Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





puthiyathalaimurai.tv online

puthiyathalaimurai.tv online


ஆஸ்திரேலியாவின் புதிய குடியமர்வு கொள்கை: பபுவா நியு கினியா சென்றது முதல் குழு

Posted: 01 Aug 2013 10:46 PM PDT


ஆஸ்திரேலியாவுக்கு அடைக்கலம் கேட்டு படகுகளில் வந்தவர்களில் 40 பேர் பபுவா நியு கினியா தீவுகளுக்கு அனுப்பப்பட்டனர். புதிய குடியேற்றக் கொள்கையின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை ஆஸ்திரேலியா எடுத்துள்ளது. அடைக்கலம் கேட்டு படகுகளில் விசா இல்லாமல் வருபவர்கள் இனிமேல் பபுவா நியு கினியாவுக்கு அனுப்பப்படுவர் என்று இரு வாரங்களுக்கு முன் தெரிவித்த ஆஸ்திரேலிய அரசு, அதற்கான ஒப்பந்தத்தையும் செய்தது. ஒப்பந்தத்தின் அடிப்படையில் கிறிஸ்துமஸ் தீவிலுள்ள தடுப்பு முகாமில் இருந்து 40 பேர் கொண்ட முதல் குழு இன்று பபுவா நியு கினியா சென்றடைந்தது. இது குறித்து சிட்னியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய குடியமர்வு அமைச்சர் டோனி பர்க், இனி படகுகளில் வரும் எவரும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதில் அரசு உறுதியாக உள்ளதாக தெரிவித்தார்.

அம்பலமானது அமெரிக்காவின் உளவுத் திட்ட ரகசியம்

Posted: 01 Aug 2013 10:23 PM PDT


அமெரிக்காவின் மிக ரகசியமான உளவுத் திட்டம் ஒன்று தற்போது அம்பலமாகியுள்ளது. ஏற்கெனவே அமெரிக்காவின் ரகசிய உளவுத் திட்டங்கள் குறித்த தகவல்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடென்தான் இந்தத் திட்டம் குறித்த தகவல்களையும் வெளியிட்டுள்ளார். எக்ஸ் கீ ஸ்கோர் (XKeyscore) என்று அழைக்கப்படும் இந்த வசதி மூலம், இணையத்தைப் பயன்படுத்தும் ஒருவரின் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்க முடியும் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ஆவணங்கள் சிலவற்றை கார்டியன் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த வசதியை அமெரிக்காவின் என்.எஸ்.ஏ. எனப்படும் தேசியப் பாதுகாப்பு அமைப்பு மட்டுமல்லாமல், அதனுடன் தொடர்புடைய பிற அமைப்புகள் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.

ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி போராட்டம்:இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Posted: 01 Aug 2013 10:13 PM PDT


தெலங்கானா மாநிலம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நாளாக போராட்டங்கள் நீடித்துவரும்‌ நிலையில், தமிழகத்தில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திராவை வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏ.க்கள், 3 எம்.எல்.சி,க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், தெலுங்குதேசம் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் 16 பேரும் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளனர். கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமாவில் முழு அடைப்புப் போராட்டத்தால் மக்களின இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பதற்றமான சூழ்நிலை நிலவுவதால், தமிழகத்தில் இருந்து திருப்பதி, காளஹஸ்தி உள்ளிட்ட அம்மாநில பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.

ஸ்னோடெனுக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம்

Posted: 01 Aug 2013 09:57 PM PDT


அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட எட்வர்ட் ஸ்னோடெனுக்கு ரஷ்யா தற்காலிக அடைக்கலம் வழங்கியுள்ளது. இதையடுத்து அவர் மாஸ்கோ விமான நிலையத்திலிருந்து வெளியேறி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஸ்னோடெனின் வழக்கறிஞர் அனடோலி குச்சேரினா, விமான நிலையத்தை விட்டு வெளியேறுவதற்கு தேவையான ஆவணங்கள் வழங்கப்பட்டதை அடுத்து அவர் அங்கிருந்து வெளியேறி விட்டதாக தெரிவித்துள்ளார். ஒரு வருடத்திற்கு ரஷியாவில் தங்கியிருப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஸ்னோடெனின் பாதுகாப்பே தற்போது முக்கியம் என்பதால் அவர் எங்கிருக்கிறார் என்பது குறித்து தெரிவிக்க முடியாது என்றும் குச்சேரினா குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்ட ஸ்னோடென் அந்நாட்டிற்கு பயந்து கடந்த ஜூன் மாதம் 23 ஆம் தேதியிலிருந்து மாஸ்கோ விமான நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தார். இந்நிலையில் எட்வர்ட் ஸ்னோடெனை சந்திக்க அவரது தந்தை விரைவில் ரஷ்யா பயணம் செய்கிறார். ஸ்னோடெனின் தந்தை லோன் ஸ்னோடன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்த போது இதனை தெரிவித்தார். மேலும் ரஷ்யா செல்லுமாறு எப்.பி.ஐ., தன்னிடம் வலியுறுத்தியதாகவும், இதன் மூலம் ஸ்னோடெனுக்கு பிரச்சனை ஏற்படும் என நினைத்து அதனை மறுத்து விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருப்பதாக தெரிவித்த லோன் ஸ்னோடன், எட்வர்ட் ஸ்னோடெனை பாதுகாப்பான இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தினார். இதனிடையே லோன் ஸ்னோடன் ரஷ்யா ப்யணம் செய்ய விசாவிற்கு விண்ணப்பம் செய்திருப்பதாக ஸ்னோடெனின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் உளவு ரகசியங்களை ஊடகங்கள் மூலம் வெளியிட்ட குற்றத்துக்காக ஸ்னோடெனை கைது செய்ய அமெரிக்க அரசு தேடி வருகிறது. இந்நிலையில் அவர் நீண்ட நாட்களாக ரஷ்யாவின் மாஸ்கோ விமான நிலையத்தில் தஞ்சம் அடைந்துள்ளார்.

வேலூர் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி முற்றுகை

Posted: 01 Aug 2013 09:48 PM PDT


வேலூர் மவாட்டம் ஆம்பூரை அடுத்த வடகரை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி, அப்பகுதியில் உள்ள 3 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் டாஸ்மார்க் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.மற்றொரு தரப்பினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆம்பூர் வட்டாட்சியர், காவல்துறையினர் மற்றும் மாவட்ட டாஸ்மார்க் மோளாலர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தற்காலிகமாக கடையை மூடினர். பின்னர் இரு தரப்பினரிடமும் மனுக்களை பெற்ற அவர்கள், மாவட்ட ஆட்சியர் மூலமாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் திருத்தம்: அரசியல் கட்சிகளுக்கு விலக்கு

Posted: 01 Aug 2013 09:38 PM PDT


அரசியல் கட்சிகளுக்கு விலக்கு அளிக்கும் வகையில் தகவல் அறியும் உரிமை சட்டத்தை திருத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் இந்த திருத்தங்கள் விரைவில் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது. அரசியல் கட்சிகள், பிற பொதுத்துறை நிறுவனங்களை போன்றது தான் என்பதால், அவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் கொண்டுவர வேண்டும் என மத்திய தகவல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதற்கு முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

பிசிசிஐ செயற்குழு இன்று கூடுகிறது:ஸ்ரீநிவாசன் மீண்டும் தலைவர் பதவியேற்பு?

Posted: 01 Aug 2013 08:29 PM PDT


ஐ.பி.எல் சூதாட்ட புகார் தொடர்பான வழக்கில், மும்பை நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து ஆலோனை நடத்துவதற்காக பி.சி.சி.ஐ-யின் செயற்குழு இன்று கூடுகிறது. டெல்லியில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மும்பை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்வது குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைவர் பதவியில் தற்காலிமாக விலகியுள்ள ஸ்ரீநிவாசன் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளார். இன்று நடைபெறும் கூட்டத்தில் அவர் மீண்டும் தலைவர் பொறுப்பை ஏற்க உள்ளதாக தெரிகிறது.எனினும் பி.சி.சி-யின் சில நிர்வாகிகளுக்கு ஸ்ரீநிவாசன் மீண்டும் பதவியில் அமர்வதில் உடன்பாடில்லை என்ற தகவல்களும் வெளியாகியுள்ளன. இதனிடையே பிசிசிஐ தலைவராக ஸ்ரீநிவாசன் தொடர்வதாக அந்த அமைப்பின் செயலாளர் சஞ்சய் படேல் மும்பையில் செய்தியாளர்களிடம் கூறினார்.

கிருஷ்ணகிரியில் முறைகேடாக செயல்பட்ட வாட்டர் தொழிற்சாலைகளின் உரிமங்கள் ரத்து

Posted: 01 Aug 2013 08:08 PM PDT


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், முறையான பராமரிப்பு இன்றி செயல்பட்டு வந்த 3 மினரல் வாட்டர் தொழிற்சாலைகளின் உரிமங்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ரத்து செய்தனர். சுகாதாரமற்ற தண்ணீர் விநியோகிக்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 3 ஆலைகளில் முறையான அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றின் மீது நடவடிக்கை எடுத்தனர்.

மயிலாப்பூரில் பொதுமக்களின் போராட்டத்தால் மதுபானக் கடை மூடல்

Posted: 01 Aug 2013 07:57 PM PDT


சென்னை மயிலாப்பூரில் மக்களுக்கு தொடர் பிரச்சினையாக இருந்து வந்த அரசு மதுபான கடை பொதுமக்களின் தொடர் போராட்டத்தால் இழுத்து மூடப்பட்டுள்ளது. மருத்துவமனை மற்றும், பள்ளிகளுக்கு அருகில் மதுபானக் கடை இருக்கக் கூடாது என்பது விதிமுறை. ஆனால், அதையும் மீறி சென்னை மயிலாப்பூர், முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் மட்டும், கடந்த சில வருடங்களாக அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வந்தது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களுக்கும், பெண்களுக்கும் பெரும் இடையூறுகளை சந்தித்து வந்தனர். இதனிடையே கந்தசாமி என்ற சமூக ஆர்வலர், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக அங்கு மது அருந்த வருபவர்களின் காலில் விழுந்து மது அருந்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து விநோமான போராட்டத்தை நடத்தி வந்துள்ளார், இதனைக் அடுத்து பொதுமக்களும் பல்வேறு விதமான போராங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த மதுபானக் கடை மூடப்பட்டுள்ளது.இதனை இனிப்புகள் வழங்கி மக்கள் கொண்டாடினர் காணொளி: மதுபானக் கடைக்கு பூட்டு:மக்கள் போராட்டத்திற்கு வெற்றி

குமரி அருகே மணல் கடத்தலை தட்டி கேட்ட வழக்குரைஞர் மீது தாக்குதல்

Posted: 01 Aug 2013 07:46 PM PDT


குமரி மாவட்டம் அருமனை அருகே மணல் கடத்தலை தட்டிக் கேட்ட வழக்குரைஞர் தாக்கப்பட்டுள்ளார். அருமனையை அடுத்த சிதறால் பகுதியில் அரசு நிலத்தில் மணல் எடுப்பதை, அதே பகுதியைச் சேர்ந்த வழக்குரைஞர் கிறிஸ்துதாஸ் தட்டிக் கேட்டுள்ளார். அத்துடன், காவல்துறையினருக்கும் தகவல் கொடுக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மணல் கடத்தல் கும்பல், அவரை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்து நகை, பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளது. காயமடைந்த கிறிஸ்துதாஸ் மார்த்தாண்டத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். காணொளி:மணல் கடத்தலை தட்டிகேட்ட வழக்குரைஞர் மீது தாக்குதல்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™