ஈகரை தமிழ் களஞ்சியம் |
- தலைவா - விமர்சனம்
- முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
- ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் !
- கம்பன் விழா - சென்னையில்
- செந்நீரோடு கண்ணீரும் கலந்தே ..
- உறவுகள் அனைவருக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துகள் .
- குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்!
- ரமலான் வாழ்த்துக்கள்
- அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை!
- உன்னால் முடியும்
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- மதன் -வந்தார்கள் வென்றார்கள் நூலினை டவுன்லோட் செய்ய
- ஆவணி மாத ராசி பலன்கள் !
- மெலனி மில்டரின் -ஒரு இத்தாலியின் ஆசை நாயகி (தமிழ் )
- BMW - மதுமிதா
- 200 மொழிகளை தடம் தெரியாமல் இந்தியா இழந்துவிட்டது :(
- வியட்நாம் போரின் போது காட்டில் பதுங்கியவர்கள்! மொழி மறந்த பின் கண்டுபிடிப்பு
- ஷாருக்கானை குஷி படுத்திய ரஜினி!
- இன்று (9.8.13) ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம்
- அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்!
- கூடங்குளத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100 மெகா வாட் :)
- பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள்
- மரம்
- சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா?
- நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே!
- வேண்டாமே மிருகவதை !!!!!!!!!!!!!!!!!!!
- வீணாகும் வெப்ப ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் புது நுட்பம் - ஆஸ்திரேலிய ஆராய்சியாளர்களின் கண்டுபிடிப்பு
- வேலன்:-எளிய முறையில் படங்கள் வரைய - பிடிஎப் புத்தகம்
- அன்பு
- ருத்ர முத்திரை
- ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள்
| Posted: 09 Aug 2013 11:56 AM PDT தலைவா - விமர்சனம் இதோ... அமெரிக்காவில் டல்லஸில் படம் பார்த்த இர தினகர் அனுப்பியுள்ள விமர்சனம். ஆஸ்திரேலியாவில் மினரல் வாட்டர் கம்பெனி நடத்தி வரும் விஷ்வா (விஜய்), அதை கடை கடையாக வினியோகம் செய்து வரும் லோகு (சந்தானம்).இவர்கள் இருவரும் சேர்ந்து சிட்னியில் அடிக்கும் லூட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் போது 'தலைவா' என்ற டைட்டிலே மறந்து விடுகிறது. ஹீரோயின் தேர்வு செய்யும் போது, கூடவே ஹீரோவுக்கு இன்னொரு ஜோடியாக சந்தானத்தை புக் செய்வது தமிழ் சினிமாவின் புதிய ட்ரெண்ட் ஆகிவிட்டது. ஹீரோவுக்கு பிழைப்புக்கான ... |
| முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது Posted: 09 Aug 2013 11:55 AM PDT benazeerfathima wrote:எல்லாம் அருமை... |
| ரம்ஜான் ஸ்பெஷல்: இனிய பெருநாள் ஈகைத் திருநாள் ! Posted: 09 Aug 2013 11:25 AM PDT இன்று ரம்ஜான் பண்டிகையை முஸ்லிம்கள் மகிழ்வுடன் கொண்டாடுகின்றனர். இது ரம்ஜான் பெருநாள் என்றும், ஈகைத் திருநாள் என்றும், ஈதுல் பித்ர் என்றும் அழைக்கப்படுகிறது. ரமலான் நோன்பை, ஒரு மாதம் நோற்று, அதன்பின் ரமலான் மாதத்திற்கு அடுத்த மாதமான ஷவ்வால் மாதம் முதல் நாளில், ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் மாதத்தில் ஏழை வரியாகிய ஜக்காத் நன்கொடையையும், ஸதக்கா என்ற தருமத்தையும், அதிக அளவில் வழங்கி, அதன் பின் ரம்ஜான் தினத்தன்று, ஈத்காவிற்கு ரம்ஜான் தொழுகையை நிறைவேற்ற செல்லும் முன்பு, "பித்ரா' ... |
| Posted: 09 Aug 2013 11:22 AM PDT https://fbcdn-sphotos-g-a.akamaihd.net/hphotos-ak-ash3/554967_570100723032133_1649935829_n.ஜெபிஜி |
| செந்நீரோடு கண்ணீரும் கலந்தே .. Posted: 09 Aug 2013 11:19 AM PDT சொல்லெடுத்து தொடுத்து வந்தேன் சொல்லாத சொல்லை சொல்லிடவே செல்லெல்லாம் செயல் இழந்து செயல் எல்லாம் செய்வதை மறந்து செய்வது அறியாமல் நின்றேனே .... செதுக்கிய சிற்பம் போலவே செங்குறுதியில் செதுக்கிய உன்னை சொல்லிடும் சொல்லேல்லாம் கூட செல்லமாய் பாடிடவே சொல்லெடுத்து வந்தனவோ ? செங்காற்று வீசி வார செம்மன்னும் பறந்து வர செவ்வானம் திரண்டு வர செங்கதிர் எல்லாம் தலை கவிழ செல்லமாய் சிணுங்கிடும் செவ்வானம் தூறல் போல செவந்த கண்களும் தூறுதே செந்நீரில் கண்ணீரும் ... |
| உறவுகள் அனைவருக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துகள் . Posted: 09 Aug 2013 11:13 AM PDT உறவுகள் அனைவருக்கும் இனிய ரமலான் தின நல்வாழ்த்துகள் . ![]() |
| குடிநீர் பஞ்சத்தைச் சமாளிக்க தண்ணீரை ரேஷனில் வழங்க முடிவு- சீனா சோகம்! Posted: 09 Aug 2013 11:08 AM PDT சீனாவின் பல பகுதிகளில் கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் மக்கள் குடிநீரின்றி தவிக்கின்றனர். வரும் நாட்களில் வெப்பநிலை, அனல் காற்று அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஷாங்காயில் வெப்பத்தின் தாக்குதலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழந்தனர். ஜூலை மாதத்தில் நிலவும் இந்த வெப்ப நிலை மற்றும் அதன் தாக்கம் கடந்த 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்து வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ... |
| Posted: 09 Aug 2013 11:06 AM PDT ரமலான் வாழ்த்துக்கள்...எங்கள் இனிய அன்பு உறவுகளூக்கு எங்கள் அன்பு கலந்த நல்வாழ்த்துக்கள். மரிஸ்டெல்லா ... |
| அழகு போட்டியில் வெற்றிபெற்ற எருமை 25 லட்சத்திற்கு விற்பனை! Posted: 09 Aug 2013 11:05 AM PDT ஹரியானாவில் வளர்க்கப்பட்டு வந்த எருமைமாடை அதன் உரிமையாளர் 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இந்த எருமை அதிக அளவில் பால் உற்பத்தி அளிப்பதும், இதுவரை பல அழகு போட்டிகளை வென்றிருப்பதும் தான் இந்த விலைக்கு காரணம். ஹரியானாவில் உள்ள சிங்கவா காஸ் கிராமத்தை சேர்ந்தவர் கபூர் சிங். 55 வயதான இவர் தான் 2.5 லட்சத்திற்கு 2 வருடங்களுக்கு முன் வாங்கிய லட்சுமி என்னும் எருமையை ஆந்திராவை சேர்ந்த ராஜீவ் சர்பஞ்ச் என்பவருக்கு 25 லட்சம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இந்த அதிக விலைக்கு காரணம், லட்சுமி ... |
| Posted: 09 Aug 2013 09:49 AM PDT |
| Posted: 09 Aug 2013 09:13 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| மதன் -வந்தார்கள் வென்றார்கள் நூலினை டவுன்லோட் செய்ய Posted: 09 Aug 2013 09:03 AM PDT மதன் -வந்தார்கள் வென்றார்கள் நூலினை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/akv3pyjtxdcpe6s/mathans-vanthaargal-ventaargal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 09 Aug 2013 09:01 AM PDT மேஷம்: உண்மைக்காக உரக்க குரல் கொடுக்கும் நீங்கள், அதர்மத்தை தட்டிக் கேட்க தயங்க மாட்டீர்கள். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் 5ல் அமர்ந்து ஆட்சிபெற்று அமர்ந்திருப்பதால் பிள்ளைகளின் பிடிவாதம் நீங்கும். குழந்தை பாக்யம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். பூர்வீகச் சொத்தைப் பெறுவதில் இருந்து வந்த பிரச்னைகள் நீங்கும். சுக்கிரன் 6ந் தேதி வரை 6ம் வீட்டில் மறைந்து நிற்பதால் கணவன்- மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வீண் சந்தேகத்தால் பிரிவுகள் வரக்கூடும். வாகன விபத்துகள் வரக்கூடும். ... |
| மெலனி மில்டரின் -ஒரு இத்தாலியின் ஆசை நாயகி (தமிழ் ) Posted: 09 Aug 2013 08:46 AM PDT மெலனி மில்டரின் -ஒரு இத்தாலியின் ஆசை நாயகி (தமிழ் ) http://www.mediafire.com/download/3gmdnztyb65mf2d/m%26b.%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 09 Aug 2013 08:23 AM PDT the BMW Pininfarina Gran Lusso Coupé |
| 200 மொழிகளை தடம் தெரியாமல் இந்தியா இழந்துவிட்டது :( Posted: 09 Aug 2013 07:17 AM PDT 1991ம் ஆண்டு எடுத்த ஆய்விபடி இந்தியாவில் 1100 மொழிகள் இருந்துள்ளன. அதுவே 1961களில் 1,652 மொழிகளாக இருந்துள்ளன. இந்த நிலையில் இந்திய மக்கள் மொழியியல் ஆய்வின் (PLSI) முடிவில் இந்தியா 200 மொழிகளை இழந்துவிட்டதாக அறிவித்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் சுமார் 20 இந்திய மொழிகள் காணாமல் போய் இருப்பதாக வதோதராவைச் சேர்ந்த பாஷா ஆராய்ச்சி மற்றும் வெளியீட்டு மைய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 1961ம் ஆண்டு இந்தியாவில் 1100 மொழிகள் இருந்துள்ளன. இதில் தற்போது 780 முதல் 880 மொழிகள் மட்டுமே உள்ளன. இந்த ... |
| வியட்நாம் போரின் போது காட்டில் பதுங்கியவர்கள்! மொழி மறந்த பின் கண்டுபிடிப்பு Posted: 09 Aug 2013 07:13 AM PDT வியட்நாம் போரின் போது காணாமல் போன 42 வயது தந்தையும் அவரது 1 வயது மகனும், 40 ஆண்டுகளின் பின் மத்திய வியட்நாம் காட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இப்போது தந்தையின் வயது 82. மகனின் வயது 41. 1973ம் ஆண்டு வியட்நாம் போரின் போது இவர்களின் வீட்டில் வெடித்த குண்டால் இவரது மனைவியும் குடும்பத்தாரும் பலியாக, தன் 1 வயது மகனைத் தூக்கிக் கொண்டு இவர் காட்டினுள் ஓடியிருந்தார். காட்டினுள்ளே நீண்ட தூரம் பயணித்துச் சென்ற சிலர் இவர்களது மரவீட்டை கண்டு, அதிகாரிகளிற்கு அறிவித்த பின்னர் இவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். காட்டின் ... |
| ஷாருக்கானை குஷி படுத்திய ரஜினி! Posted: 09 Aug 2013 07:05 AM PDT ஆண்கள் லுங்கி அணியும் கலாசாரம் சமீபகாலமாக குறைந்து வருகிறது. அதேபோல் சினிமாக்களிலும் லுங்கி அணியும் கேரக்டர்கள் அதிகமாக இடம்பெறுவதில்லை. ஆனால் இந்த நிலையில், தற்போது ஷாரூக்கான்-தீபிகா படுகோனே நடிப்பில் தமிழ்-இந்தியில் தயாராகியுள்ள சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் ஒரு லுங்கி டான்ஸ் உள்ளது. ஷாரூக்கான், தீபிகா இருவருமே லுஙகி அணிந்தே அந்த பாடலில் நடனமாடியுள்ளனர். இது பாலிவுட்டில் பிரபலமாகி விட்டது. அதனால், இப்போது இந்தியில் உருவாகி வரும் சில புதிய படங்களில் லுங்கி நடனத்தை இணைத்து வருகிறார்களாம். ... |
| இன்று (9.8.13) ஆடிப்பூரம் : வளங்களை வாரி வழங்கும் வளையல் பிரசாதம் Posted: 09 Aug 2013 06:58 AM PDT ஆடி மாதம் கடக ராசியான சந்திரன் வீட்டில் சூரியனும், சூரியனின் ராசியான சிம்மத்தில் சந்திரனும் பரிவர்த்தனை யோகத்தில் சஞ்சரிக்கும் நள வருடம், சனிக்கிழமை, பூரம் நட்சத்திரம், சுக்லபட்சம், சதுர்த்தசி திதி கூடிய நன்னாள் அது, ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் நந்தவனத்தில் விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வார் பூ பறித்துக் கொண்டிருந்தார். அப்போது, புதர் மண்டியிருந்த இடத்தில் இருந்து குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டது. அங்கு சென்றவர் துளசி செடியின் அடியில் கை, கால்களை உதைத்துக் கொண்டு அழகிய பெண் குழந்தை இருப்பதை ... |
| அன்னியர் புக என்ன நீதி-இன்று வெள்ளையனே வெளியேறு தினம்! Posted: 09 Aug 2013 06:44 AM PDT ஆங்கிலேயர்களிடம் இருந்து, இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு உப்பு சத்யாகிரகம், ஒத்துழையாமை இயக்கும் உள்ளிட்ட பல்வேறு போரட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் முக்கியமானது "வெள்ளையனே வெளியேறு' போராட்டம். மகாத்மா காந்தி துவக்கிய இப்போராட்டத்தில், லட்சக்கணக்கான மக்கள் திரண்டு ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதன் 71வது நினைவு தினம் இன்று (ஆக.,9ம் தேதி) அனுசரிக்கப்படுகிறது. இப்போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. செய் அல்லது செத்துமடி ... |
| கூடங்குளத்திலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 100 மெகா வாட் :) Posted: 09 Aug 2013 06:40 AM PDT புதுடில்லி:""கூடங்குளம் அணுமின் நிலையம் செயல்படத் துவங்கியது முதல், இன்று வரை, தமிழகத்திற்கு, 100 மெகா வாட் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது,'' என, மத்திய மின்துறை இணை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். லோக்சபாவில் நேற்று அவர் கூறியதாவது:கூடங்குளம் அணுமின் நிலையத்தில், உற்பத்தியாகும் மொத்த மின்சாரத்தையும், தமிழகத்திற்கு தர வேண்டும் என, மத்திய அரசுக்கு, தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. அதேபோல், கேரள அரசும், 500 மெகா வாட் மின்சார வேண்டும் என, கோரியுள்ளது. இருப்பினும், விதிமுறைகளின்படியே, ... |
| பாழாகும் கடற்கரை கனிமங்கள் : கபளீகரம் செய்யும் தனியார் நிறுவனங்கள் Posted: 09 Aug 2013 06:38 AM PDT தென் மாவட்டங்களில், தனியார் நிறுவனத்தினர் ஏகபோக உரிமையாக, கனிம மணலைக் கொள்ளையடிப்பது, தொடர்ந்து நடக்கிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகி, கடலில் கலக்கும் தாமிரபரணி உள்ளிட்ட, கிளை நதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் சேர்ந்த, அரிய வகை கனிமப் பொருட்கள், கிழக்கு கடற்கரை பகுதிகளில் சேர்ந்துள்ளன.குமரி மாவட்டத்தின், மேற்கு கடற்கரை கிராமம், மிடாலம் துவங்கி, நெல்லை மாவட்டம், தூத்துக்குடி மாவட்டத்தின், வடக்கு எல்லையான, வேம்பார் ... |
| Posted: 09 Aug 2013 04:36 AM PDT உனக்குத் தெரிந்த 50 மரங்களைப் பட்டியலிடு என்றால் நம்மில் பெரும்பாலோர் வேப்ப மரம், மா மரம், கொய்யா மரம், நெல்லி மரம், அரச மரம், ஆல மரம், பலா மரம், தேக்கு மரம், வாழை மரம், தென்னை மரம், பனை மரம் என்று தொடங்கி அதிக பட்சமாக ஒரு 20 மரங்களின் பெயர்களைச் சொல்லக் கூடும். அதில் பல மரங்களை இக்காலத் தலைமுறையினர் பலரும் பார்த்திருக்கக் கூட மாட்டார்கள். இன்னும் பல மரங்களை தினசரி நாம் நடந்து செல்லும் பாதையில் கண்டிருப்போம் ஆனால் அவற்றின் பெயரைத் தெரிந்து கொள்ள முயன்றிருக்கக் கூட மாட்டோம். இன்னும் பல மரங்களின் ... |
| சாப்பாட்டுக்கு பணம் அவசியம்தானா? Posted: 09 Aug 2013 04:16 AM PDT ஏழைகள் என்பவர்கள் யார் என்பதை வரையறுக்க பல நூறு கோடி செலவுகள் செய்து பல்லாயிரக்கணக்கான பொருளாதார நிபுணர்கள் இரவும் பகலுமாக பல வருடமாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையடுத்து திட்டக்குழுவின் வரையறையின் அடிப்படையில் நகர்ப்புறங்களில் மாதத்துக்கு ரூ.1,000/-, கிராமப்புறங்களில் ரூ.816/-க்கு வருமானம் பெறுபவர்கள் வறுமைக்கோட்டுக்கு கீழே வரமாட்டார்கள் என்கிற கண்டுபிடிப்பு வெளியிடப்பட்டது. இதன் அடிப்படையில் நாடு முழுக்க யார் ஏழைகள் என்கிற விவாதம் பொருளாதார ஆர்வலர்களிடையே சூடு பிடித்திருக்கிறது. ... |
| நாட்களில் எல்லா நாட்களும் நல்ல நாட்களே! Posted: 09 Aug 2013 03:14 AM PDT இறைவனின் தொண்டர்களை நாளும், கோளும் என்ன செய்துவிடும்? அவைகளால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நாமோ நாளையும் கோளையும் கண்டு நடுநடுங்குகிறோம். நாளும் நட்சத்திரமும் நம்மைக் கோழைகளாக்க அனுமதிக்கிறோம். நட்சத்திரங்களிடமும், கிரக நிழல்களிடம் பிச்சைக் கேட்கும் கேவல நிலையில் இருக்கிறோம். ஒரு கணக்குப் போட்டுக் காண்பித்தால் இது நன்றாக விளங்கும் என்று நினைக்கிறேன். சந்திரனை வைத்துக் கணக்கிடும் மாதங்களுக்கு, மாதத்திற்கு 28 நாட்கள், இந்த 28 நாட்களில் 14 நாட்கள் நல்ல நாட்கள் இல்லை. இந்தப் பதினான்கு நாட்களிலும் ... |
| வேண்டாமே மிருகவதை !!!!!!!!!!!!!!!!!!! Posted: 09 Aug 2013 02:35 AM PDT |
| Posted: 09 Aug 2013 01:41 AM PDT வெப்பத்தை மூலமாக கொண்டு மின்சாரத்தை உருவாக்கும் பல செலுத்தங்களில் (Process) வெப்பம் பலவகைகளிலும் விரயமாகிறது.இந்த விரயங்களை மீண்டும் மின்சாரமாக மாற்றும் ஒரு புதிய நுட்பத்தை (Technology) ஆஸ்திரேலியவை சேர்ந்த விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். மின்நிலையங்கள் மற்றும் வாகன புகை கழிவுகளில் வெளியேறும் வெப்பத்தில் இருந்து நேரிடையாக மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகின்றனர். மோனஷ் பல்கலைக்கழகம் ஆராய்ச்சியாளர்கள் அயனி திரவத்தை (Ionic Liquid) சார்ந்த கரிய உமிழ்வற்ற (Carbon Emissions) அதிசக்தி வெளிபாடு ... |
| வேலன்:-எளிய முறையில் படங்கள் வரைய - பிடிஎப் புத்தகம் Posted: 09 Aug 2013 12:30 AM PDT சித்திரம் கைபழக்கம் செந்தமிழ் நாபழக்கம் என்று சொல்லுவார்கள். வரைவரையதான சித்திரம் அழகுபெறும். இந்த புத்தகத்தில் எளிய முறையில் பச்சைக்கிளி,பூக்கள்,விலங்குகள் என வரைவதை எளியமையாக விளக்கிஉள்ளார்கள்.7 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும். பூக்களை விரும்பாதவர்கள் யார் இருப்பார்கள். இதில் சூரியகாந்தி்ப்பூவினை ஒவ்வொரு ஸ்டெப்பாக வரைவதற்கு எளிய முறையில் சொல்லி கொடுத்துள்ளார்கள்.கீழே ... |
| Posted: 08 Aug 2013 10:00 PM PDT அன்பு உற்றுநோக்கிய இடமெல்லாம் உன் உருவம் ஓர் நாள் சற்றும் எதிர் பாராத திருப்பம் என் அருகில் நீ….. சரளமான உன் பேச்சு…. அதில் துடித்து கொண்டிருப்பதோ என் சுவாச மூச்சு… ஐயோ!! என்னவாயிற்று எனக்கு… படபடக்கிறதே என் இதயம்.. பற்றி கொண்டதா உன் மீது நான் விடும் காதல் மூச்சு…! விழியில் உன் வழியில் வந்து விழுந்தேன் ...அந்த நொடியில் நீயே என் எதிர்காலம் நீதான் என்று என் உயிர் சொன்னது ♥♥♥ |
| Posted: 08 Aug 2013 09:54 PM PDT செய்முறை படத்தில் உள்ளதைப் போல பெருவிரல் நுனி , சுட்டு விரல் நுனி மற்றும் மோதிரவிரல் நுனி ஆகியவற்றை ஒன்றாக இணைத்து, நடுவிரல், சுண்டு விரல் நேராக வைத்திருத்தல் வேண்டும். இதுவே ருத்ர முத்திரையாகும். இதனை தினமும் பத்து முதல் பதினைந்து நிமிடங்கள் வரை செய்யலாம். பயன்கள் உடல் வலிமை குன்றியவர்களுக்கு உடல்வலிமை மற்றும் நோயெதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு, இருதயத்தையும் வலுப்படுத்தும் என்கிறார். பொதுவில் முத்திரைகளை யாரும் செய்யலாம், இதற்கென எந்த விதமான முன் தயாரிப்புகளும் தேவையில்லை. அமைதியான ... |
| ஆணிவேர் அசைக்கும்.....ஆலம் விழுதுகள் Posted: 08 Aug 2013 09:40 PM PDT காதல் என்பது சொல்லா....? உணர்வா...இல்லை ஆசையா? முதலில் எது காதல் இங்கு,,..??..........தெளிவில்லாமல் குழம்புவது இளமையா?..இல்லை முதுமையா..? என்ன நடக்கிறது இங்கு..???...காதல் எனும் பெயரில் நடந்த ஜோடிச் சாவுகள் பழைய கதையாகி....நாகரீகம் வளர்ந்து குடும்பம் ...தெரு .....ஏரியாக்கள் தாண்டி ..ஊர் எரித்து காவு கேட்கிறது..இப்போதெல்லாம்...... பலி ஆடு ஆகிறது பச்சிளங்குருத்துகள்....... இதில் பிரபலமானவர்கள் பக்கம் அம்பலம் ஏறுகிறது அவமானம்...... நடுத்தரவர்க்கம்..தலை முழுகுவாதாய் சொல்லி.....வளைகாப்பு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
