Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


இந்தியாவில் பார்முலா1 கார்பந்தயம் நடைபெறாது

Posted: 30 Jul 2013 09:51 PM PDT

கார் பந்தயங்களில் புகழ்பெற்ற பார்முலா1 கார்பந்தயம் மொத்தம் 19 சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஒரு பந்தயம் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் 'இந்தியன் கிராண்ட்பிரி' என்ற பெயரில் 2011-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டுக்கான பார்முலா1 கார்பந்தயத்தின் 16-வது சுற்றாக இந்தியன் கிராண்ட்பிரி அக்டோபர் 27-ந்தேதி நடக்கிறது. இந்த நிலையில் சாதகமான போட்டி அட்டவணை இல்லாததால், அடுத்த ஆண்டு (2014) இந்தியாவில் பார்முலா1 கார்பந்தயம் நடைபெறாது என்று இந்தியன் கிராண்ட்பிரியை நடத்தும் ஜெய்ப்பீ [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

அபராதத் தொகையை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதி

Posted: 30 Jul 2013 09:24 PM PDT

Credit Card / Gold & Platinum

 Credit Card / Gold & Platinumடெல்லி போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் அனில் சுக்லா கூறியதாவது:போக்குவரத்து விதி மீறுபவர்களை போக்குவரத்து போலீசார் பிடித்து உடனடி அபராதம் விதிக்கின்றனர். இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்படுவதாக வந்த தகவலைத் தொடர்ந்து, தற்போது இ-சலான் மூலம் உடனடியாக அபராதம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் சில நேரங்களில் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் போலீ சார் விதிக்கும் உடனடி அபராதத் தொகை இல்லாமல் தவித்து வந்னர்.போலீசாரால் விதிக்கப்பட்ட அபராத தொகையை செலுத்த முடியாதவர்கள் வாகனத்தை போலீஸ் ஸ்டேஷனில் விட்டுச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகின்றனர். அபராதத்தை செலுத்திய பிறகே வாகனம் விடுவிக்கப்படுகிறது.

இந்நிலையில் உடனடி அபராதத் தொகையை டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளோம். கடந்த சில நாட்களாக டெல்லியில் பல்வேறு பகுதிகளில் இதற்கான வெள்ளோட்டம் காணப்பட்டது. அதில் போக்குவரத்து விதிகளை மீறிய 500க்கும் மேற்பட்ட வாகன ஓட்டிகளுக்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. இந்த நடைமுறையை பின்பற்ற பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து செயல்பட உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் இன்னும் 2-3 நாட்களில் கிடைத்துவிடும் என்று நம்புகிறோம்.டெல்லியை தொடர்ந்து ஐதராபாத், பெங்களூரு, சென்னை மற்றும் மும்பை போன்ற நகரங்களிலும் இ&சலான் மூலம் அபராதத் தொகை வசூலிப்பது ஏற்கனவே நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் ஒரே நபர் தொடர்ந்து பல முறை போக்குவரத்து விதிகளை மீறுவதை மிக எளிதாக கண்டுபிடிக்க முடியும். பிடிபடுபவர்கள் ஒவ்வொருவரின் அனைத்து தகவல்களும் கம்ப்யூட்டர் சர்வர்களில் சேமித்து வைக் கப்படும். அதன்மூலம் பலமுறை விதிமீறல்களில் ஈடுபடுபவர்கள் கண்டுபிடிக்க ப்பட்டு அவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆந்திராவில் இன்று பந்த் : 25 துணை ராணுவப் படைகள் குவிப்பு

Posted: 30 Jul 2013 09:07 PM PDT

தெலங்கானாவை தனி மாநிலத்தை அமைக்கும் முடிவை எதிர்த்து ஆந்திராவில் இன்று பந்த் நடத்தப்படுகிறது. இதனால், அங்கு ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவில் தெலங்கானாவை பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க காங்கிரஸ் காரிய கமிட்டி நேற்று மாலை ஒப்புதல் அளித்தது. இதன் காரணமாக வன்முறை நடப்பதை தடுக்க, ஆந்திராவின் கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளில் 25 துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. 15 கம்பெனி துணை ராணுவமும் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளது.இந்த படையினர் விசாகப்பட்டினம், விஜயவாடா, குண்டூர், பிரகாசம், கிழக்கு, [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

நதிகளை இணைப்பதற்கு நடை பயணம்: குமரி அனந்தன் அழைப்பு

Posted: 30 Jul 2013 08:59 PM PDT

காந்தி போரம் தலைவர் குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய நதிகளில் ஓடும் தண்ணீரில் 39 சதவீதம்தான் பயன்படுத்துகிறோம். மீதி எல்லாம் கடலுக்கு போகிறது. நதிகளை தேசிய மயமாக்கி இணைப்போம் என்று நான் பாராளுமன்றத்தில் பேசினேன். டெல்லியில் உண்ணா நோன்பிருந்தோம். ஆனால், எண்ணம் ஈடேறவில்லை. தர்மபுரி பாப்பாரப்பட்டியில் பாரதமாதா கோவிலுக்கு 22-6-1923-ல் தியாகி சுப்பிரமணிய சிவா அடிக்கல் நாட்டினார். பாரதமாதா எனும் சமத்துவ திருக்கோவிலுக்காக பலமுறை பாதயாத்திரை நடந்தேன். ஆனால், நடைபெறவில்லை. மது ஒழிப்போம், மதி வளர்ப்போம் [...]

This posting includes an audio/video/photo media file: Download Now

6 கிலோ குழந்தையை ஆபரேஷன் இல்லாமல் ஈன்றெடுத்த ஜெர்மனி பெண்

Posted: 30 Jul 2013 08:52 PM PDT

6kg

6kgஜெர்மனி நாட்டை சேர்ந்த இளம்பெண் 6 கிலோ எடையுள்ள பெண் குழந்தையை ஆபரேஷன் ஏதுமின்றி சுகப்பிரசவ முறையில் ஈன்றெடுத்தார்.

அதிக எடை கொண்ட குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்றால் 'சிசேரியன்' ஆபரேஷனை தான் டாக்டர்கள் தேர்வு செய்வார்கள். ஆனால், ஆபரேஷன் செய்துக்கொள்ள விரும்பாத அந்த இளம்பெண் கடந்த சனிக்கிழமை இயல்பான முறையில் 13 1/2 பவுண்ட் (6 கிலோ 110 கிராம்) எடையுள்ள குழந்தையை பிரசவித்தார். பிறந்த போது அதிக எடை கொண்ட குழந்தையாக ஜெர்மானியர் இதை கருதுகின்றனர். இதற்கு முன்னதாக 2011ம் ஆண்டு பெர்லினில் 13 பவுண்ட் எடையுடன் பிறந்த ஆண் குழந்தை தான் அதிக எடை கொண்டதாக கருதப்பட்டது. அந்த சாதனையை தற்போது பிறந்துள்ள ஜஸ்வீன் என்ற இந்த பெண் குழந்தை முறியடித்து விட்டது.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் மோதிய விபத்தில் 17 பேர் உடல் கருகி பரிதாபமாக பலி

Posted: 30 Jul 2013 08:45 PM PDT

17 kill

17 killவடமேற்கு பாகிஸ்தானில் லாரியுடன் பஸ் மோதிய விபத்தில் 17 பேர் தீயில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெஷாவர் நகரில் இருந்து பன்னு நகர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ் கரக் பகுதி அருகே சென்றபோது எதிரே வந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய அதிர்ச்சியில் உள்ளே இருந்த கியாஸ் சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு பஸ் தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 17 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இறந்தவர்கள் அனைவரின் உடல்களும் உருக்குலைந்து அடையாளம் தெரியாத நிலையில் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்பெயின் விபத்தின் போது ரெயிலின் டிரைவர் போனில் பேசிக்கொண்டிருந்தார்

Posted: 30 Jul 2013 08:29 PM PDT

tra

traஸ்பெயின் நாட்டின் மேட்ரிட் நகரில் இருந்து ஃபெர்ரால் நோக்கி கடந்த வாரம் சென்ற ரெயில் விபத்துக்குள்ளானதில் 79 பேர் பரிதாபமாக பலியாகினர். 66 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 15 பேரின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளதாக கூறப்படுகிறது.

அனுமதிக்கப்பட்ட வேகத்தைவிட இருமடங்கு வேகத்தில் வந்த அந்த ரெயில் ஒரு வளைவில் திரும்பும் போது தடம்புரண்டு கவிழ்ந்த காட்சியின் சி.சி.டி.வி. பதிவுகள் உலக ஊடகங்களில் எல்லாம் ஒளிபரப்பாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த விபத்து நிகழ்ந்த போது ரெயிலின் டிரைவர் கட்டுப்பாட்டு அறை அதிகாரியுடன் போனில் பேசிய தகவல் விபத்துக்குள்ளான ரெயிலின் கருப்பு பெட்டியில் இருந்து சேகரிக்கப்பட்டு ஒலிப்பதிவுகளின் மூலம் தெரிய வந்துள்ளது. விபத்தையடுத்து கைது செய்யப்பட்ட டிரைவர் பிரான்சிஸ்கோ கர்சான் காயங்களுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். காயங்கள் ஆறி குணம் அடைந்ததையொட்டி அவர் சிறையில் அடைக்கப்பட்டார். விபத்து தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் பங்கேற்ற அவர் அனுமதிக்கப்பட்ட வேகத்தை கடந்து ரெயிலை இயக்கியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

This posting includes an audio/video/photo media file: Download Now

குட்டி இளவரசரின் வருகையை உலகுக்கு அறிவித்த இந்தியருக்கு விசா இல்லை

Posted: 30 Jul 2013 08:22 PM PDT

asem

asemஇங்கிலாந்து இளவரசர் வில்லியம் - கேட் மிடில்டன் தம்பதியருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்த செய்தியை முதன்முதலாக அறிவித்ததன் மூலம் 'ஹீரோ' அந்தஸ்துக்கு உயர்ந்தவர் பதர் அசீம்(25).

இந்தியரான இவர் கொல்கத்தாவில் பிறந்து வளர்ந்தவர். கடந்த ஓராண்டாக இங்கிலாந்து அரண்மனையில் உதவியாளராக வேலைகளை செய்து வருகிறார். கொல்கத்தாவில் இயங்கிவரும் அயர்லாந்து நாட்டு தொண்டு நிறுவனத்தின் நிதியுதவியுடன் இங்கிலாந்தில் உள்ள நேப்பியர் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற பதர் அசீம் இங்கிலாந்து அரண்மனையில் உதவியாளராக பணியில் சேர்ந்தார். இவரது பெற்றோர் இன்னும் கொல்கத்தாவில் உள்ள குடிசைப் பகுதியில் தான் வசித்து வருகின்றனர். அசீமுக்கு வழங்கப்பட்ட இங்கிலாந்து விசா வரும் அக்டோபர் மாதத்துடன் காலாவதியாகின்றது. இந்நிலையில், அவரது விசா மீண்டும் புதுப்பிக்கப்பட மாட்டாது என இங்கிலாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் அவர் இந்தியா திரும்ப நேரிடும் என தெரிகிறது. இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அரண்மனை வட்டாரங்கள் 'ஒவ்வொரு விசா விண்ணப்பமும் தகுதி அடிப்படையில் நியாயமான முறையில் பரிசீலிக்கப்படும்' என கூறியுள்ளன.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆசிரியையை கீழே இறக்குவதற்கு கடும் முயற்சி

Posted: 30 Jul 2013 08:10 PM PDT

கொழும்பு,றோயல் கல்லூரியின் இரண்டாவது மாடியில் ஏறியிருந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியையை கீழே இறக்குவதற்கு கடும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ள ஆசிரியை 10 மணித்தியாலங்கள் கடந்துள்ள நிலையிலும் அவ்விடத்திலேயே இருப்பதனால் அவரை இறக்குவதற்கான முயற்சிகளை பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்டுள்ளனர். அம்புலன்ஸ்களுக்கு மேலதிகமாக தீயணைப்பு கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் அவர் உண்ணாவிரதமிருக்கும் இடத்திலிருந்து இரண்டாவது மாடிக்கருகில் மெத்தையும் போடப்பட்டுள்ளது.

This posting includes an audio/video/photo media file: Download Now

100 போர்க்குற்றவாளிகள் பிரித்தானிய குடிவரவிற்கு விண்ணப்பம்

Posted: 30 Jul 2013 07:59 PM PDT

imi

imiகடந்த ஆண்டு பிரித்தானிய குடிவரவிற்கு சுமார் 100 போர்க்குற்றவாளிகள் விண்ணப்பித்துள்ளதாக பிரித்தானிய குடிவரவு அதிகாரிகள் அறிவித்துள்ளார்கள். இவ்வாறு விண்ணப்பித்தவர்களுள் அநேகர் பல வருடங்களாக பிரித்தானியாவில் வசித்து வருபவர்களெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போர்க்குற்றவாளிகளுள் பெரும்பாலானோர் ஆப்கனிஸ்தான், ஈரான், ஈராக், றுவண்டா, சேர்பியா மற்றும் இலங்கையைச் சேர்ந்தவர்களாவர்.

போர்க்குற்றவாளிகளிற்கு பிரித்தானிய அரசாங்கம் ஒரு போதும் அகதி அந்தஸ்து வழங்காதென குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல்வேறுப்பட்ட மனித உரிமை நிறுவனங்கள் இக்குற்றவாளிகள் சொந்த நாட்டில் சித்திரவதைகளிற்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமையினால் பிரித்தானிய நீதிமன்றங்களில் இவர்களின் குற்றச்செயல்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுக்கின்றன.

தகவல் பெற்றுக்கொள்ளும் உரிமை அடிப்படையில் பிபிசி சேவையினால் விடுக்கப்பட்ட கோரிக்கையிற்கேற்ப கடந்த 15 மாதங்கள் அதாவது தை 2012 முதல் 800 போர் குற்றவாளிகள் உள்நாட்டில் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

இவர்களுள் 99 பேர் பிரித்தானிய குடியுரிமையிற்கு விண்ணப்பித்துள்ளனர் என்பதுடன் மேலும் 16 கொலைக்குற்றவாளிகள் பிரித்தானியாவிற்குள் உட்புகுவதற்கும் விண்ணப்பித்துள்ளனர்.

2005 -2012 ம் ஆண்டு காலப்பகுதிகளிற்குள் சுமார் 700 போர் குற்றவாளிகள் அடையாளங் காணப்பட்டுள்ளனர் என குடிவரவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™