Tamil Star |
- நைஜீரிய போராளிகள் தாக்கியதில் கிராமப்படையினர் 20 பேர் பலி
- 20 நாட்டு தலைவர்கள் மாநாட்டில் ஒபாமா-புதின் சந்திப்பார்களா?
- 2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சரிபடுத்தும் செலவை ஏற்க தயார்: மோடி அரசு அறிவிப்பு
- குஜராத்தில் மூன்றுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி
- ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி முற்றுகை: திருப்பதி–திருமலை அடியோடு ஸ்தம்பித்தது
- அக்காவை தேடிச் சென்ற தம்பியை ஆற்று நீர் அடித்துச் சென்ற பரிதாபம்
- 10 மணி நேர போராட்டத்தில் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த குழந்தைகள்
- வேலைக்காக குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடும் தாய்வான் மக்கள்
- செக்ஸ் ஆசையை கூட்ட ஹிட்லர் செய்த அறுவறுப்பான செயல்கள்
- குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த மர்ம மனிதன்
| நைஜீரிய போராளிகள் தாக்கியதில் கிராமப்படையினர் 20 பேர் பலி Posted: 27 Aug 2013 11:04 PM PDT நைஜீரியாவின் வடக்கு பகுதியில் இயங்கிவரும் 'போகோ ஹராம்' போராளிகள் முஸ்லிம் சட்டத்தினை நாட்டில் நடைமுறைப் படுத்தக்கோரி அரசுக்கு எதிராக போராடி வருகின்றனர். இந்நிலையில் வட கிழக்கு போர்னோ மாநில கிராமங்களில் உள்ள கண்காணிப்பாளர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த கிராம கண்காணிப்பாளர்களுக்கு ராணுவம் உதவி வருகிறது. கடந்த இரு நாட்களாக அவர்கள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் இரு கிராமங்களை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். ராணுவத்திற்கு உதவி வரும் கிராம கண்காணிப்பாளர்களை […] |
| 20 நாட்டு தலைவர்கள் மாநாட்டில் ஒபாமா-புதின் சந்திப்பார்களா? Posted: 27 Aug 2013 11:02 PM PDT ரஷியாவில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரில் அடுத்த வாரம் 20 நாட்டு தலைவர்கள் மாநாடு நடைபெற இருக்கிறது. அமெரிக்க ரகசியத்தை வெளியிட்ட எட்வர்டு ஸ்நோடெனுக்கு ரஷியா அடைக்கலம் கொடுத்ததால் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அதிருப்தி அடைந்தார். இதனால் அவர் மாநாட்டை புறக்கணிப்பார் என கூறப்பட்டது. இதற்கிடையில் செயின்ட் பீட்டர்ஸ்பெர்கில் புதினை, ஒபாமா சந்திப்பார் என்று வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜாய் கார்னே தெரிவித்தார். |
| 2002 கலவரத்தில் சேதமடைந்த மசூதிகளை சரிபடுத்தும் செலவை ஏற்க தயார்: மோடி அரசு அறிவிப்பு Posted: 27 Aug 2013 11:00 PM PDT குஜராத் மாநிலத்தில் 2002ம் ஆண்டு ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமான மசூதிகள் சூறையாடப்பட்டன. சேதமடைந்த மசூதிகளை அரசு செலவில் பழுது பார்த்து, சீர்படுத்தி தர வேண்டும் என குஜராத் இஸ்லாமிய நிவாரண கமிட்டி வேண்டுகோள் விடுத்தது. இந்த வேண்டுகோளை குஜராத் அரசு நிராகரித்து விட்டது. இதனையடுத்து, சேதமடைந்த 535 மசூதிகளை அரசு செலவில் சரிபடுத்தி தரும்படி உத்தரவிட வேண்டும் எனறு அந்த கமிட்டி குஜராத் ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தது. இந்த வழக்கில், கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்த குஜராத் […] |
| குஜராத்தில் மூன்றுமாடி கட்டிடம் இடிந்து விழுந்து 5 பேர் பலி Posted: 27 Aug 2013 10:59 PM PDT குஜராத் மாநிலம் வதோதாரா நகராட்சிக்கு உட்பட்ட அட்லாண்டரா பகுதியில் 3 மாடிக்கட்டிடம் ஒன்று இன்று காலை 4.30 மணிக்கு இடிந்து விழுந்தது. அப்போது அந்த கட்டிடத்தின் 14 வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்த 40-க்கும் மேற்பட்டோர் அதன் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். உடனடியாக சம்பவ பகுதிக்கு வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 5 பேரின் உடல்களை மீட்டனர். மேலும் பலர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த இடிபாடுகளில் 35-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து முழுவீச்சில் நடந்து […] |
| ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி முற்றுகை: திருப்பதி–திருமலை அடியோடு ஸ்தம்பித்தது Posted: 27 Aug 2013 10:55 PM PDT தெலுங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தொடர்ந்து ஐக்கிய ஆந்திராவே நீடிக்க வேண்டும் என்றும் ஆந்திரா மற்றும் ராயல சீமா பகுதியில் கடந்த 1 மாதமாக முழு அடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தை தேசிய அளவில் தெரியப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய ஆந்திரா போராட்ட கூட்டு நடவடிக்கை குழுவினர் முடிவு செய்தனர். இதையடுத்து திருப்பதியில் 2 நாள் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. திருப்பதியில் […] |
| அக்காவை தேடிச் சென்ற தம்பியை ஆற்று நீர் அடித்துச் சென்ற பரிதாபம் Posted: 27 Aug 2013 10:53 PM PDT ஆற்றில் குளிக்க சென்ற தனது சகோதரியை தேடி சென்ற சிறுவன் ஆற்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமற்போயுள்ள சம்பவம் மாத்தளை, உகுவெல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. 4 வயது சிறுவனனே இவ்வாறு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். சிறுவனின் சடலம் இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை. சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மாத்தளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். |
| 10 மணி நேர போராட்டத்தில் பிரிக்கப்பட்ட ஒட்டிப் பிறந்த குழந்தைகள் Posted: 27 Aug 2013 10:48 PM PDT சீனாவின் குவாங்க்சி மாகாணத்தில் உள்ள குய்பிங் ஆஸ்பத்திரியில் கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி யுவே ஜூக்சிங் என்ற பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இந்த பிரசவத்தில் அவருக்கு அழகான 2 பெண் குழந்தைகள் பிறந்தன. ஒன்றன்பின் ஒன்றாக பிறக்காமல் 2 குந்தைகளும் ஒட்டிப் பிறந்ததால் அவை எத்தனை நாள் உயிருடன் இருக்குமோ…? என்ற கவலை யுவே ஜூக்சிங்கின் இதயத்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியது. 2 குழந்தைகளையும் ஆபரேஷன் மூலம் பிரித்தெடுக்கலாம். ஆனால், அதற்கு நிறைய செலவாகும் என டாக்டர்கள் […] |
| வேலைக்காக குழந்தை பெறுவதைத் தள்ளிப் போடும் தாய்வான் மக்கள் Posted: 27 Aug 2013 10:42 PM PDT ஆசியாக் கண்டத்தில் உள்ள 14 நாடுகளில் பெண்கள் வேலை பார்ப்பதில் முன்னிலை வகிப்பவை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் ஆகும். இவற்றை தொடர்ந்து தற்போது, தாய்வான் நாட்டிலும் வேலைக்குச் செல்லும் பெண்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக மாஸ்டர்கார்டு நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. ஆயினும், பாரம்பரிய எதிர்பார்ப்புகளான திருமணம், குழந்தைப் பேறு மற்றும் வேலைப்பளு காரணமாக ஏற்படும் மனஅழுத்தங்கள் போன்றவற்றால் இந்தப் பெண்களும் தடுமாறுகின்றனர். தற்போதுள்ள பொருளாதார மந்தநிலையினால் வேலைப் பாதுகாப்பு என்பதுவே பெண்களிடத்தில் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இதனால், 1980களில் 24 […] |
| செக்ஸ் ஆசையை கூட்ட ஹிட்லர் செய்த அறுவறுப்பான செயல்கள் Posted: 27 Aug 2013 10:37 PM PDT சர்வாதிகாரி அடால்ப் ஹிட்லர் தன்னுடைய செக்ஸ் ஆசையை கூட்டுவதற்காக அறுவறுப்பான காரியங்களை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல தொலைக்காட்சியின் டாக்குமெண்டரி படத்திலேயே இத்தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹிட்லருக்கு ஏகப்பட்ட உடல் உபாதைகள் இருந்துள்ளன. அவருக்கு Parkinson’s என்ற நோய் இருந்துள்ளது, இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்பட்டுள்ளது. மேலும் செக்ஸ் ஆசையும் குறைவாகவே இருந்துள்ளதால், இதனை அதிகரிக்க அறுவறுப்பான செயல்களை செய்துள்ளார். இதற்காக கொகைன் போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார். ஆம்பிடமைன் ஹார்மோன் மருந்தை பயன்படுத்தியுள்ளார். இவரது மருத்துவர் […] |
| குழந்தைகளை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த மர்ம மனிதன் Posted: 27 Aug 2013 10:35 PM PDT பெங்களூரில் கடந்த சில மாதங்களாக குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது. குழந்தையை கடத்தி, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் மர்ம நபரை பொலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த 2 மாதங்களில் மட்டும் 16 குழந்தைகள் கடத்தப்பட்டதாக புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடத்தப்பட்ட குழந்தைகள் அனைவரும் 6 முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள். குழந்தைகளை கடத்தும் அந்த ஆசாமி, வெகு தூரம் கொண்டு சென்று பாலியல் தொல்லை கொடுத்து பின்னர் […] |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |