Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


உணவு பாதுகாப்பு மசோதாவில் 10 முக்கிய திருத்தங்கள்: தமிழ்நாட்டுக்கு அரிசி அளவு குறையாது

Posted: 22 Aug 2013 10:49 PM PDT

காங்கிரஸ் கட்சி கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால், உணவு பாதுகாப்பு மசோதா கொண்டு வந்து நாட்டில் உள்ள 63.5 சதவீத மக்களுக்கு மானிய விலையில் உணவு கிடைப்பதற்கு வழி வகை செய்வோம் என்று உறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த மசோதாவை கொண்டு வர சோனியா ஆர்வம் காட்டினார். ஆனால் சில மாநிலங்களின் எதிர்ப்பு காரணமாக அந்த

வாடிக்கையாளர் விருப்பம் இல்லாமல் போனில் விளம்பர எஸ்.எம்.எஸ். அனுப்பினால் ரூ.5000 அபராதம்

Posted: 22 Aug 2013 10:38 PM PDT

மத்திய தொலைத் தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் ('டிராய்') செயலாளர் ராஜீவ் அகர்வால் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:– செல்போன்களில் தேவையற்ற வர்த்தக அழைப்புகளையும், குறுஞ் செய்திகளையும் (எஸ்.எம்.எஸ்.)களையும் அனுப்பக்கூடாது. வாடிக்கையாளர்கள் அனுமதி இல்லாமல் இவற்றை அனுப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 'டிராய்' அமைப்பு ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளது.

மும்பையில் பெண் போட்டோகிராபரை கற்பழித்த 5 பேர் கும்பல்

Posted: 22 Aug 2013 10:32 PM PDT

மும்பையில் இருந்து வெளியாகும் ஒரு ஆங்கில மாத பத்திரிகையில் 22 வயது பெண் போட்டோ கிராபராக பணியாற்றி வருகிறார். இவர் அந்தப் பத்திரிகையில் தொடர் கட்டுரைகள் எழுதி வந்தார். நேற்று மாலை 7 மணிக்கு மும்பை மகாலட்சுமி ரெயில் நிலையத்தையொட்டியுள்ள பழங்கால கட்டிடமான சக்தி மில் பற்றி கட்டுரை எழுதுவதற்காக அந்த கட்டிடத்தை படம் பிடிக்கச் சென்றார்.

61–வது பிறந்தநாள்: திருப்பதி கோவிலில் விஜயகாந்த் மனைவி–மகன்களுடன் தரிசனம்

Posted: 22 Aug 2013 10:10 PM PDT

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தனது 61–வது பிறந்த நாளை வருகிற 25–ந் தேதி மணி விழாவாக கொண்டாடுகிறார். அன்றைய தினம் அவரது கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வறுமை ஒழிப்பு தினமாக கடைப்பிடித்து ஏழைக்ளுக்கு உதவி வழங்க ஏற்பாடு செய்துள்ளனர். தனது பிறந்தநாளையொட்டி விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதா, மகன்கள் பிரபாகரன், சண்முகபாண்டியன், மைத்துனர்

பாராளுமன்ற தேர்தல்: சுஷ்மா சுவராஜை எதிர்த்து திக்விஜய் சிங் போட்டி

Posted: 22 Aug 2013 10:08 PM PDT

பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரும், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா சுவராஜ் மத்திய பிரதேச மாநிலம் விதிஷா தொகுதியில் இருந்து எம்.பி.ஆக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஆவார். கடந்த 2009–ம் ஆண்டு தேர்தலின் போது அவர் அந்த தொகுதியில் 4 லட்சம் ஓட்டுகளுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் போது மீண்டும் விதிஷா தொகுதியில் போட்டியிட சுஷ்மா சுவராஜ் முடிவு செய்துள்ளார். இதையொட்டி அவர் அடிக்கடி விதிஷா தொகுதிக்கு சென்று வருகிறார். இந்த நிலையில் காங்கிரஸ் பொதுச் செயலாளர்களில் ஒருவரான திக்விஜய் சிங் நேற்று மத்திய பிரதேசம் மாநிலத்துக்கு சென்று பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பற்றி ஆய்வு செய்தார். பிறகு அவர் நிருபர்களிடம் பேசுகையில், மத்திய பிரதேசத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு தான் போட்டியிட இருப்பதை உறுதிபடுத்தினார். விதிஷா தொகுதியில் போட்டியிட திக்விஜய்சிங் தீர்மானித்து இருப்பதாக தெரிகிறது. பா.ஜ.க. கோட்டையாக கருதப்படும் இந்த தொகுதியில் திக்விஜய்சிங் போட்டியிடுவதன் மூலம் சுஷ்மா சுவராஜூக்கு சவாலை ஏற்படுத்த முடியும் என்று காங்கிரஸ் த

ஆந்திரா பிரிவினைக்கு சந்திரபாபுநாயுடு காரணம்: நடிகை ரோஜா குற்றச்சாட்டு

Posted: 22 Aug 2013 09:56 PM PDT

தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தாயார் விஜயலட்சுமி குண்டூரில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 5–வது நாளாக அவரது உண்ணாவிரதம் நீடித்தது. உண்ணாவிரதம் காரணமாக விஜயலட்சுமி சோர்வடைந்து உள்ளார். அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தது. ரத்த அழுத்தமும் குறைந்து வருவதாக டாக்டர்கள் கூறினார்கள். இதன் காரணமாக உட்கார முடியாமல் உண்ணாவிரத மேடையில் அவர் படுத்து கிடக்கிறார். ஏராளமான மக்கள் வரிசையில் நின்று அவரை சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். நடிகை ரோஜா நேற்று குண்டூர் வந்து விஜயலட்சுமியின் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். அப்போது ஆந்திரா பிரிந்ததற்கு சந்திரபாபு நாயுடுதான் காரணம் என்று குற்றம் சாட்டினார். அவர் கூறியதாவது:– தெலுங்கானா பிரிவினை குறித்து எனக்கு ஆட்சேபம் இல்லை என்று சந்திரபாபுநாயுடு 2 முறை கடிதம் கொடுத்து உள்ளார். முக்கிய எதிர்கட்சி தலைவரான அவர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இருந்தால் ஆட்சி கவிழ்ந்து இருக்கும் தெலுங்கானா பிரிந்து இருக்காது.

திருப்பதி கோவிலில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு

Posted: 22 Aug 2013 09:13 PM PDT

தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் காரணமாக ஆந்திராவில் கடந்த 23 நாட்களாக பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை. திருப்பதியில் இருந்து திருமலைக்கு குறைந்த அளவில் பஸ்கள் இயக்கப்படுகிறது. போராட்டம் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்தது. கடந்த செவ்வாய் கிழமை 20 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். இந்த நிலையில் நேற்று பக்தர்கள் எண்ணிக்கை சற்று அதிகரிக்க தொடங்கியது. இன்று வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. பஸ்கள் ஓடாத நிலையில் ரெயில்கள் மற்றும் வாகனங்களில் பக்தர்கள் வந்து குவிந்தனர். தர்ம தரிசனத்துக்கான 14 கம்பார்ட்டுமெண்டுகளும் நிரம்பி வழிந்தது. பக்தர்கள் தரிசனத்துக்கு 8 மணி நேரம் காத்து நின்றனர். கால்நடையாக வந்தவர்கள் 3 மணி நேரத்திலும், 300 ரூபாய்

ஹிட்லரின் தந்திரத்தை பின்பற்றி ஆட்சியை கைப்பற்ற மோடி திட்டம்: திக்விஜய் சிங் தாக்கு

Posted: 22 Aug 2013 05:27 PM PDT

ஆட்சியின் அதிகாரத்தை கைப்பற்ற மோடி என்ன வேண்டுமானாலும் செய்யமுடியும். இதுகுறித்து யாரும்ஆச்சரியப்படக்கூடாது. காங்கிரஸ் இல்லாத ஒரு இந்தியாவை உருவாக்க நினைக்கும் மோடியின் கனவு ஒருபோதும் நிறைவேறாது.

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு தக்க பதிலடி கொடுங்கள்: ராகுல் காந்தி அறிவுரை

Posted: 22 Aug 2013 05:23 PM PDT

எதிர்க்கட்சிகளின் பிரசாரத்துக்கு மவுனமாக இருக்காதீர்கள், தக்க பதிலடி கொடுங்கள் என்று காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களுக்கு ராகுல் காந்தி அறிவுரை கூறினார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர்களுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவது

ஜப்பானுக்கு இந்தியப் பிரதமரின் சிறப்புத் தூதுவராக அஷ்வினி குமார் நியமனம்

Posted: 22 Aug 2013 05:23 PM PDT

இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் அரசுமுறைப் பயணமாக ஜப்பான் சென்று வந்தார். அப்போது அந்நாட்டுப் பிரதமர் ஷின்சோ அபே இரு நாடுகளுக்கிடையே ஆன நல்லுறவைத் தொடர்வது குறித்து வலியுறுத்தி உள்ளார். இதன் விளைவாக, நேற்று, முன்னாள் சட்ட அமைச்சர் அஷ்வினி குமாரை தனது சிறப்புத் தூதராக பிரதமர் நியமனம்

மத்தியப்பிரதேசத்தில் குப்பை குவியல் குடிசைகளில் சரிந்து 12 பேர் பலி

Posted: 22 Aug 2013 03:17 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலம் நரசிங்கபூர் நகரில் உள்ள குப்பை குவியல் கிடங்கு பகுதியில் மக்கள் குடிசை போட்டு வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று அங்கு பெய்த கன மழைக்கு அங்கு குவித்து வைக்கப்பட்டிருந்த குப்பை குவியல் சரிந்து அந்த குடிசைகளை மூடியது

பாராளுமன்றத்தை சுமூகமாக நடத்த இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: கூட்டத்தொடரை நீட்டிக்க எதிர்பார்ப்பு

Posted: 22 Aug 2013 01:32 PM PDT

இதுவரை நடந்துள்ள பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நிறைய மசோதக்கள் நிறைவேற்றப்படமால் சபை ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாய் உணவுப்பாதுகாப்பு சட்டத்தை இக்கூட்டத்தில் நிறைவேற்ற ஆளும் காங்கிரஸ் அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

தெலுங்கானா விவகாரம்: பாராளுமன்றம் முன்பு தெலுங்கு தேசம் எம்.பி. சாட்டையால் அடித்துகொண்டு எதிர்ப்பு

Posted: 22 Aug 2013 12:47 PM PDT

ஆந்திரப்பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை தனிமாநிலமாக பிரித்து கொடுக்க ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து அரசியல் கட்சியை சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் பதவிவிலகியும், சீமாந்திரபகுதி மக்கள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.

குஜராத் கலவரத்தை போல் உத்தரபிரதேசத்தில் ஏற்பட அனுமதிக்க மாட்டோம்: சமாஜ் வாதி

Posted: 22 Aug 2013 12:12 PM PDT

உத்தரபிரதேசத்தில் வருகிற ஆகஸ்ட் மாதம் 25-ந்தேதி முதல் செப்டம்பர் 13 வரை விஷ்வ இந்து பரிஷத் 84 கோஷி பரிகிராமா என்ற யாத்திரை நடத்தி திட்டமிட்டு உள்ளது. இதில் ஆயிரகணக்கான இந்து சாமியார்களும் சன்னியாசிகளும் கலந்து கொள்ள உள்ளனர். இந்த யாத்திரை பிரச்சினைக்குரிய அயோத்தியாவில் இருந்து தொடங்கி பஸ்தி, பைசாபாத், அம்பேத்கார்நகர், பரபாங்கி, பாஹ்ராச், கோண்டா ஆகிய 6 மாவட்டங்கள்

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பதவி பறிபோவதை தடுக்க சட்டத்திருத்தம்: அமைச்சரவை ஒப்புதல்

Posted: 22 Aug 2013 07:32 AM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான ஆவணங்கள் மாயமான விவகாரம் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பிரச்சினை

சிந்துரக்ஸாக் கப்பல் விபத்தில் இறந்த வீரர்களின் குடும்பத்தினருக்கு சிறப்பு இழப்பீடு: ஏ.கே.அந்தோணி தகவல்

Posted: 22 Aug 2013 06:05 AM PDT

மும்பையில் இந்திய கடற்படையின் சிந்துரக்ஸாக் என்ற நீர்மூழ்கி கப்பலில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 18 கடற்படை வீரர்கள் பலியானார்கள். அவர்கள் அனைவரின் குடும்பத்தினருக்கும் சிறப்பு இழப்பீடு வழங்கப்படும் என்று

வெளிநாட்டு மூலதனத்தால் ரூபாய் மதிப்பு உயரும்: ப.சிதம்பரம் நம்பிக்கை

Posted: 22 Aug 2013 05:24 AM PDT

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து யாரும் அவநம்பிக்கை கொள்ளத் தேவையில்லை. பொருளாதார மீட்சிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. திட்டச்செலவு அதிகரிப்பின் காரணமாக பொருளாதார வளர்ச்சி வேகம் பெறும்.

அடுத்த பிரதமர் மோடி என்று நான் பேசியதாக வெளியானது போலி வீடியோ: அமிதாப்பச்சன்

Posted: 22 Aug 2013 03:21 AM PDT

நடிகர் அமிதாப்பச்சன் குஜராத் மாநில சுற்றுலா தூதராக இருந்து வருகிறார். சமீபத்தில் அமிதாப்பச்சன் பேசுவது போன்ற வீடியோ உரை யூ டியூப் இணைய தளத்தில் வெளியானது. அதில் குஜராத் முதல்–மந்திரியாக இருக்கும் நரேந்திர மோடிதான் அடுத்த பிரதமர் என்று அவர் பேசுவதாக இருந்தது. இதைப்பார்த்த அமிதாப்பச்சன் அதிர்ச்சி அடைந்தார். அது போலியாக தயாரிக்கப்பட்ட வீடியோ என்று கூறி தனது டுவிட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் மேலும்

கோப்புகள் மாயமான விவகாரத்தில் தேவைப்பட்டால் பிரதமர் விளக்கம் அளிப்பார்: மத்திய அரசு சொல்கிறது

Posted: 22 Aug 2013 03:19 AM PDT

நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு குறித்த ஆவணங்கள் மாயமானது குறித்து பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் அமளியில் ஈடுபட்டனர். ஆவணங்கள் மாயமானது குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பினர்

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அரசு மீது அ.தி.மு.க. குற்றச்சாட்டு

Posted: 22 Aug 2013 02:38 AM PDT

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து, மாநிலங்களவையில் இன்று அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் பேசியதாவது:- ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் செயலற்ற தன்மையால் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்பட்டு கைது செய்யப்படுகின்றனர்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™