ஈகரை தமிழ் களஞ்சியம் |
- உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் !
- சிங்களத் தீவிரவாதி ராஜபக்சே
- சென்னைக்கு வயது 374
- கவுண்டமணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்
- திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு:
- நேதாஜி - மதுமிதா
- தமிழ்நாடு கலாச்சாரம்
- ஆண் மற்றும் பெண் குடமிளகாய்கள் :)
- வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -32)
- என்னை கவர்ந்தது......!
- நான் ரசித்தவை - மதுமிதா
- பழந்தமிழ் எழுத்து வளர்ச்சி - மதுமிதா
- பெர்னாட்ஷா செய்த தமாஷ்!
- அவதார புருசன்
- தமிழ் பெயர் காரணம் !!
- மலிவு வேண்டாம்!
- தெரிஞ்சுக்கோங்க!
- அற்புத முதல்வர்
- கோவில் மணி ஓசை!
- மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா
- வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு!
- பாண்டியர்கள் - மதுமிதா
- வெளிச்சம் இல்லாதப்போது பச்சை நிறத்தில் ஒளிரும் முயல்கள் :)
- வெயிலை தணிக்க தர்பூசணி உடை; சீனாவில் புதுமை (படங்கள்) !
- இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்:- மதுமிதா
- பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா
- தன்னம்பிக்கை வரிகள் ..!
- தெரிந்து கொள்வோம் - மதுமிதா
- ஜாபி மேத்தியுவ் 3 தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வெண்றார்
- எல்லையில் தாக்குதலை பாக்., நிறுத்த வேண்டும்: வெளியுறவுத்துறை கண்டிப்பு
- இராவணன்
- எக்ஸ்க்யூஸ்மி சார் எனக்கு பல் வலி!
- சென்னை:"தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கக் கூடாது'
- கல்வி உதவித் தொகை அறிவிப்பு
- பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பொருத்தமானவர்
- குப்பைத் தொட்டியில் தங்கம்
- தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு
- நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை
- நகைச்சுவை - அருணா
| உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் ! Posted: 13 Aug 2013 11:24 AM PDT உலகிலேயே அதிக கொலைகள் செய்த மனிதன் ஒரு இந்தியன் என்று உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை ! ஆமாம் இது முற்றிலும் உண்மையே . பெஹ்ராம் [Thug Behram ] என்கிற அந்த இந்தியன் தான் இந்த கொலைபாதகச் செயலை செய்தவன் . 1790-1840 இடையே அவன் தனி மனிதனாக கொன்ற மக்களின் எண்ணிக்கை தோரயமாக 931 ! இதற்காக அவன் பயன் படுத்திய ஆயுதம் என்ன தெரியுமா ? - - - - - - - - - - - - - - - - - - - - - - -- - - - - - - - - - -- - - - - - - - - - -- - - - - - - - - - -- - - - - - - - - - -- - - - - - - - - - - -வெறும் ... |
| Posted: 13 Aug 2013 11:15 AM PDT திருத்த முடியாத சிங்களத் தீவிரவாதி ராஜபக்சே: சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான்: இலங்கை அதிபர் ராஜபக்சே ஒரு சிங்களத் தீவிரவாதி. அவரை திருத்தவே முடியாது என்று சிங்கப்பூரின் முதல் பிரதமரும், சிங்கப்பூரின் நவீன சிற்பியும், தற்போதைய பிரதமரின் தந்தையுமான லீ குவான் யூ பரபரப்பாக கூறியுள்ளார். லீ குவான் யூ உடனான உரையாடல்கள் என்ற தலைப்பில் லாஸ் ஏஞ்சலெஸை சேர்ந்த பேராசிரியர் டாம் பிளேட், லீயிடம் பேட்டி கண்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார். அந்த நூலில்தான் ராஜபக்சே குறித்து லீ குவான் யூ இவ்வாறு கூறியுள்ளார். இலங்கையின் ... |
| Posted: 13 Aug 2013 11:10 AM PDT 374 வயது ஆகிறது 'சென்னை தினம்' ஒரு மாதம் கொண்டாடப்படுகிறது : பாரம்பரியமும் வரலாற்று சிறப்பும் மிக்க சென்னை நகருக்கு 374 வயது ஆகிறது. இதையொட்டி சென்னை தினம் (மெட்ராஸ் டே) இந்த ஆண்டு ஒரு மாத காலம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மேலும், பாரம்பரிய நடைபயணம், கண்காட்சி, கருத்தரங்கம் உள்பட பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. சென்னைக்கு வயது 374 தமிழ்நாட்டின் தலைநகராக திகழும் சென்னை நகரம் 22.8.1639 அன்று உதயமானது. பிரான்சிஸ் டே, ஆன்ட்ரு கோகன் ஆகியோர் இதன் நிறுவனர்களாக ... |
| கவுண்டமணி பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் Posted: 13 Aug 2013 10:32 AM PDT எனக்கு மிக மிக பிடித்த நகைச்சுவை நடிகர் கவுண்டமணிதான், ஆனந்த விகடனில் அவரை பற்றி வந்த சில துணுக்குகள்... * 'சுப்பிரமணி'யாக கவுண்டமணி பிறந்தது உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள வல்லக்கொண்டபுரம்! * கவுண்டமணிக்குப் பெரிய படிப்பெல்லாம் இல்லை. ஆனால், பேச்சில் ரஜனீஷின் மேற்கோள்கள் தெறிக்கும். 'பார்த்தால் காமெடியன், படிப்பில் அறிவாளி' என்பார் இயக்குநர் மணிவண்ணன்! * பாரதிராஜாதான் 'கவுண்டமணி' எனப் பெயர் மாற்றினார். '16 வயதினிலே'தான் அறிமுகப் படம்! * அம்மாவை 'ஆத்தா' என்றுதான் ஆசையாக அழைப்பார். ... |
| திருமலை நாயக்கர் காலத்திற்கு முன் மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் அழகர் திருவிழாவின் வரலாறு: Posted: 13 Aug 2013 10:15 AM PDT ஸ்ரீ கள்ளழகருக்குரிய திருவிழாக்களில் மிகவும் முக்கியமானது சித்ரா பௌர்ணமித் திருநாள்தான். மதுரை ஸ்ரீ மீனாட்சிக் கோயிலில் தொடங்கும் சித்திரைத் திருவிழாவும் இவ்விழாவும் ஒரே சமயத்தில் நடக்கின்றன. திருமலை நாயக்கர் காலத்திற்கு முன்பு இந்தா இரண்டு உற்சவங்களும் வெவ்வேறு மாதங்களில் நடந்தன. அப்போது அழகரின் சைத்ரோற்சவம் சித்திரை மாதத்திலும் மீனாட்சி கோயில் உற்சவம் மாசி மாதத்திலும் நடந்தன. இதனால் தான் மாசி மாதத்தில் நடக்கும் இத்திருவிழாவில் மீனாட்சி சுந்தரேசுவரர்களுடைய ரதம் செல்லும் வீதிகளுக்கும் ... |
| Posted: 13 Aug 2013 10:07 AM PDT நேதாஜி என்று நாம் இந்தியா மக்களால் பெருமையுடன் அழக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் ஒரு நாட்டின் சுதந்திரம் என்பது போராடி, ரத்தம் சிதறி உயிர் தியாகம் செய்து கைப்பற்ற வேண்டிய ஒன்றே தவிர, கெஞ்சியும் கேட்டும் பேரம் பேசியும் பெருவதல்ல ..." என்று வாழ்ந்த, ஒவ்வொரு நாளும் நெருப்பாய் நின்றவர்.... சுக்கைப்போல, கடகைப்போல சும்மா பெற்றதில்லை நம் சுதந்திரம் என்று சொல்லும் போதே, இன்றைக்கும் நம் இளைஞர்கள் சிலிர்த்தெழுந்து நினைவில் நிறுத்துவது நேதாஜியை தான்., அவர் மாபெரும் தியாகி விவேகானந்தரின் கருத்துகளால் ... |
| Posted: 13 Aug 2013 10:00 AM PDT ![]() |
| ஆண் மற்றும் பெண் குடமிளகாய்கள் :) Posted: 13 Aug 2013 09:50 AM PDT தெரியுமா உங்களுக்கு மூன்று பிரிவுகள் உள்ளது ஆண் மிளகாய், 4 உள்ளது பெண் மிளகாய் ஆண் குடைமிளகாய்கள் சமையலுக்கு நன்றாக இருக்குமாம். பெண் குடைமிளகாய்கள் கொஞ்சம் தித்திப்பாக இருப்பதால் சாலட் கு நல்லா இருக்குமாம் நன்றி : பிரமின்ஸ்நெட் |
| வீரம் வெளஞ்ச மதுரை...!- மதுமிதா Posted: 13 Aug 2013 09:41 AM PDT ![]() |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -3(படம் எண் -32) Posted: 13 Aug 2013 09:41 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது பாலா சார் அவர்களின் படம் பார்த்து (கதை) வசனம் சொல்லுங்கள் !- என்பதன் தொடர்ச்சி .. ஆகவே முதலில் இனிய நண்பர் திரு.பாலா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துகொள்கின்றேன் . மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . கிருஷ்ணம்மா மற்றும் இனியவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த திரி தொடங்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய ... |
| Posted: 13 Aug 2013 09:33 AM PDT முஸ்லிம் கொள்கைகள் நிறைய எனக்கு மிக பிடிக்கும் அதில் இதுவும் ஒன்று ஒரு ஆங்கிலேயர் முஸ்லிம் ஒருவரிடம் கேட்டார்; ''நீங்கள் ஏன் பெண்களிடம் கை குலுக்குவதை தவறு என்று சொல்லி தடுக்கின்றீர்கள் ?'' முஸ்லிம் கேட்டார்; "உங்கள் நாட்டு எலிஸெபெத் ராணியின் கரங்களை உங்களால் குலுக்க முடியுமா...? அதற்கான அனுமதி உங்களுக்குக் கிடைக்குமா...?'' அவசர அவசரமாக மறுத்தார் அந்த ஆங்கிலேயர்... ''அதெப்படி முடியும்..? அவர்கள்மகாராணியாயிற்றே ....!'' முஸ்லிம் உதட்டில் புன்னகைத் தழுவ சொன்னார்; ''எங்களைப் ... |
| Posted: 13 Aug 2013 09:25 AM PDT ![]() |
| பழந்தமிழ் எழுத்து வளர்ச்சி - மதுமிதா Posted: 13 Aug 2013 09:24 AM PDT ![]() |
| Posted: 13 Aug 2013 09:23 AM PDT நவநாகரிகப் பெண் ஒருத்தி, பெர்னாட்ஷாவைப் பார்க்க வந்திருந்தாள். அப்போது அவள் ஷாவிடம், ""மிஸ்டர் ஷா என்னைப் பார்த்தால் எனக்கு எவ்வளவு வயதிருக்கும் என்று எண்ணுகிறீர்கள்?'' என்று கேட்டார். ஷா ஒரு தடவை அந்த அம்மாவை ஏற இறங்கப் பார்த்தார். பிறகு அவர் புன்னகைப் பூத்தவாறு, அந்தப் பெண்ணிடம், ""அம்மணி, உங்களின் பல்லைப் பார்த்தால், பதினெட்டு வயது இருக்குமென்று தெரிகிறது. உங்களின் தலைமுடியைப் பார்த்தால், பத்தொன்பது வயது இருக்கலாமோ என்று தெரிகிறது. நீங்கள் நடந்து கொள்ளும் விதத்தைப் பார்த்தால், பதினான்கு ... |
| Posted: 13 Aug 2013 09:21 AM PDT அவதார புருசன் புத்தகம் தேவை |
| Posted: 13 Aug 2013 09:19 AM PDT நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பொருள் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்... க, ச, ட, த, ப, ற – ஆறும் வல்லினம்., ங, ஞ, ண, ந, ம, ன – ஆறும் மெல்லினம்., ய, ர, ல, வ, ழ, ள – ஆறும் இடையினம். உலக மாந்தன் முதல் முதலில் பயன்படுத்திய உயிர் ஒலிகள் அ(படர்க்கை), இ(தன்னிலை), உ (முன்னிலை) என்பது பாவாணர் கருத்து. தமிழின் மெய் எழுத்துக்களில் வல்லினத்தில் ஒன்றும், மெல்லினத்தில் ஒன்றும், இடையினத்தில் ஒன்றுமாக மூன்று மெய் எழுத்துக்களைத் தேர்ந்தெடுத்தனர். அவை த், ம், ழ் என்பவை. இந்த ... |
| Posted: 13 Aug 2013 09:10 AM PDT தனது ஏழ்மையான சூழ்நிலையிலும் தன் மகன் யுவராஜ் ஆசையோடு கேட்டபடி கைக்கடிகாரம் ஒன்றை வாங்கி வந்த கணேசன், யுவராஜை அழைத்து கைக்கடிகாரத்தைக் கொடுத்தார். கைக்கடிகாரத்தை வாங்கி பார்த்த யுவராஜ், ""அப்பா! இந்த விலை மலிவான கைக்கடிகாரம் எனக்கு வேண்டாம்! நான் இதைக் கட்டிக் கொள்ள மாட்டேன்!'' என்று பிடிவாதமாகச் சொல்லி விட்டான். யுவராஜ் சொன்னதைக் கேட்ட அவனது தந்தையின் முகமே வாடிவிட்டது. இருப்பினும், அவர் மகன் மீதுள்ள பாசத்தால், சிறிதும் கோபம் கொள்ளவில்லை. ""யுவராஜ் உனக்கு சீக்கிரமே விலையுயர்ந்த கைக்கடிகாரம் ... |
| Posted: 13 Aug 2013 09:03 AM PDT வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 13 Aug 2013 09:01 AM PDT கையிருப்புத் தொகை ரூபாய் 1,080.00 வங்கி இருப்பு ரூபாய் 9,720.00 மொத்தச் சொத்து மதிப்பு - ரூபாய் 2,20,000.00 இது, திரிபுரா மாநிலத்தை ஆளும் முதல்வர் மாணிக் சர்க்கார் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி), சொத்துக் கணக்கு! வரும் சட்டசபை தேர்தலில் மீண்டும் போட்டியிடும் மாணிக் சர்க்கார், வேட்பு மனுவில் இந்தத் தகவல்களை தந்திருக்கிறார். இதில் மொத்த சொத்து என்று குறிப்பிடப்பட்டிருப்பது, இவருக்குச் சொந்தமாக இருக்கும் தகரக் கூரை வேயப்பட்ட 432 சதுர அடி வீடுதான். இதனுடைய மதிப்புதான் 2 லட்சத்து 20 ஆயிரம் ... |
| Posted: 13 Aug 2013 08:47 AM PDT "மகாலிங்கம் வர்றார்...' கோமளா தகவல் சொல்லி விட்டு உள்ளே போக, தொடர்ந்து கேட் திறக்கும் சத்தமும், பின் மூடும் சத்தமும் கேட்டது. படித்துக் கொண்டிருந்த பேப்பரை மடித்து வைத்து, மகாலிங்கத்தை எதிர்கொள்ள ஆயத்தமானார் முரளிதரன். மடித்துக் கட்டிய வேட்டி, முழுக்கை சட்டை, தோளில் துண்டு சகிதமாக வந்து கொண்டிருந்தார் மகாலிங்கம். தனியார் அலுவலகத்தில் வேலை பார்த்து ஒய்வு பெற்றவர் மகாலிங்கம். கருப்பான முகத்தில் நரைத்திருந்தாலும், கச்சிதமாக அமர்ந்திருந்த மீசையும், அகல நெற்றி, மேல் நோக்கி சீவப்பட்டிருந்த தலைமுடி, ... |
| மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ...! - மதுமிதா Posted: 13 Aug 2013 08:30 AM PDT மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை. இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் ... |
| வேர்கடலை சாப்பிட்ட 2 வயது சிறுவனுக்கு மாரடைப்பு! Posted: 13 Aug 2013 08:29 AM PDT மும்பையில் இரண்டு வயது சிறுவன் வேர்கடலை சாப்பிட்டு கொண்டிருந்த நிலையில் முதுகு புறமாக யாரோ செல்லமாக தட்டி சென்றுள்ளனர். இதனை அடுத்து சிறுவனின் மூச்சு குழாயில் வேர்கடலை போய் சிக்கியது. இதனால் மூச்சு விட சிரமப்பட்ட சிறுவனுக்கு மாரடைப்பு வந்துள்ளது அறியப்பட்டது. மும்பையை சேர்ந்த ரித்தேஷ், தாமினி, இவர்களது மகன் கிருஷ்ணா, வயது இரண்டு. ஆப்பார்ட்ம்மென்டில் வசிக்கும் இவர்களது மகன் இரண்டு நாட்களுக்கு முன்னர் வீட்டின் வெளியில் உட்கார்ந்து வேர்கடலை சாப்பிட்டு கொண்டிருன்தான். அந்த நேரத்தில் பக்கத்து வீட்டுகாரர் ... |
| Posted: 13 Aug 2013 08:21 AM PDT பாண்டியர்கள் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒருவராவர். மற்ற இரு மூவேந்தர்கள் சேரர்களும் சோழர்களும் ஆவர். பாண்டியர்கள் மதுரை, திருநெல்வேலி, மற்றும் தற்போதைய கேரளத்தின் தென்பகுதி ஆகியவற்றை ஆட்சி செய்தனர். [b]பாண்டிய மன்னர்களின் பட்டியல் முற்காலப் பாண்டியர்கள் வடிம்பலம்ப நின்ற பாண்டியன் நிலந்தரு திருவிற் பாண்டியன் முதுகுடுமிப் பெருவழுதி பசும்பூண் பாண்டியன் கடைச்சங்க காலப் பாண்டியர் முடத்திருமாறன் மதிவாணன் பெரும்பெயர் வழுதி பொற்கைப் பாண்டியன் இளம் பெருவழுதி அறிவுடை ... |
| வெளிச்சம் இல்லாதப்போது பச்சை நிறத்தில் ஒளிரும் முயல்கள் :) Posted: 13 Aug 2013 08:06 AM PDT துருக்கி மற்றும் சீனாவை சேர்ந்த விஞ்ஞானிகள் வெளிச்சம் இல்லாத சமயத்தில் பச்சை நிறத்தில் ஒளிரும் முயல்களை உருவாக்கியுள்ளனர். துருக்கியில் உள்ள இஸ்தான்புல் ஹவாஸ் பல்கலைக் கழக நிபுணர்கள் மற்றும் அங்கு பணிபுரியும் உயிரியல் விஞ்ஞானிகள் முயலை கொண்டு மருத்துவ ஆராய்ச்சி ஒன்று மேற்கொண்டனர். இந்த ஆராய்ச்சியின்படி, மற்றொரு விலங்கிடமிருந்து ஒளிரும் மரபணுவை எடுத்து அதை தாய் முயலின் கருமுட்டைக்குள் செலுத்தினர். அது 2 குட்டிகளை ஈன்றது. முயல் குட்டிகளை பரிசோதித்த ஆராய்ச்சியாளர்கள், அவை இரண்டும் ... |
| வெயிலை தணிக்க தர்பூசணி உடை; சீனாவில் புதுமை (படங்கள்) ! Posted: 13 Aug 2013 08:01 AM PDT சீனாவில் வரலாறு காணாத அளவு வெயில் வாட்டி வதைப்பதால், வித்தியாசமான முறையில் உருவான தர்பூசணி உடைகள் அங்கு பிரபலமாகி வருகிறது. சீனாவில் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் கொடுமை அதிகமாக இருப்பதால், மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் வெப்பநிலை உயரும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் வென்சூ நகரை சேர்ந்த நபர் ஒருவர், குழந்தையை வெயிலில் இருந்து பாதுகாக்க புதுவிதமான ஆடை ஒன்றை உருவாக்கி உள்ளார். தொடரும் ... |
| இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழர்கள்:- மதுமிதா Posted: 13 Aug 2013 07:28 AM PDT இந்திய விடுதலைப்போராட்டத்தில் தமிழர்கள் குறிப்பிடத்தக்க பங்கு வகித்தனர். 1857-ல் நடந்த சிப்பாய் கலகம் முதல் இந்திய விடுதலைப் போர் எனக் குறிப்பிடப்படுகிறது. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக விடுதலை வீரர்கள்:- மாவீரன் அழகுமுத்து கோன் (1728-1757) பூலித்தேவன் (1715-1767) வாண்டாயத் தேவன் பெரிய காலாடி வேலு நாச்சியார் - முத்து வடுகநாதர் மருது பாண்டியர் மருதநாயகம் (1725-1764) விருப்பாச்சி கோபால நாயக்கர் கட்டபொம்மன் (1760 - 1799) தீரன் சின்னமலை (1756-1805) மயிலப்பன் சேர்வைகாரர் சின்ன ... |
| பதில் சொல்லுங்கள்...! - மதுமிதா Posted: 13 Aug 2013 07:01 AM PDT ![]() |
| Posted: 13 Aug 2013 06:46 AM PDT தன்னம்பிக்கை வரிகள் ..! பணக்கார இளைஞனின் விலையுயர்ந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஏழைச் சிறுவன் ஒருவன் எட்டி நின்று அந்தக் காரையே ஆசையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். சிரித்துக்கொண்டே அந்த இளைஞன் சொன்னார், "இது என் அண்ணன் எனக்குப் பரிசளித்தது". சிறுவன் முகத்தில் வியப்பு. "உனக்கு அப்படி ஓர் அண்ணன் இருந்திருக்கலாம் என்று ஆசைப்படுகிறாயா?" இளைஞர் கேட்டார். சிறுவன் சொன்னான், 'இல்லை! அப்படியோர் அண்ணனாக வளர வேண்டுமென்று விரும்புகிறேன்". நம்பிக்கையுணர்வு நல்லெண்ணங்களையே வளர்க்கும். நன்றி ... |
| Posted: 13 Aug 2013 05:58 AM PDT 'அன்ட்பிட்டா அவிஸ் கெய்ன்ஸ் ரிட்க்லே' என்ற பறவை நாய் போல குரைக்குமாம்! லைப்ரரியில் இருந்து அதிகம் திருடப்பட்ட புத்தகம் என்ற சாதனைக்குரியது கின்னஸ் புத்தகம்! 7வருசத்துக்கு மேல் உங்களோட நட்பா இருப்பவர்கள நினைச்சி பாருங்க(சிலர் தா இருப்பாங்க)சைகலாஜிகலி இவங்க தாஉங்க வாழ்நாள் முழுக்க வரக்கூடிய நட்பு நத்தை அதன் கண்ணை இழந்துவிட்டால் கொஞ்ச நாளையில புது கண்ணு உருவாகிடும்! முருக வழிபாடு கிமுல துவக்கம் விநாயகர் வழிபாடு தோன்றியது கிபி பிறகெப்டி முருகனுக்கு விநாயகர் அண்ணனாவார்? உங்களுடைய நோய் ... |
| ஜாபி மேத்தியுவ் 3 தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வெண்றார் Posted: 13 Aug 2013 05:14 AM PDT இந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்து வரும் உலக குள்ள மனிதர்களுக்கான விளையாட்டு போட்டியில் இந்தியாவை சேர்ந்த ஜாபி மேத்தியுவ் 3 தங்க பதக்கங்கள் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் வெண்றார். குண்டு எறிதல்,வட்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் தங்கம் வெண்றார்.பேட்மிண்டன் போட்டியில் வெள்ளி பரிசை வெண்றார். |
| எல்லையில் தாக்குதலை பாக்., நிறுத்த வேண்டும்: வெளியுறவுத்துறை கண்டிப்பு Posted: 13 Aug 2013 04:49 AM PDT புதுடில்லி: எல்லையில் தாக்குதலை பாகிஸ்தான் .நிறுத்திக்கொள்ள வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். காஷ்மீர் மாநிலம் இந்தியா-பாக். எல்லைக்கட்டுப்பாட்டு கோடு அருகே பூஞ்ச், உள்ளிட்ட இந்திய நிலைகள் மீது பாக்.,ராணுவத்தினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி பல முறை தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த 6-ம் தேதி நடத்திய தாக்குதலில் 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் பார்லி.,யில் பெரும் அமளியை ஏற்படுத்தியது. இதற்கு பதில் அளித்த மத்திய ராணுவ அமைச்சர் அந்தோணியின் ... |
| Posted: 13 Aug 2013 04:27 AM PDT இராவணன் (Ravanan- Tamil king of Lanka puri - Sri Lanka) இராவணன் போல் ஒரு தமிழ் வீரன் இராமாயணத்தில் இல்லை.. கதைக்காக தமிழனை அப்படி காட்டியிருந்தாலும்.. அவனின் வீரம் போற்றுதலுக்குறியது.. மற்றும் மாற்றான் தோட்டத்து மல்லிகையை அவனின் கை படாது வைத்திருந்த கண்ணியவான்.. உண்மையில் தமிழ் உலகம் தந்த மாபெரும் வீரன் அவன். வரலாற்றின் திரிபுகளால் கொடுங்கோலன் ஆக்கப்பட்டான். ஆனால் என்னைப் பொறுத்தவரைக்கும் சிறந்த சிவபக்தன். இராமனை விட மேலானவன். இராவணன் இராவணன் இலங்கையை ஆட்சி செய்த அரசனாகவும், ... |
| எக்ஸ்க்யூஸ்மி சார் எனக்கு பல் வலி! Posted: 13 Aug 2013 04:20 AM PDT HOD: தலைவலினு 1 நாள் லீவ் எடுத்த ஒகே, கால் வலிக்கு ஏன் 2 நாள் லீவ்? STU: தலை 1 தான் இருக்கு. ஆனா கால் 2 இருக்கே? STU2: எக்ஸ்க்யூஸ்மி சார் எனக்கு பல் வலி! ********************************************** பிச்சை எடுப்பவன்: அம்மா தாயே பிச்சை போடுங்க நான் வாய் பேச முடியாத ஊமை.... பெண்; பக்கத்து வீட்ல கேளுப்பா எனக்கு காது கேக்காது... ****************************************************************** ஒருவன்: அருகம்புல் ஜூஸ் உடம்புக்கு நல்லது தான் ஆனா எனக்கு அது பிடிக்காது. மற்றொருவன்: ... |
| சென்னை:"தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கக் கூடாது' Posted: 13 Aug 2013 03:40 AM PDT சென்னை:"தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கக் கூடாது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள், தேர்தலின்போது, இலவச திட்டங்கள் தொடர்பாக அளிக்கும் வாக்குறுதிகளை, லஞ்சமாக அறிவிக்க முடியாது. இலவச பொருட்கள் வழங்க, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும், வாக்குறுதிகள் தொடர்பாக, புதிய நெறிமுறைகளை வகுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. கடிதம் : அதன் அடிப்படையில், நேற்று தேர்தல் கமிஷன் சார்பில், ... |
| Posted: 13 Aug 2013 03:33 AM PDT அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பி.சி./எம்.பி.சி./டி.என்.சி. மாணவ, மாணவிகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். உதவித் தொகைக்கான விண்ணப்பப் படிவங்களை மாணவர்கள், அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களிலேயே பெற்று பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் கல்வி நிலையங்களில் சமர்பிக்க வேண்டும். www.tn.gov.in/bcmbcdept இணையதளத்தில் விபரங்கள் மற்றும் விண்ணப்ப படிவங்கள் உள்ளன... |
| பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பொருத்தமானவர் Posted: 13 Aug 2013 03:23 AM PDT பிரதமர் பதவிக்கு ஜெயலலிதா பொருத்தமானவர்... முகைதீன் பிச்சை சர்வே சொல்கிறது : துபாயில் வசித்து வரும் முகைதீன் பிச்சை என்ற மனித வள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகர் நடத்திய இமெயில் சர்வேயில், பிரதமர் பதவிக்கு முதல்வர் ஜெயலலிதாதான் பொருத்தமாக இருப்பார் என பலரும் கருத்து தெரிவித்துள்ளனராம். இமெயில் மூலம் இந்தக் கருத்துக் கணிப்பை நடத்தினாராம் முகைதீன் பிச்சை. அதன் முடிவை தற்போது வெளியிட்டுள்ளார். அரபு நாடுகள், சிங்கப்பூர், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, இலஙகை, தாய்லாந்து, இந்தியா உள்ளிட்ட ... |
| Posted: 13 Aug 2013 02:32 AM PDT திருச்சி விமான நிலைய குப்பைத் தொட்டியில் இருந்து 1 கிலோ தங்கம் கண்டெடுப்பு... தங்கத்தை துப்புரவுப் பணியாளர் கண்டெடுத்து சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்... விமானப் பயணிகள் யாராவது தங்கத்தை குப்பையில் வீசிச் சென்றனரா என விசாரணை... |
| தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல்: டெல்லியில் பலத்த பாதுகாப்பு Posted: 13 Aug 2013 01:49 AM PDT இந்தியாவில் சுதந்திர தின கொண்டாட்டம் நாளை மறுநாள் டெல்லியில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. பிரதமர் மன்மோகன்சிங் கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். டெல்லியில் நடக்கும் சுதந்திர தினவிழாவை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்த பாகிஸ்தானில் செயல்படும் லஷ்கர் – இ–தொய்பா தீவிரவாத இயக்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்கொலை தாக்குதலில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் டெல்லிக்குள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரித்திருக்கிறது. இதையடுத்து டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ... |
| நைஜீரியா: மசூதிக்குள் தொழுகை நடத்திய 44 பேர் சுட்டுக்கொலை Posted: 13 Aug 2013 01:39 AM PDT தென்கிழக்கு நைஜீரியாவில் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த 44 பேரை கண்மூடித் தனமாக சுட்டுக்கொன்றனர். போர்னோ மாநிலம், மைடுடுரி பகுதியில் உள்ள மசூதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உள்ளூர்வாசிகள் தொழுகையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆயுதங்களுடன் மசூதிக்குள் புகுந்த போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தொழுகை நடத்தியவர்கள் மீது கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டனர். இச்சம்பவத்தில் 44 பேர் பலியானதாக போர்னோ மாவட்ட அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். 50 சதவீதம் ... |
| Posted: 13 Aug 2013 01:38 AM PDT இந்த வீட்டை இடுச்சிட்டு வேறு வீடு கட்டலாம்னா தடங்காவே இருக்கு இதிலே என்ன தடங்கல் இந்த வீடு என்னோடதில்ல அதுதான் தடங்கல்: |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |




