மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- அழகி போட்டியில் வெற்றி பெற்ற எருமை மாடு 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை
- நதிநீர், மின்சாரம், வேலை வாய்ப்புக்கு தீர்வு காணாமல் பிரிவினையை ஏற்க முடியாது: கிரண்குமார் பேட்டி
- கணவர் கோரிக்கையை ஏற்று துர்க்காவை கலெக்டராக நியமித்தது தவறு: அகிலேஷ் யாதவ்
- ராஜஸ்தானில் 200 அடி குழிக்குள் விழுந்த சிறுவன்: உயிருடன் மீட்க போராட்டம்
- தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் தீவிரமாகிறது: 11–ந்தேதி ரெயில் மறியல்
- தேர்தலில் ரூ.8 கோடி செலவு: கோபிநாத் முண்டே மீது நடவடிக்கை இல்லை- தேர்தல் கமிஷன் முடிவு
- 5 பேரை கொன்றதற்கு பழி வாங்க 50 பாகிஸ்தான் வீரர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்: ராம்தேவ் ஆவேசம்
- உயிரிழந்த வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பீகார் மந்திரி பகிரங்க மன்னிப்பு கேட்டார்
- ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் பெண்கள் வங்கி: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
- ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி: தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி உத்தரவு
- ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை: விதிகளை திருத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் வற்புறுத்தல்
- கல்பாக்கத்தில் அமைக்கப்படும் அணு மின்நிலையம் 2015-ம் ஆண்டு உற்பத்தியை தொடங்கும்
- நடிகை விஜயசாந்தி சோனியா காந்தியை சந்தித்தார்
- மேல்-சபையை புறக்கணிப்போம்: அரசுக்கு ஒத்துழைப்பும் கிடையாது-பா.ஜ. அறிவிப்பு
- கூடங்குளம் அணுஉலையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம்
- உ.பி.யில் 5 மகள்களின் தலையை துண்டித்து கொன்றவரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு
- சுதந்திர போராட்ட தியாகிகளை ஜனாதிபதி நாளை கவுரவிக்கிறார்
- 5 வீரர்கள் சுட்டுக்கொலை: பாராளுமன்றத்தில் ஏ.கே.அந்தோணி புதிய விளக்கம்
- டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்: செல்போன் கம்பெனி அதிபர்கள் திடீர் கைது
- நரேந்திர மோடி ஐதராபாத் வருகையை எதிர்த்து வழக்கு: மதக்கலவரம் ஏற்படும் என குற்றச்சாட்டு
| அழகி போட்டியில் வெற்றி பெற்ற எருமை மாடு 25 லட்சம் ரூபாய்க்கு விற்பனை Posted: 08 Aug 2013 11:19 PM PDT அரியாணா மாநிலம் சிங்வா கிராமத்தை சேர்ந்த கபூர்சிங் என்பவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2.5 லட்சம் கொடுத்து ஒரு எருமை மாட்டை வாங்கினார். அந்த எருமை மாடு ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று கபூர்சிங்குக்கு லட்சக்கணக்கான பணத்தை அள்ளிக் கொடுத்தது. லட்சுமி என்று பெயரிட்டு அந்த எருமை மாட்டை கபூர்சிங் வளர்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக அந்த எருமை தினமும் 30 லிட்டர் பால் கொடுத்து வருகிறது. இந்த மாட்டை பற்றி கேள்விப்பட்ட ஆந்திரா |
| நதிநீர், மின்சாரம், வேலை வாய்ப்புக்கு தீர்வு காணாமல் பிரிவினையை ஏற்க முடியாது: கிரண்குமார் பேட்டி Posted: 08 Aug 2013 11:09 PM PDT ஆந்திராவில் தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் இன்று 10–வது நாளாக நிகழ்ந்து வருகிறது. ஆந்திர மாநில பிரிவினைக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த முதல்-மந்திரி கிரண்குமார் ரெட்டி மத்திய அரசின் முடிவுக்கு பிறகு எந்த கருத்தும் கூறாமல் இருந்தார். தலைமைச் செயலகத்துக்கு வருவதைகூட தவிர்த்தார். இந்த நிலையில் 9 நாட்களுக்கு பிறகு நேற்று தனது மவுனத்தை கலைத்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர், ''நதிநீர் பங்கீடு, மின்சார பகிர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட |
| கணவர் கோரிக்கையை ஏற்று துர்க்காவை கலெக்டராக நியமித்தது தவறு: அகிலேஷ் யாதவ் Posted: 08 Aug 2013 11:04 PM PDT உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் மசூதியை யொட்டி உள்ள அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட சுவரை இடிக்க மாவட்ட கலெக்டர் துர்க்கா சக்தி உத்தரவிட்டார். அவர் முன்னிலையில் ஆக்கிரமிப்பு சுவர் இடித்து தள்ளப்பட்டது. ரம்ஜான் நோன்பு சமயத்தில் சுவர் இடிக்கப்பட்டதால் மத நல்லிணக்கத்துக்கு ஊறு ஏற்படும் என்று குற்றம் சாட்டி துர்க்காவை மாநில அரசு சஸ்பெண்டு செய்தது. ஆனால் அவர் யமுனை ஆற்றுப் படுகையில் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்ததால் |
| ராஜஸ்தானில் 200 அடி குழிக்குள் விழுந்த சிறுவன்: உயிருடன் மீட்க போராட்டம் Posted: 08 Aug 2013 10:56 PM PDT ராஜஸ்தான் மாநிலம் கருளி மாவட்டத்தில் உள்ள கியாரடா கிராமத்தில் வயல் ஒன்றில் ஆழ்துளை தோண்டப்பட்டது. 200 அடி ஆழத்துக்கு தோண்டியும் தண்ணீர் கிடைக்காததால், மேற்கொண்டு குழி தோண்டுவதை கைவிட்டனர். ஆனால் அந்த குழியை அவர்கள் சரிவர மூடாமல் சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கியாரடா கிராமத்தை சேர்ந்த ஒரு பெண் மாடுகளுக்கு புல் போடுவதற்காக தன் விவசாய நிலத்துக்கு சென்றார். அவர் வயல் அருகில் தான் அந்த ஆழ்துளை குழாய் இருந்தது. அந்த பெண்ணுடன் சென்றிருந்த அவரது 9 வயது மகன் அந்த |
| தெலுங்கானா எதிர்ப்பு போராட்டம் தீவிரமாகிறது: 11–ந்தேதி ரெயில் மறியல் Posted: 08 Aug 2013 10:46 PM PDT ஆந்திராவை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்படும் என மத்திய அரசு அறிவித்ததற்கு ராயலசீமா, கடலோர ஆந்திர பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் தொடர் பந்த் போராட்டம் நடத்தி வருகிறார்கள். கடந்த 10 நாட்களாக சில பகுதியில் பஸ் போக்குவரத்து நடக்கவில்லை. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. |
| தேர்தலில் ரூ.8 கோடி செலவு: கோபிநாத் முண்டே மீது நடவடிக்கை இல்லை- தேர்தல் கமிஷன் முடிவு Posted: 08 Aug 2013 10:31 PM PDT ரூ.8 கோடி தேர்தல் செலவு தொடர்பாக கோபிநாத் முண்டே மீது நடவடிக்கை எடுப்பது இல்லை என்று தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. 2009 பாராளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா மூத்த தலைவர் கோபிநாத் முண்டே ரூ.8 கோடி தேர்தல் செலவு செய்ததாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பாக தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டு அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. |
| 5 பேரை கொன்றதற்கு பழி வாங்க 50 பாகிஸ்தான் வீரர்களை சுட்டுக்கொல்ல வேண்டும்: ராம்தேவ் ஆவேசம் Posted: 08 Aug 2013 10:19 PM PDT பிரபல யோகா குரு ராம் தேவ் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறிதயாவது:– பாகிஸ்தான் ராணுவம் நமது எல்லைக்குள் அத்து மீறி நுழைந்து 5 பேரை கொன்று விட்டு போன பிறகும் மத்திய அரசு மிகவும் பொறுமையாக உள்ளது. ''கண்ணுக்கு கண்'' என்ற ரீதியில் மத்திய அரசு பதிலடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 5 வீரர்களை இழந்ததற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த 50 வீரர்களையாவது நாம் சுட்டு கொன்றிருக்க வேண்டும். அதை |
| உயிரிழந்த வீரர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து: பீகார் மந்திரி பகிரங்க மன்னிப்பு கேட்டார் Posted: 08 Aug 2013 08:36 PM PDT காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட பீகார் மாநிலத்தை சேர்ந்த 4 வீரர்களின் உடல்கள் விமானப்படை விமானம் மூலம் பீகார் கொண்டு செல்லப்பட்டன. வீரர்களின் உடல்களை வாங்க ஐக்கிய ஜனதா தள மந்திரிகள் யாரும் விமான நிலையத்துக்கு வரவில்லை. இதுகுறித்து பீகார் பஞ்சாயத்து ராஜ் மந்திரி பீம்சிங்கிடம் நிருபர்கள் கேட்ட போது, 'உயிர்த்தியாகம் செய்ய விரும்புகிறவர்கள் வேண்டுமானால் ராணுவம் அல்லது காவல்துறையில் சேருங்கள், ஆனால் உடல்களை வாங்குவது |
| ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் பெண்கள் வங்கி: மத்திய மந்திரிசபை ஒப்புதல் Posted: 08 Aug 2013 05:19 PM PDT ரூ.ஆயிரம் கோடி முதலீட்டில் அனைத்து பெண்கள் வங்கி அமைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. அனைத்து பெண்கள் வங்கி தொடங்கப்படும் என்று நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் அறிவித்து இருந்தார். |
| ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதி: தேசிய பசுமை தீர்ப்பாயம் இறுதி உத்தரவு Posted: 08 Aug 2013 04:20 PM PDT தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது. தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மார்ச் 23-ந் தேதி விஷவாயு வெளியேறியதால் சுற்றுப்புற பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக 29-ந் தேதி ஆலையை மூட தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டது. |
| ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மீது நடவடிக்கை: விதிகளை திருத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் வற்புறுத்தல் Posted: 08 Aug 2013 03:38 PM PDT ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய மத்திய அரசின் முன்அனுமதி பெறும் வகையில் விதிகளை திருத்த வேண்டும் என்று ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சங்கம் வற்புறுத்தி உள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நாக்பால். கவுதமபுத்த நகர் மாவட்ட துணை கலெக்டரான இவர், அங்குள்ள மணல் மாபியா கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததால், அம்மாநில |
| கல்பாக்கத்தில் அமைக்கப்படும் அணு மின்நிலையம் 2015-ம் ஆண்டு உற்பத்தியை தொடங்கும் Posted: 08 Aug 2013 01:47 PM PDT டெல்லி பாராளுமன்ற மேல்-சபையில் பிரதமர் அலுவலக மந்திரி வி.நாராயணசாமி எழுத்து மூலம் அளித்த தகவல் வருமாறு:- கல்பாக்கத்தில் புளூட்டோனியத்தை எரிபொருளாக கொண்ட அதிவேக அணு உலை அமைக்கப்பட்டு வருகிறது. இது 2010 செப்டம்பரில் உற்பத்தியை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. கருவிகள் உற்பத்தி செய்வதில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினைகள் தொடர்பாக இது தாமதமானது. |
| நடிகை விஜயசாந்தி சோனியா காந்தியை சந்தித்தார் Posted: 08 Aug 2013 01:14 PM PDT ஆந்திர மாநிலம் மேடக் தொகுதியின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எம்.பி. நடிகை விஜயசாந்தி. மத்திய அரசு தனி தெலுங்கானா மாநிலம் அறிவித்தவுடன் தான் காங்கிரசில் இணையப் போவதாக தெரிவித்தார். அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி அறிவித்தது. |
| மேல்-சபையை புறக்கணிப்போம்: அரசுக்கு ஒத்துழைப்பும் கிடையாது-பா.ஜ. அறிவிப்பு Posted: 08 Aug 2013 12:50 PM PDT பா.ஜனதா உறுப்பினர்கள் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதாக சபை நடவடிக்கை செய்தித் தொகுப்பில் பெயர்களுடன் குறிப்பிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல்-சபையை புறக்கணிக்கப்போவதாக வெங்கையா நாயுடு அறிவித்தார். அரசுக்கு ஒத்துழைப்பு தருவதில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கூடங்குளம் அணுஉலையில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக 100 மெகாவாட் மின்சாரம் Posted: 08 Aug 2013 08:53 AM PDT கூடங்குளம் முதல் அணு உலையில் இம்மாத இறுதியில் மின்சாரம் உற்பத்தி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் தயாரிக்கப்படும் 1000 மெகா வாட் மின்சாரத்தையும் தமிழகத்திற்கே வழங்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார். தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இருந்தபோது பலமுறை இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதினார். அவரது கோரிக்கையை மத்திய அரசு |
| உ.பி.யில் 5 மகள்களின் தலையை துண்டித்து கொன்றவரின் தூக்குத் தண்டனை நிறுத்தி வைப்பு Posted: 08 Aug 2013 05:35 AM PDT மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகன்லால் பரேலா என்பவர், கடந்த 2010ம் ஆண்டு தனது 5 மகள்களையும் கோடரியால் தலையை துண்டித்து கொலை செய்தார். இறந்த குழந்தைகள் அனைவரும் ஒரு வயது முதல் 8 வயதுக்குட்பட்டவர்கள். இது தொடர்பான வழக்கை விசாரித்த ஜபல்பூர் மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம், மகன்லாலுக்கு மரண தண்டனை விதித்தது. |
| சுதந்திர போராட்ட தியாகிகளை ஜனாதிபதி நாளை கவுரவிக்கிறார் Posted: 08 Aug 2013 04:37 AM PDT இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் தீவிரமடைய காரணமாக இருந்த வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்து 71-வது ஆண்டு தினம் நாளை கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில், சுதந்திரப் போராட்ட தியாகிகளை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வரவேற்று கவுரவிக்கிறார். இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- |
| 5 வீரர்கள் சுட்டுக்கொலை: பாராளுமன்றத்தில் ஏ.கே.அந்தோணி புதிய விளக்கம் Posted: 08 Aug 2013 01:52 AM PDT காஷ்மீர் எல்லையில் 5 இந்திய வீரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். அதில், பாகிஸ்தான் தீவிரவாதிகளும், ராணுவ உடையில் வந்த சிலரும் இந்த தாக்குதலில் ஈடுபட்டனர் என்று தெரிவித்து |
| டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரூ.30 லட்சம் லஞ்சம்: செல்போன் கம்பெனி அதிபர்கள் திடீர் கைது Posted: 08 Aug 2013 01:09 AM PDT பிரபல செல்போன் தயாரிப்பு நிறுவனமான மைக்ரோ மேக்ஸ் சார்பில் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட வாசிர்பூர் என்ற இடத்தில் விருந்து மையம் கட்டப்படுகிறது. இதற்கான கட்டுமான பணிகளுக்கு அனுமதி கேட்டு டெல்லி மாநகராட்சியிடம் மைக்ரோ மேக்ஸ் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இதற்கு அனுமதி வழங்க மாநகராட்சி அதிகாரிகளுக்கும் மைக்ரோ மேக்ஸ் நிறுவனத்துக்கும் இடையே ரூ.50 லட்சம் பேரம் நடந்தது. இறுதியில் ரூ.30 லட்சம் வழங்க செல்போன் நிறுவனம் சம்மதித்தது. இதுபற்றி சி.பி.ஐ.க்கு ரகசிய தகவல் கிடைத்தது. |
| நரேந்திர மோடி ஐதராபாத் வருகையை எதிர்த்து வழக்கு: மதக்கலவரம் ஏற்படும் என குற்றச்சாட்டு Posted: 08 Aug 2013 12:35 AM PDT குஜராத் முதல்– மந்திரி நரேந்திரமோடி வர இருக்கும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்ய திட்டமிட்டு உள்ளார். முதல் கூட்டமாக வருகிற 11–ந்தேதி ஐதராபாத் வருகிறார். பாரதீய ஜனதா கட்சி ஏற்பாடு செய்துள்ள பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். அவரது பேச்சை திரையரங்குகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்ய பாரதீய ஜனதா திட்டமிட்டு உள்ளது. இதற்காக பல திரையரங்குகளை வாடகைக்கு எடுத்து பொது மக்கள் இலவசமாக பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |