Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





மாலை மலர் | தேசியச்செய்திகள்

மாலை மலர் | தேசியச்செய்திகள்


தெலுங்கானா விவகாரம்: முதல்–மந்திரி கருத்துக்கு சந்திரசேகரராவ் கண்டனம்

Posted: 09 Aug 2013 11:39 PM PDT

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்ததற்கு முதல்–மந்திரி கிரண்குமார் ரெட்டி அதிருப்தி அடைந்துள்ளார். காங்கிரஸ் உயர்மட்டக் குழுவின் இந்த முடிவு சரியானது அல்ல என்றும், நதிநீர், மின்சார பகிர்வு மற்றும் ஜதராபாத் தலைநகரம் நிலை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் மாநிலத்தை பிரிப்பது சாத்தியம் அல்ல என்று அவர் கூறினார்.

சென்னை உள்பட 7 நகரங்களில் குண்டு வெடிப்புக்கு தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு

Posted: 09 Aug 2013 11:05 PM PDT

இந்தியா முழுவதும் வரும் 15–ந்தேதி சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. அந்த கொண்டாட்டங்களை சீர்குலைக்கும் வகையில் முக்கிய நகரங்களில் தொடர் குண்டு வெடிப்புக்கும், தற்கொலை தாக்குதலுக்கும் பாகிஸ்தான் தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை கூறி வருகிறது. பாகிஸ்தானில் பதுங்கி இருக்கும் மும்பை குண்டு வெடிப்பு தீவிரவாதி ஹபீஸ் முகம்மது சயீத் கடந்த மாதம் ஒரு பொதுக்கூட்டத்தில்

போலி கார்டுகளை பயன்படுத்தி ஏ.டி.எம். மையங்களில் ரூ.4.4 லட்சம் நூதன கொள்ளை

Posted: 09 Aug 2013 10:33 PM PDT

மும்பை கொலாபா பகுதியில் 2 மாதங்களுக்கு முன்பு ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் போலி கார்டுகளை பயன்படுத்தி போலீஸ்காரர்களின் சம்பள பணம் நூதன முறையில் கொள்ளையடிக்கப்பட்டது. இதையடுத்து வங்கி அதிகாரிகள் உஷார் ஆனார்கள். சம்பந்தப்பட்டவர்களின் ஏ.டி.எம். கார்டுகளை முடக்கி நடவடிக்கை எடுத்தனர். தற்போது மீண்டும் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். மையங்களில் நூதன கொள்ளை நடந்துள்ளது. இந்த

குழந்தை ஆணா? பெண்ணா? சோதனை: நடிகர் ஷாருக்கான் மீது மும்பை கோர்ட்டில் வழக்கு

Posted: 09 Aug 2013 10:12 PM PDT

நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது மனைவி கவுரிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இந்த நிலையில் சமீபத்தில் அவர்களுக்கு வாடகைத்தாய் மூலம் 3–வது குழந்தை மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த மே 27–ந்தேதி பிறந்தது. இந்த குழந்தை கருவில் இருக்கும்போது, அது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து கொள்ள விரும்பியதாக பத்திரிகைகளிலும், டெலிவிஷன்களிலும் தகவல்கள் வெளியானது. கருவில் இருக்கும்

எல்லையில் ஊடுருவலுக்கு பின் சமரசம்: இந்திய-சீன வீரர்கள் பீர், ரசகுல்லா பரிமாற்றம்

Posted: 09 Aug 2013 08:29 PM PDT

இந்தியா, சீனா இடையே எல்லை பிரச்சினை நெடுங்காலமாக இருந்து வருகிறது. இந்திய எல்லைக்குள் சீனா அத்துமீறி ஊடுருவுவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் சிக்கிம் மாநிலத்தில் கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள இந்தியப் பகுதியில் (டங்கார் லா பாஸ்) ரோந்துப்பணியில் ஈடுபட்ட சீன வீரர்கள் இரண்டு

சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்காளதேசத்தினர் 14 பேர் கைது

Posted: 09 Aug 2013 04:58 PM PDT

தானே பயந்தர் அருகேயுள்ள முர்தாகாவில் தனியாருக்கு சொந்தமான கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடந்து வருகிறது. இந்த கட்டிடத்தில் காண்டிராக்டர்களாக சம்சூதின் மன்னுபாய் சேக்(58), அப்துல் மஜித்கான்(55) ஆகிய 2 பேர் உள்ளனர். இவர்களிடம் வங்காளதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக

3 நாள் தொடர் விடுமுறை எதிரொலி: திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

Posted: 09 Aug 2013 04:11 PM PDT

3 நாள் தொடர் விடுமுறை என்பதால் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் வருகை திடீரென அதிகரித்து உள்ளது. இதனால் இலவச தரிசனத்துக்கு 18 மணி நேரம் ஆகிறது. தெலுங்கான பிரச்சினை காரணமாக ஆந்திர மாநிலத்தில் முழுஅடைப்பு மற்றும் பொதுமக்கள் போராட்டம் காரணமாக பஸ்கள் ஓடாததால் தமிழ்நாடு

பா.ஜனதா பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவிப்பது தாமதமாகும்?

Posted: 09 Aug 2013 02:47 PM PDT

பா. ஜனதா பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை அறிவிப்பது மேலும் தாமதமாகும். 4 மாநில சட்டசபை தேர்தல் முடிந்த பின்னரே இது குறித்த அறிவிப்பை வெளியிட பா.ஜனதா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் வருகிறது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடி

எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் இந்த கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா: மத்திய அரசு

Posted: 09 Aug 2013 02:02 PM PDT

எதிர்க்கட்சிகள் அனுமதித்தால் இந்த பாராளுமன்ற கூட்டத்தொடரிலேயே லோக்பால் மசோதா கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இப்போது நடந்து வருகிறது. தெலுங்கானா பிரச்சினை, ஐ.ஏ.எஸ். அதிகாரி துர்கா சக்தி நக்பால் இடைநீக்கம், உணவு பாதுகாப்பு மசோதா போன்ற பிரச்சினைகளால்

எம்.பி.-எம்.எல்.ஏ.க்கள் பற்றிய சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக அரசியல் சட்ட திருத்தம்: மத்திய அரசு பரிசீலனை

Posted: 09 Aug 2013 01:13 PM PDT

குற்ற வழக்குகளில் தண்டனை பெற்றவுடனே, எம்.பி., எம்.எல்.ஏ. மற்றும் எம்.எல்.சி.க்கள் பதவி இழப்பார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 10–ந் தேதி தீர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பை அமல்படுத்துமாறு அனைத்து மாநிலங்களையும் தேர்தல் கமிஷன் கேட்டுக்கொண்டுள்ளது.

பெங்களூரில் விபசாரத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

Posted: 09 Aug 2013 12:41 PM PDT

பெங்களூரில் இணையதளத்தில் விளம்பரம் செய்து "ஹைடெக்" விபசார தொழில் செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து கார், ரொக்க பணம், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பெங்களூர் நகரில் வெவ்வேறு இடங்களில் இளம்பெண்களை வைத்து மர்ம நபர்கள் விபசார தொழில் செய்து வருவதாக குற்றப்பிரிவு போலீசாருக்கு

ஒடிசாவில் உயிரோடு எரிக்கப்பட்ட மாணவி இறந்ததால் போராட்டம் வெடித்தது: பேருந்துகளுக்கு தீ வைப்பு

Posted: 09 Aug 2013 07:46 AM PDT

ஒடிசா மாநிலம் கட்டாக் அருகே, கற்பழிப்பு முயற்சியில், 7-ம் வகுப்பு படிக்கும் மாணவி சுஜாதாவை 2 பேர் தாக்கி உயிரோடு எரித்துள்ளனர். இதில் பலத்த காயம் அடைந்த அந்த மாணவி, கடந்த இரு வாரங்களாக கட்டாக்கில்

ஆந்திராவில் இளைஞர் மாநாட்டுடன் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குகிறார் மோடி

Posted: 09 Aug 2013 04:37 AM PDT

பா.ஜனதா கட்சியின் தேசிய பிரச்சாரக் குழு தலைவராக நியமிக்கப்பட்ட நரேந்திர மோடி, மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தை ஆந்திர மாநிலத்தில் இருந்து தொடங்குகிறார். ஐதராபாத்தில் நாளை மறுநாள்

டெல்லியை தாக்க தீவிரவாதிகள் சதி: உளவுத்துறை எச்சரிக்கையால் பாதுகாப்பு அதிகரிப்பு

Posted: 09 Aug 2013 03:34 AM PDT

காஷ்மீர் எல்லையில் சமீபத்தில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினர், இந்திய வீரர்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனர். இச்சம்பவம் இந்தியா-பாகிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தையில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. எல்லையிலும் தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது. இந்நிலையில் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில்,

கிட்னி மோசடி மன்னனின் ரூ.4.35 கோடி சொத்து முடக்கம்: அமலாக்க துறை நடவடிக்கை

Posted: 09 Aug 2013 01:01 AM PDT

டெல்லி அருகே உள்ள குர்கான் நகரில் கிட்னி மோசடி நடந்தது. அப்பாவி ஏழைகளை ஏமாற்றி ஒரு கும்பல் அவர்களிடம் இருந்து கிட்னி மோசடியில் ஈடுபட்டது. 2008–ம் ஆண்டு இது வெளிச்சத்துக்கு வந்தது. கிட்னி மோசடியில் முக்கிய புள்ளியாக அமித்குமார் என்பவன் செயல்பட்டான். கிட்னி மோசடி மூலம் கோடிக்கணக்கில் அவன் சம்பாதித்து சொத்துக்கள் வாங்கி குவித்தான்.

5 இந்திய வீரர்கள் சுட்டுக்கொலை: பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்புப் படை கைவரிசை- உளவுத்துறை தகவல்

Posted: 09 Aug 2013 12:29 AM PDT

காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதில் 5 இந்திய ராணுவ வீரர்கள் பலியானார்கள். பாகிஸ்தான் ராணுவமும், தீவிரவாதிகளும் ஒருங்கிணைந்து மிகவும் திட்டமிட்டு இந்த தாக்குதலை நடத்தியதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பான தகவல்களை உளவுத்துறை திரட்டியுள்ளது. பூஞ்ச் செக்டாரில் ஊடுருவி இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்த சில மாதங்களுக்கு முன்பே பாகிஸ்தான் ராணுவம் முடிவு செய்து ஏற்பாடுகளை செய்தது. இதற்காக பாகிஸ்தான் ராணுவத்தின்

நரேந்திர மோடி படத்துடன் டெல்லியில் பா.ஜனதா பேனர்கள்: தேர்தலை சந்திக்க தயாராகிறது

Posted: 08 Aug 2013 11:57 PM PDT

குஜராத் முதல்– மந்திரி நரேந்திர மோடியை பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளராக நிறுத்த அக்கட்சி முடிவு செய்துள்ளது. இதற்கு முன்னோட்டமாக அவரை தேர்தல் பிரசார குழு தலைவராக நியமிக்கப்பட்டது. இந்த ஆண்டு இறுதியில் டெல்லி உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களும் அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலும் வருகிறது. தேர்தலை சந்திக்க பாரதீய ஜனதா தயாராகி வருகிறது. சமீபத்தில் மும்பையில் நான் இந்து, நான் இந்தியன் என்ற வாசகங்களுடன் கூடிய வாசகத்துடன் நரேந்திரமோடி படத்துடன் பேனர்கள் வைக்கப்பட்டன. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் டெல்லியில் நரேந்திரமோடி பேனர்கள் புதிதாக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™