Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


விஜயகாந்திற்கு அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேர் சவால்: கட்சியை விட்டு நீக்க மாட்டார் என திட்டவட்டம்

Posted:

சென்னை: பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தே.மு.தி.க.,வின் செயற்குழு கூட்டம், நாளை மறுநாள் செப்., 1ம் தேதி நடக்க உள்ளது. இதில், அதிருப்தி எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேரையும், நிரந்தரமாக கட்சியை விட்டு நீக்குவது குறித்து விஜயகாந்த் முடிவு செய்வார், என, தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், எம்.எல்.ஏ.,க்கள் ஏழு பேரும், இதை மறுத்துள்ளனர். "எதிர்க்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும் என்பதால், எங்களை கட்சியில் இருந்து, நிரந்தரமாக நீக்கும் எந்த முடிவையும், செயற்குழுவில், விஜயகாந்த் எடுக்க மாட்டார்' என, சவால் விடும் வகையில் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தே.மு.தி.க., - ...

உணவு பாதுகாப்பு சட்டம்: தமிழகத்துக்கு லாபமா, நஷ்டமா?

Posted:

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்குப் பின், உணவு பாதுகாப்பு சட்டம், லோக்சபாவில் நிறைவேறி உள்ளது. பொது வினியோக திட்டம் சிறப்பாக செயல்படும், தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு, இச்சட்டத்தால், லாபமா, நஷ்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது.இலவச அரிசி, 1 ரூபாய், இரண்டு ரூபாய்க்கு 1 கிலோ அரிசி என, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள், பொது வினியோகத் திட்டம் மூலம், அரிசி வழங்கி வருகின்றன. இந்நிலையில், நாட்டில் உள்ள, 70 சதவீதம் மக்களுக்கு, உணவு பாதுகாப்பு சட்டம் மூலம், குறைந்த விலையில், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்களுக்கு உத்தரவாதம் அளிக்கும் திட்டத்தை, மத்திய அரசு, ...

40 குண்டு வெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்ட பயங்கரவாதி யாசின் பட்கல் சிக்கினான்

Posted:

புதுடில்லி: மத்திய அரசால் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவனும், "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத அமைப்பின் துணை நிறுவனருமான, யாசின் பட்கல், 30, பீகாரில், இந்திய - நேபாள எல்லை அருகே, கைது செய்யப்பட்டான். நாட்டில் நடந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய, லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதி, அப்துல் கரீம் துண்டா கைது செய்யப்பட்ட, 15 நாட்களில், யாசின் பட்கல் சிக்கியுள்ளான்.மற்றொரு பயங்கரவாதி: நேபாளம், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் உட்பட, பல நாடுகளுக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஓடிக்கொண்டிருந்த யாசின், உளவு நிறுவனங்கள் மற்றும் பீகார் ...

புதிய பொருளாதார உத்திகள் தேவை: பிரதமருக்கு கருணாநிதி யோசனை

Posted:

சென்னை: "இந்தியா சுதந்திரம் அடைந்த பின், எத்தனையோ சவால்களைச் சந்தித்து முன்னேறி வருகிறது; தற்போது ஏற்பட்டுள்ள இந்த பொருளாதார சோதனையில் வெற்றி பெற, புதிய உத்திகளை பிரதமர் கையாள வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தொடர்ந்து சரிந்து, 68.80 ரூபாய் அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடியில் இருந்து, அமெரிக்கா தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காகத் தான். டாலரின் மதிப்பை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாகவும், அதன் விளைவாகத் தான் ...

ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்: இன்று அறிக்கை தாக்கல் செய்கிறார் பிரதமர்

Posted:

அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாயின் மதிப்பு, நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து கொண்டே வரும் நிலையில் இப்பிரச்னையை நேற்று பார்லியில், எதிர்க்கட்சிகள் கிளப்பின.லோக்சபாவில், நேற்று காலை, கேள்வி நேரம் துவங்கியதும், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் எழுந்து, "ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைவதை தடுத்து நிறுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோஷங்கள் எழுப்பினர். பா.ஜ., உட்பட, பல கட்சி எம்.பி.,க்கள், இந்த விஷயத்திற்காக, குரல் எழுப்பினாலும், நேற்றைய அமளியில், அ.தி.மு.க., மற்றும் இடதுசாரி எம்.பி.,க்களே முன்னணியில் இருந்தனர். சபாநாயகர் இருக்கையை ...

மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்

Posted:

சென்னை: "இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்ட, ராமநாதபுரம் மாவட்ட மீனவர், 35 பேர், ஏற்கனவே, சிறையில் உள்ள, 82 மீனவர் என மொத்தம், 117 பேரை விடுவிக்க, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் அனுப்பியுள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது: இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள், மீண்டும் சிறை பிடிக்கப்பட்டிருப்பதை, உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த, 35 ஏழை மீனவர்கள், நான்கு இயந்திரப் படகுகளில், 26ம் தேதி மீன் பிடிக்க சென்றவர்களையும் சிறை ...

மீளுமா கோவை தொழில்துறை? மீண்டும் துவங்கியது மின்வெட்டு

Posted:

கோவையில் மீண்டும் தலைதூக்கியுள்ள அறிவிக்கப்படாத மின்வெட்டால், தொழில்துறையினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலை நீடித்தால், தொழில்துறை மிக மோசமான நிலைக்குச் சென்றுவிடும் என, அச்சம் தெரிவிக்கின்றனர்.தமிழகத்தில் அனல்மின் நிலையம், காற்றாலை மின்உற்பத்தி, மத்திய தொகுப்பிலிருந்து வழங்கப்படும் மின்சாரத்தின் அளவு குறைப்பு உள்ளிட்ட காரணங்களால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், மூன்று மாதங்களுக்கு பின், மின்தடை மீண்டும் ஏற்படுகிறது. தொழில் நகரமான கோவையில், ஒரு லட்சம் முதல் 10 கோடி ரூபாய் முதலீடு வரம்புக்குட்பட்ட தொழிற்சாலைகளில், 70க்கும் ...

பொதுத்தேர்வு விடைத்தாள்களை கையாள்வதில் புதிய திட்டம்: இயக்குனர்கள் குழு தீவிர ஆலோசனை

Posted:

பொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த பொதுத்தேர்வை பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சம் மாணவர்களும் எழுதினர். தனித்தேர்வு மாணவர்களையும் சேர்த்தால், 20 லட்சத்தை தாண்டுகிறது. இத்தனை லட்சம் மாணவர்களுக்கும், தேர்வை நடத்தி, குளறுபடி இல்லாமல், தேர்வு ...

நீரா ராடியா வழக்கில் மூடப்பட்ட அறைக்குள் ரகசிய விசாரணை

Posted:

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் வரலாற்றிலேயே, இரண்டாவது முறையாக, அரசியல் தரகர், நீரா ராடியா வழக்கு, இரண்டு மணி நேரம், ரகசியமாக, மூடப்பட்ட அறைக்குள் நேற்று நடந்தது. "அக்டோபர், 1ம் தேதி முதல், திறந்த முறையில் விசாரணை நடத்தப்படும்" என, அறிவிக்கப்பட்டுள்ளது.ரூ.300 கோடி சொத்து: டில்லியை சேர்ந்த அரசியல் தரகர், நீரா ராடியா என்ற பெண்ணின் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதாக, 2007ம் ஆண்டு, மத்திய நிதி அமைச்சகத்திற்கு புகார்கள் சென்றன. ஏனெனில், குறுகிய காலத்தில் அவர், 300 கோடி ரூபாய் மதிப்பிற்கு சொத்துகளை குவித்திருந்தார். இதையடுத்து, அவர் நடவடிக்கைகள் ...

நிலம் கையகப்படுத்தும் மசோதா லோக்சபாவில் நிறைவேறியது

Posted:

புதுடில்லி: நிலம் கையகப்படுத்தும் மசோதா, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்யப்பட்டு, நேற்றே நிறைவேற்றப்பட்டது.கடந்த திங்கள் கிழமை, உணவு பாதுகாப்பு மசோதா, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அடுத்த வெற்றிக் கனியை, சூட்டோடு சூடாக பறிக்கும் வகையில், காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் மற்றொரு முக்கிய கனவு திட்டமான, நிலம் கையகப்படுத்தும் மசோதாவையும் நேற்று மத்திய அரசு தாக்கல் செய்தது. மத்திய கிராமப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர், ஜெய்ராம் ரமேஷ், இந்த மசோதாவை, லோக்சபாவில் நேற்று அறிமுகம் செய்தார்.அதையடுத்து, மசோதா மீதான ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™