மாலை மலர் | தேசியச்செய்திகள் |
- உம்மன்சாண்டி ராஜினாமா செய்யக்கோரி எதிர்கட்சிகள் 11–வது நாளாக தர்ணா
- தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் முழு அடைப்பு: பஸ்கள் ஓடவில்லை
- ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம்
- தெலுங்கானா அறிவிக்கப்பட்டதும் விவசாயி அதிர்ச்சியில் சாவு
- தெலுங்கானா மக்கள் கோலாகல கொண்டாட்டம்: பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
- முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: கிரண்குமார் ரெட்டி அறிவிப்பு
- கேதார்நாத் கோவில் திறப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலனை
- வாசலில் கிடக்கும் கால்மிதி போல் ஆந்திர மக்களை பயன்படுத்துவதா?: காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல்
- வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
- மதிய உணவில் பல்லி - 76 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி
- பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் நிதிஷ் குமாருக்கு உள்ளது: சத்ருகன் சின்ஹா பேட்டி
- திகார் சிறையில் வானொலி நிலையம் திறப்பு
- ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களுக்கு ஐதராபாத் பொது தலைநகர்: திக் விஜய் சிங்
- தனி தெலுங்கானா அமைக்க காங்கிரஸ் ஒப்புதல்: நாளை மத்திய அமைச்சரவை சிறப்பு கூட்டம்
- தனித் தெலுங்கானா மாநிலம் அமைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு
- முல்லைப் பெரியாறு வழக்கு: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி
- ஆந்திராவை பிரிக்க கடும் எதிர்ப்பு: விஜயவாடாவில் 3000 மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
- பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் தீவிரவாதி ஷாஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை
- திருவனந்தபுரம்: கல்லூரியில் வெடிகுண்டு வீசி தாக்குதல்-மாணவர்கள் உள்பட 15 பேர் கைது
- மும்பையில் 17–வது மாடியில் இருந்து விழுந்த பெண் சாவு
| உம்மன்சாண்டி ராஜினாமா செய்யக்கோரி எதிர்கட்சிகள் 11–வது நாளாக தர்ணா Posted: 30 Jul 2013 11:11 PM PDT கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கு தொடர்பாக தொழில் அதிபர் பிஜுராதாகிருஷ்ணன், அவரது மனைவி சரிதா நாயார் ஆகியோர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக கேரள டி.வி.நடிகை ஷாலு மேனன் மற்றும் கேரள முதல்–மந்திரி உம்மன்சாண்டியின் உதவியாளர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர். |
| தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் முழு அடைப்பு: பஸ்கள் ஓடவில்லை Posted: 30 Jul 2013 10:44 PM PDT ஆந்திராவை பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி தலைமையில் நேற்று நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தெலுங்கானா மாநிலம் அமைப்பதற்கான அரசியல் சட்ட நடைமுறை பணிகளை தொடங்குவதற்காக மத்திய மந்திரி சபையின் ஒப்புதல் பெறுவதற்கான சிறப்பு கூட்டம் இன்று நடந்தது. |
| ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம் Posted: 30 Jul 2013 10:38 PM PDT ராஜஸ்தானில் இரட்டை தலையுடன் பிறந்த குழந்தை மரணம் அடைந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த 24–ந்தேதி ஒரு பெண்ணுக்கு இரட்டை தலையுடன் கூடிய அதிசய குழந்தை பிறந்தது. உடலில் 2 தலை, 2 முதுகெலும்பு மற்றும் 2 நரம்பு மண்டலங்கள் இருந்தன. இக்குழந்தைக்கு பிறந்ததில் இருந்தே மூச்சு திணறல் இருந்தது. |
| தெலுங்கானா அறிவிக்கப்பட்டதும் விவசாயி அதிர்ச்சியில் சாவு Posted: 30 Jul 2013 10:31 PM PDT ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள ராயலபந்துலா கரிபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மகபூப்பாஷா. விவசாயியான இவர் ஆந்திராவை இரண்டாக பிரிக்கக் கூடாது என்று நடத்தப்பட்ட போராட்டங்களில் கலந்து கொண்டார். நேற்று மாலை இவர் கர்னூல்–கடப்பா கால்வாய் பகுதியில் உள்ள தன் வயலில் வேலை முடித்து விட்டு வீடு திரும்பினார். குளித்து விட்டு டி.வி.யில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்தார். |
| தெலுங்கானா மக்கள் கோலாகல கொண்டாட்டம்: பட்டாசு வெடித்து மகிழ்ச்சி Posted: 30 Jul 2013 09:37 PM PDT தெலுங்கானா மாநிலம் உதயமாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு கடந்த 2 நாட்களாக ஆந்திரா முழுவதும் பரவி இருந்தது. நேற்று மாலை காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்ட தீர்மானம் மூலம் தெலுங்கானா மாநிலம் உதயமாவது உறுதியானதும் தெலுங்கானா பகுதி மக்களிடம் உற்சாகமும், மகிழ்ச்சி வெள்ளமும் கரை புரண்டோடியது. தெலுங்கானா மாநிலத்துக்குட்பட்ட 10 மாவட்ட மக்களும் புதிய மாநில வெற்றியை பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள். தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சித் தொண்டர்கள் இனிப்பு வழங்கினார்கள். |
| முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: கிரண்குமார் ரெட்டி அறிவிப்பு Posted: 30 Jul 2013 09:28 PM PDT ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தெலுங்கானா மாநிலத்தை உருவாக்க, டெல்லியில் நேற்று நடை பெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கூட்டத்தில் ஒருமனதாக ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றிருந்த ஆந்திர முதல்– மந்திரி கிரண்குமார் ரெட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன்சிங்கை யும் சந்தித்து பேசிவிட்டு வந்தார். தெலுங்கானா விவகாரத்தில் அதிருப்தி அடைந்து கிரண்குமார் ரெட்டி ஆந்திர முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டதாக பரபரப்பான தகவல் வெளியானது. இதுபற்றி கிரண்குமார் ரெட்டியை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். |
| கேதார்நாத் கோவில் திறப்பது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பரிசீலனை Posted: 30 Jul 2013 08:23 PM PDT ஹிமாச்சலப்பிரதேசத்தில் ஜூன் மாதம் ஏற்பட்ட மழையினாலும்,நிலச்சரிவினாலும் கேதார்நாத், பத்ரிநாத் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் பலியாகினர்.ஏராளமானவர்கள் தங்கள் வீடுகளை இழந்தனர்.பெருமழையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இந்தக் கோவில்களும் சேதமடைந்தன. புனரமைப்பு வேலைகளுக்காக மூடப்பட்ட கேதார்நாத் கோவிலை மீண்டும் திறப்பது குறித்து மத்திய அமைச்சரவை இன்று விவாதிக்கும் என்று |
| வாசலில் கிடக்கும் கால்மிதி போல் ஆந்திர மக்களை பயன்படுத்துவதா?: காங்கிரஸ் மீது மோடி பாய்ச்சல் Posted: 30 Jul 2013 02:30 PM PDT தனித் தெலுங்கானா மாநிலத்தை உருவாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்துள்ள குஜராத் முதல் மந்திரி நரேந்திர மோடி, 'வாசலில் கிடக்கும் கால்மிதி' போன்று மக்களை மதிக்கும் காங்கிரஸ் கட்சி ஆந்திர மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்' என கூறியுள்ளார் |
| வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் Posted: 30 Jul 2013 01:22 PM PDT 2013-2014-ம் மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை ஜூலை 31-ந் தேதிக்குள் (இன்று) தாக்கல் செய்ய வேண்டும். ரூ.5 லட்சத்திற்கும் மேற்பட்ட வருமானம் உடையவர்கள் தங்கள் கணக்கை ஆன்லைனில் (இ-பைல்) தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயம் ஆகும். ரூ.5 லட்சத்திற்கு உள்பட்ட வருமானம் கொண்டவர்கள் நேரடியாகவும் |
| மதிய உணவில் பல்லி - 76 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதி Posted: 30 Jul 2013 11:25 AM PDT ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் வழங்கப்பட்ட பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட 76 மாணவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இன்று மதியம் மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது உணவில் பல்லி செத்து கிடப்பதை ஒரு மாணவன் கண்டான் |
| பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் நிதிஷ் குமாருக்கு உள்ளது: சத்ருகன் சின்ஹா பேட்டி Posted: 30 Jul 2013 10:34 AM PDT பிரதமர் ஆவதற்கான அனைத்து தகுதிகளும் பீகார் முதல் மந்திரி நிதிஷ் குமாருக்கு உள்ளது என நடிகரும் எம்.பி.யுமான சத்ருகன் சின்ஹா கூறியுள்ளார். பாட்னா விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சத்ருகன் சின்ஹா கூறியதாவது |
| திகார் சிறையில் வானொலி நிலையம் திறப்பு Posted: 30 Jul 2013 09:10 AM PDT நாட்டின் மிகப்பெரிய சிறைச்சாலையான திகார் சிறையில், எப்.எம். வானொலி நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. 'டி.ஜே. எப்.எம். ரேடியோ' என்ற இந்த வானொலி நிலையத்தை, சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் விம்லா மேஹ்ரா இன்று தொடங்கி வைத்தார். பொழுதுபோக்கு மற்றும் கைதிகளுக்கு ரேடியோ ஜாக்கி பயிற்சி அளிக்கும் வகையில் |
| ஆந்திரா-தெலுங்கானா மாநிலங்களுக்கு ஐதராபாத் பொது தலைநகர்: திக் விஜய் சிங் Posted: 30 Jul 2013 07:36 AM PDT டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்திலும் இதற்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இதுபற்றி காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் அஜய் மக்கான் நிருபர்களிடம் கூறுகையில், |
| தனி தெலுங்கானா அமைக்க காங்கிரஸ் ஒப்புதல்: நாளை மத்திய அமைச்சரவை சிறப்பு கூட்டம் Posted: 30 Jul 2013 06:37 AM PDT தனித் தெலுங்கானா மாநில கோரிக்கை தொடர்பாக விவாதிப்பதற்காக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. கடும் நெருக்கடிக்கு மத்தியில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க காங்கிரஸ் ஒப்புதல் பெறப்பட்டது. முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு கூட்டத்திலும், தனி தெலுங்கானா அமைய கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இதனால் தெலுங்கானா மாநிலம் அமைவது உறுதியாகிவிட்டது. 23 மாவட்டங்கள் கொண்ட ஆந்திரா மாநிலம் 2 ஆக பிரிக்கப்படுகிறது. |
| தனித் தெலுங்கானா மாநிலம் அமைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகள் ஆதரவு Posted: 30 Jul 2013 05:33 AM PDT தனித் தெலுங்கானா மாநில கோரிக்கை தொடர்பாக காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. கடும் நெருக்கடிக்கு மத்தியில், ஆந்திராவை பிரித்து தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அதற்கு முன்னதாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில், தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது |
| முல்லைப் பெரியாறு வழக்கு: கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி Posted: 30 Jul 2013 03:05 AM PDT 119 ஆண்டு பழமையான முல்லை பெரியாறு அணையில் நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், அணை வலுவாக இல்லை என்று கூறிய கேரள அரசு நீர்மட்டத்தை உயர்த்த முடியாது என்று திட்டவட்டமாக கூறியதுடன், புதிய அணை கட்ட திட்டமிட்டது. இப்பிரச்சினையால் இரு மாநிலங்களிடையே பதட்டமான சூழ்நிலை உருவானது. இது தொடர்பாக இரு அரசுகளும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன. |
| ஆந்திராவை பிரிக்க கடும் எதிர்ப்பு: விஜயவாடாவில் 3000 மாணவர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 30 Jul 2013 02:45 AM PDT தனித் தெலுங்கானா மாநில கோரிக்கை தொடர்பாக இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. ஆந்திராவை பிரித்து தெலுங்கானா பகுதியை தனி மாநிலமாக அறிவிக்க காங்கிரஸ் முடிவு செய்துள்ளதால் ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்த தெலுங்கானா எதிர்ப்பு குழுவினர் தயாராகி வருகின்றனர். இதனால் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட துணை ராணுவப் படைகள் ஆந்திராவிற்கு விரைந்துள்ளது. |
| பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் தீவிரவாதி ஷாஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை Posted: 30 Jul 2013 02:19 AM PDT பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் வழக்கில் குற்றவாளி ஷாஜத் அகமதுவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 26 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகள் |
| திருவனந்தபுரம்: கல்லூரியில் வெடிகுண்டு வீசி தாக்குதல்-மாணவர்கள் உள்பட 15 பேர் கைது Posted: 30 Jul 2013 12:44 AM PDT கேரளாவில் உள்ள கல்லூரிகளில் மாணவ அமைப்புகள் அரசியல் நடத்த கேரள ஐகோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. இந்தநிலையில் திருவனந்தபுரம் மகாத்மா காந்தி கல்லூரியில் படிக்கும் மாணவர்களில் பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் சங்கம் அமைத்து செயல்பட்டதாக கூறி சில மாணவர்களை கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்டு செய்தது. |
| மும்பையில் 17–வது மாடியில் இருந்து விழுந்த பெண் சாவு Posted: 30 Jul 2013 12:38 AM PDT மும்பை வட்லா பகுதியில் உள்ள ஒரு பிரமாண்ட அடுக்குமாடி குடியிருப்பின் 17–வது மாடியில் இருந்து இன்று காலை ஒரு பெண் தவறி விழுந்தார். உடல் சிதறி அவர் அந்த இடத்திலேயே உயிரிழந்தார். அவர் தவறி விழுந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்று போலீசார் விசாரித்து |
| You are subscribed to email updates from மாலை மலர் | தேசியச்செய்திகள் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |