Tamil Star |
- பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்–தகுதியானவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா
- உலக தடகள சாம்பியன்ஷிப்: கென்ய வீராங்கனை சாதனை
- சதம் அடிக்காமல் சாதனை படைத்தார் மிஸ்பா
- இந்திய அணியில் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படும் சேவாக், கம்பீர்
- பிரிட்டனில் பரிசு கிடைத்தும் பணத்தை பெறாத 12 கோடீஸ்வரர்கள்
- 2015ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் வெளிநாட்டு உதவியுடன் 11 மீன்பிடித் துறைமுகங்கள்
- வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிப்பு
- இந்தியாவின் இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரிப்பு
- தமிழர்களிடமும் பொதுமன்னிப்பு கோருமா அரசு?
- அனுமதியின்றி கேரளாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இந்து குடும்பத்தினர் மீது வழக்கு
| பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்–தகுதியானவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா Posted: 10 Aug 2013 11:01 PM PDT
பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர்–தகுதியானவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதா என்ற தகவல் வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்பின் மூலம் தெரிய வந்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியரும், துபையில் மூத்த மனிதவள மேம்பாடு மற்றும் நிர்வாக ஆலோசகருமான பொன் முகைதீன் பிச்சை, இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்பது தொடர்பாக வெளிநாடுவாழ் இந்தியர்களிடம் இ–மெயில் மற்றும் தொலைபேசி மூலம் கருத்து கணிப்பு நடத்தினார். வளைகுடா நாடுகளான சவுதி, கத்தார், ஓமன், பக்ரைன், குவைத் மற்றும் ஆஸ்திரேலியா, கனடா, இங்கிலாந்து, சிங்கப்பூர், மலேசியா, ஸ்ரீலங்கா, தாய்லாந்து, இந்தியா ஆகிய நாடுகளை சேர்ந்த மேலாளர்கள், என்ஜினீயர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடம் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. அதன் விவரம் வருமாறு:– பிரதமர் பதவிக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவும், குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியும் பொருத்தமானவர்கள்; தகுதியானவர்கள் ஆவர். மற்ற தலைவர்களை விட இவர்கள் இருவரும் பிரதமர் பதவிக்கு சிறந்தவர்கள். நாட்டின் தலைமை பொறுப்புக்கு தற்போது ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு இவர்கள் சிறந்த மாற்றாக இருப்பார்கள். பிரதமர் மன்மோகன்சிங்கை விட நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தக்கூடிய ஆற்றல் நரேந்திரமோடிக்கு உண்டு. பொருளாதார நடவடிக்கைகளை நிறைவேற்றுவதில் திறமை மிக்கவர். மத்தியில் நல்ல நிர்வாகத்தை அவரால் கொடுக்க முடியும். இன்றைய சூழலில் நாட்டின் உள்கட்டமைப்பு, சுகாதாரம், குடிநீர், எரிசக்தி ஆகியவற்றை மேம்படுத்த வேண்டுமானால் கண்டிப்பாக அன்னிய நேரடி முதலீடு அவசியம். அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு மத்தியில் திறமையான நிர்வாகம் தேவை. ஆட்சியில் பொறுப்பு உணர்வு வேண்டும். திறமையான நிர்வாகத்தையும், ஆட்சியில் பொறுப்புணர்வையும் அளிக்கும் ஆற்றல் ஜெயலலிதாவுக்கும், நரேந்திர மோடிக்கும் இருக்கிறது. இன்னும் கூடுதலாக ஜெயலலிதா மனத்துணிவும், தீர்க்கமான உறுதியும் கொண்டவர் ஆவார். எப்படி லீ குவான் யூ சிங்கப்பூர் பற்றி தொலைநோக்கு சிந்தனை கொண்டிருந்தாரோ அத்தகைய தொலைநோக்கு பார்வை ஜெயலலிதாவிடமும் இருக்கிறது. அவர் 2011–ம் ஆண்டு தமிழகத்தின் முதல்–அமைச்சராக 2011–ம் ஆண்டு பொறுப்பேற்றபோது, இந்தியாவில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை உருவாக்கினார். அவரது 2013 தொலைநோக்கு, மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியை 11 சதவீதமாக உயர்த்துவது என்று இருந்தது. தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கும், குஜராத் முதல்–மந்திரி நரேந்திரமோடிக்கும் நாட்டை முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்வதற்கான நல்ல பொருளாதார அறிவு இருக்கிறது. இருவருக்கும் நீண்ட காலம் முதல்–அமைச்சராக பணியாற்றிய அனுபவம் உள்ளது. நரேந்திரமோடியை பொருத்தமட்டில் சாதி சாரா தலைவராக இருக்கிறார். மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் திறமை மிக்கவர். நிர்வாகத்திறன் படைத்தவர். அதேநேரத்தில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சில தனித்துவ பண்புகள் கொண்டவர். நிர்வாகத்திறமை, சமூக பிரச்சினைகள் பற்றிய தெளிவு, சிக்கலான விஷயங்களைய உடனே புரிந்துகொள்ளும் அறிவாற்றல் மிக்கவர். ராஜ்ஜியத்திறன், சமூக, பொருளாதார அறிவு, பன்மொழி புலமை. முடிவு எடுக்கும் திறன், புதுமைசிந்தனை, நல்ல கல்விபுலமை, அரசியல் திறமைகள், மக்களின் நலன்பால் உள்ள அக்கறை. இவை எல்லாம் ஜெயலலிதாவின் தனிச்சிறப்புகள் ஆகும். பிரதமர் பதவிக்கு தகுதியானவர் யார் என்று ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, ஜெயலலிதாவுக்கு 86 மதிப்பெண்களும், நரேந்திரமோடிக்கு 81 மதிப்பெண்களும், ராகுல்காந்திக்கு 53 மதிப்பெண்களும் கிடைத்துள்ளன. மேற்கண்டவாறு கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளதது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| உலக தடகள சாம்பியன்ஷிப்: கென்ய வீராங்கனை சாதனை Posted: 10 Aug 2013 10:25 PM PDT உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் முதல் தங்கப்பதக்கத்தை, கென்ய வீராங்கனை எட்னா கிப்லகட் தட்டிச் சென்றார். இவர், மாரத்தான் ஓட்டத்தில் தங்கத்தை தக்கவைத்த முதல் வீராங்கனை என்ற சாதனை படைத்தார். ரஷ்யாவின் மொஸ்கோவில், 14வது உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் நேற்று ஆரம்பமானது. இதில், உலகின் 206 நாடுகளில் இருந்து மொத்தம் 1974 வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். உலகின் “மின்னல் மனிதன்’ ஜமைக்காவின் உசைன் போல்ட், அமெரிக்காவின் ஜஸ்டின் காட்லின், ரஷ்ய “போல் வால்ட்’ வீராங்கனை இசின்பெயவா [...] |
| சதம் அடிக்காமல் சாதனை படைத்தார் மிஸ்பா Posted: 10 Aug 2013 10:21 PM PDT இந்திய நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் சதத்தில் சதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஆனால் பாகிஸ்தான் அணித் தலைவர் மிஸ்பா, சதம் அடிக்காமல் புதிய சாதனை நிகழ்த்தினார். கடந்த 2001ல் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அறிமுகமான மிஸ்பா, 2002ல் முதன்முதலில் ஒருநாள் போட்டியில் களமிறங்கினார். இதுவரை 39 டெஸ்ட், 125 ஒருநாள், 39 சர்வதேச ரீ-ருவென்டி போட்டிகளில் விளையாடி உள்ளார். மத்தியதர வீரராக களமிறங்கும் இவர், டெஸ்டில் மூன்று சதம் அடித்துள்ளார். ஆனால் ஒருநாள் போட்டியில் [...] |
| இந்திய அணியில் தொடர்ந்தும் ஓரங்கட்டப்படும் சேவாக், கம்பீர் Posted: 10 Aug 2013 10:13 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக் காரர்களாக இருந்தவர்கள் வீரேந்தர் சேவாக், கவுதம் காம்பீர். இருவரும் டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். வீரேந்தர் ஷேவாக் எதிரணி பந்துவீச்சை அடித்து நொறுக்கி ஓட்டங்களை குவிப்பார். கவுதம் காம்பீரும் மூன்று நிலை கிரிக்கெட்டிலும் அசத்தும் வீரர். ஆனால் இருவரும் தற்போது பார்மை இழந்ததால் அணியில் கழற்றி விடப்பட்டனர். தற்போது இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கும் ஷிகர் தவான், ரோகித் சர்மா சிறப்பாக [...] |
| பிரிட்டனில் பரிசு கிடைத்தும் பணத்தை பெறாத 12 கோடீஸ்வரர்கள் Posted: 10 Aug 2013 10:12 PM PDT இங்கிலாந்து அரசு நடத்தும் தேசிய லாட்டரி பரிசுக் குலுக்கல் கடந்த ஜூலை 26ம் திகதி நடைபெற்றது. இந்த முறை 100 பேர் ஒரு மில்லியன் பவுண்ட் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள். அவர்களில் இதுவரை 88 பேர் பரிசினை பெற்றுச் சென்றுவிட்டார்கள். மீதியிருக்கும் அந்தப் 12 பேருக்காக அரசு காத்திருக்கின்றது. இதற்கு முந்தைய குலுக்கல், ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழா தின இரவு அன்று நடைபெற்றது. அதில் முதல் பரிசு 97 பேருக்கு அளிக்கப்பட்டது. அதனால் மீதியுள்ளவர்களும் பரிசினைப் பெற்றால் [...] |
| 2015ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் வெளிநாட்டு உதவியுடன் 11 மீன்பிடித் துறைமுகங்கள் Posted: 10 Aug 2013 09:48 PM PDT 2015ம் ஆண்டிற்கு முன்னர் இலங்கையில் வெளிநாட்டு உதவியுடன் 11 மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படவுள்ளதாக கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். யாழ்.சேந்தாங்குளத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். குருநகர் மற்றும் மன்னாரில் பிரான்ஸ் நாட்டின் நிபுணர்கள் குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர். பருத்தித்துறையில் ஜப்பான் நாட்டின் உதவியுடன் துறைமுகம் அமைக்கப்படவுள்ளது. நாட்டில் மொத்தமாக 11 மீன்பிடித் துறைமுகங்களை அமைக்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இவற்றில் ஒன்பது மீன்பிடித் துறைமுகங்கள் வடக்கிலேயே [...] |
| வெலிவேரிய நீரில் நச்சுத்தன்மை காணப்பட்டமை கண்டு பிடிப்பு Posted: 10 Aug 2013 09:31 PM PDT வெலிவேரியாவில் குடிநீரில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறப்பட்ட கையுறை தொழிற்சாலையின் கழிவுகள் தொடர்பிலான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி குறித்த குடிநீரில் இரசாயன துணிக்கைகள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்த பரிசோதனைக்காக இலங்கையின் புவிசரிதவியல் மற்றும் தடயவியல் நிறுவனம் இரண்டு இடங்களில் மண் மாதிரிகளை சேகரித்தது. முதலாவது மாதிரி தொழிற்சாலைக்கு அருகிலும் இரண்டாவது மாதிரி தொழிற்சாலைக்கு தொலைவிலும் சேகரிக்கப்பட்டது. பின்னர் இந்த மாதிரிகள் ஆய்வுக்கூடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன்போது ஆரம்பக்கட்ட சோதனையின் போது [...] |
| இந்தியாவின் இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரிப்பு Posted: 10 Aug 2013 09:30 PM PDT இலங்கையில் உள்ள இந்திய மீனவர்களை உடனடியாக விடுவிக்குமாறு இந்தியா வழங்கிய இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கை நிராகரித்துள்ளது. இலங்கையில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 114 தமிழக மீனவர்களை விடுவிக்கவேண்டும் என்று கோரி, கடந்த வாரத்தில் இந்தியாவினால் இலங்கையின் உயர்ஸ்தானிகர் பிரசாத் காரியவசத்திடம் ராஜதந்திர ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது. அதேநேரம் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்ஹா கொழும்பில் குறித்த இராஜதந்திர ஆட்சேபனையை இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சிடம் கையளித்தார். அதில் மீனவர்களின் தடுத்து வைத்தல் காரணமாக அவர்களின் குடும்பங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. [...] |
| தமிழர்களிடமும் பொதுமன்னிப்பு கோருமா அரசு? Posted: 10 Aug 2013 09:25 PM PDT "வெலிவேரியாவில் மூன்று உயிர்கள் இராணுவத்தினரால் காவுகொள்ளப்பட்டதற்கு உடனடியாகவே பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ள அரசு, முள்ளிவாய்க்காலில் நாற்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்ட போரை நடத்தியதற்காக இதுவரை மன்னிப்புக் கோரவில்லை. இதிலிருந்தே தமிழர்களுக்கு இந்நாட்டில் நியாயம் கிடைக்காது என்பதை சர்வதேச சமூகம் அறிந்துகொள்ளவேண்டும்" என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. வெலிவேரிய சிங்கள மக்கள்விவகாரம்;முள்ளிவாய்க்காலோ தமிழ் மக்கள் விவகாரம் என்றபடியால்தான் அரசு இவ்வாறு நடந்துகொண்டுள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றம்சாட்டியுள்ளது. சுத்தமான குடிதண்ணீருக்காக போராட்டம் நடத்திய வெலிவேரிய மக்கள் மீது இராணுவத்தினர் [...] |
| அனுமதியின்றி கேரளாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இந்து குடும்பத்தினர் மீது வழக்கு Posted: 10 Aug 2013 09:20 PM PDT அனுமதியின்றி கேரளாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த இந்து குடும்பத்தினர் 5 பேர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தை சேர்ந்த கிஷோர் குமார்(44), அவரது மனைவி வர்ஷா(40) மற்றும் அவர்களது 3 மகள்கள் ஆலயங்களை தரிசிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தனர். மகாராஷ்டிர மாநிலத்திற்குள் சுற்றிப்பார்ப்பதற்கு மட்டுமே அவர்களுக்கு ‘விசா’ வழங்கப்பட்டிருந்தது. ஆனால், மாதா அமிர்தானந்தமயியின் தீவிர பக்தர்களான அவர்கள் கேரள மாநிலம், கோட்டயம் அருகே [...] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
