Tamil News | Online Tamil News |
- வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர்
- இலவச வாக்குறுதிகளை வழங்குவதில் கட்சிகள்ஒற்றுமை : தேர்தல் கமிஷன் தலையிட காங்., - பா.ஜ., - கம்யூ., எதிர்ப்பு
- ராபர்ட் வாத்ரா நில முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி.,
- எம்.பி.,க்கள் பதவி பறிப்பு விவகாரம் : மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்
- கள்ளப்பணம் : தடுக்கும்படி அமலாக்கப்பிரிவிற்கு உள்துறை கடிதம்
- எல்லையில் பாக்., ராணுவ அட்டூழியம் தொடர்கிறது
- விமானம் தாங்கி போர்க்கப்பல் "ஐ.என்.எஸ்., விக்ரந்த்' தயார்
- குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை
- இலவச அறிவிப்புக்கு தடை விதிக்கக்கூடாது : தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கோரிக்கை
- "தலைவா' பட வெளியீடு: தியேட்டருக்கு மர்ம மனிதன் குண்டு மிரட்டல்
| வரும் 30ம் தேதியுடன் நிறைவடைகிறது பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தொடர் Posted: "பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடரை நீட்டிக்கலாம்' என, எடுத்த முடிவு, கைவிடப்பட்டுள்ளது. இதனால், வரும், 30ம் தேதியுடன், கூட்டத் தொடர் நிறைவடைகிறது.பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர், கடந்த, 5ம் தேதி, துவங்கியது. இந்தக் கூட்டத் தொடர், ஒரு மாதம் நடைபெறுவது போல தெரிந்தாலும், நிறைய விடுமுறை நாட்கள் வருவதால், சபை நடைபெறும் நாட்களை குறைக்கக் கூடாது என, எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன. அதனால், தேவைப்படும் பட்சத்தில், "மழைக்கால கூட்டத் தொடர் நீட்டிக்கப்படும்' என, பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சர், கமல்நாத் அறிவித்திருந்தார். அடுத்த மாதம், 4ம் தேதி ... |
| Posted: புதுடில்லி:"சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல் அறிக்கைகளில், இலவசங்கள் குறித்து அரசியல் கட்சிகள் வெளியிடும் அறிவிப்புகளை தடை செய்யவோ அல்லது அவற்றை சரி பார்க்கவோ, பிற அமைப்புகளுக்கு எவ்வித உரிமைகளும் கிடையாது; அது, அரசியல் கட்சிகளின் அடிப்படை உரிமை' என, பகுஜன் சமாஜ் தவிர்த்து, பிற கட்சிகள் அனைத்தும் ஒருமித்த குரலில் கருத்து தெரிவித்து, தங்களின் ஒற்றுமையை பறைசாற்றியுள்ளன."தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில், அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில், ஏராளமான இலவச அறிவிப்புகள் இடம்பெறுகின்றன. இலவச மின்சாரம், லேப்-டாப் கம்ப்யூட்டர், மின் விசிறி, ... |
| ராபர்ட் வாத்ரா நில முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டும்: காங்கிரஸ் எம்.பி., Posted: புதுடில்லி: ""அரியானாவில் நடந்த நில முறைகேடு குறித்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,'' என, அம்மாநில காங்., - எம்.பி., கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அரியானா மாநிலத்தில், பூபிந்தர் சிங் தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள குர்கான் அருகே, நிலம் வாங்கியதில், காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, முறைகேட்டில் ஈடுபட்டதாக, புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம், அரசியல் வட்டாரத்தில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், குர்கான் லோக்சபா தொகுதி காங்., - எம்.பி., ராவ் இந்திரஜித் சிங் கூறியதாவது: அரியானா மாநில நிர்வாகம், உரிய முறையில் ... |
| எம்.பி.,க்கள் பதவி பறிப்பு விவகாரம் : மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் Posted: புதுடில்லி:"குற்ற வழக்குகளில், தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை உடனே பதவி நீக்கம் செய்ய வேண்டும். போலீஸ் காவலில் மற்றும் சிறையில் இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது' என, சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து, மத்திய அரசு மறு ஆய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது.சமீபத்தில் இரு வழக்குகளில் தீர்ப்பு அளித்த சுப்ரீம் கோர்ட், "குற்ற வழக்குகளில், இரு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்ற எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவிகளை உடனே பறிக்க வேண்டும். சிறையில் இருப்பவர்கள் மற்றும் போலீஸ் காவலில் இருப்பவர்கள், தேர்தலில் போட்டியிட முடியாது' என, ... |
| கள்ளப்பணம் : தடுக்கும்படி அமலாக்கப்பிரிவிற்கு உள்துறை கடிதம் Posted: புதுடில்லி:"இந்தியாவில், பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, வெளிநாடுகளில் இருந்து அனுப்பப்படும் கள்ளப் பணத்தை பறிமுதல் செய்யும் நடவடிக்கையில், அமலாக்கப் பிரிவினர் தீவிரம் காட்ட வேண்டும்' என, மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, அமலாக்கத் துறைக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள கடிதம்:இந்தியாவில், பயங்கரவாத செயல்களை அரங்கேற்ற, வெளிநாட்டில் இருந்து பல்வேறு வகையில், கள்ளத்தனமாக பணம் அனுப்பப்படுகிறது. குறிப்பாக, "ஹவாலா,' ஏஜென்டுகள் மூலம் பெருமளவிலான பணம் புழக்கத்தில் விடப்படுகிறது. பெரும்பாலும், அரபு நாடுகளில் ... |
| எல்லையில் பாக்., ராணுவ அட்டூழியம் தொடர்கிறது Posted: ஜம்மு:காஷ்மீர் எல்லையில், பாக்., ராணுவத்தின் அட்டூழியம் தொடருகிறது. கடந்த மூன்று நாட்களில், தொடர்ந்து ஐந்தாவது முறையாக, நேற்றும், இந்திய முகாம்களை குறிவைத்து, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.இந்தியா - பாக்., எல்லையில், போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகள் அமலில் உள்ளன. ஆனாலும், பாக்., ராணுவம், இதை மதிப்பது இல்லை. அவ்வப்போது, அத்துமீறி, தாக்குதல் நடத்தி வருகிறது. சமீபத்தில், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவம், இந்திய வீரர்கள் மீது, தாக்குதல் நடத்தியது; இதில், ஐந்து இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த ... |
| விமானம் தாங்கி போர்க்கப்பல் "ஐ.என்.எஸ்., விக்ரந்த்' தயார் Posted: கொச்சி:நாட்டிலேயே முதலாவதாக, முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, விமானம் தாங்கி போர்க்கப்பல், "ஐ.என்.எஸ்., விக்ரந்த்' தண்ணீரில் நேற்று இறக்கி விடப்பட்டு, துவக்கப்பட்டுள்ளது. 37,500 டன் எடை கொண்ட இந்த பிரமாண்ட கப்பல், இன்னும், ஐந்தாண்டுகளில், கடற்படையில் இணைக்கப்படும்.நமது கடற்படையில், "ஐ.என்.எஸ்., விராட்' விமானம் தாங்கி போர்க்கப்பல், இப்போதும் பயன்பாட்டில் உள்ளது. இந்த கப்பலுக்கு, வரும், 2018 - 19ம் ஆண்டில் ஓய்வு கொடுக்க வேண்டியுள்ளதால், புதிய, விமானம் தாங்கி போர்க்கப்பல் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. |
| குழந்தைகள் கடத்தல் எதிரொலி: பள்ளிகளுக்கு போலீசார் எச்சரிக்கை Posted: சென்னை:"பள்ளிக் குழந்தைகளை வரவேற்கவும், அனுப்பவும் பொறுப்பு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்; அழைக்க வருபவர்களுக்கு, முறையான, "அடையாள அட்டை' வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அறிவுரைகளை, பள்ளி நிர்வாகங்களுக்கு, சென்னை போலீஸ் வழங்கியுள்ளது.சென்னை துறைமுக குடியிருப்பைச் சேர்ந்த, எண்ணூர் துறைமுக அதிகாரி ஹரிஹரனின் மகன், மூன்றரை வயது சூர்யா, கடந்த சில தினங்களுக்கு முன் கடத்தப்பட்டான். இந்த சம்பவத்தில், வாகன ஓட்டுனர் உட்பட, நால்வர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் ஒருவரை, போலீசார் தேடி வருகின்றனர்.இந்த கடத்தல் சம்பவத்தில், தலைமறைவாக உள்ள நபர், பள்ளி நேரம் ... |
| இலவச அறிவிப்புக்கு தடை விதிக்கக்கூடாது : தேர்தல் கமிஷனுக்கு ஜெயலலிதா கோரிக்கை Posted: சென்னை:"தேர்தல் அறிக்கையில், இலவசங்கள் குறித்த அறிவிப்புகளை வெளியிட தடை விதிக்கக் கூடாது' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அரசியல் கட்சிகள், தேர்தலின்போது, இலவச திட்டங்கள் தொடர்பாக அளிக்கும் வாக்குறுதிகளை, லஞ்சமாக அறிவிக்க முடியாது. இலவச பொருட்கள் வழங்க, வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் கொடுக்கும், வாக்குறுதிகள் தொடர்பாக, புதிய நெறிமுறைகளை வகுக்கும்படி, தேர்தல் கமிஷனுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. |
| "தலைவா' பட வெளியீடு: தியேட்டருக்கு மர்ம மனிதன் குண்டு மிரட்டல் Posted: சென்னை:"நடிகர் விஜயின், "தலைவா' படத்தை திரையிடுவதை தாமதப்படுத்தினால், குண்டு வெடிக்கும்' என, சென்னை, உதயம் தியேட்டருக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலால், சென்னையில் பரபரப்பு ஏற்பட்டது.விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா' படம், பல்வேறு பிரச்னைகளால், வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. "தலைவா' படம் வெளியிடும் தியேட்டர்களில் குண்டு வைக்கப் போவதாக, கடந்த, 8ம் தேதி, மர்ம நபர் மிரட்டல் விடுத்தார். கோவையில் உள்ள சில தியேட்டர்களுக்கும், மிரட்டல் விடுக்கப்பட்டது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர், "தலைவா படம் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 13,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |