Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


ரூ.3.5 லட்சம் கோடிக்கு மாபெரும் நில பேர ஊழல்:சோனியா மருமகன் ராபர்ட் வாத்ரா மீது பரபரப்பு புகார்

Posted:

சண்டிகர்:காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, மாபெரும் நில பேர மோசடியில் ஈடுபட்டது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 3.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு நடந்த மெகா ஊழலை, அரியானா மாநில, ஐ.ஏ.எஸ்., அதிகாரி, அசோக் கெம்கா அம்பலப் படுத்தியுள்ளார். அரியானாவில், பூபிந்தர் சிங் ஹூடா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, குர்கான் அருகேயுள்ள, சிகோபூர் கிராமத்தில், நிலம் வாங்கியதில், காங்., தலைவர் சோனியாவின் மருமகன், ராபர்ட் வாத்ரா, முறைகேட்டில் ஈடுபட்டதாக, "ஏழை மக்கள் கட்சி' தலைவர், அரவிந்த் கெஜ்ரிவால், சில மாதங்களுக்கு முன், பரபரப்பு குற்றச்சாட்டுகளை ...

வருமானத்தில் காங்கிரஸ், அ.தி.மு.க., முதலிடம்: வருமான வரி கணக்கு மூலம் தகவல் வெளியீடு

Posted:

சென்னை:அரசியல் கட்சிகளின் ஆண்டு வருமானத்தில், தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பா.ஜ., ஆகியன முதல் இரு இடங்களை வகிக்கின்றன. மாநில கட்சிகளில், அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் முதல் இரு இடங்களை பகிர்ந்து கொண்டுள்ளன.இத்தகவல்களை, தேர்தல் ஆணையம் மற்றும் வருமான வரித்துறைக்கு, அரசியல் கட்சிகள் தாக்கல் செய்த கணக்குகளிலிருந்து, ஜனநாயக சீரமைப்பு சங்கம் பெற்று, வெளியிட்டுள்ளது.இச்சங்கத்தின் நிர்வாகியான, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம் இதுகுறித்து கூறியதாவது:வருமான வரித்துறைக்கு, 2004 - 05ம் ஆண்டு முதல், 2011 - 12ம் ஆண்டு வரையிலான நிதியாண்டில், அரசியல் கட்சிகள் ...

சட்டவிரோத மணல் குவாரிகள் செயல்படுவது எங்கே? அதிகாரிகள் ஆய்வுக்குப் பின், "சீல்' வைக்க அரசு திட்டம்

Posted:

பசுமை தீர்ப்பாய உத்தரவின் எதிரொலியாக, தமிழகத்தில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் அனுமதி பெற்ற, 60 இடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் செயல்படும் சட்டவிரோத மணல் குவாரிகள் குறித்த கணக்கெடுப்பை, பொதுப்பணித்துறையினர் துவங்கியுள்ளனர்."சுற்றுச்சூழல் துறையின் அனுமதியின்றி, குவாரிகளில் மணல் அள்ளக்கூடாது; நாடு முழுவதும் உள்ள அனைத்து மணல் குவாரிகள் குறித்து வரும், 14ம் தேதிக்குள், அந்தந்த மாநில தலைமை செயலர்கள் பதில் அளிக்க வேண்டும்' என, தேசிய பசுமை தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு பிறப்பித்தது.மேலும், தற்போது அனுமதிக்கப்பட்ட இடங்களில் உள்ள ...

ஏழு கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்: கருணாநிதிக்கு முதல்வர் ஜெ., கோரிக்கை

Posted:

சென்னை:"லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள, தேசிய உணவு பாதுகாப்பு மசோதா, விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக, ஏழு கேள்விகளுக்கு, கருணாநிதி பதில் அளிக்க வேண்டும்' என, முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.அவரது அறிக்கை:"பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்' என்ற பழமொழிக்கேற்ப, பல பிரச்னைகளில், தி.மு.க., எடுத்த முடிவுகளை மனதில் வைத்துதான், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்திற்கு, தி.மு.க., ஆதரவு அளிக்கும் என, தி.மு.க., எம்.பி., இளங்கோவன் மூலமாக தெரிவிக்கப்பட்ட கருத்திற்கு, நான் கண்டனம் தெரிவித்திருந்தேன்.

பதில்:
இதற்கு பதில் ...

"தலைவா' படம் வெளியாகாமல் இருக்க காரணம் என்ன?கருணாநிதி புது தகவல்

Posted:

சென்னை:"அரசை தாக்குவது போல் ஒரு வாக்கியம் இருப்பதால், நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படத்துக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.இதுகுறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:முதல்வரை பற்றி அரசியல்வாதிகள் பேசினால், உடனே அவதூறு வழக்கு போடப்படுகிறது. அப்பேச்சினை பத்திரிகைகள் வெளியிட்டால், அவதூறு வழக்கு தொடரப்படுகிறது. விழுப்புரத்தில், ஒரு மாதமாக, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, நிகழ்ச்சிகள் நடத்த முடியவில்லை.சில அரசியல் தலைவர்கள், சில மாவட்டங்களுக்குள் நுழையக் கூடாது என, தடை விதிக்கப்படுகிறது. இந்த ...

உரத்த சிந்தனை: காதல் வியாபாரிகள் : - ஆர். ஆஞ்சலா ராஜம் - சமூக நலவிரும்பி

Posted:

"சினிமாக் காரனுக்கு ஒரு கதை,அரசியல்வாதிக்கு ஒரு சில ஓட்டுகுடும்பத்தாருக்கு கவுரவம்மீடியாக்களுக்கு செய்திவக்கீலுக்கு பீசுகோர்ட்டுக்கு வழக்கு...இதுவும் கடந்து போகும்...'- இது, தமிழகமே திரும்பிப் பார்த்த, இளவரசன் - திவ்யாவின் காதல், பிரிவு குறித்து, வலைதளம் ஒன்றில், வாசகர் ஒருவர் எழுதிய, "கமென்ட்!'தமிழகத்தில் இதற்கு முன், வேறுபட்ட ஜாதிப் பிரிவினர், திருமணம் செய்து கொண்டதே இல்லையா என்று எண்ணும் வகையில், அப்பப்பா, எத்தனை ஆர்ப்பாட்டங்கள், அடிதடிகள், விவாதங்கள்...!"ஈரை பேனாக்கி; பேனை பெருமாளாக்கி' என, சொல்வார்களே, அதில், அரசியல் தொழில் செய்வோர் கை ...

பா.ஜ.,வின் பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்படுவது எப்போது?

Posted:

புதுடில்லி:பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்படுவது எப்போதுஎன்பது தொடர்பாக,பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.இதுதொடர்பாக, பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:அடுத்த எட்டு மாதங்களில், லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ளது.அதனால், பா.ஜ.,வின்பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை அறிவிப்பது தொடர்பான, ஆலோசனைகள், கட்சியில் துவங்கி விட்டன.இருந்தாலும், இந்த ஆண்டு இறுதியில், டில்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நடைபெறவுள்ள, சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக, மோடியை பிரதமர் பதவி ...

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை பயனற்றதாக்க மத்திய அரசு மும்முரம்

Posted:

புதுடில்லி:"கிரிமினல் வழக்குகளில்தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவிகள் உடனே பறிக்கப்பட வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், கடந்த மாதம் அளித்த தீர்ப்பை, மறுபரிசீலனை செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்வது அல்லது இந்த விவகாரம் தொடர்பாக, அரசியல் சட்ட திருத்தம் கொண்டு வரும் பணிகளில், மத்திய அரசுமும்முரமாக ஈடுபட்டுள்ளது.தேர்தல் தொடர்பான வழக்குகளில், கடந்த மாதம், சுப்ரீம் கோர்ட், இரண்டு முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளை வழங்கியது. அவற்றில் கூறியதாவது: செல்லாதுகிரிமினல் வழக்குகளில் தண்டனை பெற்ற, எம்.எல்.ஏ.,அல்லது எம்.பி.,க்களை பாதுகாக்கும், மக்கள் ...

எல்லையில் பாக்., ராணுவம் அத்துமீறல் பதிலடி கொடுத்தனர் இந்திய வீரர்கள்

Posted:

ஜம்மு :எல்லை பகுதியில், பாகிஸ்தான் ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, நேற்றும், இந்திய ராணுவத்தினர் மீது, தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவம், தகுந்த பதிலடி கொடுத்தது.சில நாட்களுக்கு முன், காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில், எல்லை பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த, இந்திய ராணுவ வீரர்கள் மீது, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி, பாக்., ராணுவம் தாக்குதல் நடத்தியது.இந்த தாக்குதலில், ஐந்து இந்திய வீரரர்கள், வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, இந்தியா - பாக்., எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. பாக்., தூதரை நேரில் அழைத்து, மத்திய அரசு, கண்டனம் ...

கூர்க்காலாந்து தனி மாநிலம் கோரி போராடுவோருக்கு கெடு: கடும் நடவடிக்கை பாயும் என மம்தா பானர்ஜி எச்சரிக்கை

Posted:

கோல்கட்டா:""கூர்க்காலாந்து தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள, கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா அமைப்பினர், 72 மணி நேரத்திற்குள், தங்களின் போராட்டத்தைக் கைவிட வேண்டும்; இல்லையெனில், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்,'' என, மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜி, எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் போராட்டம்:
ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும், சமீபத்தில் முடிவு செய்தன. இதையடுத்து, பல மாநிலங்களில், நீண்ட நாட்களாக ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™