Tamil Star |
- பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு சிறைத்தண்டனை ரத்து
- பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி
- திருமண விழாவில் தமிழக முதல்வர் சொன்ன புலிக்கதை
- குரோம் உலாவியில் அனைத்து டேப்களையும் ஒரே கிளிக்கில் மூடுவதற்கு
- பிரபாகரனே தமிழர்களை கொன்றார்! மஹிந்த ராஜபக்ச
- விடுதலைப்புலி இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது
- நவனீதம்பிள்ளை விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரிப்பு
- மேர்வின் சில்வாவின் அநாகரிக நடத்தையால் நவிபிள்ளை கடும் கோபம் – மன்னிப்புக் கோரியது சிறிலங்கா
- எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு
- போலீஸ் கமிஷனருக்கு பார்சலில் வந்த தலை
| பின்லேடனை காட்டிக் கொடுத்த மருத்துவருக்கு சிறைத்தண்டனை ரத்து Posted: 30 Aug 2013 08:34 PM PDT
இதற்கிடையே லஷ்கர்- இ- இஸ்லாம் என்ற தீவிரவாத அமைப்பிற்கு மறைமுகமாக உதவி செய்த குற்றத்திற்காக அப்ரிடி கைது செய்யப்பட்டார். மேலும் ஒசாமா பதுங்கியிருந்த பகுதியில் சிஐஏ உதவியுடன் போலியாக சொட்டு மருந்து முகாம் நடத்தியதாகவும், அமெரிக்காவுக்கு உதவி செய்த குற்றத்திற்காகவும் 33 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது, பெஷாவரில் உள்ள சிறையில் அவர் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் இதனை எதிர்த்து சட்ட நிபுணர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் மேல் முறையீடு செய்தனர். இந்நிலையில் கைபர் நீதிபதி வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து ஷகில் அப்ரிடி மீதான வழக்கை, வேறு நீதிபதி மீண்டும் விசாரிக்க வேண்டும் என இந்த ஆணையத்தின் கமிஷனர் சாஹிப்சாதா முஹம்மது அனீஸ் உத்தரவிட்டுள்ளார். வழக்கை மறு விசாரணை செய்யவுள்ள புதிய நீதிபதியின் உத்தரவுப்படி தான் அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் சென்றிருந்த அமெரிக்க அதிகாரிகள் அப்ரிடியை விடுதலை செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி Posted: 30 Aug 2013 08:29 PM PDT இரண்டு நாள்கள் அமைதியாக இருந்த பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை இரவு, போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி மீண்டும் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்தனர். ஜம்மு மாவட்டத்தின் பல்லன்வாலா துணைப் பிரிவில், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் அமைந்துள்ள இந்திய நிலைகள் மீது, பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை இரவு 11.30 மணியளவில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர் என்று மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த தாக்குதலில் சிறிய மற்றும் தானியங்கி ஆயுதங்களை […] |
| திருமண விழாவில் தமிழக முதல்வர் சொன்ன புலிக்கதை Posted: 30 Aug 2013 08:24 PM PDT
சென்னை, ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இத்திருமணத்தில் அவர் கூறிய கதை: புலியாக மாறினாலும் பயம் "சிலர் தேவையற்ற வீண் அச்சத்திற்கு ஆளாகி மகிழ்ச்சியான நேரங்களில் கூட மன சஞ்சலத்திற்கு ஆளாகிறார்கள். இந்த வீண் பயத்தைப் போக்கி, துணிச்சலுடன் செயல்பட்டால் வாழ்வில் வெற்றி நிச்சயம். ஒரு ஞானியின் நிஷ்டை கலைந்த போது, ஒரு சுண்டெலி ஞானி முன் வந்தது. சுண்டெலியைப் பார்த்த ஞானி, "உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார். "பூனையைக் கண்டு எனக்கு பயமாய் இருக்கிறது. என்னை ஒரு பூனையாக மாற்றி விட்டால் உங்களுக்குப் புண்ணியம் உண்டு" என்றது எலி. ஞானி, எலியை பூனையாக மாற்றினார். இரண்டு நாட்கள் கழித்து, மீண்டும் அப்பூனை வந்து ஞானி முன் நின்றது. பூனையைக் கண்ட ஞானி, "இப்போது என்ன பிரச்சனை?" என்று வினவினார். "என்னை எப்போதும் நாய் துரத்துகிறது. என்னை நாயாக மாற்றி விட்டால் நன்றாக இருக்கும்" என்றது பூனை. உடனே பூனையை நாயாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, அந்த நாய் வந்து ஞானியின் முன் நின்றது "இப்போது உனக்கு என்ன வேண்டும்?" என்று நாயிடம் கேட்டார் ஞானி. "புலி பயம் என்னை வாட்டி எடுக்கிறது. தயவு செய்து என்னை புலியாக மாற்றிவிடுங்கள்", என்றது நாய். ஞானி, நாயை புலியாக மாற்றினார். சில நாட்கள் கழித்து ஞானி முன் வந்து நின்ற புலி, "இந்தக் காட்டில் வேடன் என்னை வேட்டையாட வருகிறான். தயவு செய்து என்னை வேடனாக மாற்றி விடுங்கள்" என்றது புலி. உடனே புலியை வேடனாக மாற்றினார் ஞானி. சில நாட்கள் கழித்து, வேடன் ஞானி முன் வந்து நின்றான். "இப்போது உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார் ஞானி. "எனக்கு மனிதர்களை கண்டால் பயமாக இருக்கிறது" என்று சொல்ல ஆரம்பித்தான். உடனே இடை மறித்த ஞானி, "சுண்டெலியே! உன்னை எதுவாக மாற்றினால் என்ன? உன் பயம் உன்னை விட்டுப் போகாது. உனக்கு சுண்டெலியின் இதயம் தான் இருக்கிறது. நீ சுண்டெலியாக இருக்கத்தான் லாயக்கு!" என்று கூறிவிட்டார் அந்த ஞானி. ஆக, உள்ளத்தில் நம்பிக்கையும், அச்சமற்ற தன்மையும் இல்லாத வரை நாம் எதையும் அடையவோ, சாதிக்கவோ முடியாது. உங்களைப் பற்றி நீங்கள் எப்படி எண்ணுகிறீர்களோ அப்படித்தான் ஆவீர்கள். நீங்களே உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உங்களுடைய எண்ணங்கள் செயலற்றுப் போனால், அச்சம், சோர்வு ஆகியவை உடலைக் கூனாக்கி, உள்ளத்தை மண்ணாக்கி விடும்." உடைந்த பானையானாலும் உயர்வு "ஒரு கிராமத்தில் ஏழை விவசாயி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் தன் வீட்டுத் தேவைக்காக, தினமும் ஆற்றிலிருந்து தண்ணீர் எடுத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தண்ணீர் எடுத்து வர இரண்டு பானைகளை வைத்திருந்தார். அந்தப் பானைகளை ஒரு நீளமான கழியின் இரண்டு முனைகளிலும் தொங்கவிட்டு, கழியைத் தோளில் சுமந்து செல்வார். இரண்டு பானைகளில், ஒன்றில் சிறிய ஓட்டை இருந்தது. அதனால் ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வரும் போது, ஓட்டையுள்ள பானையில் பாதியளவு நீரே இருக்கும். ஓட்டையில்லாத பானை, ஓட்டையுள்ள பானையைப் பார்த்து, எப்போதும் அதன் குறையை பற்றி கிண்டல் செய்யும். இப்படியே பல நாட்கள் கடந்துவிட்டன. ஒரு நாள் ஓட்டையுள்ள பானை, தன் எஜமானனிடம் சென்று, "ஐயா, என் குறையை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. எனக்குள்ள குறையால் வரும் வழியெல்லாம் தண்ணீர் சிந்தி, உங்கள் வேலைப் பளு மிகவும் அதிகரிக்கிறது. என் குறையை நீங்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொண்டது. இதற்குப் பதில் அளித்த விவசாயி, "பானையே நீ ஒன்று கவனித்தாயா? நாம் வரும் பாதையில், உன் பக்கம் இருக்கும் அழகான பூச்செடிகளை கவனித்தாயா? உன்னிடமிருந்து தண்ணீர் சிந்துவது எனக்கு முன்னமே தெரியும். அதனால் தான், வழி நெடுக பூச்செடி விதைகளை விதைத்து இருந்தேன். அவை நீ தினமும் சிந்திய தண்ணீரில் இன்று பெரிதாக வளர்ந்து, எனக்கு தினமும் அழகான பூக்களை அளிக்கின்றன. அவற்றை வைத்து நான் வீட்டை அலங்கரிக்கிறேன். மீதமுள்ள பூக்களை விற்றுப் பணம் சம்பாதிக்கிறேன்" என்றார். இதைக் கேட்ட பானை கேவலமாக உணர்வதை நிறுத்திவிட்டது. தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு துணிச்சலுடன் நீங்கள் செயல்பட்டால், உங்களால் சாதிக்க முடியாதது ஏதுமில்லை. வலிமை, வாழ்வை வானளவிற்கு உயர்த்தும். நம்பிக்கையைத் துணை கொண்டு நீங்கள் செயல்பட்டால், உங்கள் வாழ்வில் வெற்றி நிச்சயம்." This posting includes an audio/video/photo media file: Download Now |
| குரோம் உலாவியில் அனைத்து டேப்களையும் ஒரே கிளிக்கில் மூடுவதற்கு Posted: 30 Aug 2013 08:21 PM PDT
தற்போது இணைய பாவனைக்காக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுவரும் உலாவியாக கூகுளின் குரோம் உலாவி காணப்படுகின்றது. இதனால் பயனர்களை கவர்வதற்காகவும், செயற்பாடுகளை இலகுவாக்குவதற்காகவும் பல்வேறு நீட்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதன் அடிப்படையில் தற்போது குரோம் உலாவியில் திறந்து வைத்துள்ள ஒன்றிற்கு மேற்பட்ட டேப்களை ஒரே கிளிக்கில் மூடுவதற்கான நீட்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. PanicButton எனும் இந்த நீட்சியை தரவிறக்கம் செய்து நிறுவிக்கொள்வதன் மூலம் இந்த வசதியினைப் பெற்றுக்கொள்ள முடியும். தரவிறக்க சுட்டி This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரபாகரனே தமிழர்களை கொன்றார்! மஹிந்த ராஜபக்ச Posted: 30 Aug 2013 08:06 PM PDT
இறுதிப்போரின் போது இலங்கை இராணுவம் தமிழ் மக்களை கொலைசெய்யவில்லை அவ்வாறு இலஙகை இராணுவம் தமிழ் மக்களை கொலைசெய்திருந்தால் தமிழ் மக்கள் இராணுவத்தினர் பக்கம் வந்திருக்கமாட்டார்கள் என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார் இந்தநிலையில் இலஙகைக்கு வெளியில் உள்ள தமிழர்கள்ää யாழ்ப்பாணத்துக்கு திரும்பி தமது பணிகளை முன்னெடுக்க தாம் அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார் இதேவேளை சர்வதேசத்தில் இன்னமும் விடுதலைப்புலிகளின் வலையமைப்பு தீவிரமாக செயற்படுவதை ஜனாதிபதி தமது செவ்வியில் ஏற்றுக்கொண்டுள்ளார் இதற்கிடையில் படகுகள் மூலம் அகதிகளை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்து செல்வதில் விடுதலைப்புலிகளே ஈடுபடுவதாகவும் ஜனாதிபதி குற்றம் சுமத்தியுள்ளார் This posting includes an audio/video/photo media file: Download Now |
| விடுதலைப்புலி இயக்க தலைவர் பிரபாகரன் வாழ்க்கை சினிமா படமாகிறது Posted: 30 Aug 2013 07:52 PM PDT இந்தியில் தயாரான 'மெட்ராஸ் கபே' படத்தில் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை தீவிரவாதியாக சித்தரித்து இழிவுபடுத்தியுள்ளதாக தமிழ் அமைப்புகள் கண்டித்தன. தமிழகத்தில் இப்படம் ரிலீசாகவில்லை. 'மெட்ராஸ் கபே' படத்துக்கு போட்டியாக பிரபாகரன் வாழ்க்கை வரலாறு தமிழில் சினிமா படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை வ.கெளதமன் இயக்குகிறார். இவர் ''மகிழ்ச்சி'' படத்தை டைரக்டு செய்து கதாநாயகனாகவும் நடித்தார். பிரபாகரன் படம் பற்றி அவர் கூறியதாவது:– ராஜாராஜசோழனுக்கு பிறகு தமிழனின் வீரத்தையும், மானத்தையும் தலைநிமிர செய்த பெருமை அண்ணன் பிரபாகரனையே சாரும். […] |
| நவனீதம்பிள்ளை விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரிப்பு Posted: 30 Aug 2013 07:46 PM PDT தேசிய பாதுகாப்புக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் நவனீதம்பிள்ளை விடுத்த கோரிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. சிங்களப் பத்திரிகையொன்று இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்தல், வடக்கில் இராணுவத்தை அகற்றுதல், பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 800 புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் மற்றும் பொலிஸ் திணைக்களத்தை நீதி அமைச்சிடம் ஒப்படைத்தல் போன்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. நவனீதம்பிள்ளையின் இந்த அனைத்து கோரிக்கைகளும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடியதென அரசாங்கம் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேர்வின் சில்வாவின் அநாகரிக நடத்தையால் நவிபிள்ளை கடும் கோபம் – மன்னிப்புக் கோரியது சிறிலங்கா Posted: 30 Aug 2013 07:21 PM PDT தன்னைத் திருமணம் செய்ய விரும்புவதாக, சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக் குறித்து, ஐ.நா மனிதஉரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை சிறிலங்கா அரசாங்கத்திடம் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார். நவநீதம்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக, சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா கூறியது தொடர்பான, காணொலிப் பதிவு, ஐ.நா அதிகாரிகளால் நவநீதம்பிள்ளையின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அதைப் பார்த்த அவர், கடும் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக, சிறிலங்கா அரசாங்கத்திடம் அவர் கடும் அதிருப்தியை வெளியிட்ட நிலையில், மேர்வின் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவில் தீ விபத்து : பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு Posted: 30 Aug 2013 07:14 PM PDT ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் எண்ணெய் சுத்திகரிப்பு பிரிவில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று தீ விபத்து ஏற்பட்டது. இதில் சிக்கிய 14 பேர் ஏற்கனவே உயிரிழந்தனர். 22 பேர் உடல் கருகி படுகாயம் அடைந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற மேலும் 4 பேர் நேற்று இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 18 உயர்ந்தது. 18 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. This posting includes an audio/video/photo media file: Download Now |
| போலீஸ் கமிஷனருக்கு பார்சலில் வந்த தலை Posted: 30 Aug 2013 07:32 AM PDT கென்யாவில் 2007ஆம் ஆண்டின் இறுதியில் பொதுத் தேர்தல் முடிந்தவுடன் நடந்த வன்முறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். அப்போதே நாட்டின் பாதுகாப்புப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை சீர்திருத்தப்பட வேண்டும் என்ற கருத்து எழுந்தது. அப்போதைய அரசுக்கு முன் இருந்த முக்கிய சவால்களில் இதுவும் ஒன்றாகத் தெரிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, கென்யாவின் அதிகாரிகள் லஞ்ச ஊழல் மிகுந்தவர்களாக விவரிக்கப்பட்டனர். எனவே, கடந்த வருடம் காவல்துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பொருட்டு ஜான்சன் கவுலுடி என்ற அதிகாரி காவல்துறை ஆணையத் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் […] This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil Star To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |





