டும் . எங்கள் அக மகிழ்வை அறியாது அழைத்துச்சென்றான் என்மகன் கண்களில் கண்ணீர்மல்க ........................ இன்று நாங்கள் நாளை நீயென தந்தை எம்மிடத்தில் கூர எமது கண்களில் தண்ணீர் தாரைத்தாரையாய் ... |
| Posted: 31 Aug 2013 04:02 AM PDT இளையவனே இளவரசு காதல் கைகூடுமென்ற காதலி கரம் பற்றினாய் பற்றி எரிந்தது உமது ஊர் மட்டும் தானே ! பதறி துடித்தது உமது உறவு மட்டும் தானே ! காமத்தின் விதை காதல் காதலென்னும் சூத்திரமறியாது ஆட்பட்டாய் உமக்கு உயிர் கொடுத்த உன்னத உறவை மறந்தாய் உமது கரம் தொட்டக்காதலி கடைசி வரை வீற்றிருப்பாள் மனக்கவலை ஆற்றிடுவாள் பகல் கனவு கண்டாய் .............. உமது வாழ்வில் விளக்கேற்ற வந்தவள் ஊருக்கே விளக்கேற்றினாள் காதலெனும் பாசக் கயிற்றை பக்குவமாய் மனதில் பதித்து பாதியிலே உன்னைப் பிரிந்தாள் உண்மைக்காதலுக்கு ... |
| Posted: 31 Aug 2013 03:57 AM PDT பேசா வார்த்தைகள் பேசும் விழிகள் தனிமைச்சிரிப்பு இயற்கை இரசிப்பு உணவு மறுப்பு தூக்கத் துறவு பாடத் தொலைப்பு பெற்றோர் பாச வெறுப்பு தனிமை இன்பம் காதலின் மந்திரம் பேச்சில் தந்திரம் மயக்கம் பிரிவில் துக்கம் . மாறுச்சட்டை மகத்துவம் . இருமுறைக் குளியல் . இடை இடையே சிகை அலங்காரம் . எப்போதும் சிரித்த முகம் . பகல் பொழுது இனிமை . இரவு பொழுது வெறுமை பிடித்த நாள் பிப்ரவரி -14 வெறுத்த நாள் விடுமுறை நாள் . கன்னித்தீவாய் அவள் பின்னால் நாட்டம் அவளோ ?தப்பி ஓட்டம் கைப்பேசி செவிமாட்டியாய் ... |
| மலேசியா - 56 வது இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்! Posted: 31 Aug 2013 02:56 AM PDT மலேசியா சுதந்திரம் அடைந்து இன்றோடு 56 ஆண்டுகள் ஆகிவிட்டது. பிரிட்டிஷாரின் கைகளில் இருந்த இந்த நாட்டை மீட்க போராடிய அனைத்து தேசத் தலைவர்களையும் இந்த நாளில் நினைவு கூர்ந்து நமது நன்றிகளைக் கூறிக்கொள்வோம். கடந்த 1957 ஆம் ஆண்டு தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மானின் கடும் முயற்சியாலும், மூவின மக்களின் ஆதரவோடும் இந்த நாட்டிற்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி சுதந்திரம் கிடைத்தது. இன்றைய நாளில் இந்த இனிய சுதந்திர தினத்தைக் கொண்டாலும் அனைத்து மலேசியர்களுக்கும் வாழ்த்துக்கள்.. |
| Posted: 31 Aug 2013 02:47 AM PDT திருவெல்லிக்கேணி என்றதும் நினைவுக்கு வருவது சாம்பார் இட்லிதான். சரியான தீனிப் பண்டாரம்!! திருவெல்லிக்கேணினா என் நினைவுக்கு வருவது பாரதியும் பார்த்தசாரதியும்னு நீங்க சொன்னா ஒரு தடவை என் கூட ரத்னா கபேக்கு வாங்க..ஒரு ப்ளேட் இட்லி சாம்பார் சாப்பிட்டால் நீங்களும் ப்ளேட்ட மாத்தி பேசுவிங்க... சங்கு சுட்டாலும் வெண்மை தருவது போல, கடும் ஆவியில் வெந்தாலும் வெண்மையை தந்தருளும் இட்லி என்னும் பரம்பொருளை சாம்பார் என்கிற பக்தி வெள்ளத்தில் முக்கித் திணறடித்து வழிபடும் பக்தர்கலுக்கு காலம் காலமாக, ... |
| டாக்ஸி டிரைவராக மாறிய பிரதமர்! Posted: 31 Aug 2013 01:29 AM PDT ஜூன் மாதம். மதியம். பிரதமர் தனது அலுவலகத்தில் உள்ள ஓர் அறைக்குள் நுழைகிறார். வெளியே வரும்போது அவர் உடை மாறியிருக்கிறது. ஒரு டாக்ஸி டிரைவரைப் போல உடை. கண்களில் சன் கிளாஸ். தலையில் தொப்பி. கறுப்பு நிற மெர்சிடெஸ் டாக்ஸியில் டிரைவர் சீட்டில் ஏறி அமர்கிறார் பிரதமர். தலைநகரின் மையப் பகுதிக்குக் கார் பறக்கிறது. சாலையில் ஒருவர் டாக்ஸிக்காக கையை நீட்டுகிறார். அவரை ஏற்றிக் கொண்டு கார் செல்கிறது. பிரதமர் டாக்ஸி டிரைவராக இருந்து கொண்டு, பின் சீட்டில் அமர்ந்திருக்கும் பயணியிடம் பேச்சுக் கொடுக்கிறார். ... |
| மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் Posted: 31 Aug 2013 01:00 AM PDT மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் ! பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில் வண்ணத்துப் பூச்சிகளின் நிறங்கள். துளிர்களின் பிராண வாயுவில் தனியார் பள்ளியின் துருக்கள். பள்ளியின் கட்டளைகள், பிள்ளையின் ஒப்பனைகள், எல்லா புத்தகங்களும் கவனம் வரும்.. பிள்ளையின் இதயம் மறந்து போகும். பள்ளிக்கூடம்அவசர அவசரமாய் கிளம்புகையில் அம்மாவின் முத்தத்திற்கு கன்னத்தில் இடமில்லை, நூடுல்ஸ் நுழையவும் பிள்ளைக்கு நேரமில்லை. பறக்கின்றன பள்ளி வாகனங்கள். ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா ... |
| தமிழ் சொல்லாக்கத்தில் நாம் கடைபிடிக்கும் வழிமுறைகள் சரியா? (பாகம்-1) Posted: 31 Aug 2013 12:23 AM PDT தமிழில் புதிய சொற்களை உருவாக்குவது பற்றிய எனது நீண்ட நாளைய எண்ணோட்டங்களை இங்கு பதிவிடுகிறேன். மேலும் தற்போதுள்ள சுழலில் சொல்லாக்கம் என்பது உருவாக்கப்படும் சொல் எளிதாக புரியும் படி இருக்கவேண்டும், ஒரு சொல்லை சொன்னால் அது எதை குறிக்கிறது என்பதை அச்சொல்லை வைத்தே புரிந்துகொள்ளவேண்டும் என்று தான் பெரும்பாலானோர் கருத்தாக உள்ளது. இதை பின்பற்றியே பெரும்பாலான சொல்லாக்கங்கள் நடைபெறுகின்றன. பிற மொழி சொற்களுக்கு புதிய சொற்களை உருவாக்க அந்த மொழிசொல்லை அப்படியே மொழிபெயர்த்து இரண்டு அல்லது மூன்று சொற்களை ... |
| ஈகரை தேவதைக்கு பிறந்த நாள் - வாழ்த்தலாம் வாங்க Posted: 30 Aug 2013 11:56 PM PDT இன்று தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடும் அன்புதம்பி ஜேன் செல்வகுமார் அவர்களின் புதல்வி எங்கள் ஈகரை குடும்பத்தின் தேவதை ஜோவிதாவுக்கு ஈகரை தமிழ்க்களஞ்சியத்தின் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம். |
| இணையதளப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ள சிறுவயதினருக்கான சிறப்பு முகாம்கள்: ஜப்பான் அரசு உத்தரவு Posted: 30 Aug 2013 10:12 PM PDT நவீன காலத்தில் இணையதளத்தின் பயன்பாடு மக்களின் வாழ்க்கையில் இன்றியமையாத ஒரு விஷயமாக மாறியுள்ளது. ஆயினும், சிறுவயதினரும் இந்தப் பழக்கத்திற்கு ஆளாவது அவர்களின் இயல்பான வெளி நடவடிக்கைகளைப் பாதிக்கத் துவங்குவதாக மாறுவது கவலைக்குரிய செயலாக தோன்றுகின்றது. ஜப்பான் நாட்டின் சமீபத்திய ஆய்வின்படி, ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட சிறுவயதினர் இணையதளம் உபயோகிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.நடுத்தர மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களில் 5,18,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |