Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


ஆந்திராவை பிரித்தால் தமிழ்நாட்டுடன் எங்கள் பகுதியை சேருங்கள்: நகரி பகுதி மக்கள் போராட்டம்

Posted: 05 Aug 2013 10:52 PM PDT

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் தமிழர்கள் அதிக அளவில் வசிக்கிறார்கள். இங்குள்ள நகரி, நாகலா புரம், விஜயபுரம் போன்ற பகுதிகளில் 60 சதவீதம் தமிழர்கள் உள்ளனர். ஆந்திரா பிரிக்கப்பட்டு தெலுங்கானா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஆந்திரா பிரிவது உறுதியானால் எங்கள் பகுதிகளை தமிழ்நாட்டுடன் சேர்க்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையை வைத்து நகரி தமிழர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகிறார்கள்.

எல்லைக் கோட்டு பகுதியில் பாக். ராணுவம் 'திடீர்' தாக்குதல் - இந்திய ராணுவத்தை சேர்ந்த 5 பேர் வீர மரணம்: எல்லையில் பதற்றம்

Posted: 05 Aug 2013 10:36 PM PDT

இந்திய எல்லைக்குள் அவ்வப்போது தீவிரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்வதும் இந்திய வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் எதிர்பாராத வேளையில் தாக்குதல் நடத்துவதும் தொடர் வாடிக்கையாகி விட்டது. இந்நிலையில், இந்திய - பாகிஸ்தான் எல்லைக்கோட்டு பகுதிகளில் ஒன்றான பூஞ்ச் பகுதியில் இந்திய வீரர்கள்

தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு: ஆந்திராவில் அரசு ஊழியர்கள் 12–ந் தேதி முதல் வேலைநிறுத்தம்

Posted: 05 Aug 2013 10:07 PM PDT

தெலுங்கானா மாநிலத் துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா, ராயல சீமா பகுதியில் மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று 7–வது நாளாக 'பந்த்' போராட்டம் நீடிக்கிறது. பஸ்கள் ஓடவில்லை. கடைகளும் திறக்கப்படவில்லை. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது

மருமகளின் மீதுள்ள பாசத்தால் தனது தோலை தானம் செய்த மாமனார்

Posted: 05 Aug 2013 08:22 PM PDT

இப்போதெல்லாம் பத்திரிகைகளைப் பிரித்தாலே மருமகள்,மாமனார்,மாமியார் பிரச்சினைகளும், கொலை முயற்சிகளுமே பெரும்பான்மையாக காணப்படுகின்றன. அதற்கு மாற்றாக ஒரு வித்தியாசமான சம்பவம் தற்போது அகமதாபாத்தில் நடந்துள்ளது. அகமதாபாத்தில் ஹிம்மத் நகரில் வாழ்ந்துவருபவர் மோனிகா ரதோட் (26) என்பவர். இவர் கடந்த மே மாதம் 26ஆம் தேதி தனது வீட்டில் மதிய உணவைத் தயாரித்துக் கொண்டிருந்தபோது அடுப்பில் மண்ணெண்ணெய் தீர்ந்துவிட்டது. சமையலை முடிக்கவேண்டிய அவசரத்தில் மோனிகா

கடந்த 4 ஆண்டுகளில் பாதி நாட்கள் மட்டுமே பாராளுமன்றத்துக்கு வந்த சோனியா, ராகுல்

Posted: 05 Aug 2013 08:02 PM PDT

கடந்த 4 ஆண்டுகளில் பாராளுமன்ற மக்களவை கூட்டம் மொத்தம் 314 நாட்கள் நடைபெற்றன. அவற்றில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் ஏறத்தாழ பாதி நாட்கள் நடைபெற்ற கூட்டங்களில் மட்டுமே பங்கேற்று இருக்கிறார்கள். சோனியா காந்தி 48 சதவீதமும், ராகுல் 43 சதவீத கூட்டங்களிலும் கலந்து கொண்டனர். கட்சித்தலைவர்களில் முலாயம்சிங் யாதவ் (சமாஜ்வாடி) அதிக நாட்கள், அதாவது 86 சதவீத கூட்டங்களுக்கு வந்து இருக்கிறார்.

மருத்துவ பொது நுழைவுத்தேர்வு தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் மனு

Posted: 05 Aug 2013 04:36 PM PDT

இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான மருத்துவ நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மருத்துவம், பல் மருத்துவம் போன்ற எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். பட்டபடிப்புகளுக்கும், முதுநிலை மருத்துவ பட்டப்படிப்புகளுக்கும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் மாணவர்

பாராளுமன்றத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரிக்க முலாயம் சிங் திடீர் நிபந்தனை

Posted: 05 Aug 2013 03:55 PM PDT

உணவு பாதுகாப்பு சட்டத்தை ஆதரிக்க, சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவ் திடீர் நிபந்தனை விதித்தார். வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் மக்களுக்கு குறைந்த விலையில் உணவுப்பொருள் வழங்கும், உணவு பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வருவதற்கான மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு

ஹாசனில் அரசு பஸ்-கார் மோதல்: குழந்தை உள்பட 5 பேர் பலி

Posted: 05 Aug 2013 02:16 PM PDT

ஹாசனில் அரசு பஸ்-கார் மோதிக் கொண்ட விபத்தில் பெங்களூரை சேர்ந்த 5 பேர் பலியானார்கள். இவர்கள் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். பெங்களூர் கெங்கேரி உபநகரை சேர்ந்தவர் பெட்டேகவுடா(வயது 60). இவருடைய மகன் ஜெகதீஷ் (35). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். ஜெகதீஷின் மனைவி பெயர் குமுதா(27). இந்த தம்பதிகளுக்கு 1

ஐ.ஏ.எஸ். அதிகாரி சஸ்பெண்ட் விவகாரம் முற்றுகிறது: ராகுல் காந்தி ஆலோசனை

Posted: 05 Aug 2013 06:14 AM PDT

உத்தர பிரதேசத்தில் அரசு இடத்தில் தனியார் கட்டிய மசூதி சுவரை இடிக்க ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து அவரை உ.பி. அரசு சஸ்பெண்ட் செய்ததுடன், அவர் மீது வழக்கும் பதிவு செய்துள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா

மும்பை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து மேற்படிப்பிற்காக அமெரிக்கா செல்லும் இளம்பெண்

Posted: 05 Aug 2013 05:10 AM PDT

மும்பையில் பாலியல் தொழிலாளர்கள் வாழ்ந்துவரும் சிவப்பு விளக்குப் பகுதியான காமத்திபுராவில் பிறந்து வளர்ந்தவர் ஸ்வேதா கட்டி. சிறுவயதில் இருந்தே மனோதத்துவம் படித்து தன்னுடைய சமூகத்தினருக்கு உதவ வேண்டும் என்பதே அவரது லட்சியம். அவரது தாழ்ந்த சாதி காரணமாகவும், வறுமை நிலை காரணமாகவும் அவர் படித்த பள்ளியில் கூட அவர் பாரபட்சமாக நடத்தப்பட்டார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்துவந்த அவரது தாயாரே ஸ்வேதாவின் முயற்சிகளுக்கு எல்லாம் உறுதுணையாக இருந்துள்ளார். தான் வாழ்ந்த பகுதியில் பெண்கள் சிறுமைப்பட்டுக்கொண்டும், கேவலமான தொழில் செய்வது குறித்து வருத்தப்பட்டுக் கொண்டிருப்பதையும்,

பாராளுமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் புயலைக் கிளப்பிய தனி மாநில விவகாரம்

Posted: 05 Aug 2013 04:52 AM PDT

எதிர்கட்சிகளின் அமளி காரணமாக பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் தொடர்ந்து முடக்கப்பட்டு வரும் நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவதற்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் வேண்டுகோள் விடுத்திருந்தார்

மாமா பயங்கரவாதி என்பதால் பாஸ்போர்ட் வழங்க மறுப்பு: அமெரிக்காவில் இலவசமாக படிக்கும் வாய்ப்பை இழந்த 15 வயது மாணவி

Posted: 05 Aug 2013 04:18 AM PDT

காஷ்மீரின் பட்காம் பகுதியில் உள்ள அனாதை விடுதியில் தங்கி படித்து வரும் மாணவி சுஃபைரா ஜான் (15). இந்தியா-அமெரிக்கா இளைஞர் கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் படிக்க விரும்பிய இவர் புதுடெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் நடைபெற்ற 4 தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்றார். இதனையடுத்து, அமெரிக்காவில் ஓராண்டு தங்கி இலவசமாக படிப்பதற்கு இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் அவருக்கு விசா வழங்கியது.

நாடு முழுவதும் ஆறுகளில் மணல் அள்ள தேசிய பசுமை தீர்ப்பாயம் திடீர் கட்டுப்பாடு

Posted: 05 Aug 2013 03:24 AM PDT

நாடு முழுவதும் ஆற்றில் மணல் அள்ளுவதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய பசுமை தீர்ப்பாயம், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீசில், பசுமை தீர்ப்பாயத்தின் அனுமதியின்றி எந்த ஆற்றிலும்

வால் முளைத்த 12 வயது சண்டிகார் சிறுவன்

Posted: 05 Aug 2013 02:57 AM PDT

12 வயது சிறுவனுக்கு வால் முளைத்த அதிசய சம்பவம் நடந்துள்ளது. குரங்கில் இருந்து மனிதன் பிறந்தான் என்று கருத்து உள்ளது. அதை மெய்பிக்கும் வகையில், வால் முளைத்த சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனது பெயர் அர்ஷித் அலிகான். சண்டிகாரைச் சேர்ந்தவன். இவனுக்கு விலங்குகளுக்கு இருப்பது போன்று வால் முளைத்துள்ளது. அது 7 அங்குலம் (இஞ்ச்) நீளம் உள்ளது. இவனை கடவுள் அனுமனின் அவதாரமாக

ஆசிரியர் கல்லூரியில் சேர முடியாத கவலையில் இளம்பெண் தற்கொலை

Posted: 05 Aug 2013 01:52 AM PDT

ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த சாகரம் கிராமத்தை சேர்ந்த மல்லேஸ்வரி என்ற இளம்பெண், பள்ளி பருவத்தில் இருந்தே ஆசிரியை ஆக வேண்டும் என்ற ஆசை கனவுகளுடன் வளர்ந்து வந்தார். பிளஸ்-டூ முடித்த பின்னர் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் அந்த இளம்பெண் நுழைவு தேர்வு எழுதினார். தேர்ச்சிக்கான மதிப்பெண்ணை பெறாத அந்த பெண்ணை தங்கள் பயிற்சி கல்லூரியில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றால், ஒரு பெரிய தொகையை லஞ்சமாக

கனமழையால் கொச்சி விமான நிலையம் மூடல்: 126 விமானங்கள் ரத்து

Posted: 05 Aug 2013 01:00 AM PDT

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து கடந்த சில நாட்களாக கடுமையான மழை பெய்து வருகிறது. பலத்த மழையால் கொச்சி விமான நிலைய ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கொச்சி விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது

திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்துபவர்கள் பிரியும் எண்ணிக்கை அதிகரிப்பு

Posted: 05 Aug 2013 12:51 AM PDT

கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களுருவில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் பெருகியுள்ளதைப் போலவே, அங்கு பணிபுரியும் இளைய சமுதாயத்தினரிடம் திருமணம் செய்துகொள்ளாமல் வசதி கருதி ஆண்- பெண் சேர்ந்து வாழும் கலாச்சாரம் பரவலாகக் காணப்படுகின்றது. இவ்வாறான வாழ்க்கை முறையை மேற்கொள்ளுபவர்கள் பெரும்பாலும் 25-35 வயதுக்குட்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். பொருளாதார வசதி மற்றும் சமூகப் பாதுகாப்பு கருதி இத்தகைய வாழ்க்கை முறைகளுக்கு இரு சாராரும் உட்படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தவர்களாகவே காணப்படுகின்றனர்.

1993–ம் ஆண்டு குண்டு வெடிப்பு வழக்கு: அபுசலீம் மனு தள்ளுபடி

Posted: 05 Aug 2013 12:31 AM PDT

1993–ம் ஆண்டு மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் நிழல் உலக தாதா அபு சலீமுக்கு தொடர்பு இருந்தது. போர்ச்சுக்கல் நாட்டில் நடிகை மோனிகாபேடியுடன் தங்கியிருந்த அபுசலீமை மும்பை போலீசார் அந்நாட்டு நிபந்தனையுடன் இந்தியாவுக்கு கொண்டு வந்தனர். தற்போது அவர் மும்பை ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். போர்ச்சுக்கல்லில் இருந்து நாடு கடத்தி வரப்பட்டதை

டெல்லி மேல்சபையில் தெண்டுல்கர்

Posted: 05 Aug 2013 12:27 AM PDT

கிரிக்கெட்டின் சகாப்தம் என்று அழைக்கப்படும் தெண்டுல்கர் டெல்லி மேல்சபைக்கு நியமன எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. டெல்லி மேல்சபை கூட்டத்தில் தெண்டுல்கர் பங்கேற்றார். அவர் கோடுபோட்ட நீலநிற சட்டையும், கறுப்பு கலர்பேண்டும் அணிந்து இருந்தார். அனைவரது பார்வையும் தெண்டுல்கர் மீதே இருந்தது. அவரது மனைவி அஞ்சலி சபை நடவடிக்கைகளை

பாராளுமன்ற மேல்சபையில் அமளி: பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு

Posted: 05 Aug 2013 12:13 AM PDT

இன்று தொடங்கிய பாராளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் தனி மாநில பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் புயலை கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமான சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட உள்ளன. கடந்த இரு பாராளுமன்ற கூட்டத் தொடர்கள் எதிர்கட்சிகளின் அமளியால் தொடர்ந்து முடக்கப்பட்ட நிலையில், இந்த கூட்டத் தொடரை அமைதியாக நடத்துவதற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் நேற்று முன்தினம் வேண்டுகோள் விடுத்து இருந்தார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™