மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு ஜாமீன்
- ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி முற்றுகை: திருப்பதி–திருமலை அடியோடு ஸ்தம்பித்தது
- டீசல் விலையை ஒரேயடியாக ரூ.5 உயர்த்தும் திட்டம் இல்லை: நிதி அமைச்சக அதிகாரி தகவல்
- தேர்தலில் 'தலித்'களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: ராகுல் காந்தி பேச்சு
- சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: அதிரடிப்படை கமாண்டர் உள்பட இருவர் பலி
- குஜராத்தில் மூன்றுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி
- ஐதராபாத் ஜெயிலில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம்
- டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயருமா?: பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும்
- சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிடும் சட்ட திருத்தத்திற்கு பாராளுமன்ற மேல்சபை ஒப்புதல்
- உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவிற்கு எதிராக வாரண்ட்: ஃபைசாபாத் கோர்ட் பிறப்பித்தது
- இனி வேறெந்த தனி மாநிலத்தையும் உருவாக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம்
- 2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சரிபடுத்தும் செலவை ஏற்க தயார்: மோடி அரசு அறிவிப்பு
- கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்: உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கைது
- அக்டோபர் முதல் ரெயில் சரக்கு கட்டணம் உயர்கிறது
- 42 பேர் கொல்லப்பட்ட ஐதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில் 4 பேர் மீது இன்று குற்றப்பத்திரிகை தாக்கல்
- பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது
- சகோதரியின் மானத்தைக் காப்பாற்ற போராடியவர் கொலை: 2 பேருக்கு மரண தண்டனை
- சோனியா காந்திக்கு சிகிச்சை: மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம்
- வெள்ளம்-வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி: மக்களவையில் சரத் பவார் தகவல்
- மக்கள் எதிர்ப்பினால் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம்: ப.சிதம்பரம்
| சோலார் பேனல் மோசடி வழக்கு: சரிதா நாயருக்கு ஜாமீன் Posted: 27 Aug 2013 10:38 PM PDT கேரளாவில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல் கருவிகள் பொருத்தி தருவதாக கோடிக் கணக்கான ரூபாய் மோசடி செய்ததாக தொழில் அதிபர் பிஜு ராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயர், டி.வி. நடிகை ஷாலு மேனன் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ஷாலுமேனனுக்கு சமீபத்தில் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த |
| ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி முற்றுகை: திருப்பதி–திருமலை அடியோடு ஸ்தம்பித்தது Posted: 27 Aug 2013 10:32 PM PDT தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து ஐக்கிய ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் ஆந்திரா மற்றும் ராயல சீமா பகுதியில் கடந்த 1 மாதமாக முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தை தேசிய அளவில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய ஆந்திரா போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவு |
| டீசல் விலையை ஒரேயடியாக ரூ.5 உயர்த்தும் திட்டம் இல்லை: நிதி அமைச்சக அதிகாரி தகவல் Posted: 27 Aug 2013 10:20 PM PDT சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை நாளுக்கு நாள் உயர்ந்தபடி உள்ளது. இந்த நிலையில் சிரியா மீது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இணைந்து போர்தொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதன் தாக்கமும், இந்திய பெட்ரோலியம் பொருட்கள் சப்ளையில் எதிரொலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வரலாறு காணாதபடி சரிந்துள்ளது. இதனால் |
| தேர்தலில் 'தலித்'களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்: ராகுல் காந்தி பேச்சு Posted: 27 Aug 2013 10:19 PM PDT தேசிய ஆணையம் சார்பில் டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:– காங்கிரஸ் கட்சி மீது தலித் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும். அவர்களுக்கு அடைக்கப்பட்டுள்ள கதவுகள் அனைத்தும் திறக்கப்படும். தலித் மக்கள் விரைவில் காங்கிரஸ் கட்சியின் முதுகெலும்பாக இருப்பார்கள். |
| சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் தாக்குதல்: அதிரடிப்படை கமாண்டர் உள்பட இருவர் பலி Posted: 27 Aug 2013 10:19 PM PDT சத்தீஸ்கரின் தெற்கு பகுதியில் உள்ள பஸ்தர் மாவட்டம் நக்சலைட்டுகள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாகும். அவர்களை ஒடுக்குவதற்காக, பஸ்தர் மற்றும் கொண்டகான் மாவட்டத்திற்கு இடைப்பட்ட காடுகளில் அதிரடிப்படை வீரர்கள் இரண்டு நாட்களாக தேடுதல் வேட்டை நடத்தினர். |
| குஜராத்தில் மூன்றுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி Posted: 27 Aug 2013 09:21 PM PDT குஜராத் மாநிலம் வதோதாரா நகராட்சிக்கு உட்பட்ட அட்லாண்டரா பகுதியில் 3 மாடிக்கட்டிடம் ஒன்று இன்று காலை 4.30 மணிக்கு இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டிடத்தின் 14 வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்டோர் அதன் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். |
| ஐதராபாத் ஜெயிலில் ஜெகன்மோகன் ரெட்டி இன்று 4-வது நாளாக உண்ணாவிரதம் Posted: 27 Aug 2013 09:19 PM PDT ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி ஐதராபாத்தில் உள்ள செஞ்சல்குடா ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று 4-வது நாளாக அவரது உண்ணாவிரத போராட்டம் நீடிக்கிறது. அவரது உடல் நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, நாடித்துடிப்பு ஆகியவை சீராக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு ஆதரவாக ஜெயில் முன்பு உண்ணாவிரதம் இருக்க போவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் அறிவித்தனர். இதனால் ஜெயில் முன்பு எல்லை பாதுகாப்பு படை போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் உண்ணா விரதம் இருப்பதற்காக ஜெயில் முன்பு ஏராளமான தொண்டர்களும், பெண் தொண்டர்களும் திரண்டனர். அவர்கள் ஜெயில் முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அவர்களை போலீசார் கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் கலைந்து செல்ல அவர்கள் மறுத்துவிட்டனர். இதையடுத்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். பெண் தொண்டர்கள் மீதும் தடியடி நடத்தப்பட்டது. |
| டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயருமா?: பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் அறிவிப்பு வெளியாகும் Posted: 27 Aug 2013 08:47 PM PDT ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளதின் எதிரொலியாக டீசல் விலை லிட்டருக்கு ரூ.5 உயரும், இது குறித்த அறிவிப்பு பாராளுமன்ற கூட்டம் முடிந்ததும் வெளியாகும் என தெரிய வந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. பங்குச்சந்தையும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் சீர் குலைந்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை சரி செய்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது என மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், டெல்லியில் நேற்று அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் என்ன நடவடிக்கைகள் என்பது குறித்து அவர் விவரிக்கவில்லை. நடப்பு கணக்கு பற்றாக்குறை, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, நிதிப்பற்றாக்குறை ஆகிய முப்பெரும் பாதிப்பிலிருந்து நாட்டை ஓரளவாவது மீட்பதற்கு உடனடி வழி, பெட்ரோலிய பொருட்கள் விலையை கணிசமாக உயர்த்துவதுதான் என மத்திய அரசு கருதுகிறது. |
| சிறையில் இருந்தபடி தேர்தலில் போட்டியிடும் சட்ட திருத்தத்திற்கு பாராளுமன்ற மேல்சபை ஒப்புதல் Posted: 27 Aug 2013 05:07 PM PDT சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் கூட தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தத்திற்கு பாராளுமன்ற மேல் சபை நேற்று ஒப்புதல் அளித்தது. வாக்களிக்கும் உரிமை பறிக்கப்பட்ட ஒருவர், சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற தேர்தல்களில் போட்டியிட |
| உ.பி. முதல் மந்திரி அகிலேஷ் யாதவிற்கு எதிராக வாரண்ட்: ஃபைசாபாத் கோர்ட் பிறப்பித்தது Posted: 27 Aug 2013 04:47 PM PDT உத்தரபிரதேச மாநில முதல் மந்திரி அகிலேஷ் யாதவ், ஆளுங் கட்சி எம்.எல்.ஏ. தேஜ் நரய்ண் பாண்டே, ஐ.ஏ.எஸ். அதிகாரி அஜய் ஷூக்லா ஆகியோரை கைது செய்ய ஃபைசாபாத் மாவட்ட கூடுதல் நீதிபதி நேற்று வாரண்ட் பிறப்பித்தார் |
| இனி வேறெந்த தனி மாநிலத்தையும் உருவாக்க முடியாது: மத்திய அரசு திட்டவட்டம் Posted: 27 Aug 2013 03:55 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தனித்தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலத்தை நான்காக பிரிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குரல் எழுப்பினார் |
| 2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சரிபடுத்தும் செலவை ஏற்க தயார்: மோடி அரசு அறிவிப்பு Posted: 27 Aug 2013 03:21 PM PDT குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன. சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது |
| கோவா குத்தாட்ட விடுதியில் விபசாரம்: உ.பி. மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. கைது Posted: 27 Aug 2013 02:26 PM PDT உல்லாச நகரமான கோவாவில் உள்ள பனாஜியில் குத்தாட்டம் போட்ட உத்தரபிரதேச மாநில சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. மகேந்திர சிங்கை கோவா போலீசார் நேற்று கைது செய்தனர். பனாஜி நகரில் உள்ள நடன விடுதி ஒன்றில் குத்தாட்டம், கும்மாளம் மற்றும் விபசாரம் நடப்பதாக கோவா |
| அக்டோபர் முதல் ரெயில் சரக்கு கட்டணம் உயர்கிறது Posted: 27 Aug 2013 12:59 PM PDT டெல்லியில் 'இந்திய ரெயில்வே நவீனமயம்- சவால்களும், சந்தர்ப்பங்களும்' என்ற தலைப்பில் நேற்று ஒன்று மாநாடு நடைபெற்றது. இதில் ரெயில்வே துறை ராஜாங்க மந்திரி ஆதிர் ரஞ்சன்சவுத்திரி பங்கேற்றார். இந்த மாநாட்டின் இடையே அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் |
| Posted: 27 Aug 2013 11:57 AM PDT ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் உள்ள லும்பினி பூங்கா திறந்தவெளி திரையரங்கம் மற்றும் கோகுல் சாட் என்ற உணவகம் அருகே கடந்த 2007ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது |
| பெங்களூரில் குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த காமக்கொடூரன் கைது Posted: 27 Aug 2013 08:48 AM PDT பெங்களூரில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தையை கடத்தி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மர்ம நபரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட |
| சகோதரியின் மானத்தைக் காப்பாற்ற போராடியவர் கொலை: 2 பேருக்கு மரண தண்டனை Posted: 27 Aug 2013 08:33 AM PDT டெல்லி சுல்தான்பூரியில் 2009-ம் ஆண்டு ஜூலை 20-ம் தேதி இரவு சிவபக்தர்களின் ஊர்வலம் நடைபெற்றது. பக்தி சிரத்தையுடன் தெருவில் ஆடிப்பாடி அவர்கள் சென்றதை பார்க்க பொதுமக்கள் திரண்டனர். அப்போது, உள்ளூர் ரவுடிகளான சுனில் மற்றும் சுதிர் ஆகியோர், அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண்ணிடம், ஆபாசமாக சைகைகளை காட்டி ஈவ் டீசிங் செய்துள்ளனர். இதனை அவரது சகோதரனும், தாயாரும் தடுத்தபோது பிரச்சினை ஏற்பட்டது. |
| சோனியா காந்திக்கு சிகிச்சை: மோடியின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் Posted: 27 Aug 2013 07:34 AM PDT மக்களவையில் நேற்று உணவு பாதுகாப்பு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றபோது, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவசரம் அவசரமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். சிகிச்சைக்குப் பிறகு இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். அதன்பின்னர் அவர் உடல் நலம் பெற வேண்டி, பா.ஜனதா தேர்தல் பிரச்சாரக் |
| வெள்ளம்-வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உதவி: மக்களவையில் சரத் பவார் தகவல் Posted: 27 Aug 2013 06:47 AM PDT மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை மந்திரி சரத் பவார் பதில் அளித்து பேசியதாவது:- புயல், வெள்ளம், வறட்சி, பூகம்பம், நிலச்சரிவு, பூச்சி தாக்குதல், சுனாமி, கடுங்குளிர் உள்ளிட்ட பல்வேறு தேசிய பேரிடர்களால் ஏற்படும் பாதிப்பகளுக்கு நிவாரணம் வழங்க, தேசிய பேரிடர் நிவாரண நிதி மற்றும் மாநில |
| மக்கள் எதிர்ப்பினால் பொருளாதார வளர்ச்சித் திட்டங்கள் முடக்கம்: ப.சிதம்பரம் Posted: 27 Aug 2013 05:43 AM PDT மக்களவையில் இன்று பொருளாதார நிலைமை தொடர்பான விவாதத்தற்கு பதில் அளித்து நிதி மந்திரி ப.சிதம்பரம் பேசியதாவது:- உலகின் எந்த நாட்டிலும் பொருளாதாரம் சிறப்பாக உள்ளதாக அந்த நாடுகளின் அமைச்சர்களால் கூற முடியாது. ஏனெனில் உலக பொருளாதாரமே சவாலை சந்தித்து வருகிறது. உலக பொருளாதார நெருக்கடியானது |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |