Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பாராளுமன்றம் அருகே துப்பாக்கி சூடு: பைக் சாகச வீரர் பலி

Posted: 27 Jul 2013 10:09 PM PDT

டெல்லி பாராளுமன்றம் தெருவில் உள்ள வின்ஸ்டர் பிளேஸ் என்ற இடத்தில் இன்று அதிகாலை 2 மணியளவில் இளைஞர்கள் பைக் சாகசத்தில் ஈடுபட்டனர். மிகவும் அபாயகரமான இந்த சாகச நிகழ்ச்சியில் 30 வாலிபர்கள் இருந்தனர். இதுபற்றி தகவல் அறிந்த ரோந்து போலீசார் வின்ஸ்டர் பிளேஸ் பகுதிக்கு வந்தனர். இது பாதுகாப்பான பகுதி, இங்கு பைக் சாகசம் செய்யக்கூடாது. உடனே இங்கிருந்து செல்லுங்கள் என்று கூறினார்கள். ஆனால் இளைஞர்கள் அங்கிருந்து செல்ல மறுத்தனர். அதோடு போலீசார் மீது கற்களை வீசினார்கள். [...]

எகிப்து ராணுவ தாக்குதலில் 120 பேர் படுகொலைக்கு பான் கி – மூன் கண்டனம்

Posted: 27 Jul 2013 10:01 PM PDT

தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறிய எகிப்து முன்னாள் அதிபர் முஹம்மது முர்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு மாதத்திற்கும் மேலாக மக்கள் போராட்டத்திற்கு தலைவணங்க முர்சி மறுத்துவிட்டார். முர்சி பதவியில் இருந்து விலக ராணுவம் கெடு விதித்தது. கெடுக்காலம் முடிந்த பின்னரும் அவர் பதவி விலகாததால் அவரை கைது செய்த ராணுவம் இடைக்கால அதிபராக சுப்ரீம் கோர்ட் நீதிபதியை நியமித்தது. முர்சி [...]

பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய தயங்குகின்றனர்

Posted: 27 Jul 2013 09:41 PM PDT

பிரித்தானிய முதலீட்டாளர்கள் இலங்கைக்கு விஜயம் செய்ய தயங்குவதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்க பணி நீக்கம் செய்யப்பட்டமை மற்றும் காணிப் பிரச்சினைகள் போன்றன காரணமாக இலங்கையில் முதலீடு செய்வதில் பிரித்தானிய முதலீட்டாளர்கள் தயக்கம் காட்டி வருவதாக இலங்கைக்கான பிரித்தானிய பிரதி உயர்ஸ்தானிகர் ரொபி புலொச் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே யுத்தத்தின் பின்னர் பிரித்தானிய முதலீட்டாளர்கள் அதிகளில் இலங்கைக்கு வருகை தரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பௌதீக கட்டமைப்பு மாற்றங்கள் வரவேற்கப்பட வேண்டிய வகையில் அமைந்துள்ள [...]

புலி ஆதரவாளர்களை நிராகரிக்கவும் – கோதபாய ராஜபக்ஷ

Posted: 27 Jul 2013 09:31 PM PDT

தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்களை நிராகரிக்குமாறு பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்தள்ளார். தனிப்பட்ட நலன்களுக்காகவும் அச்சம் காரணமாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சிலர் உதவிகளை வழங்கி வந்தததாகத் தெரிவித்துள்ளார். உள்நாட்டு வெளிநாட்டு சில சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எனினும், வன்னி யுத்த களத்தில் சிக்கியிருந்த அப்பாவி பொதுமக்களை இந்தப் பிரச்சாரங்களின் மூலம் ஏமாற்றிவிட முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த மக்கள் மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்ட [...]

பொதுநலவாய நாடுகளுக்காக அதி சொகுசு வாகனங்கள் இறக்குமதி

Posted: 27 Jul 2013 09:08 PM PDT

இலங்கைக்கு நவம்பர் மாதத்தில் வருகைத்தரும் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பயன்படுத்துவதற்காக அதிசொகுசு வாகனங்களை இறக்குமதி செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது.  இதன்படி 7 ஆம் வரிசை பிஎம்டபில்யூ, மெஸ்டாஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் வாகனங்களை இறக்குமதி செய்ய திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  குறித்த வாகனங்கள் பொதுநலவாய தலைவர்களால் பயன்படுத்தப்பட்ட பின்னர் அவற்றை ஏலத்தில் விற்பனை செய்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  எனினும் சில அமைச்சர்கள் குறித்த வாகனங்களை பயன்படுத்த அனுமதி தருமாறு அரசாங்கத்தின் உயர் மட்டத்திடம் கோரிக்கை [...]

தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்!

Posted: 27 Jul 2013 09:02 PM PDT

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கான பாதுகாப்பை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பாரதிய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமார் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். அவருடன் அக்கட்சியின் பொதுச்செயலாளர் அனந்த் குமாரும் சென்றுள்ளார். நியயோர்க்கில் பேட்டியளித்த அனந்த் குமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். எல்லா குடிமக்களுக்கும் சமஉரிமை வழங்கப்பட [...]

கச்சத்தீவில் தேசியக்கொடி பறக்க வேண்டும்

Posted: 27 Jul 2013 09:00 PM PDT

கச்சத்தீவில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆகஸ்ட் 15ம் தேதி தேசிய கொடியேற்றப்படும் என, அக்கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கூறினார். அவர்,   ''கச்சத்தீவில் தேசிய கொடியேற்ற வேண்டுமென அனைத்து மாவட்ட கலெக்டர்களிடமும் அனுமதி கேட்போம். அங்கு நமது தேசிய கொடி பறக்க அனுமதி உள்ளது. தமிழக மீனவர்களின் உரிமையை நிலை நாட்ட, தேசிய கொடியை பறக்க தமிழக மத்தியரசு, ஏற்பாடு செய்ய வேண்டும். அரசு கொடியேற்ற மறுத்தால் இந்து மக்கள் கட்சி சார்பில், ஒத்த கருத்துடைய [...]

சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 8 ராணுவ வீரர்கள் பலி

Posted: 27 Jul 2013 08:52 PM PDT

பாகிஸ்தானில் உள்ள சோதனைச் சாவடி மீது இன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 ராணுவ வீரர்கள் பலியாகினர். பலூசிஸ்தான் மாகாணத்தில் ஈரான் நாட்டு எல்லையோரம் உள்ள சர்சுன் பகுதியில் உள்ள குல்சாலி சோதனைச் சாவடியை துணை ராணுவ படைகள் காவல் காத்து வருகின்றன. பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள இயற்கை வளங்களை அபகரிக்க துடிக்கும் தீவிரவாதிகள் அவ்வப்போது சோதனைச் சாவடிகள் மீது அதிரடியாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கல்சாலி சோதனைச் சாவடிக்கு இன்று ஆயுதங்களுடன் வந்த தீவிரவாதிகள் காவல் [...]

வடகொரியாவில் ராணுவ அணிவகுப்பு

Posted: 27 Jul 2013 08:43 PM PDT

வட மற்றும் தென் கொரிய நாடுகளுக்கு இடையே 1950 முதல் 1953-ம் ஆண்டு வரை போர் நடைபெற்றது. இந்தப் போர் முடிவடைந்து தற்போது 60 ஆண்டுகள் முடிந்துவிட்டன. இதையொட்டி வடகொரியா தனது ராணுவ வலிமையை பறைசாற்றும் விதமாக தலைநகர் பியாங்யாங்கில் நேற்று ராணுவ அணிவகுப்பை நடத்தியது. சக்தி மிகுந்த ஆயுதங்களுடன் ராணுவ வீரர்கள் இந்த அணி வகுப்பில் பங்கேற்றனர். வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், மூத்த ராணுவ அதிகாரிகளுடன் இந்த அணி வகுப்பை பார்வையிட்டார். மேலும், [...]

பழுதான சாலையை சீரமைத்தார் நடிகர் ஜெயசூர்யா

Posted: 27 Jul 2013 08:28 PM PDT

கொச்சியில் பழுதான சாலையை நண்பர்களுடன் சேர்ந்து சீரமைத்த மலையாள நடிகர் ஜெயசூர்யாவுக்கு பொதுப்பணித்துறை அமைச்சரும், கொச்சி மாநகராட்சி மேயரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.கேரளாவில் கடந்த இரண்டு மாதங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான பகுதிகளில் ரோடுகள் பழுதாகி குண்டு குழியுமானது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். கேரளாவில் முக்கிய நகரங்களில் ஒன்றான கொச்சியில் ரோடுகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது.இந்நிலையில், பிரபல மலையாள நடிகர் ஜெயசூர்யா, தான் வசித்து வரும் பகுதியிலுள்ள சண்முகம் ரோட்டை சீரமைக்கும் [...]


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™