மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்த 2 போலீசார் கைது
- என் தலையே போனாலும் சரி ஐதராபாத்தை விட மாட்டேன்: சந்திரசேகர்ராவ் ஆவேசம்
- ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்காவுக்கு குற்றப்பத்திரிகை: உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கை
- பாராளுமன்றம் இன்று கூடுகிறது
- அசாமில் பிரசாதம் சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி மயக்கம்
- கோதாவரி ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்கள் முகாம்களில் தஞ்சம்
- பீகார் மாநிலத்தில் வாலிபர் சுட்டுக்கொலை
- புதிய மாநிலங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டால் மாநிலங்களின் எண்ணிக்கை 50ஆக இருக்கும்
- இந்தியாவில் அடைக்கலம் தேடி 1500 வங்காள தேச மக்கள் எல்லையில் காத்திருப்பு
- பீகார்: போலீஸ் நிலையம் மீது மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குதல்
- கள்ளத்தனமாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அதிரடி நடவடிக்கை
- தனித் தெலுங்கானாவின் முதல் மந்திரியாக ஒரு தலித்தை நியமிப்போம்: சந்திரசேகர ராவ் பேட்டி
- 2014 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சரத் பவார் திடீர் அறிவிப்பு
- மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்திற்கு 20 பேர் பலி
- மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவுக்கு அவசர ஆபரேஷன்
- இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
- திருவனந்தபுரம் அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்து கொன்ற தாய்
- பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆதரவு: சோனியா காந்திக்கு சமாஜ்வாடி கண்டனம்
| இளம்பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி கற்பழித்த 2 போலீசார் கைது Posted: 04 Aug 2013 11:01 PM PDT துப்பாக்கி முனையில் இளம்பெண்ணை மிரட்டி கற்பழித்த 2 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம், புலந்த்ஷாஹர் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வரும் இளம்பெண் மீனா குமாரி (20). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பின்னிரவு வேளையில் தனது வீட்டின் மதிலுக்குள் உள்ள குளியலறைக்கு சென்றார். |
| என் தலையே போனாலும் சரி ஐதராபாத்தை விட மாட்டேன்: சந்திரசேகர்ராவ் ஆவேசம் Posted: 04 Aug 2013 10:23 PM PDT ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திரா, தெலுங்கானா இரு மாநிலங்களுக்கும் ஐதராபாத்தை 10 ஆண்டுகளுக்கு பொதுவான தலைநகராக செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது |
| ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்காவுக்கு குற்றப்பத்திரிகை: உத்தரபிரதேச அரசு அதிரடி நடவடிக்கை Posted: 04 Aug 2013 09:59 PM PDT உத்தரபிரதேச மாநிலம் கவுதம புத்தர் நகர் மாவட்ட துணை கலெக்டர் துர்காசக்தி நாக்பால் கடந்த மாதம் யமுனை நதியில் மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்தார். இதனால் அவருக்கும் சமாஜ்வாடி பிரமுகர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது |
| Posted: 04 Aug 2013 08:23 PM PDT இன்று தொடங்கும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தனி மாநில பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ள பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. கடந்த இரு பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் எதிர்க்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, |
| அசாமில் பிரசாதம் சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி மயக்கம் Posted: 04 Aug 2013 05:25 PM PDT அசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் ஒரு வீட்டில் நடந்த மதச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்பட 60 பேர் வயிற்று |
| கோதாவரி ஆற்றில் வெள்ளம்: கரையோர மக்கள் முகாம்களில் தஞ்சம் Posted: 04 Aug 2013 02:14 PM PDT ஆந்திராவில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த கனமழையால் அங்குள்ள அனைத்து ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கோதாவரி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கரையோர கிராமங்களை |
| பீகார் மாநிலத்தில் வாலிபர் சுட்டுக்கொலை Posted: 04 Aug 2013 01:23 PM PDT பீகார் மாநிலத்தில் உள்ள பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்ஜீத் யாதவ் (28). இவர் அங்கு உள்ள ரெயில் நிலையத்துக்கு சென்று கொண்டிருந்த |
| புதிய மாநிலங்கள் அனைத்தும் உருவாக்கப்பட்டால் மாநிலங்களின் எண்ணிக்கை 50ஆக இருக்கும் Posted: 04 Aug 2013 08:44 AM PDT ஆந்திராவிலிருந்து தெலுங்கானா மாவட்டம் தனியாகப் பிரிக்கப்படுகின்றது என்ற அறிவிப்பு வந்தவுடனே மற்ற மாநிலங்களிருந்தும் இதுபோன்ற கோரிக்கைகள் உள்துறை அமைச்சகத்துக்கு குவியத் தொடங்கியுள்ளன. இத்தகைய தனிநாடு கோரிக்கை, நாடு முழுவதிலும் இருந்து வந்துள்ளது. மணிப்பூரின் குகிலாந்திலிருந்து தமிழ்நாட்டின் கொங்கு நாடு முடிய, வடக்கு வங்காளத்தின் கமடாபூரிலிருந்து கர்நாடகாவின் துளுநாடு வரை ஏறத்தாழ அனைத்து |
| இந்தியாவில் அடைக்கலம் தேடி 1500 வங்காள தேச மக்கள் எல்லையில் காத்திருப்பு Posted: 04 Aug 2013 08:37 AM PDT வங்காள தேசத்தை சேர்ந்த சுமார் 1500 மக்கள் இந்தியாவிடம் அடைக்கலம் தேடி எல்லைப்பகுதியில் காத்திருக்கின்றனர். வங்காள தேசத்தில் கடந்த சில நாட்களாக இரு பிரிவினர் இடையே கடும் மோதல்கள் தலையெடுத்து வருகின்றன. இதனையடுத்து, உயிருக்கு பயந்த மலைவாழ் மக்கள் சுமார் 1500 பேர் இந்தியாவின் திரிபுரா மாநிலத்தின் ஓரம் உள்ள இந்தியா - வங்காள தேச எல்லைக்கு நேற்றிரவு வந்து சேர்ந்தனர். |
| பீகார்: போலீஸ் நிலையம் மீது மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டு தாக்குதல் Posted: 04 Aug 2013 07:22 AM PDT பீகார் மாநிலத்தில் உள்ள போலீஸ் நிலையத்தின் மீது மாவோயிஸ்ட்கள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள குத்வா பகுதியில் உள்ள புதிய போலீஸ் நிலைய கட்டிடத்தின் உள்ளே இன்று அதிகாலை நுழைந்த மாவோயிஸ்ட்கள் சிலிண்டர் வெடிகுண்டுகளை பயன்படுத்தி அதிரடி தாக்குதல் நடத்தினர். |
| கள்ளத்தனமாக இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற அதிரடி நடவடிக்கை Posted: 04 Aug 2013 06:53 AM PDT சுற்றுலா விசாக்களின் மூலம் இந்தியாவிற்கு வரும் பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் ரகசியமாக தங்கி விடுகின்றனர். அவர்களில் சிலர் உள்ளூர் தரகர்களை பிடித்து தங்கள் பெயரில் பிறப்பு சான்றிதழ், டிரைவிங் லைசன்ஸ், ரேஷன் அட்டை, வாக்காளர் அட்டைகளை பெற்று இந்திய குடிமக்களுக்கு இணையான ஆவணங்களை ஏற்படுத்திக் கொண்டு இந்திய அரசின் அனைத்து சலுகைகளையும் அனுபவித்து |
| தனித் தெலுங்கானாவின் முதல் மந்திரியாக ஒரு தலித்தை நியமிப்போம்: சந்திரசேகர ராவ் பேட்டி Posted: 04 Aug 2013 05:42 AM PDT தனித் தெலுங்கானாவின் முதல் மந்திரியாக ஒரு தலித்தை எங்கள் கட்சி பதவியில் அமர்த்தும் என தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார். ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரசேகர ராவ் கூறியதாவது:- |
| 2014 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன்: சரத் பவார் திடீர் அறிவிப்பு Posted: 04 Aug 2013 04:25 AM PDT தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சரத் பவார் 2014-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என அறிவித்துள்ளார். மூத்த அரசியல்வாதியான சரத் பவார் (72), 46 ஆண்டுகளாக மகாராஷ்டிரா முதல் மந்திரியாகவும், மத்திய மந்திரியாகவும் எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.யாகவும் பல்வேறு பொறுப்புகளை வகித்து வந்துள்ளார். |
| மகாராஷ்டிராவில் மழை வெள்ளத்திற்கு 20 பேர் பலி Posted: 04 Aug 2013 03:46 AM PDT மகாராஷ்டிரா மாநிலத்தின் பல மாவட்டங்களில் சில நாட்களாக தொடர்ந்து அடைமழை பெய்து வருகிறது. தொடர் மழையின் விளைவாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். |
| மத்திய மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவுக்கு அவசர ஆபரேஷன் Posted: 04 Aug 2013 02:37 AM PDT மத்திய உள்துறை மந்திரி சுஷில்குமார் ஷிண்டேவுக்கு மும்பையில் உள்ள ப்ரீச் கண்டி ஆஸ்பத்திரியில் இன்று அவசர ஆபரேஷன் நடந்தது. நுரையீரல் பாதிப்புக்காக இந்த ஆபரேஷன் நடத்தப்பட்டதாகவும் ஓரிரு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் அவருடைய உறவினர்கள் தெரிவித்தனர். |
| இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக் கொலை Posted: 04 Aug 2013 02:25 AM PDT பாகிஸ்தானில் தீவிரவாத பயிற்சி பெற்ற சுமார் 300 பேர் இந்தியாவுக்குள் ஊடுருவ தகுந்த நேரத்தை எதிர்பார்த்து இந்திய - பாகிஸ்தான் எல்லையில் காத்திருப்பதாக இந்திய ராணுவ அதிகாரிகள் கடந்த மாதம் தெரிவித்தனர். இந்நிலையில், கடந்த 5 நாட்களில் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 14 பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 5 நாட்களில் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவ லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் கூறியுள்ளார். |
| திருவனந்தபுரம் அருகே கள்ளக்காதலில் பிறந்த குழந்தையை உயிரோடு புதைத்து கொன்ற தாய் Posted: 04 Aug 2013 01:36 AM PDT திருவனந்தபுரம் அருகே உள்ள நெடுமங்காட்டை அடுத்த வாழமலை பகுதியைச் சேர்ந்தவர் குமாரி. இவரது மகள் சுமா (வயது 24). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. கடந்த 2 வருடத்திற்கு முன்பு இவருக்கும், திருவலா பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வினோத் |
| பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கு ஆதரவு: சோனியா காந்திக்கு சமாஜ்வாடி கண்டனம் Posted: 04 Aug 2013 12:30 AM PDT உத்தரபிரதேச மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் துர்கா சக்தி நாக்பால். மணல் கடத்தல் மாபியா கும்பலுக்கு எதிராக அவர் கடும் நடவடிக்கை எடுத்தார். இந்த பிரச்சினையில் அவரை பழிவாங்குவதற்காக ஆளும் கட்சி பிரமுகர்கள் காத்து இருந்தனர். இதற்கிடையே ஆக்கிரமிப்பு மதவழிபாட்டு தல கட்டிடம் ஒன்றை இடித்த பிரச்சினையில் பெண் அதிகாரி துர்காவை உத்தர |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |