Tamil News | Online Tamil News |
- தூத்துக்குடியில், "கார்னெட்' மணல் அள்ள தடை: குவாரிகள் குறித்து அதிகாரிகள் குழு ஆராயும்
- மாநில உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிப்போம்: கருணாநிதி
- தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம்
- நடிகர் விஜய்யின் "தலைவா' படம் வெளிநாடுகளில் "ரிலீஸ்': தமிழக டி.ஜி.பி., திடீர் அறிக்கையால் பரபரப்பு
- நடிகை விஜயசாந்தி மூலம் டி.ஆர்.எஸ்., கட்சியை உடைக்க காங்., திட்டம்
- லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.,வின் பிரசாரம் : நாளை ஐதராபாத்தில் துவக்குகிறார் மோடி
- நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பாதுகாக்க விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு
- வீணாக கடலில் கலந்தது அரை டி.எம்.சி.,
- ஆந்திர முதல்வர் - துணை முதல்வர் இடையே மோதல்! : தெலுங்கானா விவகாரத்தால் காங்கிரஸ் கவலை
- தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருந்தான் : பாக்., அதிகாரி தீடீர் ஒப்புதல்
| தூத்துக்குடியில், "கார்னெட்' மணல் அள்ள தடை: குவாரிகள் குறித்து அதிகாரிகள் குழு ஆராயும் Posted: சென்னை: தூத்துக்குடி மாவட்டத்தில், விதிகளை மீறி, கனிம வளம் கொண்ட, "கார்னெட்' மணல் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து விசாரிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரி தலைமையில், சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு குழு, ஆய்வை முடிக்கும் வரை, குவாரிகளையும், கனிமம் ஏற்றிச் செல்ல, வாகனங்களுக்கு ரசீது வழங்குவதையும், நிறுத்தி வைக்கும்படி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.தூத்துக்குடி மாவட்டத்தில், கனிம வளம் நிறைந்த தாது மணல், அனுமதியின்றி, விதிகளுக்கு புறம்பாக, கொள்ளையடிக்கப்படுவதாகப் புகார் எழுந்தது. சில தினங்களுக்கு முன், மாவட்ட கலெக்டர் ஆஷிஷ் குமார், கனிம ... |
| மாநில உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் உணவு பாதுகாப்பு மசோதாவை ஆதரிப்போம்: கருணாநிதி Posted: சென்னை : "தமிழகத்தில் ஏற்கனவே உள்ள மாநில உரிமைகளுக்கு, இம்மியளவும் பாதிப்பு ஏற்படாமல், உணவு பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாத்திரமே, ஆதரிப்போம்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:உணவு பாதுகாப்பு மசோதாவை நடைமுறைப்படுத்துவதற்கான, வழிமுறைகளை மாநிலங்கள் மீது திணிக்காமல், அந்தந்த மாநிலங்களின் நிலைமைகளை ஒட்டிய செயலாக்கத்திற்கான விருப்புரிமையை வழங்க, மத்திய அரசு முன் வரவேண்டும். நாடு விடுதலை பெற்று, 60 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்ட பிறகாவது, தேசிய அளவில் உணவுக்கான உரிமையை வழங்கி, மக்களின் வாழ்க்கை நிலையை உயர்த்த ... |
| தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் : பிரதமருக்கு முதல்வர் ஜெ., கடிதம் Posted: சென்னை : "தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின கிறிஸ்தவர்களை, தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க, நடப்பு பார்லிமென்ட் கூட்டத் தொடரில், சட்டம் இயற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார்.கடிதத்தில், அவர் கூறியிருப்பதாவது:"தாழ்த்தப்பட்டோர் பட்டியலில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின கிறிஸ்தவர்களை சேர்க்க, சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்' என, 1995ல், அப்போதைய பிரதமருக்கு கடிதம் எழுதினேன். இதே கோரிக்கையை, தாழ்த்தப்பட்ட கிறிஸ்தவர்களின் பிரதிநிதிகள், தொடர்ந்து மத்திய, மாநில ... |
| நடிகர் விஜய்யின் "தலைவா' படம் வெளிநாடுகளில் "ரிலீஸ்': தமிழக டி.ஜி.பி., திடீர் அறிக்கையால் பரபரப்பு Posted: சென்னை:நடிகர் விஜய் நடித்த, "தலைவா' படம், தமிழகத்தை தவிர, தென் மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நேற்று வெளியிடப்பட்டது. தமிழகத்தில் வரும், 22ம் தேதி வெளியிடப்பட வாய்ப்புள்ளது என, தகவல் வெளியாகியுள்ளது. "படம் வெளியிட ஏற்பட்ட தாமதத்திற்கு, தமிழக போலீசிற்கு பங்கில்லை' என்று, டி.ஜி.பி., ராமானுஜம் தெரிவித்துள்ளார்.விஜய் - அமலாபால் நடித்த, "தலைவா' படம், நேற்று (9ம் தேதி) தமிழகம் உட்பட, உலகம் முழுவதும், 2,000 தியேட்டர்களில் வெளியாக இருந்தது. படத்திற்கு கேளிக்கை வரி விலக்கு தாமதமானதாலும், அரசியல் கலந்த வசனங்கள் இருப்பதாக தகவல் வெளியானதாலும், இப்படத்தை திரையிடும், ... |
| நடிகை விஜயசாந்தி மூலம் டி.ஆர்.எஸ்., கட்சியை உடைக்க காங்., திட்டம் Posted: தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்கினால், தன் கட்சியை காங்கிரசுடன் இணைப்பதாக, வாக்குறுதி அளித்த, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியான, டி.ஆர்.எஸ்., தலைவர் சந்திரசேகர ராவ், அந்த வாக்குறுதியை மீறுவதோடு, பல நிபந்தனைகளையும் விதிப்பதால், பிரபல நடிகை விஜயசாந்தி மூலம், அந்தக் கட்சியை உடைக்க, காங்கிரஸ் வியூகம் வகுத்து வருகிறது.ஆந்திர மாநிலத்தை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க, காங்கிரஸ் செயற்குழுவும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் ஒப்புதல் அளித்து விட்டன. தெலுங்கானா அமைவது, கிட்டத்தட்ட உறுதியாகி விட்டதால், டி.ஆர்.எஸ்., கட்சியை, காங்கிரசுடன் இணைக்க வேண்டும் ... |
| லோக்சபா தேர்தலுக்கான பா.ஜ.,வின் பிரசாரம் : நாளை ஐதராபாத்தில் துவக்குகிறார் மோடி Posted: ஐதராபாத்: லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின் தேர்தல் பிரசாரத்தை, அந்தக் கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, நாளை ஐதராபாத்தில் துவக்குகிறார். இதையொட்டி, பா.ஜ., இளைஞர் அணியினர் பங்கேற்கும் பிரமாண்ட பேரணி மற்றும் பொதுக்கூட்டம், அங்கு நடைபெறுகிறது.லோக்சபாவுக்கு அடுத்த எட்டு மாதங்களில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில், வெற்றி பெற, பா.ஜ., முனைப்புடன் உள்ளது. அதற்கேற்ற வகையில், அந்தக் கட்சியின் தேர்தல் பிரசார குழு தலைவராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, சில நாட்களுக்கு முன், நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், பா.ஜ., ... |
| நேர்மையான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை பாதுகாக்க விதிகளில் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு Posted: புதுடில்லி: நேர்மையாக பணியாற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, அரசியல் காரணங்களுக்காக, "சஸ்பெண்ட்' செய்வது மற்றும் பணியிட மாற்றம் செய்வதை தடை செய்யும் வகையில், விதிமுறைகளில் திருத்தம் செய்ய, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. |
| வீணாக கடலில் கலந்தது அரை டி.எம்.சி., Posted: மேட்டூர் அணையில் இருந்து, திறந்து விடப்படும் நீரின் அளவு, வினாடிக்கு, 31 ஆயிரம் கன அடியாகக் குறைந்தது. நீர் வரத்து குறைந்ததாலும், நேற்று அரை டி.எம்.சி., நீர், கடலில் வீணாகக் கலந்தது.இரண்டு மாதம் முன் வரை, வறண்டு கிடந்த காவிரியில் தற்போது, வெள்ளம் ஏற்பட்டு, போதிய நீரை சேமிக்க முடியாமல் கடலில் கலந்து வருகிறது.மேட்டூர் அணையிலிருந்து, திறந்து விடப்படும் நீரின் அளவு, நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. மூன்று நாட்களுக்கு முன், வினாடிக்கு, 71 ஆயிரம் கன அடியாக திறந்து விடப்பட்ட நீரின் அளவு, நேற்று, 31 ஆயிரம் கன அடியாக குறைந்தது. கடந்த ஆண்டு, காவிரி வறண்டு கிடந்தபோதே, ... |
| ஆந்திர முதல்வர் - துணை முதல்வர் இடையே மோதல்! : தெலுங்கானா விவகாரத்தால் காங்கிரஸ் கவலை Posted: ஐதராபாத்: தெலுங்கானா விவகாரம் தொடர்பாக, ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டிக்கும், துணை முதல்வர் தாமோதர் நரசிம்மாவுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டுள்ளது. இதனால், காங்., மேலிடம், அதிர்ச்சி அடைந்துள்ளது. ஆந்திராவை இரண்டாக பிரித்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கும் முடிவை, காங்., மேலிடம், சமீபத்தில் அறிவித்தது. தெலுங்கானா அல்லாத பிற பகுதிகளான, ராயலசீமா, கடலோர ஆந்திராவைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசியல்வாதிகள், இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.பார்லிமென்டின் இரு சபைகளிலும், இந்த பிரச்னைகளை முன்வைத்து, தெலுங்கானா எதிர்ப்பு எம்.பி.,க்கள், ஒரு ... |
| தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருந்தான் : பாக்., அதிகாரி தீடீர் ஒப்புதல் Posted: இஸ்லாமாபாத்: இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியான, நிழல் உலக தாதா, தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருந்ததாக, முதல் முறையாக பாகிஸ்தான் ஒப்புக்கொண்டுள்ளது.இந்தியாவில் நடத்தப்பட்ட பல்வேறு பயங்கரவாத தாக்குதல்களில் மூளையாக செயல்பட்ட, தேடப்படும் குற்றவாளியான தாவுத் இப்ராகிம் பாகிஸ்தானில் தான் இருந்ததாக, பாக்., உயர் அதிகாரி ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். 1993ம் ஆண்டு மும்பை குண்டு வெடிப்பு தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட, நிழல் உலக தாதா தாவுத் இப்ராகிமை இந்தியா தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. மேலும், தாவுத் இப்ராகிமுக்கு, பாக்., ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 10,2013 To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |