Tamil News | Online Tamil News |
- பீகார் ரயில் விபத்துக்கு மாநில அரசே காரணம்: ரயில்வே அமைச்சர் திட்டவட்டம்
- உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதம் நடத்தும் முயற்சி முறியடிப்பு : நிலக்கரி ஊழல் பைல்கள் மாயமான விவகாரத்தால் பார்லி., முடக்கம்
- சீனாவுக்கு ராணுவ பலத்தை காட்ட லடாக்கில் "ஹெர்குலிஸ்' விமானம்
- ஆட்சியை தக்க வைப்பதில் ஆர்வம்: மத்திய அரசுக்கு மோடி கண்டனம்
- சுகாதாரத்தின் தலைநகராக சென்னை உருவாக்கப்படும்: ஜெ.,
- ஞானதேசிகன் ஞானோபதேசம் செய்கிறார்: கருணாநிதி குற்றச்சாட்டு
- ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழ்: தலைமை நீதிபதி சதாசிவம் பதில்
- தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம்
- "ஆசிட்' வீசி வினோதினி கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
- முதல்வர் செல்லும் சாலையில் குப்பை லாரிகளை காட்டாதீர்: போலீஸ் கடிதம்
| பீகார் ரயில் விபத்துக்கு மாநில அரசே காரணம்: ரயில்வே அமைச்சர் திட்டவட்டம் Posted: பாட்னா: ""பீகாரில் நேற்று முன்தினம் நிகழ்ந்த மோசமான ரயில் விபத்திற்கு, மாநில அரசே காரணம்,'' என, ரயில்வே இணையமைச்சர், அதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார். மேலும், ""உயிரிழந்தவர்கள் எண்ணிக்கையை, முதல்வர் நிதிஷ்குமார் கூடுதலாக கூறி விட்டார்; விபத்தில் இறந்தவர்கள், 28 பேர் மட்டுமே,'' எனவும், அவர் தெரிவித்துள்ளார்.வட மாநில இந்துக்களின் புனித, சிரவண மாதத்தின் கடைசி திங்கள் கிழமை, மிகவும் விசேஷமான தினமாக கருதப்படுகிறது. பீகாரின் ககாரியா மாவட்டத்தில் உள்ள, கடாயானி சிவன் கோவிலில் வழிபட, நேற்று முன்தினம், ஏராளமான பக்தர்கள், தாமாரா காட் ரயில் நிலையத்தின் ... |
| Posted: நிலக்கரி ஊழல் தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரத்தால், பார்லிமென்டில் நேற்று கடும் ரகளை ஏற்பட்டது. "ஆவணங்கள் தொலைந்து போனது தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், இரு சபைகளின் நடவடிக்கைகளும் முடங்கின. அதனால், உணவு பாதுகாப்பு மசோதா மீது, விவாதம் நடத்தும் முயற்சி முறியடிக்கப்பட்டது.நிலக்கரி ஊழல் சம்பந்தமான, சில ஆவணங்கள், தொலைந்து போய்விட்டதாக, அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால், சில தினங்களுக்கு முன் கூறியிருந்தார். இந்த விவகாரத்தை, நேற்று பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் கிளப்பின. ... |
| சீனாவுக்கு ராணுவ பலத்தை காட்ட லடாக்கில் "ஹெர்குலிஸ்' விமானம் Posted: புதுடில்லி: சீனாவுக்கு, நம் ராணுவ பலத்தை காட்டும் வகையில், லடாக் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள விமான தளத்தில், இந்திய விமானப் படைக்கு சொந்தமான, "சூப்பர் ஹெர்குலிஸ் விமானம்' நேற்று தரையிறக்கப்பட்டது.காஷ்மீரின் லடாக் பகுதியை ஒட்டியுள்ள, எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில், சீன ராணுவத்தினர், அடிக்கடி ஊடுருவுகின்றனர். இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவும், சீன வீரர்கள், அங்கு முகாம்களையும் அமைத்து வருகின்றனர். இதையடுத்து, சீனாவுக்கு, ராணுவ பலத்தை காட்டுவதற்கான நடவடிக்கையில், நம் ராணுவம் ஈடுபட்டது. எல்லை கட்டுப்பாட்டு கோட்டை ஒட்டிய பகுதியில் ... |
| ஆட்சியை தக்க வைப்பதில் ஆர்வம்: மத்திய அரசுக்கு மோடி கண்டனம் Posted: ஆமதாபாத்: ""இந்திய ரூபாய் மதிப்பின் சரிவை தடுப்பதை விட, ஆட்சியை தக்கவைத்துக் கொள்வதிலேயே மத்திய அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது,'' என, குஜராத் முதல்வர், நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.கடந்த சில நாட்களாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு, வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டு வருகிறது. நேற்று ரூபாய் மதிப்பு, 64.11 என பதிவாகியுள்ளது. ரூபாய் மதிப்பின் சரிவை கட்டுப்படுத்த, மத்திய அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என, குஜராத் முதல்வரும், பா.ஜ., தேர்தல் பிரசாரக்குழு தலைவருமான, நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, மோடி ... |
| சுகாதாரத்தின் தலைநகராக சென்னை உருவாக்கப்படும்: ஜெ., Posted: சென்னை: ""இந்தியாவிலேயே, சுகாதாரத்தின் தலைநகராக சென்னை உருவாக்கப்படும்,'' என, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழக பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா கூறினார்.தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலைக் கழகத்தின், வெள்ளி விழா பட்டமளிப்பு நிகழ்ச்சி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில், நேற்று நடந்தது. கவர்னர் ரோசய்யா தலைமையில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்வர் ஜெயலலிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். விழாவில், மருத்துவம், முதுநிலை மருத்துவம், சித்த மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங் உள்ளிட்ட மருத்துவம் ... |
| ஞானதேசிகன் ஞானோபதேசம் செய்கிறார்: கருணாநிதி குற்றச்சாட்டு Posted: சென்னை: "இலங்கை தமிழர் விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், ஞானோபதேசம் செய்கிறார்; வேதாந்தம் பேசுகிறார்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி குற்றஞ்சாட்டியுள்ளார்.அவரது அறிக்கை: "இலங்கையை எதிரி நாடாக கருதினால், தமிழர்கள் பிரச்னை குறித்து யாரிடம் பேசுவது என, தமிழக அரசியல் கட்சிகள் கூற வேண்டும்' என, ஞானதேசிகன் கேட்டிருக்கிறார். ராஜிவை தாக்கிய சிங்கள ராணுவ வீரன், சில வாரங்களுக்கு முன் அளித்த பேட்டியில், "ராஜிவை தாக்கியதற்கு, நான் வருத்தப்படவில்லை' என்றான். இலங்கை அரசு, தொடர்ந்து லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கொன்று குவித்திருக்கிறது. ... |
| ஐகோர்ட்டில் வழக்காடும் மொழியாக தமிழ்: தலைமை நீதிபதி சதாசிவம் பதில் Posted: சென்னை: "சென்னை ஐகோர்ட்டில், தமிழை வழக்காடும் மொழியாக கொண்டு வருவதில், இதுவரை முடிவு எட்டப்படவில்லை' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார்.சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவத்துக்கு, சென்னை ஐகோர்ட்டில் பாராட்டு விழா நடந்தது. தமிழ்நாடு பார் கவுன்சில் உடன் இணைந்து, சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர்கள் சங்கம், சென்னை பார் அசோசியேஷன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேஷன், ஆகிய சங்கங்கள், இந்த நிகழ்ச்சியை நடத்தின.நிகழ்ச்சியில், தலைமை நீதிபதி சதாசிவம் பேசியதாவது: நான் வழக்கறிஞராக பதிவு செய்த பின், முதல் நாள், என் மூத்த வழக்கறிஞர் ... |
| தமிழ் தெரியாத பள்ளி மாணவர்கள்: சிறப்பு பயிற்சி அளிக்க அரசு திட்டம் Posted: தமிழக பள்ளிகளில், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவியரில், தமிழ் எழுத, படிக்கத் தெரியாதவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.மேல்நிலைக் கல்வி கற்க வரும் மாணவ, மாணவியரில் பலருக்கு, தமிழில் எழுத, படிக்கத் தெரியாத நிலை உள்ளது. தமிழில் எழுத, படிக்க சிரமப்படுவது குறித்து, பள்ளிக்கல்வித் துறை ஆய்வு செய்தது. இதையடுத்து, அந்த வகை மாணவ, மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டு, அதற்காக, செயல்முறை புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டு உள்ளன.இந்த திட்டத்தில், ஒவ்வொரு மாவட்ட கல்வித் துறையில் இருந்தும், ... |
| "ஆசிட்' வீசி வினோதினி கொலை செய்யப்பட்ட வழக்கு: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை Posted: புதுச்சேரி: காரைக்காலில், "ஆசிட்' வீசி கொலை செய்யப்பட்ட, வினோதினி வழக்கு குற்றவாளிக்கு, ஆயுள் தண்டனை மற்றும் 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, கோர்ட் உத்தரவிட்டது.காரைக்கால், எம்.எம்.ஜி., நகரைச் சேர்ந்த ஜெயபால் மகள் வினோதினி, 23; பொறியியல் பட்டதாரி. சென்னையில், சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றினார். இவரை, திருவேட்டக்குடியைச் சேர்ந்த சுரேஷ், 26, ஒருதலையாக காதலித்தார். சுரேஷின் காதலை வினோதினி ஏற்க மறுத்ததால், கடந்த ஆண்டு, நவ., 14ம் தேதி, தீபாவளி விடுமுறைக்காக, காரைக்கால் வந்திருந்த வினோதினி, அன்று இரவு, தந்தையுடன் சாலையில் நடந்து சென்றபோது, அவர் மீது, சுரேஷ் ... |
| முதல்வர் செல்லும் சாலையில் குப்பை லாரிகளை காட்டாதீர்: போலீஸ் கடிதம் Posted: சென்னை:முதல்வர் கண்ணில் குப்பை உள்ளிட்ட அசுத்தங்கள் தென்படாமல் இருக்க, குப்பை லாரிகளை முதல்வர் செல்லும் பாதையில் இயக்க தடை விதிக்கப்பட உள்ளது.இதற்கான முதல் கட்டமாக, குப்பை லாரிகள் அடிக்கடி பழுதடைந்து, பாதி வழியில் நிற்பதால், முதல்வரின் பாதுகாப்பு பாதிக்கப்படுகிறது என, போக்குவரத்து போலீசார் மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.அடிக்கடி மக்கர்:தேனாம்பேட்டை மண்டலத்தின் ஒரு பகுதியில் சேகரமாகும் குப்பை, மயிலாப்பூரில் உள்ள காரணீஸ்வரர் பகோடா சாலையில் உள்ள குப்பை மாற்று வளாகத்தில் கொட்டப்படுகிறது. அங்கு தினசரி 40க்கும் அதிகமான ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 21,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |