மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஜாமீன் ரத்து வழக்கு: சஞ்சய் சந்திராவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
- மாநில சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனை
- மும்பையில் 30 வயதிற்குள்ளான இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
- 4 மந்திரிகள்–47 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஆந்திர அரசுக்கு திடீர் நெருக்கடி
- புதிய மாநிலங்கள் உருவானால் இந்தியா பலவீனமடைந்து விடும்: அன்னா ஹசாரே பேட்டி
- டீசல் விலை உயர்வால் ரெயில் கட்டணம் உயர்கிறது
- ஜம்மு–பஞ்சாபில் நில நடுக்கம்
- சோனியா அளித்த விருந்து செலவினங்களை தகவல் ஆணையத்துக்கு வழங்க டெல்லி ஓட்டல் மறுப்பு
- நரேந்திரமோடி பிரதமர் ஆவார்: யஷ்வந்த் சின்கா பேட்டி
- ஆந்திராவில் தொடர் பந்த்: திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் தரிசனம்
- ஒடிசா: பிடர்கனிகா தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக மீண்டும் திறப்பு
- வெங்கையா நாயுடுவுக்கு கூடுதல் பொறுப்புகள்: தேர்தல் பிரசார கண்காணிப்பு, திட்டமிடலுக்கு பொறுப்பாளர்
- இங்கிலாந்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு நிர்வாக இயக்குனர் ஜெனரலாக இந்திய வம்சாவளியினர் நியமனம்
- தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதி தேர்தல் கமிஷன் ஆலோசனை
- பீகாரை பிரித்து மிதிலாஞ்சல் மாநிலம் உருவாக்க வேண்டும்: பா.ஜனதா கோரிக்கை
- அசாமில் தனி மாநிலம் கோரி வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
- போடோலாந்து தனி மாநிலம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: போராட்ட குழுவினர் முடிவு
- முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகன் மரணம்
- தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு: மத்திய அமைச்சரவை முடிவு
- கைலாஷ் மானசரோவர் யாத்திரைகள் அனைத்தையும் ரத்து செய்தது மத்திய அரசு
| ஜாமீன் ரத்து வழக்கு: சஞ்சய் சந்திராவுக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ் Posted: 01 Aug 2013 11:10 PM PDT 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் யுனிடெக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சஞ்சய் சந்திரா கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்கியதை எதிர்த்து சி.பி.ஐ. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சஞ்சய் |
| மாநில சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. தலைவர்கள் முக்கிய ஆலோசனை Posted: 01 Aug 2013 10:57 PM PDT 5 மாநில சட்டசபை தேர்தல் தொடர்பாக பாரதீய ஜனதா தலைவர்கள் டெல்லியில் கூடி முக்கிய ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆண்டு இறுதியில் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய 4 மாநில சட்டசபைகளில் பதவிகாலம் முடிவடைகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி (2014) 4–ந் தேதி சத்தீஷ்கர் மாநில சட்டசபையின் பதவிகாலம் முடிவடைகிறது. அடுத்து 2014–ம் ஆண்டு மே மாதம் பாராளுமன்ற |
| மும்பையில் 30 வயதிற்குள்ளான இதய நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு Posted: 01 Aug 2013 10:54 PM PDT நாகரீக உலகின் வாழ்க்கை நடைமுறையில் தினசரி சந்திக்கும் பிரச்சினைகள் சமீப காலங்களில் அதிகமாகி உள்ளது. இவை தரும் மனஅழுத்தங்களால் வயது குறைந்தவர்களும் இதயநோய்த் தாக்கத்திற்கு ஆளாகின்றனர் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். மும்பையில் 30 வயதுக்குட்பட்டோர் இதயநோயினால் மருத்துவமனைக்கு வருவது அதிகரித்துள்ளது. மும்பை தானே பகுதியைச் சேர்ந்த இதயநோய் நிபுணர் ஒருவர் கடந்த 45 நாட்களில் 24 முதல் 30 வயதுக்குட்பட்டவர்களில் 15 பேர் இதயநோய் காரணமாக மருத்துவமனைக்கு வந்ததாகத் தெரிவித்துள்ளார். |
| 4 மந்திரிகள்–47 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஆந்திர அரசுக்கு திடீர் நெருக்கடி Posted: 01 Aug 2013 10:44 PM PDT தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க ஆந்திராவில் கடும் எதிர்ப்பு தோன்றியுள்ளது. தெலுங்கு மொழி பேசும் மக்களின் தனித்துவமும், அடையாளமும் இந்த பிரிவினையால் சிதைக்கப்படுவதாக கூறும் ஆந்திர தலைவர்கள் தெலுங்கானா பிரிப்பை கைவிடக் கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். ராயலசீமா, கடலோர ஆந்திரப் பகுதிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) |
| புதிய மாநிலங்கள் உருவானால் இந்தியா பலவீனமடைந்து விடும்: அன்னா ஹசாரே பேட்டி Posted: 01 Aug 2013 10:39 PM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் 'ஜனதந்திரா யாத்ரா' செய்து வரும் அன்னா ஹசாரே அசாம்கர் நகரில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- வலிமையான லோக்பால் மசோதாவை நிறைவேற்ற தவறிய மத்திய அரசை கண்டித்து வரும் பாராளுமன்ற கூட்டத் தொடரின் முதல் நாளான 5-ம் தேதி |
| டீசல் விலை உயர்வால் ரெயில் கட்டணம் உயர்கிறது Posted: 01 Aug 2013 10:34 PM PDT பயணிகள் ரெயில் கட்டணம் சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஜனவரி மாதம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் டீசல் விலை உயர்வு மற்றும் அதிகப்படியான செலவுகள் காரணமாக மீண்டும் ரெயில் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயம் ரெயில்வே அமைச்சகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ரெயில் கட்டணத்தை அந்தந்த கால சூழ்நிலைக்கு ஏற்ப முடிவு செய்ய ரெயில் கட்டண ஒழுங்கு முறை ஆணையத்தை ஏற்படுத்த இருப்பதாக கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. இது குறித்து |
| Posted: 01 Aug 2013 10:23 PM PDT ஜம்மு–காஷ்மீர் மாநிலத்தில் ஜம்மு அருகில் உள்ள தோடா பகுதியிலும், பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் பகுதியிலும் இன்று லேசான நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.4 ஆக பதிவாகி இருந்தது. இந்த நில நடுக்கம் காரணமாக பாதிப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. |
| சோனியா அளித்த விருந்து செலவினங்களை தகவல் ஆணையத்துக்கு வழங்க டெல்லி ஓட்டல் மறுப்பு Posted: 01 Aug 2013 10:22 PM PDT காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அளித்த விருந்து தொடர்பான செலவு விபரங்களை வழங்க டெல்லி ஓட்டல் மறுத்து விட்டது. கடந்த மாதம் 18-ம் தேதி டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் முக்கிய பிரமுகர்களுக்கு சோனியா காந்தி மதிய விருந்து அளித்தார். |
| நரேந்திரமோடி பிரதமர் ஆவார்: யஷ்வந்த் சின்கா பேட்டி Posted: 01 Aug 2013 10:14 PM PDT பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானியின் தீவிர ஆதரவாளராக கருதப்படுபவர் யஷ்வந்த் சின்கா. சில மாதங்களுக்கு முன்பு கோவாவில் பா.ஜ.க. தேசிய மாநாடு நடந்த போது அத்வானிக்கு ஆதரவாக யஷ்வந்த் சின்காவும் கூட்டத்தை புறக்கணித்தார். குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடிக்கு பா.ஜ.க. வில் முக்கியத்துவம் கொடுக்கப்படுவதை அவர் மறைமுகமாக எதிர்த்தார். ஆனால் தற்போது |
| ஆந்திராவில் தொடர் பந்த்: திருப்பதி கோவிலில் 1 மணி நேரத்தில் தரிசனம் Posted: 01 Aug 2013 10:13 PM PDT ஆந்திராவில் தொடர் 'பந்த்' காரணமாக பஸ் போக்குவரத்து முடங்கி உள்ளது. இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது. தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் திருப்பதியில் தீவிரமாக இருந்தது. வெளியூர் பஸ்கள் எதுவும் திருப்பதி வரவில்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு மட்டுமே பஸ்கள் செல்கிறது. வெளியூர் பக்தர்கள் வரமுடியாததால் உள்ளூர் பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை |
| ஒடிசா: பிடர்கனிகா தேசிய பூங்கா பார்வையாளர்களுக்காக மீண்டும் திறப்பு Posted: 01 Aug 2013 08:02 PM PDT ஒடிசா மாநிலத்தின் கேந்திரபாரா கடலோர மாவட்டத்தில் பிடர்கனிகா தேசிய பூங்கா உள்ளது. இங்கு 1,600க்கும் மேற்பட்ட முதலைகள் பராமரிக்கப்படுகின்றன. 2006ஆம் ஆண்டில் இங்கிருந்த 23 அடி நீள முதலை கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.. பொதுவாக, முதலைகளின் இனவிருத்தி பிப்ரவரி முதல் ஏப்ரல் வரை நடைபெற்று முட்டையிடுவது மே மாதங்களில் நடைபெறும். ஒவ்வொரு பெண் முதலையும் சுமார் 45 முட்டைகள் இடும்.இந்த சமயங்களில் அவை மூர்க்கமாக காணப்படுவதால் பூங்காவிற்குள் பார்வையாளர்களை |
| வெங்கையா நாயுடுவுக்கு கூடுதல் பொறுப்புகள்: தேர்தல் பிரசார கண்காணிப்பு, திட்டமிடலுக்கு பொறுப்பாளர் Posted: 01 Aug 2013 07:49 PM PDT பாரதீய ஜனதா கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டார். நேற்று நடந்த தேர்தல் பிரசார குழு கூட்டத்தில் கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், நரேந்திர மோடி, சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி, முக்தர் அப்பாஸ் நக்வி உள்பட பல்வேறு குழுக்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு பிரசார குழுவில் சில பொறுப்புகள் வழங்கப்பட்டது. தேர்தல் பிரசார கண்காணிப்பு, திட்டமிடுதல் ஆகியவற்றுக்கு பொறுப்பாளராக அவர் |
| இங்கிலாந்தின் வர்த்தக மற்றும் முதலீட்டு நிர்வாக இயக்குனர் ஜெனரலாக இந்திய வம்சாவளியினர் நியமனம் Posted: 01 Aug 2013 04:55 PM PDT இங்கிலாந்து நாட்டின் இந்திய வர்த்தக மற்றும் முதலீட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக இந்திய வம்சாவளியினரான குமார் அய்யர் என்பவரை நேற்று இங்கிலாந்து அரசு நியமனம் செய்துள்ளது இரு நாடுகளுக்கும் இடையே வளர்ந்துவரும் வர்த்தக உறவுகளின் முக்கியத்துவம் கருதி இந்தப் புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது |
| தேர்தல் அறிக்கையில் இலவசங்கள்: அனைத்து கட்சிகளுடன் 12-ந் தேதி தேர்தல் கமிஷன் ஆலோசனை Posted: 01 Aug 2013 02:33 PM PDT தமிழ்நாடு அரசு அறிவித்த இலவசங்களுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, 'அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிடும் இலவசங்கள் தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்' என்று தேர்தல் கமிஷனை |
| பீகாரை பிரித்து மிதிலாஞ்சல் மாநிலம் உருவாக்க வேண்டும்: பா.ஜனதா கோரிக்கை Posted: 01 Aug 2013 01:47 PM PDT தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கத்தை தொடர்ந்து பெரிய மாநிலங்களை பிரித்து தனி மாநிலங்கள் உருவாக்க வேண்டும் என்று நாடு முழுவதும் கோரிக்கை எழுந்துள்ளது. இந்த நிலையில் பா.ஜனதா எம்.பி. கீர்த்தி ஆசாத் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது |
| அசாமில் தனி மாநிலம் கோரி வன்முறை: போலீஸ் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி Posted: 01 Aug 2013 01:29 PM PDT தனி மாநிலம் கோரி அசாமில் போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியானார்கள். போராட்டக்காரர்கள் வானொலி நிலையத்துக்கு தீயிட்டனர். ரெயில் தண்டவாளத்தை பெயர்த்தனர் |
| போடோலாந்து தனி மாநிலம் கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு: போராட்ட குழுவினர் முடிவு Posted: 01 Aug 2013 01:15 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததை தொடர்ந்து, மேலும் சில மாநிலங்களிலும் தனி மாநில கோரிக்கை தீவிரம் அடைந்து உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் ஏற்கனவே தீவிரவாதிகள் பிரச்சினை உள்ளது |
| முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மகன் மரணம் Posted: 01 Aug 2013 12:54 PM PDT முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் மூத்த மகன் ரங்கராவ் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. திருமணமாகாத இவர் நீண்டகாலமாக இதய நோயினால் பாதிக்கப்பட்டு இருந்தார். நேற்று அதிகாலை திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் |
| தகவல் அறியும் உரிமை சட்டத்திலிருந்து அரசியல் கட்சிகளுக்கு விலக்கு: மத்திய அமைச்சரவை முடிவு Posted: 01 Aug 2013 08:45 AM PDT தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் உட்பட ஆறு தேசிய கட்சிகள் தங்களுக்கு கிடைக்கும் நிதி வரும் வழி, வேட்பாளார்களை தேர்ந்தெடுக்கும் முறை ஆகியவற்றை ஆர்டிஐ என்னும் |
| கைலாஷ் மானசரோவர் யாத்திரைகள் அனைத்தையும் ரத்து செய்தது மத்திய அரசு Posted: 01 Aug 2013 08:02 AM PDT கைலாஷ் மானசரோவர் யாத்திரை இந்துமதத்தின் மதிப்பு, கலாசார முக்கியத்துவம் , இயற்கை அழகின் வெளிப்பாடு மற்றும் சாகசத்திற்கு பெயர் பெற்றது. இமயமலை, இந்துக்களின் முக்கியக் கடவுளான சிவனின் உறைவிடமாகக் கருதப்பட்டாலும், சைனர்கள் மற்றும் புத்த சமயத்தை |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |