Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


வருண பகவானுக்கு நன்றிகள். அப்பாடா!!!!! மேட்டூர் அணை நிரம்பி விட்டது!!!!!!!!!!!

Posted: 04 Aug 2013 10:55 AM PDT

சில நாளாகவே பெய்து வரும் மழை காரணமாக கர்நாடகம் , கே.ஆர்.எஸ்., மற்றும் கபினி அணைகளில் இருந்து, 2ம் தேதி, காவிரியில் வினாடிக்கு, 1 லட்சத்து, 33 ஆயிரத்து, 500 கனஅடி தண்ணீர் திறந்துவிட்டது. தமிழக எல்லையான, பிலிகுண்டலுவில், தண்ணீர் வரத்து, நேற்று காலை, வினாடிக்கு, 1 லட்சத்து, 5,000 கன அடியாக உயர்ந்தது. அதிக தண்ணீர் வரத்து மற்றும் மேட்டூர் அணை நிரம்பி வருவதன் காரணமாக, ஒகேனக்கல் அருவிகள் தண்ணீரில் மூழ்கியதுடன், இரு மாநில எல்லையில் உள்ள பாறைகளை மூழ்கடித்து சென்றது.இதன் காரணமாக இன்று இரவு எட்டு மணியளவில்(Agust ...

அதிர்ச்சியான ஆனால் நெத்தியடியான விழிப்புணர்வு வாசகம் - அவசியம் படியுங்கோ :)

Posted: 04 Aug 2013 10:40 AM PDT

Save Girl Child .......else YOUR SON WILL BE FORCED TO BE 'GAY'     இப்படி  சொன்னலாவது  புரியுமா  நம்  மக்களுக்கு   ?

இனிய நண்பர்கள் நாள் வாழ்த்துகள்.

Posted: 04 Aug 2013 10:38 AM PDT



எல்லோருக்கும் இனிய நண்பர்கள் நாள் வாழ்த்துகள்.

ஈகரை.நெற் உறுப்பினர்கள் எல்லோரும் ஒற்றுமையாக நட்பைப் பேணித் தளம் மேம்பட ஒத்துழைப்போம் வாருங்கள்.

இவ்வண்ணம்
உங்கள் யாழ்பாவாணன்

பணம்

Posted: 04 Aug 2013 10:37 AM PDT


நம்மாளுகள்
பணத்தில கண்ணாயிருக்க
நல்ல உறவுகள் எல்லாம்
அறவே அற்றுப் போக
இடமிருக்கிறதே!
உலகில் பெறுமதியான ஒன்று
உண்டென்றால் - அது
அன்பு தான் - அந்த
அன்புக்கு முதன்மை வழங்கினால்
நல்ல உறவுகளைப் பெருக்கலாமே!
அன்பைக் கொடுத்து
பணத்தைக் கைவிட்டால்
நல்லுறவுகள் கைக்கெட்டுமே!

என்னிடம் நல்ல புத்தகங்கள் இருக்கின்றன .பி‌டி‌எஃப் file ஆக மாற்ற என்ன செய்ய வேண்டும் .

Posted: 04 Aug 2013 10:33 AM PDT

பிளீஸ் .......

குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச, கற்க இந்த தளம் உதவும்

Posted: 04 Aug 2013 10:32 AM PDT

குழந்தைகளுக்கு ஆங்கிலம் பேச, கற்க இந்த தளம் உதவும் முயன்று பாருங்கள்....

http://www.starfall.com/

வேலன்:-டெலிட் செய்த புகைப்படங்களை மீட்டுஎடுக்க

Posted: 04 Aug 2013 10:10 AM PDT

[u திருச்சியில் போட்டோ ஸ்டுடியோ வைத்திருக்கும் நண்பருடய நண்பர் திருமணத்திற்கு எடுத்த புகைப்படங்கள் வைத்திருந்த கேமரா மெமரி கார்டினை தவறுதலாக டெலிட் செய்துவிட்டோர். அதில் வைத்திருந்த அனைதது போட்டோகளும் டெலிட் ஆகிவிட்டது.போட்டோக்களை மீண்டும் கொண்டுவர ஏதாவது சாப்ட்வேர் இருக்கா என கேட்டடார். இணையத்தில் தேடும் சமயம் இந்த சாப்ட்வேர் கிடைத்தது. 10 எம்.பி. கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் உள்ள ...

யாரோவா நீ?

Posted: 04 Aug 2013 10:07 AM PDT

விக்கல் வரும்போதெல்லாம்
அம்மா சொல்கிறாள்
யாரோ நினைக்கிறார்கள் என்று
கோபம் கோபமாக வருகிறது
யாரோவா நீ?

- இயக்குனர் லிங்குசாமி
நன்றி-தினமணி

உறவுகளே! நலமா?

Posted: 04 Aug 2013 09:09 AM PDT

உறவுகளே! நலமா? பார்த்து ரொம்ப நாள் ஆகி விட்டது.

கலைமாமணி விக்கிரமனின் சரித்திர கதைகள் -தொகுதி 1&2 டவுன்லோட் செய்ய

Posted: 04 Aug 2013 02:55 AM PDT

கலைமாமணி விக்கிரமனின் சரித்திர கதைகள் -தொகுதி 1&2 டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : தொகுதி 1 http://www.mediafire.com/download/uhg69w2pce9v40e/vikramanin+sarithira+kathaikal.pdf தொகுதி -2 http://www.mediafire.com/download/wbe007cpu5x4oq7/vikraman-sarithira+kathaikal+part2.pdf

சாதிப்பார்களா? இளம் பெண் இயக்குனர்கள் - ஸ்பெஷல் ரிப்போர்ட்

Posted: 04 Aug 2013 02:27 AM PDT

சமீபகாலமாக இளம் இயக்குனர்கள் சினிமாவுக்கு வருவதும், முதல்படத்திலேயே ஹிட் அடித்து விடுவதும் நடந்து வருகிறது. இளைஞர்களைப் போலவே இளம் பெண் இயக்குனர்களும் சினிமாவுக்கு வருகிறார்கள். அடுத்தடுத்து அவர்களின் படங்கள் வர இருக்கிறது. செளந்தர்யா ரஜினிகாந்த் அதில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் சவுந்தர்யா. அவர்தான் சூப்பர் ஸ்டார் நடிக்கும் கோச்சடையான் படத்தை டைரக்டர் செய்து வருகிறார். மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் அவதார் படம் போன்று கொண்டு வர முயற்சித்துக் ...

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Posted: 04 Aug 2013 02:18 AM PDT

ஜப்பானின் வடகிழக்கே, மியாகி கடல் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவு கோலில் 6.0 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் அப்பகுதியில் கட்டடங்கள் குலுங்கின.இப்பகுதியில் தான் கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன் புகுஷிமா, டெய்சி நகரங்களி்ல் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் சுனாமியும் ஏற்பட்டது. இன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி அபாயம் இல்லை என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இப்படித்தாங்க வாழ்க்கை

Posted: 04 Aug 2013 01:07 AM PDT

கல்யாணத்துக்கு முன்

எனது மகளுக்கு நல்ல கணவனை நேர்ந்தெடுக்கும் உரிமை எனக்கு இருக்கு - சேரன் கண்ணீர் பேட்டி!!

Posted: 04 Aug 2013 12:23 AM PDT

"என் மகளை மிரட்டி, என் மீது பொய் புகார் அளிக்கப்பட்டுள்ளது. என் மகளின் உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும், என, இயக்குனர் சேரன், சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் மனு அளித்துள்ளார். நடிகரும், இயக்குனருமான சேரன், சென்னை, சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் வசிக்கிறார். இவரது, 2 வது மகள் தாமினி, 20. இவருக்கும், சென்னை, சூளைமேடு, வள்ளலார் முதல் தெருவில் வசிக்கும் சந்துரு, 25, என்பவருக்கும் 2 ஆண்டுகளுக்கு முன் காதல் ஏற்பட்டது. துவக்கத்தில், இவர்களின் காதலுக்கு சேரன் பச்சைக்கொடி காட்டினார். ...

சுஜாதா : என் இனிய எந்திரா புத்தகம் தேவை

Posted: 04 Aug 2013 12:06 AM PDT

சுஜாதா : என் இனிய எந்திரா புத்தகம் தேவை

கவிதையில் யாப்பு

Posted: 03 Aug 2013 11:27 PM PDT

யாப்பிலக்கணம்: ஒரு கவிதை அறிமுகம் ரமணி, ஆகஸ்ட்-செப்டம்பர், 2012 இந்தத் தொடர் ஒரு சோதனை முயற்சி. தொடரின் நோக்கம் கற்றுத் தருவதைவிடப் பகிர்ந்துகொள்வது. கடந்த சில நாட்களாக நான் யாப்பிலக்கணம் பயில இறங்கி, அது இன்னும் தொடரும்போதே, என் முயற்சியில் நான் பெற்ற செய்திகளை, மகிழ்வினை, வியப்புகளை, திருப்தியை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்வது முதல் நோக்கம். யாப்பிலக்கணத்தை உரைநடையில் தரும்போது நேரிடும் மித மிஞ்சிய சொற்களின் அளவைக் குறைத்து எளிதில் படித்து, பார்த்து, நினைக்க உதவும் வகையில் ...

"அடியேய்... ரசம் கேட்டேனே...கொண்டு வா ரசச் சட்டியை; வந்து போடு''

Posted: 03 Aug 2013 08:15 PM PDT

ஐயா, நான் ஒரு புலவன். வீட்டில் வறுமை, சாப்பிட்டு இரண்டு நாளாயிற்று. இங்கு யாரோ ஒரு வள்ளல் இருக்கிறாராம். அவரைப் புகழ்ந்து பாடி பரிசு பெறவே வந்தேன்'' என்றார் வெளியூர் புலவர் ஒருவர். ""நல்லது, நானும் ஒரு புலவன்தான். நேற்றுதான் பாட்டெழுதி பரிசு பெற்று என் மனைவியிடம் கொடுத்தேன். என் மனைவி நல்லவள்; எதிர்த்துப் பேசாதவள். இன்று என் வீட்டில் உங்களுக்கு உணவு, வாருங்கள்'' என்று உள்ளூர் புலவர், வெளியூர் புலவரைத் தன் இல்லத்துக்கு அழைத்துச் சென்றார். ""அடியேய்.. பூம்பாவை, என்னுடன் புலவர் ஒருவர் வந்திருக்கிறார். ...

சேமச்செப்பு என்கிற 'பிளாஸ்க்'

Posted: 03 Aug 2013 08:13 PM PDT

நாம் இன்றைய நாளில் பெற்றிருக்கும் அறிவியல் வளர்ச்சியை சங்க காலத்திலேயே மிக எளிதாக எட்டியிருந்தனர் என்ற உண்மையை அறியும்போது வியப்பு மேலிடுகிறது. இன்றைய "வெப்பக்குடுவை' போன்ற சுடுநீர் சேமிப்புக் கலத்தை (பிளாஸ்க்} சேமச்செப்பு) பண்டைய தமிழர் பயன்படுத்தி வந்துள்ளனர் என்பது குறுந்தொகை பாடல் (277) வழி அறியமுடிகிறது. மேலும், இப்பாடலில் பிச்சை எடுப்பதற்கு நியதியும் ஒழுங்கு முறையும் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது என்பது "ஓர்இல் பிச்சை' என்ற சொற்றொடர் மூலம் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதனால், இதைப் பாடிய ...

கம்பன் - பாரதி பாடல்களில் திருஞானசம்பந்தரின் தாக்கம்!

Posted: 03 Aug 2013 08:09 PM PDT

திருஞானசம்பந்தர் 7-ஆம் நூற்றாண்டில் அவதரித்தவர். கம்பரோ, 9-ஆம் நூற்றாண்டு; பாரதியோ 20-ஆம் நூற்றாண்டு. ஆனால், இவர்களுக்குள் ஒரு தொடர்பு உண்டு. கம்பரும் பாரதியும் சம்பந்தரின் சொற்களில் ஈடுபட்டு அதன் நயத்தை எடுத்துக்கூறியுள்ளனர் என்பதே அது! ஞானசம்பந்தர் தேவாரத்தில், வையை ஆறு, ஆலவாய்த் திருநகர், மந்திரத் திருநீறு, ஏடு எதிர்த்து வந்த புனல் வாதம் இவற்றை நம் கண்முன் கொணரும் இரண்டு பாடல்களின் தாக்கம் முறையே கம்பருக்கும் பாரதிக்கும் நிகழ்ந்ததை அவர்கள் பாடல்வழி அறியலாம். "மந்திரமாவது நீறு' என்று தொடங்கும் ...

கவிராயர்கள்!

Posted: 03 Aug 2013 08:05 PM PDT

திரிகூடராசப்பக் கவிராயர் இவர் குற்றாலத்துக்கு அருகிலுள்ள "மேலகரம்' என்ற ஊரில் பிறந்தவர். திருவாவடுதுறை ஆதீனம் சுப்பிரமணிய ஞான தேசிகர் இவரின் வழிமுறையினராவார். இவர் இயற்றிய "திருக்குற்றாலக் குறவஞ்சி' நூல், குறவஞ்சி நூல்களுள் தலைசிறந்ததாகப் போற்றப்படுகிறது. இது தவிர, திருக்குற்றாலத் தலபுராணம், மாலை, அந்தாதி, உலா, கோவை, பிள்ளைத்தமிழ் முதலிய சிற்றிலக்கிய நூல்களையும் இயற்றியுள்ளார். சீகாழி அருணாசலக் கவிராயர் இவர் "தில்லையாடி' எனும் சிற்றூரில் பிறந்தவர். சீகாழியில் வசித்த புலவர் சிதம்பரம் பிள்ளை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™