Tamil News | Online Tamil News |
- தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு: நாளை சுதந்திர தினத்தில் அசம்பாவிதம் நடக்குமா?
- சோனியா மருமகனால் பார்லி., நடவடிக்கைகள் நேற்று அவுட்
- முப்படைகளுக்கு ரூ.2.35 லட்சம் கோடி ஆயுதங்கள்
- குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி.,க்களை காப்பாற்ற முயற்சி
- கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் விலை: வியாபாரிகளின் பதுக்கல் காரணமா...
- ராஜ்யசபா தி.மு.க., தலைவராக கனிமொழியை நியமிக்க பரிந்துரை
- பாதுகாப்பு கேள்விக்குறி: கல்பாக்கத்தில் தொடரும் அசாதாரண சம்பவங்கள்
- இந்தியர்கள் மீது அளவு கடந்த அன்பு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உருக்கம்
- பிரிட்டன் பார்லியில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு
- வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் விதிமீறல் : சி.ஏ.ஜி., அறிக்கையில் தகவல்
| தமிழகம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பு: நாளை சுதந்திர தினத்தில் அசம்பாவிதம் நடக்குமா? Posted: சென்னை:"சுதந்திர தினத்தன்று, பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம்' என, மத்திய உளவுத் துறை எச்சரித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும், போலீசார், உஷார் படுத்தப்பட்டு உள்ளனர். அசம்பாவிதம் நடந்து விடாமல் தடுக்க, ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.நாட்டின், 67வது சுதந்திர தினம், நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தன்று, முக்கிய நகரங்களில், பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதல் நடத்தி, அமைதியைச் சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக, மத்திய உளவுத் துறைக்கு, ரகசியத் தகவல் கிடைத்தது.இந்தத் தகவல், ... |
| சோனியா மருமகனால் பார்லி., நடவடிக்கைகள் நேற்று அவுட் Posted: காங்கிரஸ் தலைவர் சோனியாவின்மருமகன் ராபர்ட் வாத்ரா, நில அபகரிப்பு மோசடியில், ஈடுபட்டு வருவதாக குற்றம் சாட்டி, பார்லிமென்டில், எதிர்க்கட்சிகள் பெரும் ரகளையில் இறங்கின. இதனால், லோக்சபா, ராஜ்யசபா என, இரு சபைகளும், நேற்று அடுத்தடுத்து பல முறை ஒத்திவைக்கப்பட்டன.அரியானா மாநிலத்தில், மிக முக்கியமான இடங்களில் உள்ள, பல ஏக்கர் நிலங்களை, மிக குறைந்த விலைக்கு, சோனியாவின் மருமகன் ராபர்ட் வாத்ரா வாங்கியிருப்பதாக, ஏற்கனவே செய்திகள் வெளியாயின. இந்த மோசடி குறித்து, அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்த, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா, அதிரடியாக பணிமாற்றம் ... |
| முப்படைகளுக்கு ரூ.2.35 லட்சம் கோடி ஆயுதங்கள் Posted: புதுடில்லி:பாதுகாப்பு துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, பார்லிமென்டில் கூறியதாவது:கடந்த, 2010 - 11 முதல் 2012 - 13 வரையிலான, மூன்று நிதியாண்டுகளில், ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகியவற்றுக்கு தேவையான ஆயுதங்கள், பாதுகாப்பு சாதனங்களை இறக்குமதி செய்த வகையில், 2.35 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டு உள்ளது.முப்படைகளில், ராணுவத்திற்கான ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்காக, மிக அதிக அளவில், அதாவது, 1.92 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. விமானப் படை: இதில், ஏவுகணைகள் மற்றும் ஆயுதங்களுக்காக, 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.விமானப் படைக்காக, 38,900 கோடி ரூபாய் ... |
| குற்ற வழக்குகளில் தண்டனை பெறும் எம்.பி.,க்களை காப்பாற்ற முயற்சி Posted: "குற்ற வழக்குகளில், தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை, உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும்; போலீஸ் காவலில் அல்லது சிறையில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் பிறப்பித்த உத்தரவை செல்லாததாக்கும் வகையில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில், திருத்தம் செய்ய, அனைத்து கட்சி கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டது.அனைத்து கட்சி கூட்டம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை, நேற்று மத்திய அரசு கூட்டியிருந்தது. பார்லிமென்ட் வளாகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் சிதம்பரம், கமல்நாத், கபில்சிபல், பா.ஜ.,வைச் ... |
| கண்ணீர் சிந்த வைக்கும் வெங்காயம் விலை: வியாபாரிகளின் பதுக்கல் காரணமா... Posted: புதுடில்லி:வெங்காயத்தை உரித்தால் தான் கண்ணீர் வரும்; ஆனால், அதன் விலையை கேட்டாலே, தற்போது கண்ணீர் வருகிறது. அந்த அளவிற்கு வெங்காயம் விலை, கிடு.. கிடுவென, உயர்ந்து வருகிறது.கடந்த மாத இறுதி வரை, தக்காளி விலை, விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து, தற்போது இறங்கியுள்ளது. இப்போது வெங்காயத்தின் முறை. ஆனால், தக்காளியை போல், இதன் விலை, குறைய வாய்ப்பில்லை, மேலும் உயர்ந்து கொண்டு தான் போகும்.ஏற்றுமதி: ஏனெனில், அடுத்த இரண்டு மாதங்களுக்கு, புதிய வெங்காயம் வரத்தாக வாய்ப்பில்லை என்று, தெரிகிறது. நாசிக்கின் லசல்கான் சந்தையில் வரத்தாகும்,வெங்காயத்தில் ... |
| ராஜ்யசபா தி.மு.க., தலைவராக கனிமொழியை நியமிக்க பரிந்துரை Posted: ராஜ்யசபா தி.மு.க., தலைவர் பதவிக்கு, தி.மு.க., கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவையின் மாநில செயலர் கனிமொழியை பரிந்துரை செய்வதாக, ராஜ்யசபா தலைவர் அமீது அன்சாரிக்கு, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், கடிதம் எழுதியுள்ளார்.ஜூன் மாதம், ராஜ்யசபா தேர்தல் நடந்தது. அ.தி.மு.க., சார்பில், மைத்ரேயன் உட்பட, நான்கு எம்.பி.,க்களும், தி.மு.க., சார்பில் கனிமொழியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், அக்கட்சியின் தேசிய செயலர், டி.ராஜாவும் பதவி ஏற்றனர்.பார்லிமென்ட் மழைக்காலக் கூட்டத் தொடர் துவங்கியதும், அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் பதவி ஏற்றனர். ஆனால், அவர்களுடன் சேர்ந்து, கனிமொழி பதவி ... |
| பாதுகாப்பு கேள்விக்குறி: கல்பாக்கத்தில் தொடரும் அசாதாரண சம்பவங்கள் Posted: கல்பாக்கம்:கல்பாக்கத்தில் நிகழும் அசாதாரண சம்பவங்களால், அணுசக்தி வளாக பாதுகாப்பு, கேள்விக் குறியாக மாறி வருகிறது.கல்பாக்கத்தில், அணுசக்தித் துறையின்கீழ், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் (இதன் கட்டுப்பாட்டில், கல்பாக்கம் அணு மறுசுழற்சி, புளூட்டோனியம் மறுசுழற்சி ஆகிய மையங்கள் உள்ளன), இந்திய அணுமின் கழகம் சார்பில், சென்னை அணுமின் நிலையம் மற்றும் பாரதிய வித்யுத் நிகாம் நிறுவனம் (பாவினி) சார்பில், 500 மெகா வாட் மின்திறன், முன்மாதிரி அதிவேக ஈனுலை அணுமின் திட்டம், பிற சார்பு நிறுவனங்கள் ஆகியவை, இயங்கி வருகின்றன.இங்கு ... |
| இந்தியர்கள் மீது அளவு கடந்த அன்பு: பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் உருக்கம் Posted: இஸ்லாமாபாத்:""இந்தியர்கள் மீது, அளவு கடந்த அன்பும், பாசமும் கொண்டுள்ளோம்,'' என, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.காஷ்மீர் எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், சமீபத்தில், அத்துமீறி தாக்குதல் நடத்தியதால், இருநாடுகளுக்கிடையே, பதட்டம் நிலவுகிறது.இது தொடர்பாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், "டிவி' உரையில் கூறியதாவது:கடந்த, 1947ம் ஆண்டுக்கு முன், இந்திய-பாகிஸ்தான் மக்கள் ஒன்றாக தான் இருந்தோம். சுதந்திரம் பெற்று, 65 ஆண்டுகள், ஆகி விட்டன. தற்போது இருநாட்டு உறவை புதுப்பிக்க வேண்டியுள்ளது. இருநாடுகளும் கை கோர்த்து நல்ல நண்பர்களாக வேண்டும். ... |
| பிரிட்டன் பார்லியில் உரையாற்ற மோடிக்கு அழைப்பு Posted: லண்டன்:பிரிட்டன் பார்லிமென்டில் உரையாற்ற, குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டின் தொழிலாளர் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.குஜராத்தில், 2002ம் ஆண்டு, நடந்த கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். "இதற்கு, மாநில முதல்வர் மோடி தான் காரணம்' என, மத்திய அரசு குற்றம் சாட்டியது. அவர் மீது, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், "மோடிக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை' எனக் கூறி, அவரை வழக்கிலிருந்து விடுவித்தது.இந்நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள், மோடிக்கு விசா வழங்க மறுத்தன. கடந்த ஆண்டு, குஜராத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ... |
| வி.ஐ.பி.,க்களுக்கான ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் விதிமீறல் : சி.ஏ.ஜி., அறிக்கையில் தகவல் Posted: புதுடில்லி:வி.ஐ.பி.,க்களுக்கு, ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில், ராணுவ அமைச்சகம், பாதுகாப்பு துறை கொள்முதல் விதிமுறைகளை மீறியுள்ளதாக, மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி.,) பார்லிமென்ட்டில், நேற்று அறிக்கை தாக்கல் செய்தது.ஜனாதிபதி, பிரதமர் மற்றும் முக்கிய அமைச்சர்கள் உள்ளிட்ட, வி.ஐ.பி.,க்கள் பயணிப்பதற்காக, 12 அதி நவீன சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்க, இத்தாலியின், "அகஸ்டா வெஸ்ட்லாண்ட்' ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்துடன், ராணுவ அமைச்சகம், ஒப்பந்தம் செய்தது. 3,727 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தத்தில், பெருமளவில் ஊழல் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 14,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |