மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்பதா?: சிரஞ்சீவி நாக்கை அறுப்போம்- ஹரிஸ்ராவ் ஆவேசம்
- இந்தியாவில் 32,739 கிராமங்களில் இன்னும் மின் வசதி இல்லை
- மும்பை கற்பழிப்பு குற்றவாளிகள் மேலும் பல குற்றங்கள் புரிந்திருக்க போலீசார் சந்தேகம்
- காலவரையற்ற உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டி மீது புதிய வழக்கு தொடர முடிவு
- சமையல் கியாஸ் விலை மாதந்தோறும் ரூ.10 உயர்கிறது: மத்திய அரசு முடிவு
- பிரதமர் கனவில் நரேந்திர மோடி நிதானம் இழந்து பேசுகிறார்: மத்திய மந்திரி சச்சின் பைலட் தாக்கு
- ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு கோர்ட்டு வழக்கு செலவு அதிகம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து
- கேதார்நாத் கோவிலின் போக்குவரத்தை எளிதாக்க அமைக்கப்படும் புதிய பாலம்
- எங்கள் நாட்டின் மருத்துவம் - சுகாதாரத்தை மேம்படுத்த இந்தியா உதவ வேண்டும்: ஈராக் பிரதமர் வேண்டுகோள்
- பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது: நரேந்திர மோடி வேதனை
- தடையை மீறி அயோத்திக்குள் நுழைய முயன்ற விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் - தொண்டர்கள் 2 ஆயிரம் பேர் கைது
- ஆஸ்திரேலியாவில் விருதினைப் பெறும் மலையாளப் பத்திரிகை
- ஜார்க்கண்ட்டில் முன்னாள் மந்திரியை கொல்ல மாவோயிஸ்டுகள் முயற்சி
- பாராளுமன்றத்தில் தவறாமல் ஆஜராக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு
- காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது: வெங்கையாநாயுடு
- சோலார் பேனல் மோசடி வழக்கில் ஜாமீனில் விடுவிப்பு: நடிகை ஷாலுமேனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு
- புனே அருகே 11 வயது சிறுமி கற்பழித்து கொலை
- பெண் போட்டோ கிராபர் கற்பழிப்பு: 5 குற்றவாளிகளும் கைது
- இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல்
- மலையாளம் தெரிந்தால்தான் கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு
| ஐதராபாத்தை யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்பதா?: சிரஞ்சீவி நாக்கை அறுப்போம்- ஹரிஸ்ராவ் ஆவேசம் Posted: 25 Aug 2013 10:37 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர, ஆந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு தீர்வுகாண ஐதராபாத் நகரை யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சிரஞ்சீவி உள்பட பலர் மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்து உள்ளனர். ஆனால் இதற்கு தெலுங்கானா ராஷ்ட்டீரிய சமிதி கட்சி கடும் கண்டனம் |
| இந்தியாவில் 32,739 கிராமங்களில் இன்னும் மின் வசதி இல்லை Posted: 25 Aug 2013 10:35 PM PDT இந்தியாவில் 2001–ம் ஆண்டு கணக்கெடுப்புப்படி 5 லட்சத்து 93 ஆயிரத்து 732 கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்கள் அனைத்திலும் மின்சார வசதி ஏற்படுத்த கடந்த 2005–ம் ஆண்டு ராஜீவ் காந்தி பெயரில் புதிய திட்டம் ஒன்றை மத்திய அரசு கொண்டு வந்தது. புதிய திட்டப்படி 2009–ம் ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 18 ஆயிரம் கிராமங்களில் மின் வசதி செய்து கொடுக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது. அதுபோல வறுமை கோட்டுக்கு கீழ் |
| மும்பை கற்பழிப்பு குற்றவாளிகள் மேலும் பல குற்றங்கள் புரிந்திருக்க போலீசார் சந்தேகம் Posted: 25 Aug 2013 10:24 PM PDT மும்பையில் கடந்த வியாழக்கிமை பெண் புகைப்பட நிருபர் 5 பேர் கொண்ட கும்பலால் கடத்தி கற்பழிக்கப்பட்டார். இந்த வழக்கின் கடைசி குற்றவாளியான சலீம் அன்சாரி (வயது 27) நேற்று டெல்லியில் கைது செய்யப்பட்டான். அவன் மும்பை கொண்டுவரப்பட்டு இன்று நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறான். |
| காலவரையற்ற உண்ணாவிரதம்: ஜெகன்மோகன் ரெட்டி மீது புதிய வழக்கு தொடர முடிவு Posted: 25 Aug 2013 10:14 PM PDT ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி சொத்து குவிப்பு உள்பட பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டு, ஐதராபாத் சன்சல்குடா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த 1½ ஆண்டுகளாக சிறையில் உள்ள அவர் அங்கிருந்தபடியே கட்சியை நடத்தி வருகிறார். ஆந்திராவை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கு ஜெகன்மோகன் ரெட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதை வலியுறுத்தி அவர் |
| சமையல் கியாஸ் விலை மாதந்தோறும் ரூ.10 உயர்கிறது: மத்திய அரசு முடிவு Posted: 25 Aug 2013 09:59 PM PDT அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாதபடி வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த வீழ்ச்சி மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. என்றாலும் உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியை மத்திய அரசால் கட்டுப்படுத்த இயலவில்லை. இந்த நிலையில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலையும் உயர்ந்தபடி உள்ளது. இது மத்திய அரசின் நிதி நிலையில் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடப்பு கணக்கு பற்றாக்குறையையும் அதிகரிக்க செய்துள்ளது. சமீபத்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி நீடிப்பதால் மத்திய அரசுக்கு ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு நிதிச்சுமை ஏற்பட்டிருக்கிறது. இதை சரிகட்ட பெட்ரோலியம் பொருட்களின் விலையை உயர்த்த வேண்டிய நிர்ப்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. |
| பிரதமர் கனவில் நரேந்திர மோடி நிதானம் இழந்து பேசுகிறார்: மத்திய மந்திரி சச்சின் பைலட் தாக்கு Posted: 25 Aug 2013 09:01 PM PDT பிரதமர் கனவில் மிதக்கும் நரேந்திர மோடி நிதானம் இழந்து பேசி வருவதாக மத்திய மந்திரி சச்சின் பைலட் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு பாரதீய ஜனதாவின் பிரசாரக்குழு தலைவராக குஜராத் மாநில முதல்-மந்திரி நரேந்திர மோடி நியமிக்கப்பட்டு உள்ளார். மேலும் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அவரே அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. கடந்த 15-ந் தேதி பிரதமர் மன்மோகன் சிங் ஆற்றிய சுதந்திர தின உரையை கடுமையாக விமர்சித்த நரேந்திர மோடி, நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என்று சவால் விடுத்திருந்தார். இந்த நிலையில் இளைஞர் காங்கிரஸ் தலைவரும், மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை மந்திரியுமான சச்சின் பைலட் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- சுதந்திர தினம் போன்ற முக்கியமான தினங்களில் நாட்டின் பிரதமர் ஆற்றும் உரையில், பா.ஜனதா கட்சி அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது துரதிர்ஷ்டவசமானது. குறிப்பிட்ட ஒரு கட்சிக்காக பிரதமர் உரையாற்றவில்லை. நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கும் தலைவர் என்ற |
| ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு கோர்ட்டு வழக்கு செலவு அதிகம்: சுப்ரீம் கோர்ட்டு கருத்து Posted: 25 Aug 2013 08:55 PM PDT ஏழைகள் நெருங்க முடியாத அளவுக்கு கோர்ட்டு வழக்கு செலவு அதிகமாகி விட்டது என சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கில் ஆஜராக வக்கீல் ஒருவர் கையெழுத்திட்டு விட்டு, அதன்பின்னர் ஒரு முறைகூட அந்த வழக்கில் ஆஜராகவில்லை. இதை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டு கருத்து தெரிவித்தது. அப்போது சுப்ரீம் கோர்ட்டு கூறியதாவது:- சட்டத்தொழில் என்பது ஒரு காலத்தில் மேன்மையானதாக கருதப்பட்டது. ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அது வணிகமயமாகி விட்டது. கோர்ட்டுகளில் வழக்கு தொடர்வது என்பது அதிக செலவு பிடிக்கிற ஒன்றாகி விட்டது. ஏழை மனிதர்களால் நெருங்க முடியாத அளவுக்கு அது சென்று விட்டது. வழக்கு தொடுத்தவரின் வாழ்நாளில் ஒரு வழக்கு விசாரணை முடிந்து இறுதிக்கட்டத்தை அடைந்து விடாது, வழக்கு தொடுத்தவரின் விதியை ஒரு ஜோதிடரால்கூட கணித்து கூறி விட முடியாது என்றெல்லாம் நீண்ட காலமாக கருதப்பட்டு வந்தது. நீதி நிர்வாகம் செய்வதில் நீதிபதிகளை போன்று வக்கீல்களுக்கும் சம பங்கு உள்ளது. |
| கேதார்நாத் கோவிலின் போக்குவரத்தை எளிதாக்க அமைக்கப்படும் புதிய பாலம் Posted: 25 Aug 2013 08:15 PM PDT கடந்த ஜூன் மாதம் ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஏற்பட்ட பெருமழையினாலும், வெள்ளத்தினாலும் கேதார்நாத் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சேதாரங்கள் ஏற்பட்டன.ஏராளமானோர் பலியாகினர். தற்போது அங்கு புனரமைப்புப் பணி நடைபெற்று வருகின்றது. அதன் ஒரு பகுதியாக இரண்டு ஹெலிகாப்டர் தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த தளங்களை கோவிலுடன் இணைக்கும் விதமாக அங்கு ஓடும் மந்தாகினி நதியின் குறுக்கில் 20கி.மீ நீளத்திற்கு ஒரு பாலம் |
| எங்கள் நாட்டின் மருத்துவம் - சுகாதாரத்தை மேம்படுத்த இந்தியா உதவ வேண்டும்: ஈராக் பிரதமர் வேண்டுகோள் Posted: 25 Aug 2013 02:37 PM PDT இந்தியா வந்துள்ள ஈராக் பிரதமர் நூரி அல்-மாலிக்கி நேற்று மகாராஷ்டிரா கவர்னர் கே. சங்கர நாராயணனை சந்தித்து பேசினார். ஈராக்கை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே பல்கலைக்கழகத்தில் படித்து வருவதை நினைவுகூர்ந்த சங்கர நாராயணன், ஈராக் மற்றும் இந்தியாவிற்கிடையிலான நீண்டகால நட்புறவை பாராட்டி பேசினார். |
| பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது: நரேந்திர மோடி வேதனை Posted: 25 Aug 2013 12:45 PM PDT பிரதமர் பதவிக்குண்டான கண்ணியத்தையே ஊழல் அழித்து விட்டது என நரேந்திர மோடி கூறியுள்ளார். குஜராத்தில் சபர்கந்தா என்ற புதிய மாநிலத்தை உருவாக்கியதற்காக அம்மாநில முதல் மந்திரி நரேந்திர மோடிக்கு நேற்று பாராட்டு விழா நடைபெற்றது. |
| தடையை மீறி அயோத்திக்குள் நுழைய முயன்ற விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் - தொண்டர்கள் 2 ஆயிரம் பேர் கைது Posted: 25 Aug 2013 12:09 PM PDT உத்தரபிரதேச மாநில அரசு விதித்துள்ள தடையை மீறி 84–கோசி பரிக்கிரமா யாத்திரை நடத்துவதற்காக அயோத்திக்குள் நுழைய முயன்ற இந்து பரிஷத் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 2 ஆயிரம் பேரை போலீசார் கைது செய்துள்ளனர். |
| ஆஸ்திரேலியாவில் விருதினைப் பெறும் மலையாளப் பத்திரிகை Posted: 25 Aug 2013 09:59 AM PDT திருவல்லம் பஸி என்பவர் கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் 25 வருடங்கள் பத்திரிகைத் துறையில் பணியாற்றியவர். இவர் கடந்த பத்து வருடங்களாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருகின்றார். அங்கு ஆறு வருடங்களாக இந்தியன் மலையாளி என்ற பத்திரிகையை |
| ஜார்க்கண்ட்டில் முன்னாள் மந்திரியை கொல்ல மாவோயிஸ்டுகள் முயற்சி Posted: 25 Aug 2013 09:22 AM PDT ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் அருகே உள்ள பையாண்டி கிராமத்தில், மாநில நில வருவாய்த்துறை முன்னாள் மந்திரி டுலால் புயான் வீடு உள்ளது. அவரை கொல்லும் முயற்சியாக அதிகாலை 2.30 மணியளவில் மாவோயிஸ்டுகள் 9 பேர் பயங்கர ஆயுதங்களுடன் அங்கு வந்தனர். அப்போது மந்திரியும், அவருடைய அரசுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளும் தூங்கிக்கொண்டு |
| பாராளுமன்றத்தில் தவறாமல் ஆஜராக காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு Posted: 25 Aug 2013 08:13 AM PDT வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று காங்கிரஸ் கட்சியால் கருதப்படும் உணவு பாதுகாப்பு மசோதா பாராளுமன்றத்தில் இன்னும் நிறைவேற்றப்படவில்லை. தெலுங்கானா பிரச்சினையால் ஏற்பட்ட அமளி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் மாயமானது போன்ற பல காரணங்களால் இந்த மசோதா நிறைவேற்றுவது தள்ளிப்போனது. |
| காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது: வெங்கையாநாயுடு Posted: 25 Aug 2013 07:15 AM PDT பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் வெங்கையாநாயுடு ஐதராபாத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- காங்கிரஸ் கட்சி இந்த நாட்டில் இருந்து அகற்றப்படவேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து மக்கள் நீக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. காங்கிரஸ் ஆட்சி அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது. நாட்டு மக்கள் மிக ஆவலோடு மாற்றத்தை எதிர்நோக்கி உள்ளனர். காங்கிரஸ் |
| சோலார் பேனல் மோசடி வழக்கில் ஜாமீனில் விடுவிப்பு: நடிகை ஷாலுமேனன் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு Posted: 25 Aug 2013 03:51 AM PDT கேரளாவில் நடந்த சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நடிகை ஷாலு மேனன், கேரள முதல்– மந்திரி உம்மன்சாண்டியின் முன்னாள் உதவியாளர் டென்னி ஜோப்பன் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் இருவரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர். அதை தொடர்ந்து அவர்கள் 2 பேருக்கும் கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து நேற்று காலை 11.30 மணியளவில் திருவனந்தபுரம் அட்டக்குளங்கரை மகளிர் சிறையிலிருந்து ஷாலுமேனன் வெளியே வந்தார். அவரை புகைப்படம் எடுப்பதற்காக ஏராளமான |
| புனே அருகே 11 வயது சிறுமி கற்பழித்து கொலை Posted: 25 Aug 2013 12:46 AM PDT மராட்டிய மாநிலம் புனே அருகே உள்ள கிராமம் கலாண்ட்வாடி. இந்த பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த சிறுமியை 22 வயது வாலிபர் ஒருவர் வழிமறித்து கரும்பு தோட்டத்துக்கு தூக்கி சென்றார். அங்கு அந்த சிறுமியை கற்பழித்தார். பின்னர் அவரது கழுத்தை கயிற்றால் இறுக்கி கொன்று விட்டு அங்கிருந்து தப்பி ஓடினான். |
| பெண் போட்டோ கிராபர் கற்பழிப்பு: 5 குற்றவாளிகளும் கைது Posted: 25 Aug 2013 12:05 AM PDT மும்பையில் ஆங்கில பத்திரிகையில் போட்டோ கிராபராக பணியாற்றிய 23 வயது பெண்ணை 5 பேர் கொண்ட கும்பல் கடந்த 22–ந்தேதி கற்பழித்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய முகமது அப்சல் என்ற 19 வயது வாலிபரை போலீசார் இரவோடு இரவாக கைது செய்தனர். அவன் கொடுத்த தகவலின் பேரில் மேலும் 4 பேர் பெயர் விவரம் தெரிய வந்தது. அவர்களை மும்பை போலீசார் தேடி வந்தனர். |
| இந்திய எல்லையில் பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் Posted: 25 Aug 2013 12:03 AM PDT காஷ்மீரில் இந்திய எல்லை கோட்டுப்பகுதியில் போர் நிறுத்தத்தை மீறி பாகிஸ்தான் படைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த 6–ந்தேதி 5 இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பிறகு பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடர்கிறது. நேற்று பூஞ்ச் பகுதியில் தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் திருப்பி தாக்குதல் நடத்தியது. 40 நிமிடம் இந்த சண்டை நீடித்தது. இதுவரை 80 முறை தாக்குதல் நடந்துள்ளது. இன்று அதிகாலையிலும் தாக்குதல் நடந்தது. இந்திய படைகளும் திருப்பி சுட்டு பதிலடி |
| மலையாளம் தெரிந்தால்தான் கேரளாவில் அரசு வேலை: உம்மன்சாண்டி அறிவிப்பு Posted: 24 Aug 2013 11:17 PM PDT கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்–மந்திரியாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டி பதவி வகித்து வருகிறார். உம்மன்சாண்டி பதவி ஏற்றவுடன் மலையாளம் தெரிந்தவர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என்று திடீர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அரசு வேலையில் சேர விரும்புபவர்கள் அரசு நடத்தும் மலையாள தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்றும் அந்த உத்தரவில் |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |