Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


லோக்சபா தேர்தலில் காங்., தோல்வி அடையும் : ஐதராபாத்தில் முதல்வர் மோடி கணிப்பு

Posted:

ஐதராபாத்:""ஓட்டு வங்கி அரசியலுக்காக, நாட்டின் பாதுகாப்பையே அடகு வைக்கும் காங்கிரஸ் கட்சியை, ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டும். காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவதற்கு, மற்ற கட்சிகள் ஒரே அணியில் இணைந்து செயல்பட வேண்டும். அடுத்தாண்டு நடக்கும் லோக்சபா தேர்தலில், காங்கிரஸ், நிச்சயமாக தோல்வி அடையும்,'' என, பா.ஜ., தேர்தல் பிரசாரக் குழு தலைவர், நரேந்திர மோடி, ஐதராபாத்தில் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், ஆவேசமாக பேசினார்.லோக்சபாவுக்கு, அடுத்த எட்டு மாதங்களில், தேர்தல் நடக்கவுள்ளது. பா.ஜ.,வின், தேர்தல் பிரசாரக் குழு தலைவராக, குஜராத் முதல்வர், ...

ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தால் முழு பலனில்லை : கிராம மக்கள் "புளோரைடு' நீர் பருகும் அவலம்

Posted:

தர்மபுரி:தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட மக்களுக்கு, பாதுகாப்பான குடிநீர் வழங்க, துவங்கப்பட்ட ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம், முழுமை பெறாத நிலையில், கிராம பகுதிகளில், மீண்டும் "புளோரைடு' கலந்த நீரே, குடிநீராக வினியோகிக்கப்படுகிறது.தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நிலத்தடி நீரில், புளோரைடு அளவு, நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக உள்ளது. இந்த நீரை சுத்திகரிக்க வழியில்லாததால், குடிநீராக பருகுவோருக்கு, எலும்பு, நரம்பு சம்பந்தமான நோய்களும், பல் கறைபடிதல் உள்ளிட்ட நோய் தாக்கமும் அதிகரித்தது.

பாதுகாப்பான குடிநீர்:
இதை அடுத்து, ...

"தலைவா' படத்தால் தமிழக சென்சார் போர்டு அதிகாரிகளுக்கு சிக்கல்

Posted:

நடிகர் விஜயின், "தலைவா' படத்தினால், தயாரிப்பாளருடன், சென்சார் போர்டு அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இந்த படத்திற்கு, "யு' சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள், குழப்பத்தில் உள்ளனர். அதே நேரத்தில், நடிகர் விஜய் இன்று, முதல்வரை சந்திக்க ஏற்பாடு நடப்பதாகவும், தகவல் வெளியாகி உள்ளது.நடிகர் விஜயின், "தலைவா' படம், திட்டமிட்டபடி, கடந்த, 9ம் தேதி வெளியாகவில்லை. சென்னையில் இப்படத்தை வெளியிட இருந்த தியேட்டர்களுக்கு, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், பாதுகாப்பு கருதி, படம் வெளியிடப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. "படத்திற்கு, "யு' சான்றிதழ் ...

கொடநாட்டில் தங்கியிருப்பது மாபாதக செயலா: ஜெ., கேள்வி

Posted:

சென்னை:"கொடநாடு என்பது தமிழகத்தின் ஒரு பகுதி; அதில் சில காலம் தங்கியிருப்பது மாபாதகச் செயலா?' என, முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.அவரது அறிக்கை:கொடநாடு என்பது தமிழகத்தின் ஒரு பகுதி. அப்பகுதியில் தேயிலை தோட்டத் தொழிலாளர்களும், பழங்குடியின மக்களும் வசிக்கின்றனர். அப்பகுதியில் சில காலம் தங்கியிருப்பது, அப்படி என்ன மாபாதகச் செயலா?கொடநாடு என்ன லண்டனிலா இருக்கிறது? இல்லை கர்நாடக மாநிலத்தில் இருக்கிறதா? நான் சில நாட்கள் கொடநாட்டில் தங்கி இருந்தாலும், அன்றாடப் பணிகளை செவ்வனே மேற்கொண்டு வருகிறேன்.தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு ...

திருத்தங்களை ஏற்கவில்லை என்றால் மசோதாவை தி.மு.க., எதிர்க்கும்

Posted:

சென்னை:"உணவு பாதுகாப்பு மசோதாவில், திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என, மத்திய அரசு உறுதியாக தெரிவித்தால், மசோதாவை தி.மு.க., எதிர்க்கும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:தற்போதுள்ள உணவு பாதுகாப்பு மசோதா, பல்வேறு கட்சியினரும் எடுத்து தெரிவித்துள்ள, முக்கியமான, திருத்தங்களை தாங்கி வெளி வருமானால், அப்போது அதை தி.மு.க., ஆதரிக்கும். திருத்தங்களை ஏற்றுக் கொள்ளாமல், இதே நிலையில் தான் கொண்டு வருவோம் என, மத்திய அரசு உறுதியாக தெரிவித்தால், அப்போது அந்த மசோதாவை தி.மு.க., எதிர்க்கும். உணவு பாதுகாப்பு மசோதாவில் ...

அடம் பிடிக்கும் இலங்கையால் பாதிப்பு : பிழைப்பு தேடி கேரளா செல்லும் மீனவர்கள்

Posted:

ராமேஸ்வரம்:இலங்கை சிறையில், 56 நாட்களாக வாடும் மீனவர்களை விடுவிக்காமல், அந்நாட்டு அரசு பிடிவாதமாக இருக்கிறது. பயத்தில் மீன் பிடிக்க செல்வதற்கு படகு உரிமையாளர்கள் பலர் முன்வராததால், வேலையின்றி தவிக்கும் தமிழக மீனவர்கள், கேரளாவுக்கு செல்கின்றனர்.மீன்வளம் நிறைந்த இந்திய, இலங்கை கடல் பகுதியில், தமிழக மீனவர்கள் குறிப்பாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மீனவர்கள், பாரம்பரியமாக மீன் பிடிக்கின்றனர். சில மாதங்களாக, மீனவர்களை இலங்கை கடற்படை தாக்குவது, வலைகளை சேதப்படுத்துவது அதிகரித்துள்ளது. மேலும், சில வாரங்களுக்கு முன், இலங்கை கடற்படையால் பிடித்து ...

அந்தோணி அறிக்கையால் நாட்டின் கவுரவமே போச்சு: அத்வானி விமர்சனம்

Posted:

புதுடில்லி:""எல்லை பகுதியில், இந்திய வீரர்கள் ஐந்து பேர், கொல்லப்பட்ட விவகாரத்தில், ராணுவ அமைச்சர் அந்தோணி, முன்னுக்கு பின் முரணாக அறிக்கை வெளியிட்டதால், நாட்டின் கவுரவத்துக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டுள்ளது,'' என, பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறினார்.பா.ஜ., மூத்த தலைவர், அத்வானி கூறியதாவது:சமீபத்தில், இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த பாக்., ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்கள் மீது, போர் நிறுத்த ஒப்பந்த விதிமுறைகளை மீறி, தாக்குதல் நடத்தினர். இதில், ஐந்து இந்திய வீரர்கள், வீர மரணம் அடைந்தனர்.

பாக்.,கிற்கு ஆதரவு:
இந்த தாக்குதல் ...

நம்பிக்கை இல்லா தீர்மானத்தை சந்தித்திராத 15வது லோக்சபா

Posted:

புதுடில்லி:மத்திய அரசுக்கு எதிராக கூறப்பட்ட பல விதமான மோசடி குற்றச்சாட்டுகள் மற்றும் சர்ச்சைகளால், தற்போதைய லோக்சபாவில், சபை அலுவல்கள் பெரும்பாலான நாட்கள் முடங்கினாலும், நம்பிக்கை இல்லா தீர்மானம் எதுவும், இந்த லோக்சபாவில் கொண்டு வரப்படவில்லை.தற்போதைய, 15வது லோக்சபாவின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு மே மாதம் முடிவடைகிறது. அதற்கு முன், பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த லோக்சபா, 2009ல் கூடியபோது, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தி.மு.க., மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் போன்றவை இடம் பெற்றிருந்தன.

அரசுக்கு ஆதரவு: ...

புதிய ரயில்வே திட்டங்கள்: செலவில் பாதியை ஏற்கும்படி மாநில அரசுகளுக்கு நிபந்தனை

Posted:

"புதிய ரயில்வே திட்டங்களில், மாநில அரசுகளும், பாதிச் செலவை ஏற்க வேண்டும்; இதை ஏற்காத மாநிலங்களுக்கு, எந்த ஒரு புதிய ரயில்வே திட்டங்களையும் பரிந்துரை செய்வதில்லை' என, மத்திய திட்டக் கமிஷன் முடிவெடுத்து உள்ளது.

சாதக, பாதகம்:
ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பாக, லோக்சபாவில், எம்.பி.,க்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, ரயில்வே இணை அமைச்சர், அதிர் ரஞ்சன் சவுத்ரி அளித்துள்ள பதில்:புதிதாக, ரயில்வே திட்டங்களை நிறைவேற்றுவதில் உள்ள, சாதக, பாதகங்கள் குறித்து, மத்திய திட்டக் கமிஷன் விரிவாக ஆராய்ந்தது. அப்போது, எந்தெந்த திட்டங்கள் பொருளாதார ...

இந்தியா - சீனா இடையே புதிய எல்லை ஒப்பந்தம் : அக்டோபரில் கையெழுத்து

Posted:

புதுடில்லி:எல்லை பிரச்னை தொடர்பாக, இந்தியா - சீனா இடையே புதிய ஒப்பந்தம் ஒன்று தயாராகி வருகிறது. அக்டோபர் மாதம், பிரதமர் மன்மோகன் சிங், பீஜிங் பயணம் மேற்கொள்ளும்போது, இந்த ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.இந்தியா - சீனா இடையே, 4,000 கி.மீ., தூர எல்லைப் பகுதி உள்ளது. இந்த எல்லையை தாண்டி, சீன ராணுவத்தினர் அடிக்கடி இந்திய பகுதிக்கு வருவது, சமீப நாட்களாக நடந்து வருகிறது. இதனால், இரு நாடுகளுக்கு இடையேயான உறவில், உரசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே, புதிதாக எல்லை பாதுகாப்பு ஒப்பந்தம் ஒன்றை நிறைவேற்ற, இந்திய - சீன அதிகாரிகள் முற்பட்டுள்ளனர். ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™