Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


சமையல் கியாஸ் வாங்க ரூ. 435 நேரடி மானியத் திட்டம்: நாளை முதல் அமல்

Posted: 30 Aug 2013 11:31 PM PDT

இந்திய எண்ணை நிறுவனங்கள் மூலம் நாடெங்கும் சமையல் கியாஸ் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சமையல் கியாஸ் உற்பத்தி, வினியோகம் உள்பட எல்லா செலவினங்களையும் கணக்கிட்டால், ஒரு சிலிண்டருக்கு சராசரியாக ரூ. 850 முதல் ரூ. 900 வரை செலவு ஏற்படுகிறது. சமையல் கியாசை இவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்க ஏழை– எளிய மக்கள் கஷ்டப்படுவார்கள் என்பதால் மத்திய அரசு மானியம் கொடுத்து பாதி விலையில் வழங்கி வருகிறது. ஆனால்

6–வது நாளாக உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் உடல்நிலை மேலும் மோசமானது

Posted: 30 Aug 2013 11:11 PM PDT

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி சொத்து குவிப்பு வழக்கில் சி.பி.ஐ. போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் தெலுங்கானா பிரிவினையை எதிர்த்து ஜெயிலில் உண்ணாவிரதம் தொடங்கினார். 5 நாட்கள் எதுவும் சாப்பிடாமல் உண்ணாவிரதம் இருந்ததால் அவரது உடல் நிலை மோசம் அடைந்தது. இதையடுத்து நேற்று முன் தினம்

டுவிட்டர் இணையதளத்தில் 15 மொழிகளில் பதில் அளிக்கும் நரேந்திர மோடி

Posted: 30 Aug 2013 10:29 PM PDT

குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடி இணைய தளம் டுவிட்டரில் தனது கருத்தக்களை வெளியிட்டு வருகிறார். அதில் அவர் பல மொழிகளையும் பயன்படுத்துகிறார். சமீபத்தில் உடல்நலம் குன்றிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு நரேந்திர மோடி டுவிட்டர் இணைய தளத்தில் அவர் குணம் அடைய வாழ்த்து தெரிவித்து இருந்தார். இந்த தகவலை அவர் ஆங்கிலம் குஜராத்தி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்றால் நாம் ஆண்கள் என்பதில் அர்த்தமே இல்லை : மோடி விளாசல்

Posted: 30 Aug 2013 09:50 PM PDT

இந்தியாவில் வாழும் தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் போதிய பாதுகாப்பு இல்லையென்றால் நாமெல்லாம் ஆண்கள் என்று நம்மை அழைத்துக்கொள்வதில் அர்த்தமே இல்லை என்று குஜராத் மாநில முதல் மந்திரி நரேந்திர மோடி கூறியுள்ளார்

மும்பை நீர் மூழ்கி கப்பல் தீ விபத்து: 18 கடற்படை வீரர்கள் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Posted: 30 Aug 2013 09:25 PM PDT

மும்பை நீர் மூழ்கி கப்பல் தீ விபத்தில் பலியான 18 கடற்படை வீரர்களின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்திய கடற்படைக்கு சொந்தமான 'சிந்து ரக்ஷாக்' நீர் மூழ்கி கப்பல் மும்பை கடற்படை தளத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. கடந்த 13–ந்தேதி அதிகாலை இந்த நீர்மூழ்கி கப்பலில் தீப்பிடித்து பயங்கரமாக வெடித்தது. கப்பல் முழுவதும் எரித்து நாசமானது. அதில் இருந்த 18 கடற்படை வீரர்களும் பலியானார்கள். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 2 கடற்படை அதிகாரிகளும் அடங்குவர். தீயில் அனைவரது உடல்களும் உருக்குலைந்து போனதால் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் நீர்மூழ்கி வீரர்கள் சிரமப்பட்டு ஒவ்வொரு உடலாக மீட்டனர். முதலில் 3 உடல்கள் மீட்கப்பட்டன. அதன்பிறகு ஒவ்வொன்றாக மீட்கப்பட்டன. கடைசியாக ஒரு உடல் மட்டும் மீட்கப்படாமல் இருந்தது. கடந்த வாரம் கடைசியாக ஒரு உடல் மீட்கப்பட்டது. உடல்கள் மும்பை ஜெ.ஜெ. ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன. அதன் பிறகு அங்கேயே டி.என்.ஏ

காஷ்மீர் எல்லையில் மீண்டும் ஊடுருவல் முறியடிப்பு: 5 பாகிஸ்தான் தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

Posted: 30 Aug 2013 09:16 PM PDT

ஜம்மு-காஷ்மீர் எல்லைக் கோட்டுப் பகுதியில் உள்ள டங்கர் வழியாக நேற்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவில் 12 பேர் கொண்ட தீவிரவாதிகள் கும்பல் இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்றது. உஷாரடைந்த இந்திய ராணுவ வீரர்கள் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகளை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டுக் தாக்குதல்

பெட்ரோலிய நிறுவனத்தில் தீ விபத்து: பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

Posted: 30 Aug 2013 04:52 PM PDT

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 14 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர்.

பிரதமர் உரையில் ஒரு வார்த்தை பாராளுமன்ற அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்

Posted: 30 Aug 2013 07:45 AM PDT

இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி மற்றும் பொருளாதார நிலைமை குறித்து பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் திருப்தி அளிக்கவில்லை என்று கூறி மாநிலங்களவையில் பா.ஜனதா உறுப்பினர்கள் பிரதமருக்கு எதிராக கோஷமிட்டனர்.

ரூபாய் மதிப்பு வீழ்ச்சி-தெலுங்கானா விவகாரத்தால் அமளி: மக்களவை திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு

Posted: 30 Aug 2013 05:58 AM PDT

நாட்டின் பொருளாதாரம் மற்றும் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி தொடர்பாக, பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமர் மன்மோகன் சிங் இன்று விளக்கம் அளித்தார். அவரது விளக்கம் தங்களுக்கு திருப்தி அளிக்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அதிருப்தியடைந்த பிரதமர், எதிர்க்கட்சிகளை கடுமையாகச் சாடினார். இதேபோல் ரூபாய் மதிப்பை பாதுகாக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்களும், தெலுங்கானாவுக்கு

தீவிரவாதி யாசினிடம் 12 நாட்கள் விசாரணை: தேசிய புலனாய்வு அமைப்புக்கு கோர்ட் அனுமதி

Posted: 30 Aug 2013 05:43 AM PDT

இந்தியாவில் கடந்த 2008–ம் ஆண்டு முதல் டெல்லி, பெங்களூர், ஐதராபாத், புனே, மும்பை உள்பட 12 நகரங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 225 பேர் பலியானார்கள். இந்தியன் முஜாகிதீன் அமைப்பு தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர்.

இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்திய 'டாப்-20' ஊழல்கள் - சிறப்பு பார்வை

Posted: 30 Aug 2013 05:21 AM PDT

கடுமையான பொருளாதார சிக்கலில் இந்தியா சிக்கித் தவிக்கும் இவ்வேளையில், நமது நாட்டில் நடைபெற்ற 'டாப்-20' ஊழல்களை தெரிந்துக் கொள்வது நலமாக இருக்கும். 1987-போபர்ஸ் ஊழல் சுவீடன் நாட்டில் இருந்து இந்திய ராணுவத்துக்கு 'போபர்ஸ்' ரக பீரங்கிகள் வாங்குவதற்காக போடப்பட்ட 285 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் முன்னாள் அரசியல்வாதிகள் சிலர் கமிஷன் பெற்றதாக குற்றச்சாட்டு. 13-7-2013 அன்று

கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஆசாராம் பாபு இன்று ஜோத்பூர் போலீசில் ஆஜர் இல்லை

Posted: 30 Aug 2013 04:01 AM PDT

ஆன்மிக தலைவர் ஆசாராம் பாபு, ஜோத்பூரில் உள்ள தனது ஆசிரமத்தில் தங்கியிருந்த உ.பி. சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோத்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அத்துடன் ஆசாராம் பாபுவை ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளனர். அதன்படி அவர் இன்று நேரில் ஆஜராகாவிட்டால், கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை அறிவித்துள்ளது.

மும்பையில் கற்பழிப்பு குற்றவாளிகள் மீது முட்டை வீச்சு: கோர்ட் வளாகத்தில் பரபரப்பு

Posted: 30 Aug 2013 03:24 AM PDT

மும்பையில் ஆள்நடமாட்டம் இல்லாமல் இருந்த சக்தி மில் வளாகத்திற்கு கடந்த 22-ம் தேதி புகைப்படம் எடுக்க பெண் பத்திரிகையாளர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களில் ஷிராஜ் ரஹ்மான் கான், விஜய் ஜாதவ் மற்றும் காசிம் பெங்காலி ஆகியோரின் போலீஸ் காவல் முடிந்ததையடுத்து இன்று கோர்ட்டில்

சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞர் நீக்கம்: கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

Posted: 30 Aug 2013 03:03 AM PDT

தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பவானி சிங் கடந்த பிப்ரவரி மாதம் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

பொருளாதார மந்தநிலை: மத்திய அரசு மீது அத்வானி குற்றச்சாட்டு

Posted: 30 Aug 2013 02:57 AM PDT

பாரதீய ஜனதா உயர்மட்டக்குழு இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து, நாட்டின் பொருளாதார மந்தநிலை குறித்து ஆலோசனை நடத்தியது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அத்வானி, மத்திய அரசு மீது குற்றம் சாட்டினார். நாட்டின் பொருளாதார நிலைக்கு பொறுப்பேற்காமல் எதிர்க்கட்சிகள் மீது மத்திய அரசு பழி போடுகிறது என்று கூறிய அத்வானி, பொருளாதார நிலைக்கு ஐ.மு. கூட்டணி

எந்த நாட்டிலாவது பிரதமரை திருடன் என்று கூறும் அநியாயம் நடப்பதுண்டா?: மன்மோகன் சிங் வேதனை

Posted: 30 Aug 2013 01:49 AM PDT

ஒரு நாட்டின் பிரதமரை திருடன் என்று கூறுவது எந்த நாட்டிலாவது நடப்பதுண்டா? என பிரதமர் மன்மோகன் சிங் வேதனை தெரிவித்துள்ளார். இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை அடைந்து வரும் நிலையில், இது தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதனையடுத்து, பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்ற மேல்சபையில் இன்று விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மும்பையில் கற்பழிப்பு குற்றவாளி மீது தாக்குதல்: முட்டை வீச்சு

Posted: 30 Aug 2013 01:36 AM PDT

மும்பையில் சமீபத்தில் பத்திரிகை பெண் போட்டோகிராபரை 5 பேர் கும்பல் மிரட்டி கற்பழித்தது. அந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) கற்பழிப்பு குற்றவாளிகளை போலீசார் கோர்ட்டுக்கு அழைத்து வந்தனர். அப்போது குற்றவாளிகளில் ஒருவர் மீது பொது மக்கள் சரமாரி தாக்குதல் நடத்தினார்கள். கோடரியால் தாக்கினார்கள். அவர்களிடம் இருந்து போலீசார் குற்றவாளியை மீட்டு

பொருளாதார நிலை பற்றி மக்களவையில் பிரதமர் மன்மோகன் சிங் விளக்கம்

Posted: 30 Aug 2013 12:48 AM PDT

ரூபாய் மதிப்பு சரிவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பாராளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளித்தார். இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். கடந்த சில வாரங்களாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 50–க்குள் கட்டுப்படுத் தப்பட்டு இருந்தது. அதன் பிறகு சரிய ஆரம்பித்து ரூபாய் மதிப்பு 68.85 அளவுக்கு சரிவை சந்தித்தது.

கச்சத்தீவு வழக்கு: தமிழக வருவாய் துறை பிரதிவாதியாக சேர்ப்பு- சுப்ரீம் கோர்ட்டு ஒப்புதல்

Posted: 30 Aug 2013 12:39 AM PDT

தமிழக மீனவர்களுக்கு வாழ்வாதாரமாக இருந்த கச்சத்தீவை கடந்த நூற்றாண்டில் இந்தியா இலங்கைக்கு தாரை வார்த்து விட்டது. இதனால் தமிழக மீனவர்கள் அங்கு சென்று மீன் பிடிக்க முடியாமல் தினம், தினம் அவதிக்குள்ளாகிறார்கள். கச்சத்தீவை மீண்டும் பெற்றால்தான் தமிழக மீனவர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியும் என்பதை உணர்ந்த முதல்– அமைச்சர்

குண்டு வெடிப்பு தீவிரவாதி யாசின் டெல்லி கொண்டுவரப்பட்டான்: 6 மாநில போலீசார் விசாரணை

Posted: 30 Aug 2013 12:14 AM PDT

இந்தியாவில் கடந்த 2008–ம் ஆண்டு முதல் டெல்லி, பெங்களூர், ஐதராபாத், புனே, மும்பை உள்பட 12 நகரங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 225 பேர் பலியானார்கள். இந்தியன் முஜாகிதீன் அமைப்பு தீவிரவாதிகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர். இதையடுத்து அதன் தளபதிகளான ரியாஸ் பத்கல், யாசின் பத்கல், இக்பால் பத்கல் ஆகியோரை தேசிய புலனாய்வு படையினர் தேடி வந்தனர். இதில் யாசின் நேற்று முன்தினம் இரவு பீகார் மாநிலத்தில்


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™