Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


T20 தொடர்: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது தென்னாபிரிக்கா

Posted: 04 Aug 2013 10:46 PM PDT

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது ருவென்டி ருவென்டி போட்டியில் தென்னாபிரிக்க அணி 22 ஓட்டங்களினால் வெற்றி பெற்றுள்ளது. நேற்றைய போட்டிய ஹம்பாந்தோட்ட மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. இதன்படி தென்னாபிரிக்க அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை [...]

அஜித் படம் வைத்திருந்ததால் அநியாயமாக உயிரிழந்தார் ஆவரங்கால் யுவதி”

Posted: 04 Aug 2013 10:29 PM PDT

யாழ் ஆவரங்கால்ப் பகுதியில் அஜித்தின் படத்தினை வைத்திருந்த யுவதி ஒருவர் தன்னைத் தானே தீ மூட்டி தற்கொலை செய்து கொண்டார். தனது மேசையில் அஜித்தின் படங்களைக் குவித்த வைத்திருந்த 17 வயது யுவதியை வெளிநாட்டில் இருந்து வந்த யுவதியின் அண்ணை ஏசியதால் தனக்குத் தானே தீமூட்டி யாழ் போதனா வைத்தியசாலையில் உயரிழந்ததார் யுவதி.யுவதி படிக்கும் மேசையில் ஏராளமான அஜித்தின் படங்களைப் பார்த்த யுவதியின் அண்ணன் எதற்காக இவற்றை வைத்திருக்கின்றாய் என ஏசி படங்களைக் கிழித்து எறிந்துள்ளார். இதனால் [...]

வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக கனவுகண்டவர் வயிற்றை வெட்டி குடலை உருவினார்!

Posted: 04 Aug 2013 10:15 PM PDT

டில்லியைச் சேர்ந்த இளைஞர் கனவில், வயிற்றில் குழந்தைகள் உள்ளதாகவும், அவை பசியால் துடிப்பதாகவும் தெரிந்ததை அடுத்து, தன் வயிற்றையே வெட்டி, குடலை வெளியே உருவியவர், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கிழக்கு டில்லி பகுதியில், ஓட்டல் ஒன்றில் வேலை பார்க்கிறார், நேபாளத்தைச் சேர்ந்த, 27 வயது நபர். இரண்டு நாட்களுக்கு முன், அவர் தூங்கிக் கொண்டிருந்த போது கனவு வந்துள்ளது. அதில், அந்த நபரின் வயிற்றில், மூன்று குழந்தைகளை யாரோ, கம்ப்யூட்டர் மூலம், வலி தெரியாமல், [...]

யாழிலிருந்து வெளியேற வேண்டாமென்று மக்கள் கோரிக்கை விடுக்கின்றனராம்

Posted: 04 Aug 2013 10:05 PM PDT

விசாரணை என்ற பெயரில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் இராணுவ புலனாய்வு பிரிவினரால் அச்சுறுத்தப்படுகின்றனர் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் குற்றச்சாட்டு வெறும் அப்பட்டமான பொய்ப்பிரசாரமாகும். அதில் எந்தவித உண்மையும் கிடையாது. அந்தக் கூற்றை மிகவும் பொறுப்புடன் முற்றாக மறுப்பதாக யாழ். கட்டளைத் தளபதி மஹிந்த ஹத்துருசிங்க தெரிவித்தார். நேற்றைய தமிழ் ஊடகங்கள் சிலவற்றில் இராணுவத்தை தொடர்புபடுத்தியும், சாடியும் வெளியான செய்திகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது: சுமார் 13,100 [...]

ஒகேனக்கலில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்பு

Posted: 04 Aug 2013 10:02 PM PDT

ஒகேனக்கலில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேரை ஹெலிகாப்டர் உதவியுடன் மீட்கப்பட்டனர். முன்னதாக ஒகேனக்கலில் வெள்ளத்தில் சிக்கிய 4 பேர் மரக்கிளையை பிடித்தபடி விடிய, விடிய போராடி வந்தனர். சூறாவளி வெள்ளம், இருள், மழையால் அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. தர்மபுரி மாவட்டம் பந்தனஅள்ளி செல்லன்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மாதப்பன் (எ) துரைராஜ். உறவினர் ஒருவரது இறுதி சடங்குக்காக நேற்று ஒகேனக்கல் வந்தார். நேற்று மாலை 3 மணிக்கு முதலை பண்ணை அருகே இறுதி சடங்கை முடித்துவிட்டு, [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரசாதம் சாப்பிட்ட 60 பேருக்கு வாந்தி மயக்கம்

Posted: 04 Aug 2013 09:54 PM PDT

vo

voஅசாம் மாநிலம் காம்ரப் மாவட்டத்தில் நபாபூர் பகுதியில் ஒரு வீட்டில் நடந்த மதச்சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட 10 குழந்தைகள் உள்பட 60 பேர் வயிற்று வலி மற்றும் வாந்தி மயக்கத்தால் பாதிக்கப்பட்டனர்.

உடனே அவர்கள் அப்பகுதியில் உள்ள ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சில குழந்தைகள் உள்பட 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் கவுகாத்தி மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்த உயர் அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று அந்த பிரசாதத்தின் மாதிரியை எடுத்து ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

This posting includes an audio/video/photo media file: Download Now

காலை வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் படுகொலை

Posted: 04 Aug 2013 09:52 PM PDT

சேலத்தில் வாக்கிங் சென்ற பிரபல வக்கீல் இன்று அதிகாலை கலெக்டர் அலுவலகம் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்டார். சேலத்தில் இன்று பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:– சேலம் கலெக்டர் அலுவலகம் பின்புறம் உள்ள பாண்டியராஜன் தெருவில் வசித்து வந்தவர் ஆர்.இளம்வழுதி (வயது 45). பிரபல வக்கீல். தினமும் இவர் அதிகாலை வாக்கிங் செல்வது வழக்கம். இதுபோல் இன்று காலை 5.30 மணி அளவில் வாக்கிங் செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றார். அப்போது இருட்டாக இருந்தது. [...]

தமிழ்நாட்டு ரயில் நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஜப்பானியரின் உடல்

Posted: 04 Aug 2013 09:47 PM PDT

தமிழ்நாட்டில் உள்ள சென்னை ரயில் நிலையத்தில் ஜப்பானியர் ஒருவரின் மகன் பிணமாக கிடந்துள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர். சென்னை மேற்கு முகப்பேரில் வசித்து வருபவர் மவுரீஸ்லாய். ஜப்பானியரான இவர் சென்னை ஐ.ஐ.டி.யில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் மேத்யூஸ்லாய்(14).இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர். கடந்தத 30ம் திகதி மேத்யூஸ்லாய் மதுரவாயலில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அதன் பின்பு அவரை காணவில்லை. பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மகனை காணவில்லை என்று மவுரீஸ்லாய் [...]

செக்ஸ் தொல்லை காரணமாக திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கைது

Posted: 04 Aug 2013 09:42 PM PDT

திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்ததாக வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஜேம்ஸ் வசந்தன் சுப்பிரமணியபுரம், பசங்க உள்ளிட்ட சில படங்களுக்கு இசையமைத்துள்ளார். மேலும் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சென்னை பாலவாக்கத்தை சேர்ந்த ராதாதேவிபிரசாத் என்பவர் நீலாங்கரை பொலிஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றினை அளித்திருந்திருந்தார். அதில் எனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் செக்ஸ் தொல்லை கொடுப்பதாக கூறி இருந்தார். இந்த புகாரின் [...]

சிங்கப்பூரில் சீனப்பெண் கொலை: இந்தியர் மீது வழக்கு

Posted: 04 Aug 2013 09:31 PM PDT

சிங்கப்பூரில் ரெங்கராஜ் பாலசாமி என்பவர் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சீனாவை சேர்ந்த லோவ் பூங்யங் (56). 2011-ம் ஆண்டில் வக்கீல் அலுவலகம் தீ வைக்கப்பட்டு அதில் லோவ் இறந்தார். இச்சம்பவத்தையொட்டி தற்போது இந்திய வம்சாவளியான கோவிந்தசாமி நல்லையா (66) மீது சிங்கப்பூர் ஐகோர்ட்டில் கொலை வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவிந்தசாமியின் உறவினர்கள் உள்பட 58 பேர் சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை அல்லது மரணம் தண்டனை விதிக்கப்படும்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™