puthiyathalaimurai.tv online |
- தொடர்ந்து ஏறுமுகத்தில் வெங்காய விலை
- சவூதி, குவைத் நாடுகளுக்கு இனி எளிதாக சுற்றுலா செல்லலாம்
- மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல்
- சென்னை விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருப்பவர்களுக்கும் அஞ்சல்துறை சேவை
- ஜவுளித்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: அரசு தகவல்
- கட்டுமானத்துறையில் பணியாளர் பற்றாக்குறை அதிகரிப்பு: அசோசெம் கவலை
- தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,272 சரிவு
- ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்வு
- தண்ணீரை திருடினால் நடவடிக்கை: கண்காணிப்புக் குழு எச்சரிக்கை
- ஆலையிலிருந்து வெளியாகும் சுண்ணாம்பு துகள்:10-க்கும் மேற்பட்ட கிராமம் பாதிப்பு
| தொடர்ந்து ஏறுமுகத்தில் வெங்காய விலை Posted: 26 Aug 2013 11:19 PM PDT வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகளவிலேயே நீடிக்கிறது. சென்னையில் வெங்காயம் ஒரு கிலோ, மொத்த விலையில் 55 ரூபாயாக உள்ள நிலையில், சில்லறை விலையில் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. டெல்லியில் இது 70 ரூபாயாக உள்ள நிலையில் அறுவடையாகும் பகுதிகளில் இருந்து கிலோ 45 முதல் 50 ரூபாய்க்கு சந்தைக்கு வருவதாக கூறப்படுகிறது. வெங்காய வரத்து, தேவையைவிட தொடர்ந்து குறைவாகவே இருப்பதால் வெங்காய விலை அதிக அளவிலேயே நீடிப்பதாக டெல்லியைச் சேர்ந்த வெங்காய வியாபாரிகள் சங்கத் தலைவர் சுரேந்திர புதிராஜ் தெரிவித்தார். |
| சவூதி, குவைத் நாடுகளுக்கு இனி எளிதாக சுற்றுலா செல்லலாம் Posted: 26 Aug 2013 11:14 PM PDT சவுதி, அரேபியா, குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளுக்கு இனி எளிதாக சுற்றுலா செல்லலாம். அரபு வளைகுடா பகுதியில் உள்ள 6 நாடுகளும் இணைந்து சுற்றுலா பயணிகளுக்காக ஒற்றை விசா முறையை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் ஒரே ஒரு விசாவைக் கொண்டு சவுதி, ஐக்கிய அரபு எமிரேட், பஹ்ரைன், குவைத், ஓமன், கத்தார் ஆகிய 6 நாடுகளை சுற்றிப் பார்க்க முடியும். ஒரு மாதம், ஒரு ஆண்டு என்ற அடிப்படையில் இந்த விசாக்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய விசா முறை அடுத்த ஆண்டு மத்தியில் அமலுக்கு வரும். இந்நிலையில் ஏற்கனவே உள்ள விசா நடைமுறைகளும் தொடர்ந்து அமலில் இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. ஐரோப்பாவிலும் இதே போன்ற ஒரு ஒற்றை விசா நடைமுறை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. |
| மயிலாடுதுறை நீதிமன்றத்திற்கு மனித வெடிகுண்டு மிரட்டல் Posted: 26 Aug 2013 11:11 PM PDT நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் உள்ள நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதிக்கு வெடிகுண்டு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மயிலாடுதுறை நடுவர் நீதிமன்றத்திற்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு வருவதால், தற்காலிகமாக அருகில் இருக்கும் திருமண மண்டபத்தில் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மயிலாடுதுறை நீதித்துறை நடுவர் மன்ற நீதிபதி பானுவுக்கு கடிதம் மூலம் மிரட்டல் வந்துள்ளது. அந்த கடித்ததில் 2 குண்டுகள் வெடிக்கும் என்றும், அல்கொய்தா என்று கடிதத்தில் கையெழுத்திட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து நடந்து கொண்டிருந்த வழக்குகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு, தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. |
| சென்னை விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருப்பவர்களுக்கும் அஞ்சல்துறை சேவை Posted: 26 Aug 2013 11:06 PM PDT தனிப்பட்ட நபர்கள் தங்கள் முகத்தை அஞ்சல் தலைகளில் இடம் பெற வைப்பதற்கான வாய்ப்பை அஞ்சல் துறை வழங்கியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்திருப்பவர்களும் இந்தச் சேவையை இனி பெற முடியும். பயணிகள் அங்கு அமைந்துள்ள அஞ்சல் துறை சிறப்புப் பிரிவில் உரிய விண்ணப்பத்துடன் தங்கள் அடையாள ஆவணங்களையும், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தையும் கொடுத்தால் 10 நாட்களுக்குள் அவர்களுக்கு அஞ்சல் தலை அனுப்பி வைக்கப்படும். தங்கள் படம் கொண்ட அஞ்சல் தலையை பெற 322 ரூபாய் கட்டணமாக செலுத்தவேண்டும். 5 ரூபாய் முக மதிப்பு கொண்ட 12 அஞ்சல் தலைகள் அவர்களுக்கு வழங்கப்படும். சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிறப்புப் பிரிவில் அஞ்சல் தலை வசதி தவிர இணையதள பயன்பாட்டு சேவை, அஞ்சல் துறை ஆயுள் காப்பீடு உள்ளிட்ட சேவைகளும் வழங்கப்படும். தற்போது இந்தச் சேவை உள்நாட்டு விமான நிலையத்தில் மட்டும் வழங்கப்படுகிறது. இந்த சேவை சர்வதேச விமான நிலையங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
| ஜவுளித்துறையில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: அரசு தகவல் Posted: 26 Aug 2013 10:58 PM PDT கட்டுமானத் துறையில் அதிக அளவில் வேலைவாய்ப்புகள் உள்ள நிலையில் ஜவுளித் துறையிலும் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்த 9 ஆண்டுகளில் இத்துறையில் புதிதாக 2.5கோடி பேர் வேலை பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது. ஜவுளித் துறையில் கடந்த 2008ல் நேரடியாக 3.5 கோடி பேர் வேலைவாய்ப்பு பெற்றிருந்த நிலையில் இன்னும் 9 ஆண்டுகளில் அதாவது 2022ம் ஆண்டில் 6 கோடி முதல் 6 கோடியே 20 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என தேசிய திறன் மேம்பாட்டு நிறுவன தகவல் தெரிவித்துள்ளது. 2022-ம் ஆண்டில் ஜவுளித் துறையில் மனித வளம் மற்றும் பணியாளர் தேவை குறித்து தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் விரிவான ஆய்வு நடத்தியது. அதில் தெரியவந்த தகவல்களை நாடாளுமன்றத்தில் ஜவுளித் துறை அமைச்சர் சாம்பசிவராவ் வெளியிட்டார். |
| கட்டுமானத்துறையில் பணியாளர் பற்றாக்குறை அதிகரிப்பு: அசோசெம் கவலை Posted: 26 Aug 2013 10:50 PM PDT கட்டுமானத் துறையில் பணியாளர் பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளதாக தொழில்,வர்த்தக அமைப்பான அசோசெம் கவலை தெரிவித்துள்ளது. போதிய அளவு பொறியாளர்களும், பணியாளர்களும் இல்லாததால் பெரிய கட்டடங்கள், பாலங்கள், சாலைகள் கட்டுமானத் திட்டங்கள் தாமதமாகி வருவதாக அசோசெம் கூறியுள்ளது. இதனால் திட்டங்களின் செலவுகளும் அதிகரித்திருப்பதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. கட்டுமானத் துறைகளில் நிர்வாகத் திறன் மிக்கவர்கள் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கு மாறி வருவதும் இப்பிரச்னைக்கு ஒரு காரணம் என அசோச்செம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தொழில் முறை கல்வியை பரவலாக்குவதுடன் தொழிற் பயிற்சிகளையும் அதிகரிப்பதே இதற்கு தீர்வு என அசோசெம் தெரிவித்துள்ளது. கட்டுமானத் துறை நிபுணர்களுக்கு அடுத்து வரும் ஆண்டுகளில் தேவை அதிகரிக்கும் என்று ஏற்கனவே சில ஆய்வுகளில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. |
| தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 1,272 சரிவு Posted: 26 Aug 2013 10:43 PM PDT ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு கண்டு வந்த நிலையில் இன்று கடும் சரிவை கண்டுள்ளது. காலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 1, 272 சரிவு கண்டு, ரூபாய் 23,088 விற்கப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம் ரூபாய் 2,886-க்கும், 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூபாய் 3,086-க்கும் விற்கப்படுகிறது. வெள்ளியின் விலையில் உயர்வே காணப்படுகிறது. கட்டி வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு 1,155 அதிகரித்து ரூபாய் 56,785-க்கு விற்கப்படுகிறது.சில்லறை விற்பனையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 60.80-க்கு விற்கப்படுகிறது. |
| ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை உயர்வு Posted: 26 Aug 2013 10:39 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் இதன் தாக்கம் வீட்டு உபயோக பொருட்களின் விலைகளில் தெரிகிறது. மொபைல் ஃபோன்கள், டிவிக்கள், கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் விலையை 200 ரூபாய் முதல் 8 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்த பல்வேறு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மின்னணு சாதனங்களுக்கான உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய கூடுதல் விலை கொடுக்க வேண்டியிருப்பதுதான் இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. விலையை உயர்த்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியே இல்லை என எச்பி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் ஸ்ரீவஸ்தவா தெரிவித்தார். சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் தனது தயாரிப்புகளின் விலையை உயர்த்தியிருந்த நிலையில் இப்போது சில மொபைல் ஃபோன்கள், டேப்லட்டுகளின் விலையை உயர்த்தியுள்ளது. பானசோனிக், சோனி போன்ற நிறுவனங்களும் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. |
| தண்ணீரை திருடினால் நடவடிக்கை: கண்காணிப்புக் குழு எச்சரிக்கை Posted: 26 Aug 2013 10:16 PM PDT திருமூர்த்தி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட பாசன நீரை திருடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாசன தண்ணீர் கண்காணிப்பு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பயன்பெறும் வகையில் திருமூர்த்தி அணை நேற்று திறந்துவிடப்பட்டது. 129 கிலோ மீட்டர் தூரம் வரை கால்வாய் வழியாக செல்லும் இந்த தண்ணீரை, சிலர் சட்டவிரோமாக திருடுவதால், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் சென்றடைவதில்லை என குற்றச்சாட்டு எழுகிறது. இந்த நிலையில், தண்ணீர் திருட்டை தடுக்கும் விதமாக பொள்ளாச்சி துணை ஆட்சியர் தலைமையில், காவல்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகள் அடங்கிய பாசன தண்ணீர் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் கூட்டம் பொள்ளாச்சியில் நேற்று நடைபெற்றது. சட்டவிரோதமாக தண்ணீர் திருட்டில் ஈடுபடுவர்களின் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என கண்காணிப்புக் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. |
| ஆலையிலிருந்து வெளியாகும் சுண்ணாம்பு துகள்:10-க்கும் மேற்பட்ட கிராமம் பாதிப்பு Posted: 26 Aug 2013 10:03 PM PDT கரூர் அருகே தமிழ்நாடு காகித நிறுவனத்திற்குச் சொந்தமான சிமெண்ட் ஆலையில் இருந்து வெளிவரும் சுண்ணாம்பு துகள்களால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. வேலாயுதம்பாளையம் அருகே தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலை உள்ளது. இந்த ஆலை சார்பில் அதனை அருகிலேயே அமைக்கப்பட்ட சிமெண்ட் ஆலை கடந்த 6 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. அந்த ஆலையில் சுண்ணாம்பு கற்களை உடைக்கும் போது, உருவாகும் துகள்கள் அருகில் உள்ள ஆவாரங்காட்டுப்புதூர், அம்மாபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் பரவுகின்றன. இதனால் சுவாச பிரச்னைகள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். தென்னை மரங்களில் சுண்ணாம்பு துகள்கள் படிவதால், விளைச்சல் பாதிக்கப்படுவதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |