Tamil News | Online Tamil News |
- பிரதமரை தாண்டி சோனியா உணர்ச்சிகர பேச்சு: களைகட்டியது உணவு பாதுகாப்பு மசோதா விவாதம்: குறைகளை அடுக்கி பா.ஜ., உட்பட கட்சிகள் பட்டியல்
- அமைச்சராவதற்காக "காக்கா' பிடித்தேன்: ஜார்க்கண்ட் காங்., தலைவர் பகீர் தகவல்
- தமிழகத்திற்கு வழங்கும் அரிசி விலை குறித்து கருணாநிதி கேள்வி
- "இரவும் பகலும் மாறி மாறி வரும்': விஜயகாந்த் சொல்கிறார்
- சேது சமுத்திரம் திட்டத்திற்காக ரூ.831.80 கோடி வீணடிப்பு
- அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம்:அரசு புது உத்தரவு!
- பேருந்துகளில் பெயரளவில் உள்ள முதலுதவி பெட்டிகள்: விபத்தின் போது பயணிகள் தவிப்பு
- காற்று வாங்கும் தனியார் பி.எட்., கல்லூரிகள்
- அரசு நிர்ணய கட்டணத்தை விட குறைவாக திருச்சியில் இயங்கும் மீட்டர் ஆட்டோக்கள்
| Posted: புதுடில்லி : பொதுவாக அமளியாகக் காணப்படும் லோக்சபாவில், உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக, மணிக்கணக்கில் விவாதம் நடந்தது. களைகட்டிய இந்த விவாதத்தில், மசோதாவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக் காட்டிய, பா.ஜ., உட்பட சில கட்சிகள், அரசை விமர்சனம் செய்தன. பிரதமரும், சபையும் உன்னிப்பாக கவனிக்கும் வகையில், காங்., தலைவர் சோனியா, ""இது, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசோதா,'' என குறிப்பிட்டு, அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என, உணர்ச்சிகரமாக பேசினார்.ஏழை மக்களுக்கு, மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்கும், உணவு பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றும் அவசர ... |
| அமைச்சராவதற்காக "காக்கா' பிடித்தேன்: ஜார்க்கண்ட் காங்., தலைவர் பகீர் தகவல் Posted: ராஞ்சி : "அகமது படேல், சோனியா, ராகுல் ஆகியோரை காக்கா பிடித்து தான், அமைச்சர் பதவியை பெற்றேன்' என, ஜார்க்கண்ட் மாநில அமைச்சர், யோகேந்திர சாகு தெரிவித்துள்ளது, "டிவி' சேனல் நடத்திய, "ஸ்டிங்' ஆபரேஷன் மூலம், வெளிச்சத்துக்கு வந்துள்ளது.காங்., கூட்டணி அரசு:ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா - காங்., கூட்டணி அரசு, சமீபத்தில் பதவியேற்றது. ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர், ஹேமந்த் சோரன், முதல்வராக பதவி வகிக்கிறார். காங்கிரசைச் சேர்ந்த, ஐந்து பேர், அமைச்சர்களாக உள்ளனர். இவர்களில், விவசாய அமைச்சராக உள்ள, யோகேந்திர சாகுவும், ஒருவர்."அமைச்சர் பதவியை ... |
| தமிழகத்திற்கு வழங்கும் அரிசி விலை குறித்து கருணாநிதி கேள்வி Posted: சென்னை: "உணவு பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் செய்யவில்லை என்றால், தி.மு.க., ஏற்றுக் கொள்ளாது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை: உணவு பாதுகாப்பு மசோதாவை பொறுத்தவரை, தி.மு.க., நிலைப்பாட்டை ஏற்கனவே நான் தெளிவுப்படுத்தி இருக்கிறேன். தமிழகத்திற்கு, இதுவரை செய்யப்பட்டு வரும் அரிசி ஒதுக்கீட்டில், எந்தவித மாறுதலும் செய்யக் கூடாது என்ற ஒரு திருத்தத்தை, தி.மு.க., சார்பில், டி.ஆர்.பாலு ஏற்கனவே கொடுத்துள்ளார். அந்த திருத்தம், மத்திய அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு, மொத்தமாக வழங்க ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள, 36.78 லட்சம் டன் அரிசி ... |
| "இரவும் பகலும் மாறி மாறி வரும்': விஜயகாந்த் சொல்கிறார் Posted: சென்னை: ""தே.மு.தி.க.,வை, அரசு சீண்டி பார்த்தால், நிச்சயம் தமிழக மக்கள் பதிலடி கொடுப்பர். ஆட்சி அதிகாரத்தை கொடுத்த மக்களுக்கும், தமிழகத்துக்கும் நல்லது செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும்,'' என, அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.அவரது அறிக்கை: தமிழகத்தில், சட்டத்தின் ஆட்சி நடக்கிறதா அல்லது ஆட்சியாளர்களின் கைப்பாவையாக இருக்கும் போலீசாரின் ஆட்சி நடக்கிறதா என்ற சந்தேகம் மக்களுக்கு வலுத்து வருகிறது. புகார் கொடுத்தவர்கள் மீதே, வழக்கு தொடுக்கும் பழக்கம், இந்த ஆட்சியில் தான் தொடர்ந்து இருந்து வருகிறது. தே.மு.தி.க.,வினரால் பொதுச்சொத்துகளுக்கோ, ... |
| சேது சமுத்திரம் திட்டத்திற்காக ரூ.831.80 கோடி வீணடிப்பு Posted: சென்னை: "சேது சமுத்திரம் திட்டத்திற்காக, இதுவரை, 831.80 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், புதிதாக உருவாக்கப்படும் கால்வாய் வழியே, பயணம் செய்வது தொடர்பாக, எந்த கப்பல் நிறுவனத்திடமும், உத்தரவாதம் பெறப்படவில்லை. எதிர்பார்த்தபடி கப்பல்கள் சென்றாலும், லாபம் கிடைக்க, ஒன்பது ஆண்டுகளாகும்' என, சேது சமுத்திரம் கார்ப்பரேஷன் லிமிடெட், பொது மேலாளர் (நிதி) தெரிவித்துள்ளார்.பாக் நீரிணைப்பு மற்றும் "ராமர் பாலம்' என, அழைக்கப்படும் பகுதியை ஆழப்படுத்தி, கப்பல் போக்குவரத்திற்கு ஏற்றதாக மாற்றும் திட்டம், சேது சமுத்திர கால்வாய் திட்டம். ... |
| அரசு ஊழியர்களுக்கு இம்மாதம் சம்பளம் குறைக்க வேண்டாம்:அரசு புது உத்தரவு! Posted: சென்னை: தமிழகத்தில், ஆறாவது ஊதியக் குழுவில் இருந்த, முரண்பாடுகளைக் களைந்து, அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், புதிய ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர், தாசில்தார், உதவிப் பொறியாளர் உட்பட, பலரின் சம்பளம் குறைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சிலர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்றதால், "இம்மாதம் சம்பளம் குறைப்பு செய்ய வேண்டாம்' என, அரசு உத்தரவிட்டுள்ளது.மத்திய அரசின், ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைத்தபடி, 2009ல், தமிழக அரசு ஊழியர்களுக்கு, புதிய சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டது. இதில், பல குறைபாடு இருப்பதாகவும், அவற்றை சரி செய்ய வேண்டும் என்றும், ... |
| பேருந்துகளில் பெயரளவில் உள்ள முதலுதவி பெட்டிகள்: விபத்தின் போது பயணிகள் தவிப்பு Posted: பேருந்துகளில் வைக்கப்பட்டுள்ள முதலுதவி பெட்டிகளில், மருந்துகளை வைக்காததால், விபத்துகளின் போது, பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.பேருந்துகளில் பயணிப்போர் விபத்தில் சிக்கும் போது, முதலுதவி செய்ய வேண்டியது அவசியம். மோட்டார் வாகன சட்டப்படி, அனைத்து பேருந்துகளிலும், முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். தமிழகத்தில், எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில், சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் உள்ளிட்ட, குறைந்த தூரம் பயணிக்கும் பேருந்துகளில், முதலுதவி பெட்டிகள் வைக்கப்படவில்லை. இருப்பினும், தொலை தூரம் செல்லும், அரசு விரைவு போக்குவரத்து கழகம் ... |
| காற்று வாங்கும் தனியார் பி.எட்., கல்லூரிகள் Posted: தனியார் பி.எட்., கல்லூரிகளில், ஒரு மாதமாக மாணவர் சேர்க்கை நடந்து வரும் நிலையில், 75 சதவீத கல்லூரிகளில், 10 இடங்கள் கூட நிரம்பாத அவல நிலை நிலவுகிறது.தமிழகத்தில், ஏழு அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் உள்ளன. இக்கல்லூரிகளில், மொத்தம், 2,118 இடங்கள் உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள, 100 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் உள்ள, 90 சதவீத இடங்களும், அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்லூரிகளில் உள்ள, 55 சதவீத இடங்களும், ஒற்றை சாரள முறையில் மாணவர் சேர்க்கை நடத்தி அரசு நிரப்புகிறது. அதுபோல, தமிழகத்தில், 600க்கும் மேற்பட்ட தனியார் கல்வியியல் ... |
| அரசு நிர்ணய கட்டணத்தை விட குறைவாக திருச்சியில் இயங்கும் மீட்டர் ஆட்டோக்கள் Posted: திருச்சி: அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தை விட, குறைந்த கட்டணத்தில், உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு சார்பாக, திருச்சியில், மீட்டர் பொருத்திய ஆட்டோக்கள், வெற்றிகரமாக இயக்கப்படுகின்றன.தமிழகம் முழுவதும் ஆட்டோக்களும் கட்டணம் நிர்ணயம் செய்து, தமிழக அரசு நேற்று முன்தினம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அரசு அறிவித்துள்ள கட்டணத்தை விட, குறைந்த கட்டணத்தில், திருச்சியில், உபயோகிப்பாளர் பாதுகாப்பு குழு, மீட்டர் ஆட்டோக்களை, பல நாட்களாக இயக்கி வருகிறது. கடந்த மார்ச், 15ம் தேதி முதல், திருச்சியில் மீட்டர் பொருத்திய, ஏழு ஆட்டோக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 27,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |