Tamil Star |
- மிஸ் பண்ணாமல் கவனமா பாருங்க…
- நிதி மோசடி செய்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு பிடியாணை
- தேர்தலில் வென்றால் 13வது திருத்தத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்போம்
- இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்!
- சிறிலங்கா வழியாக சீனர்கள் ஊடுருவல்?
- தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன், நா. உ சந்திப்புக்கள்
- தமிழ் மக்களின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை!
- காணி சுவீகரிப்புக்கு எதிராக கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல்
- இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் போராளி
- இந்தியா 2015 உலகக்கிண்ணத்தை வெல்லும்: கபில்தேவ்
| Posted: 01 Aug 2013 10:59 PM PDT மிஸ் பண்ணாமல் கவனமா பாருங்க… This posting includes an audio/video/photo media file: Download Now |
| நிதி மோசடி செய்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளுக்கு பிடியாணை Posted: 01 Aug 2013 09:46 PM PDT அவுஸ்திரேலிய பிரஜைகள் நால்வருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது. சர்வதேச பொலிஸ் ஊடாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார். இலங்கையில் கேபில் ரிவி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறி நபரிடம் 32 லட்சம் அமெரிக்க டொலரை பெற்றுக் கொண்டு மோசடி செய்துள்ளதாக குறித்த அவுஸ்திரேலியர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. பணம் மோசடி செய்த நபருக்கு கேபில் ரிவியின் பணிப்பாளர் பதவி வழங்குவதாகவும் அவர்கள் ஏமாற்றியுள்ளனர். பணத்தை பெற்றதும் அவர்கள் அவுஸ்திரேலியாவிற்குத் [...] |
| தேர்தலில் வென்றால் 13வது திருத்தத்தை பாதுகாத்து வளர்த்தெடுப்போம் Posted: 01 Aug 2013 09:40 PM PDT வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் தமது ஆணையை வழங்கி அரசியல் அதிகாரங்களை எம்மிடம் ஒப்படைக்கும் போது மட்டுமே 13வது திருத்தச் சட்டத்தை பாதுகாத்து அதை மேலும் வளர்த்தெடுத்து எமது மக்களின் அரசியல் இலக்கு நோக்கி செல்லும் இலட்சியக்கனவுகள் சாத்தியமாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்: எமது மக்களின் அரசியலுரிமை பிரச்சினைக்கான தீர்வு நோக்கிய பயணத்தை [...] |
| இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்! Posted: 01 Aug 2013 09:28 PM PDT சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக அரச தகவல் திணைக்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தேவா சதீஸ்குமார் என்கின்ற 35 வயதுடைய முன்னாள் புலி உறுப்பினராக இருந்த இளைஞனே இவ்வாறு மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மும்பையில் இருந்து நைரோபிக்கு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விமானம் மூலம் [...] |
| சிறிலங்கா வழியாக சீனர்கள் ஊடுருவல்? Posted: 01 Aug 2013 09:18 PM PDT தமிழ்நாடு கடல்பகுதியில், சிறிலங்காவின் துணையுடன் சீனர்கள் ஊடுருவலாம் என்ற சந்தேகம் இந்தியாவுக்கு எழுந்துள்ளது. இதனால், தமிழ்நாட்டின் இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதிகளை சேர்ந்த மீனவர்களிடம், சீனர்களின் நடமாட்டம் தென்பட்டால் அது குறித்து தகவல் தரும்படி இந்தியக் கடலோரக் காவல்படை அறிவுறுத்தியுள்ளது. இந்தியக் கடல் எல்லைக்குள் அந்நியர்கள் குறிப்பாக, சீனர்களின் நடமாட்டம் தென்பட்டால், உடனடியாக 04573-241238, 04573-242020 என்ற தொலைபேசி எண்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் தமிழ்நாடு மீனவர்களை இந்தியக் கடலோரக் காவல்படை கேட்டுக் கொண்டுள்ளது. இதுகுறித்து கடலோர காவல்படை [...] |
| தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன், நா. உ சந்திப்புக்கள் Posted: 01 Aug 2013 09:15 PM PDT கனடாவுக்கு வருகை தரவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா சம்பந்தன், நா.உ மற்றும் ம. அ. சுமந்திரன், நா.உ ஆகியோர் கனடாவில் 2013-08-11 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை மாலை 6:30 மணிக்கு நியூ யசுமின் விருந்து மண்டபத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (கனடா) ஒழுங்கு செய்துள்ள இரவு விருந்தில் பங்கு கொள்கின்றனர். அதே வேளை இரவு விருந்து நாள் (ஞாயிற்றுக் கிழமை) அன்றும் அதற்கு முந்திய நாளும் (ஓகஸ்ட் 10, சனிக்கிழமை) கனடாவில் உள்ள [...] |
| தமிழ் மக்களின் வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக மாகாணசபை தேர்தலில் போட்டியிடவில்லை! Posted: 01 Aug 2013 09:04 PM PDT எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தலில் தமிழ் மக்களது வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காக நாம் இத் தேர்தலில் போட்டியிடவில்லை என தமிழ் தேசிய முன்னனியின் பொது செயலாளர் பரமு செந்தில்நாதன் தெரிவித்துள்ளார். வவுனியா வன்னிஇன் விடுதியில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து அவர் கூறுகையில், நடைபெறவுள்ள வடமாகாணசபைத் தேர்தல் முக்கியமானதாகும். ஏனெனில் தமிழ் மக்கள் யுத்தத்திற்கு பின்னரும் பல பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வரும் நிலையில் சர்வதேச அழுத்தம் [...] |
| காணி சுவீகரிப்புக்கு எதிராக கதிர்காமரின் மகன் வழக்கு தாக்கல் Posted: 01 Aug 2013 06:44 PM PDT
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு நேற்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கதிர்காமரின் மகனான எஸ் ஜே கிறிஸ்டியன் கதிர்காமர். தமது மனுவில் காணி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன்ää யாழ்ப்பாண காணி அதிகாரி ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ளார். மனுதாரர் ஏற்கனவே இலங்கையின் சுற்றாடல்துறை ஆலோசகராக 1995ம் ஆண்டில் பணியாற்றியுள்ளார். அத்துடன் தமது உறவினர்களான ராஜநாதன் கதிர்காமர், செல்வநாதன் கதிர்காமர் ஆகியோர் இராணுவத்துறையில் சேவை ஆற்றியதை மனுதாரர் தமது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார். இந்தநிலையில் யாழ்ப்பாணம் மாவட்டம், வலிகாமம் வடக்கு பிரதேச தெல்லிப்பளை, மாவிட்டபுரம் ஆழ்வார் மலையடியில் கீரிமலைக்கு அருகில் அமைந்துள்ள தமது காணி அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டு அதனை தடுத்து நிறுத்துமாறு மனுதாரர் கோரியுள்ளார். This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட முன்னாள் போராளி Posted: 01 Aug 2013 06:26 PM PDT சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி ஒருவர், இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டதாக அரச தகவல் திணைக்கள இணையம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. தேவா சதீஸ்குமார் என்கின்ற 35 வயதுடைய முன்னாள் புலி உறுப்பினராக இருந்த இளைஞனே இவ்வாறு மும்பை குற்றத்தடுப்பு பிரிவினரால் இலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் மும்பையில் இருந்து நைரோபிக்கு செல்ல முயற்சித்த போதே கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த இணையத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தான் விமானம் மூலம் [...] This posting includes an audio/video/photo media file: Download Now |
| இந்தியா 2015 உலகக்கிண்ணத்தை வெல்லும்: கபில்தேவ் Posted: 01 Aug 2013 08:20 AM PDT எதிர்வரும் 2015ல் நடக்க உள்ள உலகக் கிண்ணத் தொடரில் இந்திய அணி சாதித்து சாம்பியன் பட்டத்தை தக்கவைக்கும் என்று கபில்தேவ் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியாவுக்கு முதன் முதலில் (1983) உலகக் கிண்ணத்தை வென்று தந்தவர் கபில்தேவ் (வயது 54). இதன் பின் 28 ஆண்டுகள் கழித்து சொந்த மண்ணில் 2011ல் நடந்த உலகக் கிண்ணத் தொடரில், டோனி தலைமையிலான இந்திய அணி கிண்ணத்தை வென்றது. அடுத்து, 2015ல் அவுஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடக்க உள்ள உலகக் கிண்ணத் தொடரிலும் [...] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |

