Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ராமநத்தம் காவலர் குடியிருப்பில் சங்கடஹர சதுர்த்தி விழா

Posted: 26 Aug 2013 12:17 PM PDT

திட்டக்குடி

ஆவணி மாத மகாசங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ராமநத்தம் காவலர் குடியிருப்பு வளாகத்தில் உள்ள செல்வ விநாயகர் கோயிலில் விநாயகர் மற்றும நவக்கிரகங்களுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காவலர் குடும்பங்களை சேர்ந்த சுமங்கலி பெண்கள் நாடு நலம் பெற வேண்டி இந்த வழிபாட்டை செய்தனர்.

காரசார விவாதத்துக்குப்பிறகு பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேறியது அ.தி.மு.க. உள்பட எதிர்க்கட்சிகளின் திருத்தங்கள் நிராகரிப்பு

Posted: 26 Aug 2013 11:19 AM PDT

புதுடெல்லி

நாட்டில் உள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்கள் வழங்குவதற்கான உணவு பாதுகாப்பு மசோதா, பாராளுமன்ற மக்களவையில் கடந்த வாரத்தில் தாக்கல் செய்யப்பட்டது.ஆனால், பாராளுமன்றத்தின் தற்போதைய மழைக்கால கூட்டத் தொடரில் ஏற்பட்டு வரும் தொடர் அமளி காரணமாக, இந்த மசோதா மீதான விவாதம் தள்ளிப்போய் வந்தது.

விவாதம் தொடங்கியது

படகு மூலம் மீட்புப்பணி **

Posted: 26 Aug 2013 10:56 AM PDT

 மத்திய பிரதேச மாநிலத்தில் பெய்துவரும் கனமழை காரணமாக குஜராத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தில் ஆற்றங்கரையோரம் உள்ள சந்துத் கிராமம் வெள்ளத்தால் சூழப்பட்டு உள்ளது. வெள்ளத்தில் சிக்கிய மக்கள் படகு மூலம் மீட்கப்படுவதை படத்தில் காணலாம்.

தீவிரவாதிகளின் ஊடுருவல் எச்சரிக்கை

Posted: 26 Aug 2013 10:52 AM PDT

தீவிரவாதிகளின் ஊடுருவல் எச்சரிக்கையை தொடர்ந்து ராமேசுவரம் கோவிலின் கிழக்கு வாசல் முன்பு நேற்று துப்பாக்கி எந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த காட்சி.

திருமூர்த்தி அணை

Posted: 26 Aug 2013 10:50 AM PDT

 திருமூர்த்தி அணையில் இருந்து 4'வது மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அணையின் நீர் மட்டம்  உயர் 46 அடியாக இருந்த போது எடுத்த படம்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™