Tamil News | Online Tamil News |
- தமிழக கட்சிகள் எதிர்ப்பை கண்டுகொள்ளவில்லை மத்திய அரசு உதாசீனம் : கொழும்பு வருமாறு மன்மோகனுக்கு இலங்கை மந்திரி நேரடி அழைப்பு
- "1995 முதல் ஐ.எஸ்.ஐ.,யுடன் எனக்கு தொடர்பு உள்ளது': பயங்கரவாதி துண்டா வாக்குமூலம்
- பீகாரில் பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 37 பேர் பலி
- குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்
- கோவை மாநாட்டில் குஜராத் முதல்வர் மோடி பங்கேற்பு
- ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் திட்டம் கடைசி நேரத்தில் நிறுத்தம்
- ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு? டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல்
- கூலியோடு "குவார்ட்டர்' கேட்கும் விவசாய தொழிலாளிகள்
- கபாலீஸ்வரர் கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட்டுக்கு தடை? பக்தர்கள் கவனத்தை திசை திருப்புவதால் ஆலோசனை
- உணவு பாதுகாப்பு மசோதா திருத்தங்கள் ஏற்க தயார் என மத்திய அரசு அறிவிப்பு
| Posted: புதுடில்லி:"இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்கக் கூடாது' என, தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அதை உதாசீனம் செய்யும் வகையில், இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீசை, பிரதமர் மன்மோகன் சிங்கும், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித்தும், நேற்று சந்தித்து பேசினர். அவரும், கொழும்பு வரும்படி, பிரதமர் மன்மோகனுக்கு அழைப்பு விடுத்தார்.இலங்கையில், 2009ல், விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்திற்கும் இடையே நடந்த, கடைசி கட்டப் போரின் போது, ஏராளமான போர்க் குற்றங்களும், இனப் படுகொலைகளும் நிகழ்ந்தன. ... |
| "1995 முதல் ஐ.எஸ்.ஐ.,யுடன் எனக்கு தொடர்பு உள்ளது': பயங்கரவாதி துண்டா வாக்குமூலம் Posted: புதுடில்லி:"பாகிஸ்தான் உளவு அமைப்பான, ஐ.எஸ்.ஐ.,யுடன், 1995ம் ஆண்டு முதல், எனக்கு தொடர்பு உள்ளது' என, டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்ட, பயங்கரவாதி அப்துல் கரீம் துண்டா, 70, தெரிவித்துள்ளான்.நாட்டில் நிகழ்ந்த, 40க்கும் மேற்பட்ட குண்டு வெடிப்புகளில் தொடர்புடைய, லஷ்கர் -இ- தொய்பா பயங்கரவாத அமைப்பின், வெடிகுண்டு நிபுணரான, அப்துல் கரீம் துண்டா, கடந்த வெள்ளியன்று, இந்திய - நேபாள எல்லையில், டில்லி போலீசாரால் கைது செய்யப்பட்டான். தற்போது, டில்லி போலீஸ் காவலில் உள்ள, அவனிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.விசாரணையின் போது, துண்டா கூறியதாவது:நான் சவுதி அரேபியா ... |
| பீகாரில் பக்தர்கள் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 37 பேர் பலி Posted: ககாரியா:பீகாரில், ரயில் பாதையில் அமர்ந்திருந்த பக்தர்கள் மீது, வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், 37 பேர் பலியாயினர். இதனால் கோபமடைந்த பொதுமக்கள், ரயில் டிரைவரை தாக்கி, பெட்டிகளுக்கு தீ வைத்து எரித்தனர்; சம்பவம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.ரயில் விபத்துகளும், ரயில் பாதையில், நக்சல்களால் நாச வேலைகளும் அதிகமாக நடைபெறும் பீகார் மாநிலத்தில், நேற்று மீண்டும் ஒரு மோசமான விபத்து நிகழ்ந்துள்ளது. அங்குள்ள ககாரியா மாவட்டத்தின், தாமாரா காட் என்ற ரயில் நிலையத்தில் நிகழ்ந்த இந்த விபத்துக்கு, முழுவதும் மனித தவறே காரணம்.இந்துக்களின் ... |
| குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம்: பிரதமருக்கு கருணாநிதி கடிதம் Posted: சென்னை:"தூத்துக்குடி மாவட்டம், குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளத்தையும், திருநெல்வேலி மாவட்டம், மகேந்திரகிரியில் வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தையும், அமைக்க வேண்டும்' என, பிரதமருக்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, மன்மோகன் சிங்க்கு அவர் எழுதியுள்ள கடித விவரம்:"இஸ்ரோ' மூலம், கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில், இந்திய வான்வெளி தொழில்நுட்ப நிலையம் துவங்கப்பட்டது. இந்நிலையில், வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை விஞ்ஞானிகள் பற்றாக்குறையை சமாளிக்க, வான்வெளி மற்றும் திரவ உந்துவிசை கல்வி நிறுவனத்தை ... |
| கோவை மாநாட்டில் குஜராத் முதல்வர் மோடி பங்கேற்பு Posted: அடுத்த மாதம், 26ம் தேதி, கோவையில் நடக்கும், "இளம் தாமரை' தமிழக பா.ஜ., இளைஞர் அணி மாநாட்டில், குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார் என்றும், இம்மாநாடு ஐதராபாத்தை அடுத்து நடக்கும், இரண்டாவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டமாக அமையும் என்றும், அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், பா.ஜ., கட்சியின் தேர்தல் பிரசாரக் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் முதல் தேர்தல் பிரசார பொதுக் கூட்டம், சமீபத்தில் ஐதராபாத்தில் நடந்தது.இந்த பொதுக் கூட்டத்தை தொடர்ந்து, அடுத்த பொதுக் ... |
| ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் திட்டம் கடைசி நேரத்தில் நிறுத்தம் Posted: சென்னை:இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய கட்டமாக கருதப்படும், ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் ஏவும் முயற்சி, நேற்று கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. ராக்கெட்டின், இரண்டாவது அடுக்கில், திரவ எரிபொருள் கசிவு ஏற்பட்டதால், "இஸ்ரோ'வின் சாதனை முயற்சியான, "ஜி.எஸ்.எல்.வி., டி-5' ராக்கெட்டின், "கவுன்ட்-டவுன்' நிறுத்தப்பட்டது. "ராக்கெட் ஏவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் (இஸ்ரோ), பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்களை ஏவி வருகிறது. குறைந்த எடையிலான, செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும், பி.எஸ்.எல்.வி., ... |
| ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கு தொடர்பு? டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் அதிர்ச்சி தகவல் Posted: டி.இ.டி., வினாத்தாள் மோசடியில் ஈடுபட்டதாக, ஆறு பேரை கைது செய்த போலீசார், மேலும், பலரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகளுக்கும், தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது.6 பேர் கைது:தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடந்த, 17 மற்றும் 18ம் தேதிகளில் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு (டி.இ.டி.,) நடந்தது. 17ம் தேதி, தர்மபுரியில் வினாத்தாள் கொடுப்பதாக கூறி, மோசடியில் ஈடுபட்ட டாஸ்மாக் ஊழியர் இருவர் உள்ளிட்ட, ஆறு பேரை, தர்மபுரி தனிப்படை போலீசார் கைது செய்தனர்.வினாத்தாள் நகல் உள்ளிட்ட எந்த பிரதிகளையும், பணம் ... |
| கூலியோடு "குவார்ட்டர்' கேட்கும் விவசாய தொழிலாளிகள் Posted: கூலியுடன், "குவார்ட்டர்' மது பாட்டிலும் கொடுத்தால் தான் கூலியாட்கள் வேலைக்கு வரும் நிலை, டெல்டா மாவட்டங்களில் உருவாகி உள்ளது.கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சியால், பிழைப்பு தேடி, அண்டை மாநிலங்களுக்கு பல விவசாய தொழிலாளிகள் இடம் பெயர்ந்து விட்டதால், டெல்டா மாவட்டங்களில் கூலித் தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.பஞ்சம் பிழைக்க...:டெல்டா மாவட்டங்களில், 10 லட்சம் பேர், விவசாய தினக்கூலி தொழிலை நம்பி இருந்தனர்.கடந்த ஆண்டு, கடும் வறட்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்ட போது, ஏக்கருக்கு, 15 ஆயிரம் ரூபாய் வீதம் அரசு நஷ்ட ஈடு வழங்கியது.அதே போல், ... |
| கபாலீஸ்வரர் கோவிலில் ஜீன்ஸ், டி ஷர்ட்டுக்கு தடை? பக்தர்கள் கவனத்தை திசை திருப்புவதால் ஆலோசனை Posted: சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில், "ஜீன்ஸ் பேன்ட், டிஷர்ட்' போன்ற நவநாகரிக உடைகள் அணிந்து வர, விரைவில் தடை விதிக்கப்படும் என, கூறப்படுகிறது. பெண்கள் அணியும் நவநாகரீக உடைகள், ஆண் பக்தர்களின் கவனத்தை திசை திருப்புவதாக கோயில் நிர்வாகத்தினர் இடையே எழுந்துள்ள கருத்தை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தெரிகிறது.குற்றச்சாட்டு: தற்போது கோவில்களுக்கு செல்லும் பெரும்பாலான பக்தர்கள், "டி ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட், பெர்முடாஸ், ஸ்கர்ட்' போன்ற நவநாகரிக ஆடைகளை அணிந்து வருகின்றனர். குறிப்பாக இளம்பெண்கள் பலரும் இறுக்கமான உடைகளை அணிந்து ... |
| உணவு பாதுகாப்பு மசோதா திருத்தங்கள் ஏற்க தயார் என மத்திய அரசு அறிவிப்பு Posted: புதுடில்லி:""உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக, எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் பொருத்தமான திருத்தங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்,'' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் தெரிவித்தார்.மத்திய அரசு கொண்டு வந்துள்ள, உணவு பாதுகாப்பு மசோதாவில், 200க்கும் மேற்பட்ட திருத்தங்களை செய்ய, எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்துள்ளன. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, நேற்று பார்லிமென்டிற்கு வெளியே, நிருபர்களிடம் பேசிய, அமைச்சர் கமல்நாத் கூறியதாவது:உணவு பாதுகாப்பு மசோதா தொடர்பாக, எதிர்க்கட்சிகள் தெரிவிக்கும் நல்ல மற்றும் பொருத்தமான, திருத்தங்கள் ஏற்றுக் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 20,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |