Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


திருப்பதிக்கு வரும் வாகனங்களை தடுத்து நிறுத்துவோம்: தெலுங்கானா எதிர்ப்பு குழு மிரட்டல்

Posted: 26 Aug 2013 10:54 PM PDT

ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் இன்று 28–வது நாளாக நீடித்து வருகிறது. இதன் காரணமாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியில் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. அரசு அலுவலகங்கள், வங்கிகள் வர்த்தக நிறுவனங்கள் செயல்படவில்லை. ஒட்டு மொத்த மக்களும் வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்கள். போராட்டம் காரணமாக திருப்பதியிலும் பஸ்கள் இயங்கவில்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் சென்று வருகிறது. இதனால் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களின்

பஞ்சாப் 'பாப் பாடகர்' தலெர் மெஹந்தி காங்கிரசில் இணைந்தார்

Posted: 26 Aug 2013 10:38 PM PDT

பஞ்சாபின் புகழ்பெற்ற பாப் பாடகராக தலெர் மெஹந்தி விளங்குகிறார். 'இந்தியன் பாங்கரா' பாப் பாடகரான இவரது 'டுனாக் டுனாக் டூன்' என்ற ஆல்பம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலானது ஆகும். தலெர் மெஹந்தியுடன் டெல்லியை சேர்ந்த பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.எல்.ஏ.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு மீண்டும் ரூ.65.22 ஆக சரிவு

Posted: 26 Aug 2013 10:02 PM PDT

கடந்த வார வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவுக்கு 65.56 ஆக வீழ்ச்சி அடைந்தது. ரூபாய் மதிப்பு சரிவால் இந்திய பங்குச் சந்தைகளில் அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து வருகிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை சரிவில் இருந்து மீண்டு ரூபாய் மதிப்பு 64 ஆக இருந்தது. நேற்று மீண்டும் சரிவு ஏற்பட்டு ரூபாய் மதிப்பு 64.31 ஆக இருந்தது. இன்று மேலும் வீழ்ச்சி அடைந்து ரூபாய் மதிப்பு 65.22 ஆக சரிந்தது. அன்னிய நிதி நிறுவனங்களின் முதலீடு குறைந்து, எண்ணை நிறுவனங்களும், இறக்குமதியாளர்களும் அதிக அளவில் டாலர்களை வாங்கி வருவதால் டாலருக்கு தேவைப்பாடு அதிகரித்து

ஹிந்தி நடிகை சோனம் கபூர் தலைமையில் நடந்த கற்பழிப்புக்கு எதிரான ஊர்வலம்

Posted: 26 Aug 2013 08:29 PM PDT

மும்பையில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு புகைப்பட நிருபராக பணிபுரிந்த 23 வயதுப் பெண் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் கடந்த 22ஆம் தேதி கற்பழித்தது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இது போன்ற தொடர் நிகழ்வுகள் பொதுமக்களிடையே கோபத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் நடந்த நிகழ்ச்சி குறித்து, பல ஹிந்தித் திரையுலக நட்சத்திரங்கள் தங்களின் கோபத்தை இணையதளத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.அவர்களில் சோனம் கபூரும் ஒருவராவார். இவர் நடிகர் அனில் கபூரின் மகளாவார்.முன்னாள் மாடல் அழகியான இவர், பிரான்ஸ் நாட்டு அழகுப் பொருட்கள் விற்பனை நிறுவனமான லோ ரியலின் செய்தித் தொடர்பாளராக இருப்பதன் மூலம் சர்வதேச அங்கீகாரம் பெற்றுள்ளார்.

புதிய டைபாய்டு தடுப்பு மருந்தினை அறிமுகம் செய்த ஐதராபாத் மருந்து தயாரிப்பு நிறுவனம்

Posted: 26 Aug 2013 05:39 PM PDT

டைபாய்டு என்பது இந்திய துணைக்கண்டத்தில் காணப்படும் பொதுவான ஒரு நோய் ஆகும். நோய் பாதிக்கப்பட்ட மக்களின் மலம் அல்லது சிறுநீர் மூலம், அசுத்தமான பானம் அல்லது உணவு மூலம் இந்நோய் பரவக்கூடும். உலக சுகாதாரக் கழகத்தின் அறிக்கையின்படி 90 சதவிகித டைபாய்டு மரணங்கள் ஆசியா கண்டத்தில்தான் நடைபெறுகின்றன

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் தலைவர்கள், மத்திய அரசின் அனுமதி பெற்ற பின்னரே இனி வெளிநாடு செல்ல முடியும்

Posted: 26 Aug 2013 05:06 PM PDT

வெளிநாடுகளின் அழைப்பை ஏற்று அந்நாடுகளுக்கு செல்லும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் நீதிபதிகள் இனி மத்திய அரசிடமிருந்து இதற்கான அனுமதியை பெற்ற பின்னரே செல்ல முடியும் என மத்திய உள்துறை அறிவித்துள்ளது

உத்தரபிரதேசத்தில் 45 நாட்களில் 4 பத்திரிகையாளர்கள் படுகொலை

Posted: 26 Aug 2013 04:42 PM PDT

உத்தரபிரதேச மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் காணாமல் போன பத்திரிகையாளர் நேற்று புலந்த்ஷஹர் பகுதியில் சாக்குமூட்டைக்குள் பிணமாக கிடந்தார். ஜகாவுல்லா(28) என்ற அந்த பத்திரிகையாளர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் திடீரென்று காணாமல் போனார்

சிரியா மீது தாக்குதல் நடத்த முயற்சிக்கும் அமெரிக்கா படுதோல்வியை சந்திக்கும்: பஷர் அல்-ஆசாத் எச்சரிக்கை

Posted: 26 Aug 2013 03:53 PM PDT

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக மக்களும், மக்கள் ஆதரவு புரட்சிப்படையினரும் தொடர்ந்து 3-வது ஆண்டாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 21-ந்தேதி தலைநகர் டமாஸ்கஸ் அருகே புரட்சிப்படை வசமுள்ள புறநகர்களில் அதிபர் பஷார் அல் ஆசாத் படையினர் ரசாயன

காபூலில் சிறைப்பட்டிருக்கும் புத்தரின் பிச்சைப் பாத்திரத்தை இந்தியாவுக்கு கொண்டு வர வேண்டும்: எம்.பி. வலியுறுத்தல்

Posted: 26 Aug 2013 03:21 PM PDT

ஆப்கானிஸ்தானில் உள்ள அருங்காட்சியகத்தில் சிறைபட்டிருக்கும் புத்தர் பயன்படுத்திய பிச்சைப் பாத்திரத்தை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட வேண்டும் என பீகார் மாநில எம்.பி. கூறியுள்ளார்

போலீஸ் துறையில் 35 சதவீதம் பெண்களை நியமிக்க வேண்டும்: மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை வலியுறுத்தல்

Posted: 26 Aug 2013 02:51 PM PDT

போலீஸ் துறையில் பெண்களுக்கு 35 சதவீதம் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, புதுடெல்லியில் மத்திய உள்துறை இணை மந்திரி ஆர்.பி.என்.சிங் கூறியதாவது

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனியா காந்தி வீடு திரும்பினார்

Posted: 26 Aug 2013 02:06 PM PDT

பாராளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடைபெற்ற போது சோனியா காந்திக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி

ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தியை பிரதமர் சந்தித்து நலம் விசாரித்தார்

Posted: 26 Aug 2013 12:34 PM PDT

பாராளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நேற்றிரவு நடைபெற்ற போது சோனியா காந்திக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து, அவரது மகனும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ராகுல் காந்தி உடனடியாக

பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா வெற்றி

Posted: 26 Aug 2013 10:41 AM PDT

மக்களவையில் உணவு பாதுகாப்பு மசோதா மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பல்வேறு திருத்தங்களை முன்வைத்தனர். இந்த மசோதா உணவு பாதுகாப்புக்கு அல்ல, காங்கிரஸ் கட்சியின் ஓட்டு பாதுகாப்பு மசோதா என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. முலாயம் சிங் உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்

சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக் குறைவு: ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 26 Aug 2013 10:21 AM PDT

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திடீர் உடல்நலக் குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இன்றிரவு பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு மசோதா மீதான வாக்கெடுப்பு நடைபெற்ற போது சோனியா காந்திக்கு திடீரென உடல் நலக் குறைவு ஏற்பட்டது

உணவு பாதுகாப்பு மசோதா மீது மக்களவையில் வாக்கெடுப்பு

Posted: 26 Aug 2013 09:35 AM PDT

மக்களவையில் உணவு பாதுகாப்பு மசோதா மீது இன்று விவாதம் நடத்தப்பட்டது. இந்த விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்கள் பல்வேறு திருத்தங்களை முன்வைத்தனர். இந்த மசோதா உணவு பாதுகாப்புக்கு அல்ல, காங்கிரஸ் கட்சியின் ஓட்டு பாதுகாப்பு மசோதா என்று பா.ஜனதா குற்றம் சாட்டியது. முலாயம் சிங் உள்ளிட்ட தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வி.எச்.பி. யாத்திரை விஷயத்தில் சமாஜ்வாடி-பா.ஜனதா மேட்ச் பிக்சிங்கா? - அகிலேஷ் யாதவ் மறுப்பு

Posted: 26 Aug 2013 09:11 AM PDT

உத்தர பிரதேசத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு மக்களின் ஆதரவை திரட்டுவதற்காக, விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி.) சார்பில் ஆகஸ்ட் 25-ம் தேதி முதல் செப்டம்பர் 13-ம் தேதி வரை யாத்திரை நடத்த திட்டமிடப்பட்டது. இது சமூக அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்று கூறி, யாத்திரைக்கு உத்தர பிரதேச அரசு தடை விதித்தது. ஆனால் தடையை மீறி யாத்திரை நடத்த வி.எச்.பி. தலைவர்கள் திட்டமிட்டதால், ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர்.

அசாமில் ராகிங் கொடுமை: பள்ளி விடுதியில் இருந்து 22 மாணவர்கள் ஓட்டம்

Posted: 26 Aug 2013 08:09 AM PDT

அசாம் மாநிலம் ஹைலகண்டி மாவட்டத்தில், ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளி மாணவர்கள் தங்கியுள்ள விடுதியில் சமீப காலமாக ராகிங் அதிகரித்து வந்துள்ளது. இதன் உச்சகட்டமாக நேற்று இரவு 9ம் வகுப்பு மாணவர்கள் இரண்டு பேரை, சீனியர் மாணவர்கள் கழிவறையில் அடைத்து வைத்து மிரட்டியுள்ளனர். இதையடுத்து

உணவு பாதுகாப்பு மசோதாவில் குறைபாடுகள் களையப்படும்: கே.வி.தாமஸ் உறுதி

Posted: 26 Aug 2013 08:00 AM PDT

மக்களவையில் இன்று உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்திற்குப் பிறகு உணவுத்துறை மந்திரி கே.வி.தாமஸ் பதில் அளித்து பேசியதாவது:- உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் 25 உறுப்பினர்கள பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் பங்கேற்ற உறுப்பினர்கள், ஆக்கப்பூர்வமான யோசனைகளை பலவற்றை முன்வைத்துள்ளனர். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள ஆக்கப்பூர்வ யோசனைகள் ஏற்கப்பட்டுள்ளன.

மாநில அரசு மீது சுமையை ஏற்றும் உணவு பாதுகாப்பு மசோதா: அ.தி.மு.க. கடும் தாக்கு

Posted: 26 Aug 2013 06:46 AM PDT

உணவு பாதுகாப்பு மசோதா மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் தம்பிதுரை பேசியதாவது:- மத்திய அரசு தாக்கல் செய்துள்ள உணவு பாதுகாப்பு மசோதாவால் தமிழகத்திற்கு பாதிப்பு என்பதால் அதனை அ.தி.மு.க. எதிர்க்கிறது. இந்த மசோதா வந்தால் 18 மாநிலங்களுக்கு உணவு தானிய ஒதுக்கீடு குறையும் என மத்திய அமைச்சரே கூறியுள்ளார். தேர்தலை கருத்தில் கொண்டே இந்த மசோதா

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஆஸ்ரம் பாபுவுக்கு போலீஸ் சம்மன்

Posted: 26 Aug 2013 05:59 AM PDT

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆன்மிக தலைவர் ஆஸ்ரம் பாபு ஒரு ஆசிரமம் நடத்தி வருகிறார். இங்கு தங்கி படித்து வந்த உத்தர பிரதேச சிறுமிக்கு ஆஸ்ரம் பாபு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் கூறப்பட்டது. அதன் அடிப்படையில் ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தன் மீதான குற்றச்சாட்டை ஆஸ்ரம் பாபு மறுத்துள்ளார். புகார் கூறிய அந்த சிறுமியை


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™