Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


name -semmalai

Posted: 11 Aug 2013 11:38 AM PDT

Name - m.semmalaI
Time - 10_12_1982 6.30pm
Place - kallakurichi (tn)
Email. - semmalai555@gmail.com
Sir
Enathu jathakathi kanithu vilakkam kooravum ennakku jothidam varuma? Ennakku jothidam therinthukolla virumpukiren

சென்னை எக்ஸ்பிரஸ் - ஏக் த டைகர், 3 இடியட்ஸ் வசூலை முந்தியது!

Posted: 11 Aug 2013 11:37 AM PDT

ப்‌‌ரீமியர் ஷோ வசூலில் அமீர்கானின் 3 இடியட்ஸ், சல்மான்கானின் ஏக் த டைகர் படங்களின் சாதனையை சென்னை எக்ஸ்பிரஸ் முறியடித்துள்ளது. ஷாருக்கான் நடிப்பில் ரோஹித் ஷெட்டி இயக்கியிருக்கும் சென்னை எக்ஸ்பிரஸை நடுநிலையானவர்கள் கழுவி ஏற்றுகிறார்கள். பல தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களின் கலவைதான் இந்த எக்ஸ்பிரஸ். ஆனால் ஜனங்கள் படத்தை போட்டி போட்டு ரசிக்கிறார்கள். வியாழக்கிழமை இரவு நடந்த ப்‌ரீமியர் ஷோக்களில் மட்டும் இந்தியாவில் 6.75 கோடிகள் வசூலித்திருக்கிறது. இது 3 இடியட்ஸ், ஏக் த டைகர் படங்களின் ...

பீர், ரசகுல்லா பகிர்ந்துக்கொண்ட இந்திய, சீனா ராணுவத்தினர்

Posted: 11 Aug 2013 11:36 AM PDT

சிக்கிம் பகுதியில், இந்திய, சீன ராணுவத்தினர் ஒருவருக்கு ஒருவர் பீர் மற்றும் ரசகுல்லாக்களை பகிர்ந்துக்கொண்டனர். இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி ஊடுருவுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள டங்கார் லா பாஸ் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட சீன வீரர்கள் இரண்டு வாகனங்களில் நுழைந்தனர். அவர்களை கண்ட இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்து ...

சீமான் திருமண அழைப்பிதழ் !

Posted: 11 Aug 2013 11:35 AM PDT

நாம் தமிழர் கட்சித் தலைவரும், இயக்குனருமான சீமானுக்கு வருகின்ற செப்டம்பர் மாதம் 8ம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது. அவரது திருமண அழைப்பிதழ் இந்த செய்தியுடன் இணைக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் தமிழக சட்டசபை சபாநாயகரும், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை சீமானுக்கு திருமணம் செய்ய பேசி நிச்சயிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து சென்னை ஒய்.எம்.சி. ஏ. மெமோரியல் அரங்கில் நடைபெற உள்ள இந்த திருமணத்தை தமிழர் தேசிய பாதுகாப்பு ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தலைமை வகித்து ...

தலைவாவிற்கு வந்த தலைவலிக்கான 5 காரணங்கள்!.

Posted: 11 Aug 2013 11:33 AM PDT

விஜய் நடித்த தலைவா திரைப்படம் வெளியாகமல் இருப்பதற்கு படத்தில் இடம்பெற்ற 5 வசனங்கள் தான் முக்கிய காரணம் என தெரியவந்துள்ளது. அரசியல் ரீதியான பிரச்சனைகள் தலைவா படத்தை நெருக்கியதால் திட்டமிட்டபடி தலைவா படம் இன்று தமிழ்நாட்டில் வெளியாகவில்லை. ஆனால் மற்ற மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் படம் வெளியாகி விட்டது. இதற்கிடையே தமிழகத்தில் "தலைவா" படத்திம் வெளியாவதில் அதிகம் சிக்கல் இடம்பெற்றுள்ள அரசியல் பஞ்ச் டயலாக்குகள் தான் முக்கிய காரணங்களாக சொல்லப்படுகிறது. 01. உங்க அம்மாவை பாருடா, அப்பறமா மத்த அம்மாவை ...

காதலால் வாய்ப்புகளை இழந்து தவிக்கும் ஹன்சிகா

Posted: 11 Aug 2013 11:32 AM PDT

சிம்புவுடன் கொண்ட காதலால் பட வாய்ப்புகளை இழந்து வருகிறார் நடிகை ஹன்சிகா மோத்வானி. சிம்புவை காதலிப்பதாக ஹன்சிகா செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, அவரிடம் கால்ஷீட் கேட்டுதுரத்திக் கொண்டிருந்த சில தயாரிப்பாளர்கள் பின்வாங்கி விட்டனர். அதனால், அவர்களை தொடர்புகொண்டு இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு, சினிமாவில் தான் இருப்பேன் என்று ஹன்சிகா நம்பிக்கை வாக்குறுதி அளித்து வருகிறாராம். ஆனால் அதை யாரும் காது கொடுத்து கேட்பதாக இல்லை. ஹன்சிகாவை தவிர்த்து விட்டு மாற்று நடிகை தேடிசெல்லும் தயாரிப்பாளர்கள் நயன்தாரா, ...

பொண்ணுகளா முடிஞ்சா பாலோ பண்ணவும் ..

Posted: 11 Aug 2013 11:10 AM PDT

1.உன்ன பிரன்டாதான்டா நினைச்சி பழகினன் எங்கிரத நிறுத்தணும்.. 2.மொக்க ஸ்டேட்டஸ் போட்டுட்டு லைக்ஸ் கவ்ன்ட் பண்ணக்கூடாது 3.லைட்டா பசிக்குதுன்னு சொல்லிட்டு புல் மீல்ஸ் சாப்பிடுறதை நிறுத்தணும் 4. நாத்தம்னா என்னன்னு தெரியாத மாதிரியே! எப்ப பார்த்தாலும் மூக்க ஒரு கர்சீப் வச்சு மூடுறத நிறுத்தணும 5.பசங்க கிட்ட பீட்டர் விடாம எல்லார் கிட்டயும் தமிழ்ல பேசணும் 6.அர்த்தராத்திரில போன போட்டு உண்மையிலேயே லவ் பன்றியானு மொக்க போடா கூடாது 7.ஒரு இத்து போன ஸ்கூட்டியை வச்சுக்கிட்டு ஏரோபிளேன் ஓனர் மாதிரி ...

உங்களுடைய HOBBY/INTEREST என்ன?

Posted: 11 Aug 2013 10:53 AM PDT

எல்லாருக்கும் புது புது தனி தனி வித்தியாச வித்திசாமாக HOBBY இருக்கும்.... எல்லாரும் தயவு செய்து இங்கு  பதியுங்கள்... எவ்வளவோ பதிவு போட்றீங்க இந்த சின்ன பொண்ணு -காக ஒரு 3 நிமிடம் நேரம் எடுத்து உங்களுடைய HOBBY  என்ன என்று  போடுங்கள்.... மற்றவர்கள் HOBBY  எல்லாவற்றையும் பார்க்கும் போது நமக்கு சந்தோஷமாகவும் புது அனுபவமாகவும் இருக்கும் ...... சில பேரின் HOBBY ளில் இருந்து நாம் அந்த HOBBY க்கு ஈர்க்கப் பட்டு புதிதாக ஏதாவது காற்று கொள்ள நேரிடலாம்... எல்லாரும் போடுவீங்க என்ற நம்பிக்கையுடன் ...

பாலின் பெருமைகள்

Posted: 11 Aug 2013 10:47 AM PDT

பூமியில் வசிக்கும் மானுடர்களுக்கு அமுதம் கிடைக்க வாய்ப்பில்லை. அதற்குப் பதிலாக, அவர்களுக்கு வாய்த்திருப்பது பால் என்கின்றன வேதங்கள். இதில் இருந்தே பாலின் பெருமையை அறிந்து கொள்ளலாம். பாலில் தாய்ப்பால், பசும்பால், எருமைப்பால், ஆட்டுப்பால் என சில வகைகள் உண்டு. ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு குணம் உள்ளது. தாய்ப்பால் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும், தாயிடம் இருந்து கிடைக்கும் முதல் மற்றும் ஈடு இணையற்ற உணவாகும். அடுத்து பசும்பால் என்பது இயல்பாகவே இனிப்பானது, உடலுக்கு நல்லது. எருமைப்பால் பசும்பாலை ...

என் வாழ்க்கையில் அதிகபட்ச வேதனையே இதுதான்-உணர்ச்சிவசப்பட்ட விஜய்!

Posted: 11 Aug 2013 10:37 AM PDT

ரம்ஜான் ஸ்பெஷலாக தலைவா ரிலீஸ் ஆகும் என விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரும் எதிர்பார்த்தார்கள். ஆனால்தலைவாவோ தமிழகம் தவிர மற்றஇடங்களில் ரிலீஸ் ஆனது. வரிவிலக்கு காரணம் காட்டி படம் ரிலீசாகவில்லை. ஆனால்உண்மையான காரணம் என்ன என்பது இன்னமும் பரம ரகசியமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர் ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார். இது கேள்விப்பட்ட விஜய் அனுதாப அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், 'கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்த விஷ்ணுகுமார் என்ற இளைஞர் தலைவா படம் ...

தலைவா பட டொரன்ட் லிங்கு

Posted: 11 Aug 2013 10:29 AM PDT


தலைவா படத்திற்கான டொரன்ட் லிங்க் லிங்க்

This posting includes an audio/video/photo media file: Download Now

இந்திரா சௌந்தர்ராஜன் -மதுரை அரசி நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 11 Aug 2013 09:34 AM PDT

இந்திரா சௌந்தர்ராஜன் -மதுரை அரசி நாவலை டவுன்லோட் செய்ய

http://www.mediafire.com/download/7graa8p31t7f7v0/madurai+arasi.pdf

கோல்கேட்

Posted: 11 Aug 2013 08:41 AM PDT

இன்று ஏகப்பட்ட பற்பசைகள் கடைகளில் கிடைக்கின்றன. முதன்முதலில் பற்பசையைத் தயாரித்து வெளியிட்ட கம்பெனி கோல்கேட்தான். 1806 இல் நியூயார்க் நகரில் வில்லியம் கோல்கேட் என்பவர் கோல்கேட் & கம்பெனி என்ற பெயரில் பல்வேறு பொருட்களை விற்று வந்தார். 1873 ஆம் ஆண்டுதான் முதன்முதலில் கோல்கேட் பற்பொடி தயாரித்து விற்பனை செய்யப்பட்டது. 1892 ஆம் ஆண்டு இங்கிலாந்தைச் சேர்ந்த பல் மருத்துவர் வாஷிங்டன் வெண்ட்வொர்த் ஷெப்பில்டு என்பவர் இயற்கையாகக் கிடைக்கும் கால்சியம் புளோரைடுகளைக் கண்டுபிடித்தார். அவரே 1894 இல் பற்பசைகளை ...

பிரதமர் பதவிக்கு ஜெ தகுதியானவர்- கருத்து கனிப்பு சொல்கிறது

Posted: 11 Aug 2013 08:10 AM PDT

பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார்? என்று வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில், தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 86 மதிப்பெண்களும், நரேந்திர மோடிக்கு 81 மதிப்பெண்களும், ராகுல் காந்திக்கு 53 மதிப்பெண்களும் கிடைத்துள்ளன. வெளிநாடுவாழ் இந்தியரும், துபையில் மூத்த மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகருமான பொன் முகைதீன் பிச்சை, இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது தொடர்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இ-மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தினார். வளைகுடா நாடுகளான ...

படித்ததில் பிடித்தது :)

Posted: 11 Aug 2013 08:09 AM PDT

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

சிதம்பர ரகசியம்

Posted: 11 Aug 2013 07:24 AM PDT

# சிதம்பர ரகசியம் - நம் முன்னோர்களின் அதிசயம் # கீழே கொடுக்கப்பட்டுள்ளது தான் உண்மையிலேயே சிதம்பர ரகசியமா என்பது அந்த நடராஜர் க்கு மட்டுமே வெளிச்சம் - இருப்பினும் இப்படியும் நம் முன்னோர்களால் செய்ய முடிந்ததா ? எப்படி இதை செய்தார்கள் - என்பதே பெரும் ரகசியம் தான் .... இணையத்தில் இதை படித்து விட்டு என்னை தொற்றி கொண்ட வியப்பு இன்னும் விலகவில்லை முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது..அப்படி இருக்க அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் ...

கேப்டன் விஜய்காந்த்

Posted: 11 Aug 2013 07:24 AM PDT

பாண்டிச்சேரியை தமிழ் நாட்டோடு இணைக்க
வேண்டும்...!! :

>- கேப்டன் விஜய்காந்த் . . ! !

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
~~ அடிச்சான் பாருய்யா முதல் பால்லயே சிக்சர்..!!!

# ( தண்ணீர் ) பிரச்சனை ஓவர்....சூப்பருங்க

உண்மையான தமிழன்

Posted: 11 Aug 2013 06:57 AM PDT

தமிழ் திரையுலகில் இன்று மிகவும் பிசியான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் சத்யராஜ். இன்னும் ஒன்றரை வருடங்களுக்கு அவரது கால்ஷீட் டேட் இல்லை என்பதுதான் இன்றைய நிலவரம். சில நாட்களுக்கு முன் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் அன்ட் மோஷன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் நண்பர் ஜேம்ஸ்சுடன் பேசிக்கொண்டிருந்த போது சத்யராஜ் சார் பற்றி அவர் சொன்ன தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின..? அதாவது ஷாருகான் நடிக்கும் இந்தி படத்தில் தமிழ் பேசும் நாயகியின் தந்தையாக நடிக்க பெரும் தொகையுடன் சத்யராஜை அணுகியிருக்கிறார்கள். அப்போது சத்யராஜ் ...

அம்மா உணவகத்தில் ரூ.1க்கு மூலிகை டீ!

Posted: 11 Aug 2013 06:42 AM PDT

சென்னையில் தொடங்கப்பட்ட அம்மா உணவகங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவற்புக் கிடைத்துள்ளதைத் தொடர்ந்து, அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்த யோசனையில் இறங்கியுள்ளது சென்னை மாநகராட்சி. சென்னையில் வார்டுக்கு ஒன்று என்று சுமார் 200 அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஒரு ரூபாய்க்கு இட்லி, ரூ.5க்கு சாம்பார் சாதம், ரூ.3க்கு தயிர் சாதமும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் அம்மா உணவகங்களில் ரூ.1க்கு மூலிகை டீ விற்பனை செய்வது குறித்து மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தலைமையில் ...

பிரிட்ஜ் பராமரிப்பு - சில யோசனைகள்

Posted: 11 Aug 2013 06:41 AM PDT

1. பிரிட்ஜை சமையலறையில் வைக்கக் கூடாது. புகை பட்டு நிறம் போய்விடும். 2. பிரிட்ஜை அடிக்கடி திறக்கக் கூடாது, திறந்தால் உடனே மூடிவிட வேண்டும். இது மின்சார‌த்தை மிச்ச‌ப்ப‌டுத்த‌ உத‌வும். 3. பின்பக்கம் உள்ள கம்பி வலைகள் சுவரை ஒட்டி இருக்கக் கூடாது. அந்த வலையில் தண்ணீர் படக் கூடாது. பின்புறம் படியும் ஒட்டடையை மெதுவாக தென்னந்துடைப்பம் மூலம் அகற்ற வேண்டும். 4. பிரிட்ஜை துடைக்கும்போது ஈரத்துணி அல்லது ஃபோர்ம் போன்றவற்றைக் கொண்டு துடைக்கக் கூடாது. உலர்ந்த துணி கொண்டு துடைக்க வேண்டும். 5. வெளியூர் ...

குக்கர் பராமரிப்பு

Posted: 11 Aug 2013 06:31 AM PDT

1. குக்கரின் கொள்ளளவில் 3ல் 2 பங்கு அதாவது குக்கரின் முக்கால் பகுதிக்கு மட்டும் அரிசி மற்றும் காய்கறி வகைகளைச் சமைக்க வேண்டும். 2. குக்கரில் உள் தட்டு வைத்து பாத்திரம் வைத்து சமைத்ததினால் அடியில் உப்புக் கறை போல் ஏற்பட்டு விடக் கூடும். அதைத் தவிர்க்கப் புளித் துண்டு அல்லது பிழிந்த எலுமிச்சம் பழத் தோல் போட்டு பாத்திரம் வைத்து சமைத்தால் கறை ஏற்படாது. 3. குக்கரில் வேக வைக்க வேண்டிய பொருட்களை அடுப்பில் வைத்தவுடன் குக்கர் குண்டை போடக் கூடாது. சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியில் உள்ள வெண்ட் ...

பெங்களூரு மலர்க்கண்காட்சியில்...

Posted: 11 Aug 2013 06:28 AM PDT

நாட்டின் தோட்ட நகரம் என்றழைக்கப்படும் பெங்களூருவில் ஆண்டுக்கு இரண்டு முறை அங்குள்ள பிரபலமான லால்பாக்கில் மலர்க்கண்காட்சி நடைபெறுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திரதினம் ஆகிய தினங்களை முன்னிட்டு இந்த மலர்க்கண்காட்சி நடைபெறும். தற்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு மலர்க்கண்காட்சி நடந்து வருகிறது. மலர்களைக்கொண்டு வருடாவருடம் வித்தியாசமான உருவங்களை தயார் செய்வது இந்த கண்காட்சியின் ஸ்பெஷாலிடி. அப்படிப்பார்க்கும் போது இந்த வருடம் தண்ணீரில் மிதக்கும் படகும், மலர் ஆடை உடுத்திய வெளிநாட்டு ...

மகா லட்சுமி வாசம் செய்யும் இடம் எது தெரியுமா?

Posted: 11 Aug 2013 05:09 AM PDT

புதுமனை கட்டி, காம்பவுண்டு சுவர் எடுத்து, வாசல் பக்கத்து சுவற்றில் சலவைக் கல்லில், "லட்சுமி நிவாஸ்' என்று எழுதிய பெயர் பலகை பதிக்கப்பட்டு விட்டது. அதாவது, அந்த வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்று அதற்கு அர்த்தம். ஆனால், மகாலட்சுமி தான் வசிக்கும் இடங்களையும், வசிக்காத இடங்களையும் பற்றி ருக்மணியிடம் சொன்னதாக ஒரு கதை உள்ளது. அந்த கதையை நாமும் தெரிந்து கொள்வோமே! லட்சுமிதேவி கூறுகிறாள்: அழகும், தைரியமும், வேலைத் திறமையுள்ளோர், வேலை செய்து கொண்டிருப்போர், கோபமில்லாதவர், தெய்வ பக்தி உள்ளோர், ...

பதில் சொல்லுங்கள் பார்ப்போம்!

Posted: 11 Aug 2013 04:45 AM PDT

தமிழில் "சொல்லலங்காரம்' என்ற தலைப்பில் பல நூல்கள் வெளிவந்துள்ளன. அவற்றுள் ஒன்று, 1935-ஆம் ஆண்டு திருநெல்வேலி சு. முத்தையாபிள்ளை என்பவரால் பதிப்பிக்கப்பட்டு, "இரு சொல்லலங்காரம், முச்சொல்லலங்காரம்' என்ற ஒரு கையடக்க அளவிலான வெளியீடாக வெளிவந்துள்ளது. திருநெல்வேலி ஸ்ரீகாந்திமதி விலாச அச்சகத்தில் அச்சான இந்நூலின் விலை ஓர் அணா. அதிலிருந்து சில... கேள்வி: இரு சொல்லலங்காரம் ௧. அந்தணர் (சான்றோர்) சிறப்பதேன்? ஆணிகள் கழல்வதேன்? ௨. அரக்கரிலங்கை அழிவதேன்? அடுப்பிற் சாதங் கொதிப்பேன்? ௩. எருக்கிலை ...

உருவத்தைப் பார்த்து எடை போடாதீர்கள் !!!!!!!!!!!!

Posted: 11 Aug 2013 04:44 AM PDT

அரங்கு நிறைந்த கூட்டம்.பாட்டு போட்டி ,அதில் கலந்து கொள்ள 14 வயது குழந்தை ஒன்று வருகிறது.வயது தான் 14 தவிர உருவம் என்னவோ முற்றிலும் மாறுபட்டது.அளவுக்கு மீறிய வளர்ச்சி.கொஞ்சம் கூச்சமும் வேறு. அரங்குக்குள் அவளை பார்த்ததும் அனைவரும் அதிசயமாக பார்க்கிறார்கள்.நடுவர்கள் உட்பட , பெயர் என்ன ? ஷாலின் ! வயது? 14! பாடிய அனுபவம் இருக்கிறதா? ம் கொஞ்சம். அதிகமாக இல்லை!. இங்கே 1000 பேர் கூடி இருக்கிறார்கள்.கவனமாக பாடுங்கள். சரி! என்ன பாடல் ? ஒரு பாடல் சொல்கிறது.அது கொஞ்சம் கடினமான பாடல்.திறமை ...

மதுமிதா-வின் தொகுப்பில் ‘மரங்கள்'!

Posted: 10 Aug 2013 11:32 PM PDT

வாழ்க்கை என்பதே இயற்கை நமக்களித்த கொடைதான். ஆனால், நம்மில் பெரும்பான்மையினர் அதை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை. நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற இயற்கையின் துணையின்றி நம் புலன்களின் செயல்பாடு நிறைவுறாது. எத்தனை முறை வெட்டிவிட்டாலும் துளிர்க்கும் மரங்களைப் போன்றதே நினைவும். மரங்களைப் பற்றி பலருடைய நினைவிலும் தேங்கியிருக்கும் அத்தகையதான நினைவுகளைத் தொகுத்து, வாசிப்பவரையும் அந்நினைவுகளோடு பிணைப்பதான ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறது 'மதுமிதா' தொகுத்திருக்கும் 'மரங்கள்' தொகுப்பு.  மரங்கள் ...

கவிதையில் யாப்பு

Posted: 10 Aug 2013 10:58 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

வேலன்:-எம்பி3 பைல்களை டிவிடியாக மாற்ற

Posted: 10 Aug 2013 09:39 PM PDT

நம்மிடம் உள்ள எம்.பி.3 பாடல்களை ஒன்றாக சேர்த்தோ - தனிதனியாகவோ டிவிடி பைல்களாக மாற்ற இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 19 எம.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.  இதில் உள்ள Add Files கிளிக் செய்து உங்களிடம் உள்ள எம்.பி.3 பைல்களை தேர்வு செய்யவும்.பின்னர் நீங்கள் டிவிடியாக சேமிக்க விரும்பும் இடத்தினை தேர்வு செய்யவும்.  இறுதியாக இதில் உள்ள Start கிளிக் செய்திட உங்களுக்கு கீழ்கண்ட ...

கவிராயர்கள்!

Posted: 10 Aug 2013 09:17 PM PDT

திரிகூடராசப்பக் கவிராயர் இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். சீகாழி அருணாசலக் கவிராயர் இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை ...

எமலோக கடிகாரங்கள்

Posted: 10 Aug 2013 09:13 PM PDT

இறந்த ஒருவன் சொர்க்கத்திற்கு செல்கிறான். அங்கே ஒரு பெரிய சுவரில் நிறைய கடிகாரங்கள் தொங்க விடப்பட்டிருப்பதை பார்க்கிறான். இறந்தவன்: ஏன் இந்தக் கடிகாரங்கள் இங்கே தொங்க விடப்பட்டுள்ளன? இயமன்: இவை பொய்க் கடிகாரம். பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் இங்கே கடிகாரம் உண்டு, அவர்கள் கூறும் பொய்களுக்கேற்ப இவை சுழலும். இறந்தவன்: (ஒரு கடிகாரத்தை காட்டி) இது சுழலவில்லையே, இது யாருடைய கடிகாரம்? எமன்: இது அன்னை தெரசாவின் கடிகாரம், அவர்கள் பொய்பேசாத காரணத்தால் கடிகாரம் எங்களால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இறந்தவன்: ...

வெலிங்டனில் தமிழ்மணி!

Posted: 10 Aug 2013 08:31 PM PDT

நியூசிலாந்தின் வெலிங்டனில் உள்ள "ரே பாபா' தேசிய அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது 500 ஆண்டுகள் பழைமை மிக்கதாகக் கருதப்படும் பண்டைத் தமிழர்களின் தமிழ்மணி (ANTIQUE TAMIL BELL). இதை மிசினரி வில்லியம் கொலன்சோ (William Colenso) என்பவர் 1836-இல், நியூசிலாந்தின் வடக்குப் பகுதியில் உள்ள வங்கரே (Wangarei) என்ற நகருக்கு 15 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தில் கண்டுபிடித்துள்ளார். இந்த கிராமத்தில் வாழும் மக்கள் மயோரி இனத்தைச் சேர்ந்தவர்கள். அம்மக்கள் இதை சமையல் பாத்திரமாக (குறிப்பாக ...

தமிழ்க் கண்காணிப்புக் கருவி

Posted: 10 Aug 2013 07:42 PM PDT

கண்காணிப்புப் படக்கருவியை (CAMERA) இன்று எங்கும் காண முடிகிறது. இதை நமக்குள்ளேயே பொருத்திப் பார்த்து உணர்த்திய பெருமை தமிழிலக்கியப் பதங்களுக்கு உண்டு கண்காணி இல்லென்று கள்ளம் பலசெய்வார் கண்காணி யில்லா இடமில்லை, காணுங்கால் கண்காணி யாகக் கலந்தெங்கும் நின்றானைக் கண்காணி கண்டார் கனவொழிந் தாரே (திருமந்திரம்.2067) எங்கும் நிறைந்துள்ள கடவுளை ஞானக்கண் கொண்டு காண்பவர்கள், தாம் செய்யும் தீய செயல்களிலிருந்து நீங்குவர். ஆனால், தாம் செய்யும் தீமைகளை மேல் பார்க்கும் உயர் அதிகாரி இல்லை என நினைத்து ...

மதுரை - அழகோ அழகு!

Posted: 10 Aug 2013 07:12 PM PDT



மதுரையின் புகைப்படத்தை பறவைப் பார்வையாக பதிந்திருக்கிறார்கள். விகடன் இ. மேகசின் வெளிட்ட புகைப்படத்தின் பிரம்மாண்டமான அழகு மனதை நிறைத்தது.

புகைப்படம் எடுத்தவர் ராஜசேகரனாக இருக்கலாம். புகைப்படத்தில் அவருடைய பெயர் இருக்கிறது.
எனில், நன்றி விகடன் நன்றி ராஜசேகரன். இது போன்று எத்தனை படங்கள் மதுரையைப் பற்றிய படங்கள் இருந்தாலும் கண்கள் குளிர காண விருப்பம்.

நன்றி-மதுமிதா இணையதளம்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™