puthiyathalaimurai.tv online |
- நில பேர விவகாரத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது புகார்
- ரஜோரியில் ஊரடங்கு உத்தரவு: அருண் ஜேட்லி தடுத்து நிறுத்தப்பட்டார்
- கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில்
- கிருஷ்ணகிரியில் மக்கள் மீது போலீஸ் தடியடி
- பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீர் எல்லையில் தாக்குதல்
- திருப்பதிக்கு வர வேண்டாம்: தேவஸ்தானம்
- மேட்டூர் அணை நிலவரம்
- சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து
- தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் மோடி: ஹைதாராபாத்தில் பொதுக்கூட்டம்
- அரசுக்கு ரூ.96ஆயிரம் கோடி இழப்பு: கனிமமணல் அள்ளத்தடை விதிக்க கோரிக்கை
| நில பேர விவகாரத்தில் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது புகார் Posted: 10 Aug 2013 10:57 PM PDT நில பேர விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா சலுகை பெற்றதாக ஐஏஎஸ் அதிகாரி கூறியுள்ள குற்றச்சாட்டு குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சி வலியுறுத்தி உள்ளது. போலியான ஆவணங்கள் மூலம் ஹரியானா மாநிலம் குர்கானில், 2008ம் ஆண்டு 3.53 ஏக்கர் நிலத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா வாங்கி இருப்பதாக அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அசோக் கெம்கா குற்றம்சாட்டியுள்ளார். இந்த நிலவிவகாரத்தில் வதேராவுக்கு சலுகை காட்டப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இந்த விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று பாரதீய ஜனதா கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் வலியுறுத்தி உள்ளார். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தலைமை உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். |
| ரஜோரியில் ஊரடங்கு உத்தரவு: அருண் ஜேட்லி தடுத்து நிறுத்தப்பட்டார் Posted: 10 Aug 2013 10:38 PM PDT ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் கிஸ்த்வார் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறை ரஜோரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதால் 5 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஜம்மு செல்லமுயன்ற பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அருண் ஜெட்லியை விமான நிலையத்திலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பார்வையிடுவதற்காக இன்று காலை அருண் ஜெட்லி ஜம்மு விமான நிலையத்தில் சென்று இறங்கினார். அங்கேயே அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். இதேபோல், பஞ்சாப்பிலிருந்து ஜம்முவிற்குள் நுழைய முற்பட்ட பாரதிய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் அவினாஷ் கண்ணாவை எல்லையிலேயே போலீசார் தடுத்து நிறுத்தினர். கிஷ்த்வார் செல்ல முயன்ற மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் வழியிலேயே தடுத்து நிறுத்தப்பட்டார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஜம்மு, ரஜோரி உள்ளிட்ட 5 மாவட்டங்களிலும் ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வன்முறை காரணமாக ஜம்முவிலிருந்து புறப்படும் அமர்நாத் புனித யாத்திரை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் குலீத் பகுதியில் நேற்று முன்தினம், இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தையடுத்து வன்முறை ஏற்பட்டது. |
| கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு ஜெயலலிதா பதில் Posted: 10 Aug 2013 10:13 PM PDT கோட நாட்டில் இருந்தாலும் அரசுப் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருவதாக முதலமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார். திமுக தலைவர் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கு பதில் அளிக்கும் விதமாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், தலைநகரிலேயே எப்பொழுதும் முதலமைச்சர் இருக்கிறாரா, இல்லையா என்பது முக்கியமல்ல என்று குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, தலைநகரில் இருந்தாலும், தமிழ்நாட்டின் இதர பகுதியில் இருந்தாலும் மக்கள் நலனுக்காக துரித நடவடிக்கை எடுக்கப்படுகிறதா என்பதுதான் முக்கியம் என்றும் கூறியுள்ளார். கோடநாட்டில் தங்கியிருந்த போது, மீனவர்கள் விவகாரம், ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு, தர்மபுரி இளவரசன் விவகாரம் உள்ளிட்டவற்றை கையாண்ட விதத்தை பட்டியலிட்டுள்ளார். |
| கிருஷ்ணகிரியில் மக்கள் மீது போலீஸ் தடியடி Posted: 10 Aug 2013 09:55 PM PDT கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. பாலக்குரி கிராமத்தில் 3 மாதமாக குடிநீர் மற்றும் மின்சாரம் சீராக விநியோகிக்கப்படாததை கண்டித்து 500க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியுள்ளது. |
| பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீர் எல்லையில் தாக்குதல் Posted: 10 Aug 2013 09:15 PM PDT ஜம்மு- காஷ்மீர் எல்லையில் இந்திய ராணுவ சோதனைச் சாவடியை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது. ஜம்மு மாவட்டத்தில் உள்ள கானாசாக் பகுதியில் இந்த தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியுள்ளது. இதில், எல்லைப் பாதுகாப்புப்படை வீரர் ஒருவர் படுகாயம் அடைந்தார். அப்பகுதியில் தொடர்ந்து துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூஞ்ச் பகுதியில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை இந்திய ராணுவ வீரர்கள் 5 பேரை பாகிஸ்தான் ராணுவம் சுட்டுக் கொன்றது. இதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. காணொளி:பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: காஷ்மீர் எல்லையில் தாக்குதல் |
| திருப்பதிக்கு வர வேண்டாம்: தேவஸ்தானம் Posted: 10 Aug 2013 08:59 PM PDT திருப்பதிக்கு 2 நாட்களுக்கு பக்தர்கள் வர வேண்டாம் என தேவஸ்தான அதிகாரிகள் அறிவித்துள்ளனர். திருப்பதியில் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்கள் தரிசிக்க நீண்டநேரம் காத்திருப்பதாகவும், தெலங்கானாவுக்கு எதிராக நாளை போராட்டம் நடப்பதால் திருப்பதி வருவதை பக்தர்கள் தவிர்க்கலாம் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். |
| Posted: 10 Aug 2013 08:53 PM PDT மேட்டூர் அணை நீர்மட்டம் 120.08 அடியாக உள்ள நிலையில் நீர் இருப்பு 93.59டி.எம்.சியாக உள்ளது. நீர்வரத்து 22,577 கன அடியாக இருக்கிறது. விநாடிக்கு 25,598 கன அடி நீர் மேட்டூர் அணையில் இருந்து விவசாய பயன்பாட்டிற்காக வெளியேற்றம் செய்யப்படுகிறது. |
| சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து Posted: 10 Aug 2013 08:25 PM PDT சென்னை விமான நிலைய உள்நாட்டு புதிய முனையத்தில் மேற்கூரை சரிந்து விழுந்தது. அதிகாலை நேரத்தில் இந்த விபத்து ஏற்பட்டதால், பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. சென்னை விமான நிலைய உள்நாட்டு புதிய முனையம், இந்தாண்டு ஜனவரி மாதம் குடியரசுத் தலைவர் பிரணப் முகர்ஜியால் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையில், இண்டிகோ விமானத்திற்கான பயண அட்டை பெறும் இடத்தில் இருந்த மேற்கூரை திடீரென சரிந்து விழுந்தது. 300 அடி நீளமும், 6 அகலமும் கொண்ட இந்தக் கூரையானது மழை மற்றும் ஏசி தண்ணீர் தேங்கியதால் இடிந்து விழுந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அதிகாலை இண்டிகோ விமானம் புறப்பட்டு விட்டதால், கூரை சரிந்தபோது பயணிகள் யாரும் அங்கு இல்லை. கடந்த 3 மாதங்களுக்கு முன்னர், ஏர் இந்தியா விமான நிலையத்திற்கான பயணிகள் பாதுகாப்பு பகுதியில் மேற்கூரை சரிந்து விழுந்தது. காணொளி:சென்னை விமான நிலையத்தில் மேற்கூரை சரிந்து விழுந்து விபத்து |
| தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் மோடி: ஹைதாராபாத்தில் பொதுக்கூட்டம் Posted: 10 Aug 2013 08:03 PM PDT நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரச்சாரத்தை பாரதிய ஜனதா கட்சி இன்று ஹைதராபாத்தில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது. ஹைதராபாத் லால் பகதூர் சாஸ்திரி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேர்தல் பிரச்சாரக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்ற உள்ளார். இந்த பொதுக்கூட்டத்தில் ஒரு லட்சம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என அம்மாநில பாரதிய ஜனதா நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை அக்கட்சியின் மூத்த தலைவர்களான வெங்கய்யா நாயுடு உள்ளிட்டோர் மேற்கொண்டு வருகின்றனர். நரேந்திர மோடி வருகையையொட்டி ஹைதராபாத்தில் 3 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காணொளி:தேர்தலுக்கான பிரச்சாரத்தை தொடங்குகிறார் மோடி: ஹைதாராபாத்தில் பொதுக்கூட்டம் |
| அரசுக்கு ரூ.96ஆயிரம் கோடி இழப்பு: கனிமமணல் அள்ளத்தடை விதிக்க கோரிக்கை Posted: 10 Aug 2013 07:51 PM PDT நெல்லை மாவட்ட கடற்கரைகளில் கனிம மணல் அள்ளுவதற்கு தடை விதிக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. நெல்லை மாவட்ட கடற்கரைகளில் 20-க்கும் மேற்பட்ட தனியார் மணல் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிறுவனங்கள் கூத்தங்கூழி, விஜயாபதி,ஆவுடையாள்புரம் கடற்கரைப்பகுதிகளில் விதிமுறைகளை மீறி அதிகளவில் மணல் எடுக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இந்த ஆலைகள், மணலில் இருந்து கனிமத்தை பிரிக்க கடல்நீரை பயன்படுத்தி பின், அதே தண்ணீரை கடலில் விடுவதாகவும், இதனால் கடலின் நிறம் சிவப்பாக மாறுவதாகவும் மீனவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் மீன்வளம் பாதிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். அரசுக்கு ரூ.96ஆயிரம் கோடி இழப்பு தமிழகத்தில் சட்ட விரோத கனிம வளம் மூலமாக அரசுக்கு 96ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக, ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும், தூத்துக்குடி துறைமுகத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சுந்தரம் குற்றம்சாட்டியுள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் கனிம மணல் கொள்ளையில் அதிகளவில் முறைகேடு நடைபெறுவதால் அதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. காணொளி:அரசுக்கு ரூ.96ஆயிரம் கோடி இழப்பு: கனிமமணல் அள்ளத்தடை விதிக்க கோரிக்கை |
| You are subscribed to email updates from புதிய தலைமுறை To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |