Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “வடமாகாண தேர்தல்! டி.எம். ...” plus 17 more

Tamilwin Latest News: “வடமாகாண தேர்தல்! டி.எம். ...” plus 17 more

Link to Lankasri

வடமாகாண தேர்தல்! டி.எம். ...

Posted: 15 Jul 2013 05:42 PM PDT

வட மாகாண சபை தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான டி.எம்.சுவாமிநாதன் போட்டியிடவுள்ளதாக அக்கட்சி வட்டாரத் தகவல்கள் தெரிவித்தன.

புலிக்கொடியுடன் ஓடியவர் இலங்கை ...

Posted: 15 Jul 2013 05:11 PM PDT

பிரித்தானியா கார்டிப்  மைதானத்தில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் போது புலிக்கொடியுடன் ஓடியவருக்கு எதிரான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கெலம் மக்ரே, பிரான்சிஸ் ஹரிசன் ...

Posted: 15 Jul 2013 04:52 PM PDT

பிரித்தானிய சனல்-4  தொலைக்காட்சியின் "நோ பயர் ஸோன்" என்ற  இலங்கையின் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஆவணப்படத்தின் இயக்குனரான கெலம் மக்ரே இலங்கைக்கு வருவதில் தடை விதிக்கப்பட மாட்டாது என  ஊடக அமைச்சரான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

வடமாகாண சபைத் தேர்தல் தொடர்பில் ...

Posted: 15 Jul 2013 03:25 PM PDT

வடமாகாண சபைத் தேர்தல் நடைபெற்றால், அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்த சிலர் தொடர்ந்தும் அதில் இணைந்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

புறோட் லண்ட் நீர் மின் உற்பத்தி ...

Posted: 15 Jul 2013 03:17 PM PDT

எதிர்காலத்தில் பொது மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரத்தை விநியோக்கும் நோக்கில் புறோட் லண்ட் நீர் மின் உற்பத்தி நிலையத்தை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள ...

Posted: 15 Jul 2013 03:01 PM PDT

அரசாங்கம் கையேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படும் தனியார் காணிகளின் உரிமையாளர்கள் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

நீதியரசர் விக்னேஸ்வரனால் அவர் ...

Posted: 15 Jul 2013 02:47 PM PDT

வடக்கு மாகாண சபைத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் ஒரு மனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஹபரணையில் தனியார் பஸ் மீது மோதிய ...

Posted: 15 Jul 2013 02:43 PM PDT

பொலன்னறுவை மாவட்டம் ஹபரணையில் தனியார் பஸ் ஒன்று காட்டு யானை மீது மோதுண்டதில், பஸ்ஸில் பயணித்த ஏராளமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

சட்டமா அதிபரின் அசமந்த போக்கிற்கு ...

Posted: 15 Jul 2013 12:02 PM PDT

2008ம் ஆண்டிலிருந்து வெலிக்கடை மகசின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதியான கந்தையா விஜயகுமாரை விடுதலை செய்யும்படி சட்டமா அதிபரினால் கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவித்தல் வழங்கப்பட்ட பின்னரும் தொடர்ந்தும் தடுத்து வைப்பது சட்டவிரோதமாகும் என அரசியல் கைதியான கந்தசாமி விஜயகுமாரின் சிரேஸ்ட சட்டத்தரணியான கே.வி தவராசா நீதிமன்றில் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

பொது ...

Posted: 15 Jul 2013 09:50 AM PDT

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்ததால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்து விட்டதாக, இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

நாடு திரும்பிய இந்திய வீரர்கள்

Posted: 15 Jul 2013 08:45 AM PDT

சாம்பியன்ஸ் டிராபி, முத்தரப்பு கிண்ணம் வென்ற மகிழ்ச்சியில் இஷாந்த் சர்மா, ரோகித் சர்மா உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் நாடு திரும்பினர்.

இந்தியா- இலங்கை போட்டியில் மலிங்கா ...

Posted: 15 Jul 2013 07:51 AM PDT

இந்தியா- இலங்கை இடையேயான இறுதி கிரிக்கெட் போட்டியின் போது மைதானத்துக்குள் பாட்டிலை வீசி எறிந்த ரசிகருக்கு டிரினாட் அண்ட் டொபாகோ கிரிக்கெட் வாரியம் 5 ஆண்டுகால தடை விதித்துள்ளது.

ஷேவாக், கம்பீர் வாழ்க்கை முடிந்து ...

Posted: 15 Jul 2013 04:55 AM PDT

ஷேவாக், கம்பீர் போன்ற மூத்த வீரர்கள் மீண்டும் இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு உள்ளது என்று முன்னாள் தெரிவுக்குழு தலைவர் கிரண் மோரே தெரிவித்தார்.

டுவிட்டரில் கருத்தா? கில்கிறிஸ்ட் ...

Posted: 15 Jul 2013 02:15 AM PDT

ஸ்டூவர்ட் பிராட் குறித்து எனது பெயரில் வெளியான டுவிட்டர் செய்திகள் போலியானவை என ஆடம் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

அப்ரிடி அதிரடி: மேற்கிந்திய ...

Posted: 15 Jul 2013 12:46 AM PDT

மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சஹிட் அப்ரிடியின் சிறப்பான சகலதுறை ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் அணி 126 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக ...

Posted: 14 Jul 2013 10:13 PM PDT

கொழும்பு பிரேமதாச மைதானத்தில் எதிர்வரும் 20 ஆம் திகதி நடைபெற உள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டில்சான் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டோனி தலைவராக கிடைத்தது இந்திய ...

Posted: 14 Jul 2013 08:38 PM PDT

இந்திய அணிக்கு டோனி தலைவராக  கிடைத்தது பெரும் அதிர்ஷ்டம் என, இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் தெரிவித்தார்.

300 கி.மீட்டர் வேகத்தில் செல்ல முயன்ற ...

Posted: 14 Jul 2013 07:37 PM PDT

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை சேர்ந்தவர் பில் வார்னர்(44). மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் அதிக ஈடுபாடு கொண்ட இவர், பல அதிவேக பந்தயங்களில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™