Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்கானா விவகாரம்: ஆந்திராவில் அரசு ஊழியர்கள் நாளை வேலை நிறுத்தம்

Posted: 10 Aug 2013 10:56 PM PDT

ஆந்திராவை 2 ஆக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு கடலோர, ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலமே நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 11 நாட்களாக கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதிகளில் கடை அடைப்பு, சாலை மறியல், ஆர்ப்பாட்டம்

2 லட்சம் பக்தர்கள் குவிந்ததால் திருப்பதி கோவில் திணறல்

Posted: 10 Aug 2013 10:53 PM PDT

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக திருப்பதி கோவிலில் கடந்த ஒரு வாரமாக பக்தர்கள் கூட்டம் மிக குறைவாக இருந்தது. பக்தர்கள் ஒரு சில மணி நேரத்தில் ஏழுமலையானை தரிசனம் செய்து திரும்பினார்கள். மேலும் ஏழுமலையானை அருகில் நின்று அவர்களால் தரிசனம் செய்ய முடிந்தது. இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையையொட்டி வெள்ளிக்கிழமை முதல் தொடர் அரசு விடுமுறை விடப்பட்டதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் திடீர் என அதிகரித்தது. குறிப்பாக தமிழ்நாடு, கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்கள்தான் பெருமளவில் குவிந்தனர்.

காஷ்மீரில் 3–வது நாளாக ஊரடங்கு உத்தரவு

Posted: 10 Aug 2013 10:43 PM PDT

காஷ்மீர் மாநிலத்தில் 3–வது நாளாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதால் அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது. காஷ்மீர் மாநிலம் கிஸ்த்வார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் ரம்ஜான் தொழுகைக்குப் பின் இரு பிரிவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் பலியானார்கள். 20 பேர் படுகாயம் அடைந்தனர்.

மணிப்பூரில் முதல்– மந்திரி வீடு முன் குண்டு வெடித்தது

Posted: 10 Aug 2013 10:40 PM PDT

மணிப்பூரில் முதல்– மந்திரி வீடு முன் குண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மணிப்பூர் மாநில முதல்– மந்திரி ஓக்ரம் இபோபி கிங்கின் வீடு இம்பால் நகரில் மேற்கு பகுதியில் உள்ளது. இங்கு போலீசார் 24 மணி நேரமும் செக்போஸ்ட் அமைத்து காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் முதல்– மந்திரி வீடு முன் நேற்று மாலை சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. உடனே போலீசார் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்றனர். குண்டு வெடிப்பில் யாருக்கும் காயம் இல்லை. எந்த சேதமும் ஏற்படவில்லை. சுதந்திர தின கொண்டாட்டத்தை சீர்குலைக்கும்

ஜம்மு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல்

Posted: 10 Aug 2013 10:08 PM PDT

ஜம்மு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் துப்பாக்கியால் சுட்டதில் இந்திய வீரர் படுகாயம் அடைந்தார். கடந்த 6–ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் காஷ்மீர் எல்லையில் பூஞ்ச் மாவட்டத்தில் அத்து மீறி தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய வீரர்கள் பலியானார்கள். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா–பாகிஸ்தான் இடையே மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.

கிஷ்த்வார் கலவரம் எதிரொலி: ஜம்முவில் இருந்து அமர்நாத் யாத்திரைக்கு தடை

Posted: 10 Aug 2013 12:40 PM PDT

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த கலவரத்தில் இருவர் கொல்லப்பட்டனர். 20 பேர் படுகாயமடைந்தனர். இதனையடுத்து, கலவரப் பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

மறைந்த இந்தி நடிகர் ராஜேஷ் கன்னாவுக்கு மும்பையில் வெண்கலச் சிலை திறப்பு

Posted: 10 Aug 2013 12:03 PM PDT

பாலிவுட் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக 1970 - 80களில் வளம் வந்தவர் நடிகர் ராஜேஷ் கன்னா. தன்னுடன் கதாநாயகியாக நடித்த டிம்பிள் கபாடியாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ராஜேஷ் கன்னா கடந்த மாதம் 18ம் தேதி மரணமடைந்தார்

அனுமதியின்றி கேரளாவுக்குள் நுழைந்த பாகிஸ்தான் இந்து குடும்பத்தினர் மீது வழக்கு

Posted: 10 Aug 2013 11:47 AM PDT

அனுமதியின்றி கேரளாவுக்குள் நுழைந்த பாகிஸ்தானை சேர்ந்த இந்து குடும்பத்தினர் 5 பேர் மீது கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள சிந்த் மாகாணத்தை சேர்ந்த கிஷோர் குமார்(44), அவரது மனைவி வர்ஷா(40) மற்றும் அவர்களது 3 மகள்கள் ஆலயங்களை தரிசிப்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தில்

பூடான் பிரதமர் ஷெரிங் டோப்கே அடுத்த வாரம் இந்தியா வருகை

Posted: 10 Aug 2013 11:14 AM PDT

பூடானில் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி அதிக இடங்களை கைப்பற்றி வெற்றிபெற்றது. இதனையடுத்து, புதிய பிரதமராக ஷெரிங் டோப்கே பதவியேற்றார். கடுமையான சிக்கலில் உள்ள பூடானின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், 11வது ஐந்தாண்டு திட்டத்தை வழிநடத்தி செல்லவும்

பள்ளியில் இடிவிழுந்து 12 குழந்தைகள் படுகாயம்: 4 பேர் கவலைக்கிடம்

Posted: 10 Aug 2013 09:20 AM PDT

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஹிங்கல்கஞ்ச் பகுதியில் பைலானி ஆதிவாசி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு வழக்கம்போல் இன்று மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தனர்.

கேதர்நாத் கோவில் அருகில் இன்று மேலும் 21 சடலங்கள் மீட்பு

Posted: 10 Aug 2013 09:07 AM PDT

உத்தரகாண்ட் மாநில்தில் கடந்த ஜூன் மாதம் பேய் மழை பெய்தது. இதனால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். நிலச்சரிவில் மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி கேதார்நாத் ஆகும். கடந்த ஒரு மாதமாக இங்கு மீட்புப் பணி நடைபெற்று வருகிறது. இன்று வரை நடந்த மீட்புபணியில் 209 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. கேதார்நாத் கோவிலை ஒட்டியுள்ள பகுதியில் இருந்து இன்று 21 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பாறைகளும், கற்களும் குவிந்துள்ள சேதமடைந்த இந்தப் பகுதிகளில் உடல்களை மீட்பது சவாலான

கடல் வழியாக 13 தீவிரவாதிகள் குஜராத்தில் ஊடுருவல்: உளவுத்துறை எச்சரிக்கை

Posted: 10 Aug 2013 08:18 AM PDT

தலைநகர் டெல்லியில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்ததையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையை அரசு தொடரவேண்டும்: சி.பி.ஐ. வலியுறுத்தல்

Posted: 10 Aug 2013 08:07 AM PDT

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய எல்லையில் முகாமிட்டு இருந்த 5 வீரர்களை பாகிஸ்தான் படையினர் அத்துமீறி நுழைந்து சுட்டுக் கொன்றனர். இதையடுத்து எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே ரோந்து சுற்றி வரும் இந்திய வீரர்களை நோக்கி,

திகார் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி திடீர் சாவு

Posted: 10 Aug 2013 07:15 AM PDT

டெல்லி சீமாபுரியைச் சேர்ந்தவர் நதீம் (வயது 30). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற இவர், திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு வழக்கம்போல் அவர் தனது அறையில் தூங்கச் சென்றார்.

ஒடிசா நிலக்கரி சுரங்கத்தில் நிலச்சரிவு: 7 பேர் மண்ணில் புதைந்து பலி

Posted: 10 Aug 2013 06:31 AM PDT

ஒடிசா மாநிலம் சுந்தர்கர் மாவட்டம் பசுந்தரா-கர்ஜன்மகால் பகுதியில் எம்.சி.எல். நிலக்கரி சுரங்கம் உள்ளது. அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த சிலர் இன்று சுரங்கத்திற்குள் நிலக்கரி சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. சுரங்கம் மூடியதால் ஊழியர்கள் மண்ணில் புதைந்து உயிருக்கு போராடினர். இதுபற்றி தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த விபத்தில்

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார் ஜெகன் மோகன்

Posted: 10 Aug 2013 04:44 AM PDT

நீண்டகால போராட்டங்களுக்குப் பிறகு, ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதனை தெலுங்கானா பிராந்திய தலைவர்கள் வரவேற்றுள்ளனர். அதே சமயம் ஒன்றுபட்ட ஆந்திர மாநிலம் நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளதால், சிக்கலை தீர்க்க மத்திய மந்திரி ஏ.கே.அந்தோணி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

கோர்காலாந்து தனி மாநில விவகாரம்: காலவரையற்ற வேலைநிறுத்ததை வாபஸ் பெற மம்தா பானர்ஜி கெடு

Posted: 10 Aug 2013 04:33 AM PDT

மேற்கு வங்க மாநிலத்தில் டார்ஜிலிங் மலைப் பிரதேசத்தை பிரித்து கோர்காலாந்து தனிமாநிலம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோர்கா ஜனமுக்தி மோர்ச்சா (ஜி.ஜே.எம்.) தலைமையில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் முதல் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல் சோதனை வெற்றி

Posted: 10 Aug 2013 03:45 AM PDT

உலகில் ரஷ்யா, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய நாடுகளிடம் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அந்த வரிசையில் இந்தியாவும் உள்நாட்டிலேயே ஐ.என்.எஸ். அரிஹந்த் என்ற அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை உருவாக்கி, அதை நேற்றிரவு வெற்றிகரமாக சோதனை செய்தது.

தலையில் தொப்பி அணிந்து ரம்ஜான் வாழ்த்து சொன்ன பா.ஜனதா முதல்– மந்திரி சவுகான்

Posted: 10 Aug 2013 02:11 AM PDT

தலையில் தொப்பி அணிந்து பா.ஜனதா முதல்– மந்திரி ரம்ஜான் வாழ்ந்து தெரிவித்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் முதல்– மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தலைமையில் பாரதீய ஜனதா ஆட்சி நடந்து வருகிறது. நேற்று அங்கு ரம்ஜானையொட்டி தலைநகர் போபாலில் முஸ்லீம்கள் தொழுகையில் ஈடுபட்டனர். திடீர் என்று முதல்– மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தலையில் குல்லா அணிந்து தொழுகை நடந்த இடத்துக்குச்

ஆந்திர அரசு ஊழியர்கள் 12–ந்தேதி முதல் ஸ்டிரைக்: திருப்பதி கோவில் ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் குதிக்கிறார்கள்

Posted: 10 Aug 2013 02:05 AM PDT

ஆந்திராவில் தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அரசு ஊழியர்கள் வருகிற 12–ந்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகிறார்கள். இந்த போராட்டத்தில் திருப்பதி கோவில் ஊழியர்களும் குதிக்கிறார்கள். திருப்பதி கோவிலில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் வேலை பார்க்கிறார்கள். இவர்கள் விஜயகுமார், ஆஞ்ச நேயலு, தலைமையில் கோவில் நிர்வாக அதிகாரி கோபாலை சந்தித்து தங்களது வேலை நிறுத்த நோட்டீசை கொடுத்தனர்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™